Type Here to Get Search Results !

Neduntheevu நெடுந்தீவு

நெடுந்தீவு 



 இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (Delft) என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது. நெடுந்தீவு தலைத் தீவு, பசுத்தீவு, பால்தீவு, அபிசேகத் தீவு, தயிர் தீவு முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது. யாழ் குடாநாட்டில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதனால் இத்தீவு நெடுந்தீவு என்று பெயர் பெற்றது என்பர்.

இலங்கை இராணுவம் நெடுந்தீவை ஆக்கிரமித்தைத் தொடர்ந்து பெரும்பாலன மக்கள் யாழ் குடாநாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ புலம்பெயர்ந்து விட்டார்கள். இன்று இங்கு பொருளாதார வசதிகள் அருகிய தமிழ் மீனவ சமூகத்தை சாந்த 2500 இருந்து 3000 மக்களே கடும் சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை அரச சேவைகள் கூட கிடைப்பதில்லை.

நெடுந்தீவு வரலாறு

தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இத் தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்களுடன் உள்ளது. 1813ம் ஆண்டு நெடுந்தீவு கடலில் இருந்து புறப்பட்ட ஹீர்த் டீ போலோ (hearth De Polo) எனும் ஐக்கிய அமெரிக்க இளைஞன் இத் தீவின் அழகையும் வளங்களையும் மனதில் கொண்டு இது தனி ஒரு நாட்டுக்கு சொந்தமானதல்ல இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது என்கிறான்[மேற்கோள் தேவை].

 நெடுந்தீவின் வளங்கள் வரலாற்று பெறுமதி மிக்கவை. நெல் சிறுதானிய பயிர்களும் கோதுமை வயல்களுடன் சணல், பெருக்கு, பாலை, பனை, தென்னை, மூலிகை செடி கொடிகளுடன் கடலும் கடல் சார்த்த இடமுமான இந்த நெய்தல் நிலத்தில் பாலும் மோரும் பாய்ந்தோடிய வரலாறுகள் பல. மருந்து மாமலை வனம் என இத்தீவினை போற்றி பெருமிதம் கொண்டார் மன்னன் செகராசசேகரன்.

போத்துக்கேயர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையான அன்னியர் ஆதிக்கத்திற்கு முன்னர் நெடுந்தீவு ஒரு சுதந்திர தனி இராசதானி நாடாகவே விளங்கியது. வெடியரசன் நெடுந்தீவின் மேற்குப்பகுதியில் கோட்டைக்காடு என்னுமிடத்தில் கோட்டை கட்டி ஆண்டு வந்தான். அமைச்சர்கள், படைவீரர்களுடன் ஆட்சி புரிந்துள்ளான். வெடியரசனின் கோட்டை இன்றும் சிதைந்த நிலையில் கல்மேடாக நெடுந்தீவின் வடமேற்குக் கரையில் காணப்படுகிறது.

நெடுந்தீவில் உள்ள ஊர்கள்
  • ஆலங்கேணி
  • பெரியான்துறை
  • மாவலித்துறை
  • பூமுனை
  • சாமித்தோட்டமுனை
  • வெல்லை
  • குந்துவாடி
  • தீர்த்தக்கரை


துறைமுகங்கள்

நெடுந்தீவு மக்கள் பண்டைய காலத்தில் தென்னிந்தியாவுக்குச் செல்வதற்கு பெரியதுறை என அழைக்கப்பட்ட துறைமுகத்தைப் பயன்படுத்தினர். இங்கிருந்து மக்கள் படகுகளில் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, புங்குடுதீவு ஆகிய இடங்களுக்கும் பயணம் செய்தனர். இது நெடுந்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இதனைவிட மாவிலித் துறைமுகம், கிழக்கே கிழக்குத்துறை, வடக்கே தாளைத்துறை, குடுவிலித்துறை, தெற்கே குவிந்தாதுறை, வெல்லாதுறை ஆகிய துறைமுகங்களும் உள்ளன. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் பெரியதுறையிலிருந்து எவரும் இந்தியாவிற்கு செல்லாதபடி தடைவிதிக்கப்பட்டிருந்தது. இத்துறைமுகத்தை அண்டியே வெடியரசனுக்கும், மீகாமனுக்கு சண்டை நடந்ததாக வரலாறு கூறுகிறது.

நெடுந்தீவுக் கட்டைக்குதிரைகள்

நெடுந்தீவு கட்டைக்குதிரைகளுக்குப் பேர் பெற்றது. இவை தன்னிச்சையாக நெடுந்தீவு வெளிகளில் மேய்ந்து திரிகின்றன. 


இங்குள்ள குதிரைகளும் கோவேறு கழுதைகளும் 1660ம் ஆண்டு முதல் 1675ம் ஆண்டு வரை வடபகுதியின் ஒல்லாந்து அரசாங்கத்தின் ஆளுநராக இருந்த ரிஜிக் லொஸ்வேன் கொஹென்ஸ் இந்தத் தீவில் தங்கியிருந்த போது இந்த மிருகங்களை கப்பல்கள் மூலம் இத்தீவுக்கு கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்.[4] 19 ஆம் நூற்றாண்டில் இவை நோலான் என்ற பிரித்தானியரால் முறையாக வளர்க்கப்பட்டன[5]. இத்தீவிலிருந்து இக்குதிரைகளை வெளியே கொண்டு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் நெடுந்தீவில் வழக்கில் உள்ளது.


நெடுந்தீவு பெருக்கு மரங்கள்

நெடுந்தீவில் காணப்படும் அம்சங்களில் ஒன்று அங்கு காணப்படும் பெருக்குமரங்களாகும்.

ஒல்லாந்தர் ஆட்சியில் குதிரைகள் வளர்க்கப்பட்ட முக்கிய இடமாக நெடுந்தீவு காணப்பட்டதால் குதிரைகளின் உணவுக்காக இப் பெருக்கு மரங்களை ஒல்லாந்தர் தமது நாட்டிலிருந்து கொண்டு வந்து இங்கு அறிமுகப்படுத்தியதாகத் தெரிய வருகிறது. 

இவ்வாறான மரங்கள் நெடுந்தீவை அடுத்து அவர்களின் ஆதிக்கம் நிலவிய மன்னார்க் கோட்டைப் பிரதேசத்திலும் காணப்படுகிறது.

இம் மரங்களை அதிசயப் பொருளாகப் பார்ப்பதற்கு அது புதிய இனவகை மரங்கள் என்பது மட்டுமல்ல இலங்கையில் இது போன்ற பெரிய மரங்கள் இல்லை என்பதும் இன்னொரு முக்கிய காரணமாகும். 

இம் மரங்களின் அடிப்பாகத்தில் காணப்படும் குகை போன்ற வடிவம் பல மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குரிய இடவசதிகளைக் கொண்டிருப்பது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது.

நெடுந்தீவுக் கோட்டை(Delft Fort)


 போர்த்துக்கேயர் நெடுந்தீவைக் கைப்பற்றியதும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கேந்திர ஸ்தானமாக விளங்கியமையாலும் தமது பாதுகாப்பை மற்றும் கடல் போக்குவரத்துக்களைக் கண் காணிப்பதற்கும், தமது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் கோட்டையை அமைத்தனர். இவ்வாறாக அமைக்கப்பட்ட கோட்டைகளில் இன்றும் போர்த்துக்கேயரது ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்வது நெடுந்தீவின் மத்தியில் தற்போதைய வைத்தியசாலைக்கு அண்மையில் கடற்கரைப் பக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் சிதைவடைந்த நிலையில் காணப்படும் கோட்டையாகும். 



இக்கோட்டை ஒல்லாந்தர்களினது என்றும் கூறப்படுகிறது. எனினும், ஒல்லாந்தர்கள் இங்கு கோட்டை கட்டியதற்கான ஆதாரங்கள் ஒல்லாந்தர்களது ஆவணங்களில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   மேலும், நெடுந்தீவு மக்களிடையே ஐதீகக் கதையாக நம்பப்படும் வெடியரசன் வரலாற்றுடன் தொடர்புடைய படையெடுப்பாளரான மீகாமன் கட்டிய கோட்டையே இது என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது. எனினும், நெடுந்தீவின் கடற் கரையில் போர்த்துக்கேயர் காலத்தில் டிடழஉம hழரளந இருந்ததற்கான குறிப்புக்கள் காணப்படுகின்றது. எனவே, இதுதான் போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாக இருக்கலாம்.

இக்கோட்டை தொடர்பாக பசெற் என்பவர் தனது விசித்திரமான இலங்கை என்ற குறிப்பில் நெடுந்தீவில் போர்த்துக்கேயரது கோட்டை மிகப்பலமான பாதுகாப்புடைய இரண்டுமாடி வசிப்பிடம் மற்றும் ஐம்பது யார் சதுரப்பரப்பளவையும் தடிப்பான சுவர்களையும் கொண்டதெனவும் இச்சுவர் முற்றுமுழுதாக நிலமட்டத்திலிருந்து இரண்டாகப் பிரிவதுடன் இதனுடன் தொடர்பு கொள்வதற்கு முதலாம் மாடியுடன் காணப்படுகின்ற படியும் காணப்படுகின்றது எனக்குறிப்பிடுகின்றார்.

மேலும், இக்கோட்டை அக்காலத்தில் ஒரு முன்னேற்பாடான பாதுகாப்பு அமைப்பாகும். நீளமான, ஒடுங்கிய, சிறிய அறைகளைக் கொண்டதாகவும் கைமரக்குற்றிகளிலிருந்து இதன் கட்டுமானத்தைப் பார்க்கும் போது மேலே செல்லும் படிக்கட்டுக்கள் சுவர்களில் அமைந்துள்ளது. ஒருமூலையில் இருட்டறை ஒன்றுமுள்ளதோடு இரண்டடி சதுரமுள்ள யன்னலொன்று மாத்திரம் காணப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

இக்கோட்டை தொடர்பாகப் பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்கள் குறிப்பிடும்போது ஒல்லாந்தர்களது கோட்டைகளிலே பஸ்ரியன்(Bastion), சுடுதளம்(Gun-point) போன்ற அமைப்புக்கள் வழமையாகக் காணப்படும். ஆனால், இக்கோட்டையில் இவ்வம்சம் இல்லை. பொதுவாக ஒல்லாந்து கோட்டையின் சுவர்களின் வெளிப்புறம் சாய்வாகவும், உயரமும், அடர்த்தியாகவும் காணப்படும். இக்கோட்டையில் அப்படியானதன்மை ஓரளவிருந்தாலும் இக்கோட்டை போர்த்துக்கேயர் காலக் கோட்டை எனக்கூறுவதே பொருத்தமாகுமெனக் கூறுகின்றார்.

 மேலும், நெடுந்தீவு போர்த்துக்கேயரின் முக்கியத்துவம் மிக்க பகுதியாக விளங்கிமையாலும் அக்காலத்தில் பெரியதுறை துறைமுகமாகவும் விளங்கியபோது இந்த துறைமுகத்திற்கு அண்மையில் ஒரு கோட்டையைக் கட்டி அங்கிருந்து அதிகாரங்களைச் செலுத்தியதான குறிப்புக்கள் காணப்படுகின்ற போதும் அங்கு கோட்டையிருந்தமைக்கான சான்றுகள் காணப்படவில்லை. 

எனவே இன்று நெடுந்தீவு மத்தியில் இடிந்தநிலையில் காணப்படும் இக்கோட்டையே போர்த்துக்கேயரது கோட்டையாக இருந்திருக்கலாம். இந்தக் கோட்டையையே போர்த்துக்கேயருக்குப் பின்னர் நெடுந்தீவைக் கைப்பற்றி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளமாக மாற்றிய ஒல்லாந்தர் தமது நிர்வாக வசதிக்காக மாற்றிமையத்திருக்கலாம். உதாரணமாக, யாழ்ப்பாணக் கோட்டை, ஊர்காவற்துறைக் கோட்டை, முதலியவற்றைக் கட்டியவர்கள் போர்த்துக்கேயரே! எனினும், பின்னர் அவற்றை ஒல்லாந்துக் கலைமரபிற்கு ஏற்றதாக மாற்றியமைத்தமையால் தான் ஒல்லாந்தர்களது கோட்டையென அழைக்கப்பட்டது. அவ்வாறே இக்கோட்டையும் பிற்காலத்தில் ஒல்லாந்தர்கள் தமது அமைப்புக்கேற்ப மாற்றியிருக்கலாமென வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.


சுற்றுலாத்துறை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad