Type Here to Get Search Results !

யாழ்ப்பாணக் கோட்டை

வட இலங்கையில் காணப்படும் கலாச்சார சுற்றுலா மையங்களில் ஒன்றாக விளங்கும் யாழ்ப்பாணக் கோட்டை 400 வருட தனித்துவத்தை கொண்டது.


யாழ்ப்பாணத்தில் 329 ஆண்டுகள் ஜரோப்பியரது மேலாதிக்கம் நிலவிய அடையாளமாக காணப்படும் நினைவுச் சின்னங்களில் யாழ்ப்பாணக் கோட்டைக்குத் தனித்துவமான வரலாறு  உண்டு.

 யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கு தெற்கே கடல்நீரேரியுடன் அமைந்த இக்கோட்டை  இலங்கையில் உள்ள இரண்டாவது  மிகப்பெரிய கோட்டையாக கூறப்படுகிறது . கி.பி 1619 அளவில் போத்துக்கேயரால் இக் கோட்டை கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 18ம்நூற்றாண்டிலும் ஆட்சிபுரிந்த ஒல்லாந்தரால் மீளக்கட்டப்பட்ட தோற்றத்துடனேயே தற்போதைய கோட்டை காணப்படுகிறது. இதில் சிலமாற்றங்களைப் பிரித்தானியர் தமது ஆட்சியில் ஏற்படுத்தினாலும் அவை ஒல்லாந்தர் காலக் கோட்டையின் அடிப்படைத் தோற்றத்தில் பாரியமாற்றங்களை ஏற்படுத்தவில்லை.

ஆதனால் இக்கோட்டை ஒல்லாந்தர் காலக் கோட்டையென அழைக்கப்படுகிறது.

              போத்துக்கேயரால் 4 பக்கச் சுவர் கொண்டதாக அமைக்கப்பட்ட இக் கோட்டை ஒல்லாந்தர்  நட்சத்திரவடிவில் 5பக்கச் சுவர்களைக் கொண்டதாக மாற்றியமைத்தனர்.

இந்தவடிவில் அமைந்த ஒரேயொரு கோட்டை இதுவாகும் 62 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக் கோட்டையின் வெளிப்புறச் சுவர்கள்  ஒவ்வொன்றும்  கீழ்ப்பகுதி 40 அடி அகலமும் 30 அடி உயரமும் கொண்டவை. படையெடுப்பைத் தடுத்துக்கொள்ளும் வகையில் சுவர் அரண் உயரம் மேலிருந்து கீழ்நோக்கி பதிந்து காணப்படுகிறது.

இவ் வெளிப்புறச் சுவர்களை சுற்றி ஆழமான அகழிகள் காணப்படுகிறன. 

4 பக்கமும் பாரிய பீரங்கிகளையும் பாதுகாப்பு தளங்களையும் கற்கோபுரங்களையும் சுரங்கங்களையும் சுவடுகளையும் கொண்ட இக் கோட்டையை சுற்றி 2 மைல் தொலைவில் 200 போத்துக்கேய படைவீரர்களும் உள்ளுர் படைகளும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டது.

           கோட்டையின் உட்பகுதியில் நிர்வாக மையங்களும் படைவீரர்களின் இருப்பிடங்களும் ஒல்லாந்த கிறிஸ்தவ ஆலயமும் யாழ்ப்பாணத்தில் ஆளுநர் மாளிகையும் சிறைச்சாலையும் பிற நிர்வாககட்டிடங்களும் காணப்படுகிறன.

ஓல்லாந்தர் ஆட்சியில் கொழும்பு ,காலிகோட்டைகள் ஒருநகரமாக செயற்பட்டபோது யாழ்ப்பாணக் கோட்டை மட்டும் இராணுவ நிர்வாகமையமாக செயற்பட்டது. எனினும் பிற்காலத்தில் இக்கோட்டை சுதந்திரத்தின் பின் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இது முக்கியதலைவர்கள் தங்கும் பாதுகாப்புமையமாகவும் காணப்பட்டது இதனால்1973ம் ஆண்டுதுஏPகலவரத்தின் போதுஅதன் தலைவர் கைதுசெய்யப்பட்டு இங்கேபாதுகாப்பாகவைக்கப்பட்டது. மற்றும் நீதிபதிகள் அரசதலைவர்கள் தங்கும் பாதுகாப்புமையமாகவும் காணப்பட்டது. 1980 களின் பின் உள்நாட்டுப் போரின் போது இராணுவத் தளமாக காணப்பட்டது.

             2009ம் ஆண்டுயுத்த முடிவின் பின் தொல்லியல் திணைக்களம் மற்றும் மரபுரிமைகள் அமைச்சு போன்றவற்றால் பொறுப்பேற்கப்பட்டு நெதர்லாந்து அரசின் நிதியுதவியால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றது. இதன் நோக்கம் கோட்டையை சிறந்தவரலாற்றுச்  சுற்றுலாமையமாக மாற்றுவது மற்றும் இலங்கையின் ஒன்பதாவது கலாச்சாரசுற்றுலாமையமாக பிரகடனம் செய்து உலக அரங்கில் பிரகடனப்படுத்துவதேயாகும்.

           அந்தவகையில் இம்மையத்தின் புனர்நிர்மாணத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை, ஒல்லாந்த அரசர்கள், தேசிய மரபுரிமை நிறுவனம் உள்ளிட்ட பல தரப்பட்ட அமைப்புக்களும் அயராது உழைத்து வருகின்றமையானது எதிர்காலத்தில் அதாவது குறிப்பிட்ட 2018ம் ஆண்டில் முழுமையாக இப்பணி நிறைவு பெற்றது தனித்துவமாக திகழும் என்பதில் ஐயமில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad