Type Here to Get Search Results !

இலங்கையின் நீர்வள நாகரிகம்

இலங்கையின் நீர்வள நாகரிகம்

01.  முக்கிய தொழிற் துறையாக விவசாயம் காணப்பட்டதை அறிந்து எழுதுவார்.


  • சேனைப் பயிர்ச் செய்கை - உழுந்து, பயறு, குரக்கன், சோளன்.
  • நெற்செய்கை
  • வீட்டுத் தோட்டம் - இஞ்சி, மிளகு, பாக்கு, வெற்றிலை, மரக்கறிவகை.
  • கால்நடை.


02. ஏனைய தொழில் துறைகளாக கைத்தொழில், வர்த்தகம் காணப்பட்டதைப் பட்டியல்படுத்துவார்.
 கைத்தொழில் - செங்கல் ஓடு - தொழில் செய்வோர் ஒலுவடு என அழைக்கப்பட்டனர்.

  •     - புடவை - குவேனி நூல் நூற்றல்
  •     - உலோகம் - அபய கிரியில் உலோக நாணயம் கண்டுபிடிக்கப்படல்.
  •     - மட்பாண்டம்
  •     - கண்ணாடி
  •   - ஆபரணம் - ஜேதவன அகழ்வில் நெல்மணி அளவில் 21 பூவேலைப்பாடு கொண்ட தங்க ஆபரணம்.
  •     - மரவேலை
  •     - கட்டட நிர்மாணம்.


 வர்த்தகம் - உள்நாட்டு வர்த்தகம் வாணிப, வாணிக போன்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டன.

  •     - உபதீசகாமத்தில் அந்தராப்பன எனும் சந்தை காணப்பட்டது.
  •   - நாடெங்கிலும் நிகம் அல்லது நியம்கம் எனும் சிறுவர்த்தக நகர் காணப்படல்.
  •     - பணப்பரிமாற்றமும், பண்டமாற்றும் காணப்பட்டது.
  •     - எண்ணெய், மானிறைச்சி, சுண்ணாம்பு போன்றவை வாங்க பொன் காசு
  •      பயனன்படுத்தப்படது.
  •   - நாணயங்கள் கர்த்தாப்பள, காறவன, கஹவனு எனும் பெயரில் அழைக்கப்பட்டது.




  •  வெளிநாட்டு வர்த்தகம் இதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகள்.
  •   மேற்கு கிழக்கு வர்த்தகப்பாதையில் அமைந்திருத்தல்.
  •   தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று நீரோட்டப்பாதையில் அமைந்திருத்தல்.
  •   இந்தியாவிற்கு அண்மையில் காணப்படல்.
  •   இயற்கைத் துறைமுகம் காணப்படல் - மகாதித்த, ஊராதொட்ட, கொடபாய, தம்பபன்னி, கோகர்ண, ஜம்புகோளப்பட்டினம்.
  •   வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்த கீழைத்தேச நாடுகள் - அரேபியா, இந்தியா, சீனா.
  •   மேலைத்தேச நாடுகள் - கிரேக்கம், உரோம்
  •   
  •   ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்
  •   முத்துக்கள், இரத்தினக்கல், யானைத்தந்தம், வாசனைத் திரவியம், யானை, ஆமை ஓடுகள், தேங்காய், மரம்.
  •   இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்.
  •   பட்டுத்துணி, ஆயுதங்கள், மட்பாண்டங்கள், திராட்சைப்பழம், மதுபானம், கற்பூரம், சந்தனம், குதிரை.



03. பௌத்த மதம் விரைவாக வளர்ச்சி அடைந்தமைக்கான காரணங்களைக் கூறுவார்.
அரசன் பௌத்த மதத்தவனாகக் காணப்பட்டமை.
அமைச்சர்கள், பிரபுக்கள் பௌத்தவர்களாக இருந்தமை.
பௌத்தமத வருகைக்குமுன் ஒழுங்கமைக்கப்பட்ட மதம் காணப்படவில்லை.
 சூ பௌத்த மதத்துடன் ஏனைய கலைகளும் வளர்ச்சியடைதல் - கட்டடம், ஓவியம்.

04. பௌத்த மதம் பிளவு படல் - வலகம்பாகு காலத்தில் அபயகிரி விகாரையை மையமாகக் கொண்ட மகாயானப்பிரிவு தோன்றல்.

  • பொலநறுவைக் காலத்தில் இந்து சமயச் செல்வாக்கு காணப்படல்.
  •   16ம் சிவன் கோயில், பார்வதி,  சிவன் கோயில்கள் காணப்பட்டமை.
  •   சந்திரவட்டக்கல்லில் எருது வடிவம் நீக்கப்பட்டமை.
  • கலாச்சாரத்துறை சிறப்புற்றுக் காணப்படல்.
  •   கட்டடக்கலை - அவுக்கண, தொலுவில, ரஸ்வெகர, புதுருவகல.
  •   ஓவியக்கலை - சிதுல்பௌவ, கரம்பலக குகை ஓவியம், சீகிரியா ஓவியம்.
  •  இலக்கியங்கள் - பாளி இலக்கியம், சிங்கள இலக்கியம்.
  •  பாளி இலக்கியம் - சமந்த பாசாதிகா, பபஞ்சசாதனி, மனோரத்த புரணி, சார்ந்ததீபனி (ஒழுக்கக்கோவை)

  •  சிங்கள இலக்கியம் - மகா அட்டுவா, மகாபச்சரி அட்டுவா, குருந்தி அடுவா.
  •  பொலநறுவைக்கால இலக்கியங்கள் - அமாவத்துற (குருளுகோமி) புத்தசரண, தம்சரண, சங்கசரண (வித்தியா சக்கரவர்த்தி)
  •  பொலநறுவைக்கால உரைநடை இலக்கியங்கள் - ஜானகீகரண, தடாவங்ச, ஜானகசன்யை, வெஸதுருதா சன்யை.



05. வெளிநாடுகளுடன் உறவுகள் மேற்கொள்ளப்பட்டதை ஒழுங்கு படுத்திக் கூறுவார்.
  •  ஆக்கிரமிப்பு - சூரதிஸ்ஸ மன்னன் காலத்தில் சேனன், குத்திகள், அசேலன் காலத்தில் - எல்லாளன் படையெடுப்பு.
  •  குடியேற்றம் - விஜயன், மதுரை இளவரசி, பண்டுவாசதேவன், பக்தகச்சனா, மகிந்ததேரர், சங்கமித்தை.
  •  திருமண உறவு - விஜயபாகு, திரிலோகசுந்தரி, இளவரசி மித்தா பாண்டிய இளவரசன்.
  •  உதவி கோரல் - அபயநாக மன்னன், 1ம் முகலன், சிறிநாகன், 3ம் அக்கபோதி மானவர்மன்.

06. நீர்வள நாகரிகம் வீழச்சியுற்றமைக்கான காரணங்களை விபரித்துக் கூறுவார்.
  •  வீழ்ச்சியுற்றமைக்கான காரணங்கள்.
  • 1215ல் மாகன் படையெடுப்பு (உடனடிக்காரணம்)
  • சிங்காசன உரிமைப்போட்டிகள்.
  • மத்திய நிர்வாகத்தில் ஏற்பட்ட குழப்பம்.
  • நீர்பாசனத் திட்ட சீர்குலைவு.
  • பிற்கால மன்னர்கள் பலவீனமானவர்களாகக் காணப்பட்டமை.
  • மக்கள் பாதுகாப்புத்தேடி இடம்பெயர்ந்தமை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad