Type Here to Get Search Results !

Sri Lanka Accountant Service ; இலங்கை கணக்காளர்கள் சேவை

தொலைநோக்கு
"வினைத்திறன் மற்றும் விளைத்திறன் மிக்க நிதி முகாமைத்துவத்திற்காக சுய அதிகாரமிக்க கணக்காளர் சேவை"

நிதி முகாமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மையினை உச்ச அளவில் நிலைத்திருக்கும் வகையில் பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புக்கூறலை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உள்ளார்ந்த தூண்டலுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணத்துவ வல்லுநர்களை உருவாக்குவதற்காக இலங்கை கணக்காளர் சேவையின் நிமித்தம் அமைச்சரவை மற்றும் சேவைகள் ஆணைக்குழுவின் மூலம் விதிக்கப்பட்ட சகல கொள்கைகளும் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயளாலரின் அனுமதியுடன் இலங்கை கணக்காளர்கள் சேவைப்பிரிவின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.

நோக்கம்

நிதி முகாமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மையினை உச்ச அளவில் நிலைத்திருக்கும் வகையில் பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புக்கூறலை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உள்ளார்ந்த தூண்டலுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணத்துவ வல்லுநர்களை உருவாக்குதல்.


இலங்கை கணக்காளர் சேவையின் வரலாறு

இரண்டாம் உலக யுத்தத்தின் போது அரச துறையில் கடமைப் பரப்புக்கள் விரிவடைந்தமை, முற்பணக் கொடுப்பனவுச் செயற்பாடுகள் அதிகரித்தமை, கணக்கீட்டு முறைகளை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டமை என்பவற்றின் அடிப்படையில் 1946 ஆம் ஆண்டில் இலங்கை கணக்காளர் சேவை ஆரம்பிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. அதன் பின்னர், அரச பொறிமுறையில் நிகழும் மாற்றங்களுக்கு தோல்கொடுத்து கணக்காளர் சேவையும் தற்போதுள்ள நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. அந்தப் பயணத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இச்சேவையின் நிருவாக நிலையம் காலத்துக் காலம் மாற்றமடைந்துள்ளது.

அதற்கிணங்க, நிதி அமைச்சின் கீழ் காணப்பட்ட கணக்காளர் சேவை 2015.06.18 ஆந் திகதி முதல் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதால் தற்போது இலங்கை கணக்காளர் சேவை பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் நிருவகிக்கப்படுகின்றது.

நாடளாவிய சேவையொன்றாகக் கருதப்படும் இலங்கை கணக்காளர் சேவையின் உத்தியோகத்தர்கள் நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அந்த உத்தியோகத்தர்களை சுய கட்டுப்பாடுடைய மதிநுட்பமுள்ள மற்றும் தொழில்சார் தேர்ச்சிகள் நிரம்பிய உத்தியோகத்தர்களாக உருவாக்குவது, பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கணக்காளர் சேவையின் பொறுப்பாகும். அதற்காக எதிர்காலத்தில் பின்வரும் விதத்தில் அபிவிருத்தி மற்றும் பயிற்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

கணக்காளர்கள் நிதி முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ளவர்களாக இருப்பதனால் சுய நிர்வாகம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி தேவையான மனப்பாங்கு மாற்றங்களைக் கட்டியெழுப்புதல் (SLIDA போன்ற நிறுவனங்களின் கீழ்).
ஒழுக்காற்றுப பிரச்சினைகள் குறையும் விதத்தில் கெளரவத்துடன் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவையும் மனப்பாங்குகளை உத்தியோகத்தர்களிடத்தில் உருவாக்குதல்.

இலங்கை கணக்காளர் சேவை உத்தியோகத்தர்களிடம் காணப்பட வேண்டிய தேர்ச்சிகளைப் பெறுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு அவர்களை அனுப்புதல்.

சமகாலத் தேவைகளை அடையாளம் கண்டு கணக்காளர்களை திறன் விருத்தி நிகழ்ச்சிகளில் (Capacity Building) பங்கேற்கச் செய்தல்.

அபிவிருத்திப் பணிகளின் வெற்றியில் சரியான நிதி எதிர்வுகூறல் முக்கியான இடத்தை வகிப்பதனால் அதனுடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உத்தியோகத்தர்களை ஊக்குவித்தல், ஆய்வுப் பின்னணியொன்றை உருவாக்குதல், அவற்றின பெறுபேறுகளை பயன்படுத்துதல்.

கணக்காளர்களை வாண்மைத் தொழிலாளர்களாக உருவாக்குவதற்குத் தேவையான உபாய முறைகளை உருவாக்குதல்.

கணக்காளர்கள் சேவை பிரிவு

இலங்கை கணக்காளர் சேவையின் அலுவலர்களின் சகல நிர்வாக நடவடிக்கைகளும் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கணக்காளர் சேவைப் பிரிவினால் நடாத்தப்படுகின்றது.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், இலக்கம் 1670/33 மற்றும் 2010 செப்டம்பர் 10 ஆம் திகதிய அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை கணக்காளர் சேவைப் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகளின் கீழ் உருவாக்கப்பட்ட இலங்கை கணக்காளர் சேவையானது நாடு தழுவிய சேவைகளில் ஒன்றாகும்.

நிதி முகாமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மையினை உச்ச அளவில் நிலைத்திருக்கும் வகையில் பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புக்கூறலை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உள்ளார்ந்த தூண்டலுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணத்துவ வல்லுநர்களை உருவாக்குவதற்காக இலங்கை கணக்காளர் சேவையின் நிமித்தம் அமைச்சரவை மற்றும் சேவைகள் ஆணைக்குழுவின் மூலம் விதிக்கப்பட்ட சகல கொள்கைகளும் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயளாலரின் அனுமதியுடன் இலங்கை கணக்காளர்கள் சேவைப்பிரிவின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.


கணக்காளர் சேவைப் பிரிவுகளின் பிரதான பணிகள்
  • உத்தியோகபூர்வ வங்கிக் கணக்குக்கு உரிய நடவடிக்கை.
  • எல்லா வகையான பெறுகைகளும் ( நிதி மற்றும் காசோலை) வங்கியில் வைப்பிலிடல், அது தொடர்பான ஏடுகளைப் பேணிச் செல்லுதல் மற்றும் பற்றுச் சீட்டுக்களை வழங்குதல்.
  • சிறு கட்டு நிதியைப் பேணிச் செல்லுதல் மற்றும் அதில் கொடுப்பனவு நடவடிக்கையினை மெற்கொள்ள​ல்
  • அமைச்சின் பெறுகைக் குழுவினைப் பேணிச் செல்லுதல்
  • கணக்குப் பிரிவிற்கு உரிய அரச நிர்வாக, திறைசேரி, மாகாண சபை தொடர்பான சுற்றறிக்கை கோப்புக்களைப் பேணிச் செல்லுதல்.
  • வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தினைத் தயாரித்தல்.
  • வருடாந்த பொருட் கணக்கெடுப்பு நடவடிக்கையினை ஒழுங்கு செய்தல்.
  • அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் காணப்படும் தாபனங்களின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக்  கூட்டங்களின் இணைப்பு நடவடிக்கை.
  • அரச கணக்குச் செயற்குழு தொடர்பான நடவடிக்கைளை தயாரித்தல்,
  • அமைச்சின் களஞ்சியத்தினைப் பேணிச் செல்லுதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்.
  • அமைச்சின் எல்லாக் கொடுப்பனவு நடவடிக்கை​களை மேற்கொள்ளல் (முற்பண நிதி, ஆளுக்குரி வேதனாதிகள்,மேலதிக நேரக் கொடுப்பனவு பயணப்படி ,மற்றும் பிற  எல்லாக் கொடுப்பனவுகள்) மற்றும் உரிய புத்தகங்கள் உரிய முறையில்  ஒழுங்காகப் பேணிச் செல்லுதல்.
  • பொருட் பதிவேட்டினை ஒழுங்கான முறையில் பேணிச் செல்லுத்தல்
  • பொருட்களை ஏலம் இடும் நடவடிக்கையினை ஒழுங்கு படுத்துதல்
  • அமைச்சு மற்றும் அமைச்சிற்கு இணைந்த எல்லா அலுவலகர்களினதும்  சம்பளங்களைத் தயாரித்ததல், நாட் சம்பளங்களைத் தயாரித்ததல்  மற்றும் அதற்கு இணைந்த நடவடிக்கை.
  • தபால் ஏட்டினைப் பேணிச் செல்லுதல்,பிரதம செயலாளர் காரியாலய புத்தகங்களுடன் மாதாந்தம் இணக்கம் செய்தல்.
  • அமைச்சிற்கு உரிய எல்லா ஒதுக்கீட்டு ஏடுகளையும் பேணிச் செல்லுதல் ஒவ்வொரு மாதமும் இறுதித் தினத்தில் ஒதுக்கிட்டு ஏட்டினை சமநிலைப்படுத்தி கணக்குப் பொழிப்புடன் இணக்கம் செய்தல்.
  • அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் காணப்படும் திணைக்களங்களுக்கு உரிய வகைமாற்ற ஒழுங்கு நடவடிக்கையினை மேற்கொள்ளல்.
  • அமைச்சின் திட்டங்களுக்கு உரிய ஏற்பாட்டினைப் பெற்றுக் கொள்ளுதல், வழங்குதல் மற்றும்  உரிய ஏடுகளில் பேணிச் செல்லுதல்.
  • எல்லா கணக்கு அறிக்கைளையும் மாதாந்தம் பிரதம செயலாளர் காரியாலயத்தின் அறிக்கைகளுடன் இணக்கம் செய்தல்..
  • வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்கினைத் தயாரித்ததல்.
  • அமைச்சின் கொடுப்பனவு செய்யப்படும் எல்லா உறுதிச்சீட்டுக்கள் மற்றும் எல்லாப் பெறுகைகளையும் நாளாந்தம் கிகாஸ் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கி காசேடு, ஒதுக்கீட்டுப் புத்தகம் முற்பணக்  ஏடுகளுடன் இணக்கம் செய்து அடுத்த மாதம் 10 ஆந் திகதிக்கு முன் பிரதம செயலாளர் காரியாலயத்திற்கு உரிய அறிக்கைகளுடன் அனுப்புதல்.
  • அரச அலுவலகர்களின் முற்பண கணக்கினை மார்ச்சு மாதம் 15 ஆந் திகதிக்கு முன் தயாரித்தல்,அதற்கு உரிய எல்லா கடமைகளையும் மேற்கொள்ளல் மற்றும் உரிய ஏடுகளைப் பேணிச் செல்லுதல்.
  • வருடாந்த கட்டு நிதி ஒழுக்கு மற்றும் மாதாந்த நிதி வேண்டுகோள் அறிக்கையினை உரிய தினத்திற்கு முன்வைத்தல்.
  • அமைச்சின் காசேட்டிற்கு உரிய எல்லா கடமை நடவடிக்கையும்.
  • அமைச்சின் கணக்கிற்கு உரிய வங்கிக் கணக்கிணக்கக் கூற்றினைத் தயாரித்து ஒவ்வொரு மாதமும் 15 ஆந் திகதிக்கு முன் கணக்காய்வுப் பிரிவிற்கு அனுப்புதல்.
  • வருமானம் தொடர்பான நடவடிக்கை- வீதி அபிவிருத்தி அதிகார சபை, பயணிகள் போக்குவரத்து அதிகார சபை,கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபைகளின் சம்பளம் படி,வருமான உதவிகளை மற்றும் உறுதிச் சீட்டுக்களை தயாரித்து முன்வைத்தல்.
  • அமைச்சுக்குரிய எல்லா கணக்காய்வு அறிக்கைகளுக்குமான பதில்களை உரி பிரிவுகளில் இருந்து பெற்று தயாரித்து அனுப்புதல்.
  • பொது வைப்புக் கணக்கினைப் பேணிச் செல்லுதல்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad