Type Here to Get Search Results !

மலேசியாவிலிருந்து சிங்கபூர் பிரிந்தது ஏன்?

  •  மலேசியாவிலிருந்து சிங்கபூர் பிரிந்தது ஏன்?

  • சிங்கப்பூர் ரொம்பச் சின்ன பகுதி. தயாரிப்பு என்று அங்கே எதுவும் கிடையாது. தண்ணீரைக்கூட மலேசியப் பகுதியிலிருந்துதான் பெற வேண்டும் என்கிற அளவுக்கு ஏதுமற்ற பகுதி அது.
  • என்றாலும் பொருளாதாரத்தில் குதிரைப் பாய்ச்சலுடன் முன்னேறிக் கொண்டு இருந்தது. மலேசி யாவின் அதிகார கேந்திரம் கோலா லம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு இடம் மாறிவிடுமோ என்ற அச்சம் கூட மலேசியாவின் அதிகாரவர்க் கத்துக்கு ஏற்பட்டு இருந்தது.
  • பிரதமர் தும்கு அப்துல் ரஹ்மான், ‘சிங்கப்பூர் பிரிந்து விடட்டும்’ என்று நாடாளுமன்றத் துக்கு ஆலோசனை கூறினார். ஆனால் சேர்ந்து இருக்கவே விரும்புவதாக சிங்கப்பூர் தலைவர் லீ குவான் யூ அறிவித்தார்.
  • நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 126-0 என்கிற கணக்கில் சிங்கப்பூர் பிரிந்துச் செல்ல வேண்டும் என்பதற்கான ஆதரவு ஓட்டுகள் விழுந்தன. (சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை).
  • கண்ணீர் வழிய, ‘சிங்கப்பூர் தனி நாடாகி விட்டது’ என்று அறிவித்த லீ குவான் யூ அதன் பிரதமர் ஆனார்.
  • பின்னர் நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் ‘’அது என் மனதுக்கு மிகவும் வேதனையைக் கொடுத்த தருணம். என் வாழ்க்கை முழுவதும் மலேசியாவுடன் சிங்கப்பூர் இணைந்திருக்க வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. இருதரப்பிலும் உள்ள மக்கள் புவியியலால், பொருளாதாரத்தால், ரத்த உறவால் ஒன்றுபட்டவர்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பிரிவு நேர்ந்தது மிகவும் துரதிருஷ்டமானது’’ என்றார்.
  • ஆக மலேசியாவில் இணைந்த இரண்டே வருடங்களில் சிங்கப்பூர் பிரிந்து தனி நாடானது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad