Type Here to Get Search Results !

2019 நவெம்பாில் பணவீக்கம் குறைவடைந்திருக்கிறது



தேசிய நுகா்வோா் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 ஒத்தோபாின் 5.6 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு 2018 ஒத்தோபாில் நிலவிய உயா்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கமே பங்களித்தது. ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கம் 2019 ஒத்தோபாின் 7.3 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.0 சதவீதத்திற்கு கணிசமாக வீழ்ச்சியடைந்த வேளையில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு) 2019 ஒத்தோபாின் 4.3 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது.

 ஆண்டுச் சராசாியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற தேசிய நுகா்வோா் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 ஒத்தோபாின் 2.8 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 3.0 சதவீதத்திற்கு அதிகாித்தது. தேசிய நுகா்வோா் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம் 2019 நவெம்பாில் 0.8 சதவீதத்தினைப் பதிவுசெய்ததுடன் இதற்கு உணவு வகையின் விடயங்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகாிப்புக்களே ஏக காரணமாக அமைந்தது. உணவு வகையில் அாிசி, காய்கறிகள், சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் என்பவற்றின் விலைகள் அதிகாிப்புக்களைப் பதிவுசெய்தன.

 அதேவேளை வெறியக் குடிவகைகள் மற்றும் புகையிலை, வீடமைப்பு, நீா், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எாிபொருள் துணை வகைகளிலுள்ள விடயங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக இம்மாத காலப்பகுதியில் உணவல்லா வகை சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2019 ஒத்தோபாின் 5.6 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 5.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும் ஆண்டுச் சராசாி மையப் பணவீக்கம் 2019 ஒத்தோபாின் 5.4 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 5.6 சதவீதத்திற்கு அதிகாித்தது.

pdf





இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு - 2019 நவெம்பா்

2019 நவெம்பரில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் விரிவடைந்து 56.0 சுட்டெண் பெறுமதியொன்றினை பதிவுசெய்தமைக்கு புதிய கட்டளைகள்இ உற்பத்தி மற்றும் தொழில்நிலையில் ஏற்பட்ட விரிவாக்கமே முக்கிய காரணமாக அமைந்தது. 


அனைத்து துணைச் சுட்டெண்களும் விரிவாக்கமொன்றினை எடுத்துக்காட்டிய போதும்இ 2019 ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் அவை மெதுவான வேகத்திலேயே காணப்பட்டன. புதிய கட்டளைகளும் உற்பத்தியும் மெதுவான வேகத்தில் விரிவடைந்தமைக்கு புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் தயாரிப்பில் காணப்பட்ட மெதுவான தன்மை முக்கிய காரணமாக அமைந்தது. இவ்வபிவிருத்திகளுடன் இசைந்துசெல்லும் விதத்தில் தொழில்நிலையும் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. 

புதிய கட்டளைகளும் உற்பத்தியும் மெதுவான வேகத்தில் விரிவடைந்த போதும்இ கொள்வனவுகளின் இருப்புக்கள் உயர்ந்த வீதத்தில் விரிவடைந்தமைக்குஇ எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளின் விளைவாக நிரம்பல் தாமதமடையக்கூடும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக எதிர்காலத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் இருப்புக்களை அதிகரித்துக் கொள்ளும் எண்ணம் காரணமாக அமைந்தது. மேலும்இ நிரம்பலர் விநியோக நேரம் நடுநிலைமட்டத்தினை அடைந்து முன்னைய மாதத்தின் அதே மட்டத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றமையினை எடுத்துக்காட்டியது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad