Type Here to Get Search Results !

உலக மகா யுத்தங்களும் உலக சமாதானத்திற்கான முயற்சிகளும்

உலக மகா யுத்தங்களும் உலக சமாதானத்திற்கான முயற்சிகளும்

1. முதலாம் உலக மகா யுத்தத்திற்கான காரணிகளும், உடனடிக்காரணமும
 ஆல்சேஸ் - லொறைன் பிரச்சினை
 குடியேற்ற நாடுகளை கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி
 ஜேர்மியின் பேரரசுக்கொள்கை
 ஐரோப்பா இரு அணிகளாக பிரிந்தமை
 செரஜீவோ நிகழ்ச்சி-(உடனடிக்காரணம்)



2. முதலாம் உலகப்போரில் பங்குபற்றிய நாடுகள்
 நட்பு நாடு- பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, பின்னர் ஐக்கியஅமெரி;க்கா
 மத்திய ஐரோப்பிய வல்லரசு- ஜேர்மனி,இத்தாலி,யப்பான்,
        ஆஸ்த்திரியா,  துருக்கி, பல்கேரியா, ஹங்கேரி


3. யுத்தத்தில் ஐக்கிய அமெரிக்காவும் பங்கு பற்றியதன் பின்னணி.
 ஆரம்பத்தில் நடுநிலைக்கொள்கையை கடைப்பிடித்தல்
 லூசிடானியா கப்பல் ஜேர்மனியால் கடத்தப்படல்
 நட்பு நாடுகளுக்கு உணவு, மருந்து, படை, உதவி வழங்கியது
 மக்கள் மத்தியில் தேசியம் சமாதானம் போன்ற கருத்துக்களை
        ஏற்படுத்தியது.

4. முதலாம் உலகப்போரினால் ஏற்பட்ட விளைவுகள்
1.பெருமளவிலான சொத்துக்கள் உயிரகள் அழிவு(கிராமங்கள், பயிர்நிலம், -வைன்தொழிற்சாலை, தொடபாடற்பாடற்சேவை)
-வார்சேல்ஸ் உடன்படிக்கை(ஜேர்மனியுடன்)
-அல்சாஸ், லொரேன் பிரான்சுக்கு கொடுக்கப்பட்டது
-இராணுவபலம் குறைக்கப்பட்டது
-கடற்படை வலிமை குறைக்கப்பட்டது
-ஜேர்மனியின் குடியேற்ற நாடுகள் நட்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டது
-டன்சிக் சுதந்திர துறைமுகமாக்கப்பட்டது
2-ஐக்கிய அமெரிக்கா வல்லரசாக மாற்றப்பட்டது
3-ரஷ்யாவில் சமவுடமை அரசு தோற்றம் பெற்றது
4-சில நாடுகளின் பெயர் மாற்றம்-(மொசபத்தேமியா-ஈரான்,கொன்ஸ்தாந்திநோபிள்-ஸ்தான்பூல்
5-சர்வதேசசங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

5. சர்வதேச சங்கம் உருவாக்கப்பட்டதற்கான காரணங்கள்
  •  நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம்
  •          தீர்த்தல்
  • பொருளாதார தடைகளை விதித்து ஆக்கிரமிப்புக்களை தடுத்தல்
  •  சிறிய நாடுகளின் சுதந்திரம், சுயாதீனம் என்பவற்றை பாதுகாத்தல்
  •  சர்வதேச ஒத்துழைப்புக்களையும் புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்தல்


6. சர்வதேச சங்கம் உலகசமாதானத்திற்காக மேற்கொண்ட முயற்சிகளும் உதாரணங்களும்

 20 வருடங்களுக்கு மேல் போர் நிகழாமல் தடுத்தது
 சுவிடன்-பின்லாந்து, ஜேர்மனி-போலாந்து, கிரிஸ்-பல்கேரியா, ஈரான்-
        துருக்கி பிரச்சினைகளை சமரசம் செய்வித்தல்.
 சர்வதேச சங்கத்தின் நம்பிக்கைப்பொறுப்பின் கீழிருந்த குடியேற்றங்களின்
        நிர்வாக நடவடிக்கைளை வெற்றிகரமாக மேற்பார்வை செய்தல்.
 ஆஸ்திரியா, ஹங்கேரி, கிரிஸ் முதலிய நாடுகளுக்கு பொருளாதார
         உதவி வழங்கியது

7. சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான காரணத்தை ஒழுங்கு படுத்திக்கூறுவார்.
 அமெரிக்கா சங்கத்தில் சேராமை
 ஜேர்மனி, ரஷ்ய நாடுகளுக்கு அங்கத்துவம் கிடைக்காமை அதிக
         நிலப்பரப்பைக்கொண்ட ரஷ்யாவுக்கு அங்கத்துவம் கிடைக்கவில்லை
 இராணுவ படையொன்று இல்லாமை.
 அங்கத்துவ நாடுகள் பிற நாடுகளுடன் நல்லுறவுடன் செயற்படவில்லை.

8. இத்தாலியில் ஏற்பட்ட பாசிசவாதம், ஜேர்மனியில் ஏறபட்ட நாசிசவாதம் 
 1921இல் இத்தாலியில் பொவிற்றோமுசோலினியால்பாசிசம்
        தோற்றுவிக்கப்பட்டது
 1ம்உலகப்போரின் பின் ஏற்பட்ட அவமானத்தால் பாசிசம் எழுச்சி பெறல்
 அடொல்ப்ஹிடலர் ஜேர்மனியில் நாசிதத்தை தோற்றுவித்தார்.
 சிதறிக்கிடந்த ஜேர்மனியை ஒன்று படுத்தல்
 ஜேர்மனியின் தூயஆட்சியாளன் என உலகிற்கு எடுத்துக்காட்ல்

9. 2ம்உலகப்போருக்கான காரணங்கள்
 ஜேர்மனியின் எழுச்சி- ஹிட்லரின் செயற்பாடுகள்- செக்லோஸ்லோக்கியா மீதான படையெடுப்பு
 முசோலியின் செயற்பாடு-(இத்தாலியில்)
 ஜப்பான் கீழேத்தேசத்தின் வலிமை மிக்க நாடாக மாறதல்
 சர்வதேச சங்கத்தின் வீழ்ச்சி
 போலாந்து ஆக்கிரமிப்பு-(உடனடிக்காரணம்)

10. 2ம் உலகமகாயுத்தத்தில் பங்குபற்றிய நாடுகளின் பட்டியல்
 நேச அணி - இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஐக்கியஅமெரிக்கா
 அச்சு அணி - ஜேர்மன், இத்தாலி, ஜப்பான், ஹங்கேரி, ரூமேனியா

11. 2ம் உலகமகாயுத்தத்தின் விளைவுகள்
 மிக மோசமான அழிவு(உயிர்ச்சேதம், பொருட்சேதம்)
 அணுகுண்டு தாக்குதலால் ஏற்பட்ட அழிவு- ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாஹி
 ஜேர்மனி மேற்கு, கிழக்கு என பிளவுபடல்
 இங்கிலாந்து பிரான்ஸ் வல்லரசு அந்தஸ்த்தை இழந்தமை.
 ஐக்கியஅமெரிக்கா தலமையில் முதாலாளித்துவபொருளாதாரம்
(பிரான்ஸ்,இங்கிலாந்து ஜேர்மன்)
 சோவியத் ரஷ்யா தலைமையில் சமவுடமை பொருளாதாரம்(போலாந்து,செக்கோசிலாவாக்கியா)
 மார்ஷல்திட்டத்தின் அறிமுகம்-போரினால் அழிவடைந்த நாடுகளுக்கு பொருளாரத்தை கட்டியெழுப்பல்
 ஐக்கியநாடுகள் சபை தோற்றுவிக்கப்படல்

12. ஐக்கிய நாடுகள் தாபனம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்தினை அறிந்து கூறுவார்
 உலக சமாதானத்தையும் பாதுகாப்பையும்; பேணல்
 நட்புறவுகளை வளர்த்தல்
 மனித உயிர்களையும் அடிப்படை சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பை பெறல்
 ஐக்கியநாடுகள் சபை தோன்றுவதற்கு முக்கிய காரண கர்த்தா- ஐக்கிய அமேரிக்கா  பிராங்கிளின்ரூஸ்வெல்ட்,பிரதமர்வின்சன்ட்சேர்ச்சில்,ரஷ்யா ஜோசப்ஸ்டாலின்
 ஐக்கியநாடுகள் சபையின் பிரதான பிரிவுகள்- பொதுச் சபை, பாதுகாப்பு சபை, பொருளதாரசமூகசபை, நம்பிக்கைபொறுப்புச்சபை, சர்வதேசநீதிமன்றம், செயலகம்.
 நிரந்தர உறுப்பு நாடுகள்- ஐக்கியஅமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஐக்கியஇராச்சியம்(பிரித்தானியா)

13.  ஐக்கியநாடுகள் சபையின் இணை நிறுவனங்கள்
 உணவு விவசாய தாபனம்(று.ர்.ழு)
 உலக உணவுத்திட்டம்(று.கு.P)
 உலக சுகாதார ஸ்தாபனம்(றுர்ழு)
 சர்வதேச நாணய நிதியம்(ஐ.ஆ.கு)
 சர்வதேச தொழிலாளர் அமைப்;பு(ஐடுழு)
 ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறவர் நிதியம்(ருNஐஊநுகு)
 ஐக்கியநாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாச்சார நிறுவனம்(ருNநுளுஊழு)

14. ஐக்கியநாடுகள் சபையின் சமாதான முயற்சிகள் உதாரணங்களுடன்
 அணுப்பாவனையை நிர்வகித்தல்
 ஈரான், ஈராக் யுத்தத்தை முடிவுக்கு கொணடுவருதல்
 தென்னாபிரிக்காவில் நிற பேத கொள்கைக்கு எதிர்ப்பு
 சுயஸ் கால்வாய் நெருக்கடியை தீர்த்தமை- எகிப்பது மீதான பிரான்ஸ் இங்கிலாந்து நெருக்கடியை தீர்த்தமை.

15.  ஐக்கியநாடுகள் சபையினால் தீர்த்து வைக்க முடியாத பிரச்சினைகள்
 ஐக்கிய அமெரிக்கா - ரஷ்யா இரு அணிகளாக பிரிந்தமை.
 நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சமாதான முயற்சிகளை தடை செய்தல்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad