இலங்கையின் சிவில் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள்
சிவில் சேவையினது ஆரம்பம் பற்றி ஒரு தௌpவான வறையறையை மேற்கொள்ள முடியாது. ஆயினும் 16ம் நுhற்றாண்டிலிருந்தெ மானிய முறையை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை மையப்படுத்தி சிவில் சேவையானது ஆரம்பமானது எனக் கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் சிவில் சேவையினது முக்கியத்துவம் உணரப்படா விட்டாலும் பின்னாளில் அரசினது பணிகள் விரிவடைந்த போது சிவில் சேவையின் முக்கியத்துவம் அதிகரித்தது. இதனாலேயே பொது நிர்வாகவியலின் தந்தையான “வூ+ட்டோ வில்சன்” என்பவர் “பொதுத்துறை நிர்வாகம் அரசாங்கத்தின் தௌpவான பகுதி” எனவூம் “அரசாங்கம் தொழிற்படும் போது நிர்வாகம் தொழிற்படும்” எனவூம் “நிர்வாகம் தொழிற்படும் போது அரசாங்கம் தொழிற்படும்” எனவூம் கூறுகிறார்.
அந்தவகையில் இலங்கையில் மன்னராட்சிக் காலம் தொட்டே மானிய முறையை அடிப்படையாகக் கொண்ட இராசகாரிய முறை நிர்வாகத்தில் பின்பற்றப்பட்டதாக வரலாற்று நுhல்களில் கூறப்படுகிறது. “கமிக” என அழைக்கப்பட்ட கிராமியத் தலைவன் புராதன காலத்தில் காணப்பட்டது இதற்கு தக்க சான்றாகும். இத்தகைய இராசகாரிய முறையே போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையை ஆண்ட போதும் காணப்பட்டது. எனினும் பிரித்தானியர் இந்நாட்டினைக் கைப்பற்றிய பின்னர் சிவில் சேவையானது புத்துயிர் பெற்றது. அந்தவகையில் பிரித்தானியரால் அறிமுகம் செய்யப்பட்ட சிவில் சேவையானது யாப்பு மாற்றங்களுக்கு ஏற்பவூம் சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களுக்கு ஏற்பவூம் மாற்றமுற்று வருவதனை அவதானிக்கலாம்.
இலங்கையில் முறையான சிவில் சேவையினது அறிமுகமானது 1802இல் பிரித்தானிய முறைசார் குடியேற்றமாக இலங்கை கொண்டுவரப்பட்டதும் உதயமானது. ஆயினும் 1796ம் ஆண்டு முதல் கிழக்கிந்திய வர்த்தக கம்பனியே இலங்கையை ஆண்டது. 1802ல் இலங்கையில் நிறுவப்பட்ட முடிசார் ஆட்சியின் மூலம் சட்டஇ நிர்வாகஇ நீதி அதிகாரங்கள் யாவூம் தேசாதிபதியிடமே இருந்தது. இக்காலத்தில் தேசாதிபதி வரி வசூலிப்பு நடவடிக்கையிலேயே அதிக கவனம் செலுத்தினார். பின்னாளில் ஏற்பட்ட வேலைப்பளுவின் காரணமாக தோமஸ் மெயிட்லாண்ட் ஆளுணராக இருந்த காலகப்பகுதியில்(1805-1811) பல்வேறு சிவில் சேவைத் திணைக்களங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் கணக்காய்வாளர் திணைக்களம்இ காணிப்பதிவூ திணைக்களம் இ நில அளவைத்திணைக்களம் போன்ற திணைக்களங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த திணைக்களங்களுக்கு மேலதிகமாக மத்தியில் மையப்படுத்தப்பட்ட அதிகாரங்களை மாகாண மட்டத்திலும் பரவலடையச் செய்யூம் பொருட்டு சிவில் நிர்வாக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. அந்தவகையில் யாழ்-மன்னார்இ கொழும்பு-காலிஇ திருகோணமலை-மட்டக்களப்பு என மூன்று மாகாணங்கள் காணப்பட்டதுடன் இவற்றை நிர்வகிக்க வதிவிட இறைவரி அத்தியட்சகர் ஒருவரும் அவரின் கீழ் மூன்று மாகாணங்களுக்குமான வரி சேகரிப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். அதே வேளை கண்டி இராஜியம் 1815-1833 வரை தனியான நிர்வாக மாகாணமாக நிர்வகிக்கப்பட்டது.
இதன் பின்னர் கொண்டுவரப்பட்ட கோல்புறுக் சீர்திருத்தத்தின் மூலமாக சிவில் சேவையானது மேலும் மாற்றியமைக்கப்பட்டது. அந்தவகையில் இச்சீர்திருத்தம் இலங்கை முழுவதையூம் பிரித்தானிய முடிக்குரிய நாடாக மாற்றியதுடன் இலங்கை முழுவதும் ஆளுணரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இக்காலத்தில் இலங்கையின் சிவில் சேவையின் உச்சியில் காலணித்துவ செயலாளர் காணப்பட்டார். சிவில் சேவையில் உள்ள அனைவரும் காலணித்துவ செயலாளருக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருந்தனர்.
மேலும் கோல்புறுக் சீர்திருத்தம் நடைமுறையில் இருந்த போது இலங்கை வடக்குஇ கிழக்குஇ தெற்குஇ மேற்குஇ மத்தி என ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டு அவற்றுக்கு அரசாங்க அதிபர்களும் நியமிக்கப்பட்டனர். அரசாங்க அதிபரே மத்திய அரசாங்கத்துடன் மாகாணங்களை இணைக்கும் முகவராக காணப்பட்டார். இவரின் கீழே மாவட்டங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளாக உதவி அரசாங்க அதிபர்கள் செயற்பட்டனர். இவ்வொழுங்கமைப்பில் அதிகாரமானது மையத்திலிருந்து கீழ் நோக்கி நகர்ந்தது. அதாவது மையத்திலுள்ள காலணித்துவ செயலாளரிடமிருந்த அதிகாரம் அரசாங்க அதிபரை நோக்கி அசைய அரசாங்க அதிபரின் அதிகாரம் பல படி நிலைகளின் ஊடாக சுதேசிய உறுப்பினர்கள் காணப்படும் கிராமிய மட்டம் வரை தொடர்ந்தது.
இக்காலத்தில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்று நாடு திரும்பியோர் சிவில் சேவையில் இணைவதில் ஆர்வம் காட்டினர். இதனால் 1870களில் சிவில் சேவைப் பரீட்சை இலங்கையில் இடம்பெற்றது. இருப்பினும் சிவில் சேவையில் சுதேசியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்றதுடன் பிரித்தானியர் செல்வாக்கே அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் 1880ம் ஆண்டு பிhpத்தானியாவில் மட்டுமே பரீட்சை நடத்தப்பட்டது.
எனவே கோல்புறுக்கின் அறிமுகம் தொடக்கம் டொனமூர்சீர்திருத்தம் நடைமுறைக்கு வருவது வரையூள்ள காலப்பகுதியில் சிவில் சேவை பற்றி நோக்கும் போது: இக்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசாங்க சபையில் இடம்பெற்று அதிகாரங்கள் எதுவூம் அற்றவர்களாக இருப்பதை விட தேசிய இயக்கங்களின் தலைமைப்பீடத்தை அலங்கரித்த சுதேசியர்கள் சிவில் சேவையில் இணைவதிலேயே ஆர்வம் காட்டினர். 1920ல் முன்வைக்கப்பட்ட சீர்திருத்த யோசனையில் சிவில் சேவையில் 50மூ-75மூ வரை சுதேசியருக்கு இடமளிக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டமை இதற்கு சிறந்த சான்றாகும். இக்காலத்தில் அரசாங்க அதிபருடைய பொறுப்பு வரி சேகரிப்பதாக இருந்தாலும் அரசாங்கத்தின் பணிகள் விரிவடைந்ததால் அவரது பொறுப்புகளும் அதிகரித்தன. காலப்போக்கில் சிவில் சேவைப் பொறுப்புகள் அரசாங்க அதிபரே நிர்வகிக்கத் தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து டொனமூர் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தபோது சிவில் சேவையினில் மேலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்தவகையில் டொனமூர் யாப்பானது தேசாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில் மூன்று பிரித்தானிய காரியதரிசிகளை அரசாங்க செயன்முறையினில் இணைத்துவிட்டது. இம்மூவரிடமும் பாதுகாப்புஇ பொதுச்சேவைஇ வெளிவிவகாரம்இ சட்டம் ஒழுங்குஇ நிதி போன்ற துறைகள் கையளிக்கப்பட்டன.
இம்மூன்று காரியதரிசிகளும் மக்களால் தெரிவூ செய்யப்பட்ட சுதேசிய அமைச்சர்களுடன் இணைந்து செயற்பட்டனர். எனவே இக்காலத்தில் செயற்பட்ட அரசாங்க முறைமையானது முற்றிலும் பணியகவமைப்பு முறையினைச் சார்ந்ததாகவே இருந்தது. காரணம் காரியதரிசிகள் மூவரும் அமைச்சர்கள் என்ற நிலையினை விடவூம் அதிகாரிகள் எனும் நிலையிலேயே செயற்பட்டதுடன் சுதேசிய அமைச்சர்களும் தம்முடைய அரசியல் நிலைக்கு அப்பால் திணைக்களங்களின் தலைவர்கள் எனும் நிலையில் அரச அதிகாரிகளாகவூம் செயற்பட்டனர். எவ்வாறாயினும் இக்காலத்தில் சிவில் சேவைத் திணைக்களங்களின் அதிகரிப்புக்கு ஏற்ப சுதேசிய சிவில் சேவையாளர்களின் எண்ணிக்கையூம் அதிகரித்தது. 1939ம் ஆண்டு சிவில் சேவையில் 78 வீதமான இலங்கையர் பணியாற்றியதாக பேராசிரியர் விஸ்வ வர்ணபால குறிப்பிடுகிறார்.
மேலும் இக்காலத்தில் சிவில் சேவையினை அரசியல் தலையீடுகளில் இருந்து பாதுகாக்கவென அரசாங்க சேவையில் உயர் நிலையில் உள்ளோர் டொனமூர் ஆணைக்குழுவூக்கு செய்த வேண்டுகோளின் பேரில் சிவில் சேவையானது தேசாதிபதியினாலும் பிரதம காரியதரிசியினாலும் பாதுகாக்கப்பட்டு சிறப்புரிமை பெற்றது. சிவில் சேவையாளர்களை கட்டுப்படுத்த முடியாமை பற்றி அரசுக்கழக உறுப்பினர்கள் குறிப்பாக சுதேசிய மந்திரிமார் மன உளைச்சல் கொண்டிருந்ததாக திரு.எஸ்.நமசிவாயம் அவர்கள் தனது “இலங்கையின் சட்டமன்றங்கள்” எனும் நுhலில் கூறியூள்ளார்.
டொனமூர் சீர்திருத்தத்தின் கீழான மாகாண நிர்வாகமானது அரசாங்க அதிபரின் கீழ் காணப்பட்டாலும் அரசாங்க அதிபரது பொறுப்புக்களை மட்டுப்படுத்தியது. மக்களால் தெரிவூ செய்யப்பட்ட அமைச்சர்கள் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று திணைக்களங்களை வழிநடத்தியமையூம் அரசாங்க அதிபர்கள் உள்விவகார அமைச்சினால் நெறிப்படுத்தப்பட்டமையே இதற்குக் காரணங்களாகும். இவ் அரசியல் திட்டம் நடைமுறையில் இருந்த காலத்தில் அரசாங்க அதிபர் சிவில் நிர்வாக திணைக்களங்களை இணைக்கின்ற இணைப்பாளராக காணப்பட்டார். அதே வேளை மாகாண மட்ட இணைப்பு எனும் பணி சுருங்கி மாவட்டங்களை மத்தியூடன் இணைக்கும் செயற்பாட்டினையே அரசாங்க அதிபர் ஆற்ற வேண்டியேற்பட்டது.
மேலும் இக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அமைச்சரவை முறையானது திணைக்களங்கள் பல உருவாக காரணமாக அமைந்ததுடன் அத்திணைக்களங்களும் துணை நிர்வாகப் பிரிவூகளும் படிநிலையமைப்பில் அதிகாரங்களை கையளித்து செயற்படத் தொடங்கியமையையூம் இக்காலத்தில் அவதானிக்க முடியூம். இத்தகைய மாற்றமானது அபிவிருத்திச் செயற்பாட்டில் புதிய உத்வேகத்தையூம் வழங்கியது.
இலங்கையின் சிவில் சேவையானது 1948ம் ஆண்டின் பின்னர் மேலும் பல மாற்றங்களினை அடைந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அமைக்கப்பட்ட சுதந்திர அரசாங்கமானது மக்களினால் தெரிவூ செய்யப்பட்ட கணிசமான பிரதிநிதிகளைக் கொண்டிருந்ததனால் சமூக நல பொறுப்புக்களையூம் பொருளாதார பொறுப்புக்களையூம் அவ்வரசாங்கமே ஏற்க வேண்டியதாயிற்று. இதனால் சிவில் சேவையின் மீது பாரிய பொறுப்புகள் சுமத்தப்பட்டன.
இக்காலத்தில் சிவில் சேவையில் அரசியல்வாதிகளான அமைச்சர்களே நிர்வாகப் பொறுப்பினை சம்பிரதாயபூர்வமாக பெற்றிருந்தனர். இவ் ஒவ்வொரு அமைச்சர்களும் கொண்டிருந்த அமைச்சுப் பொறுப்புக்கு ஏற்ப பல திணைக்களங்கள் உருவாக்கப்பட்டதுடன் இவற்றைக் கட்டுப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல ஒவ்வொரு அமைச்சும் ஒரு செயலாளரைக் கொண்டிருந்தது. இத்தகைய தன்மையானது இலங்கையின் நிர்வாக சேவையில் புதுமை மிக்கதோர் விடயமாகும்.
அதை விடவூம் இக்காலப்பகுதியில் சிவில் சேவைத் திணைக்களங்கள் அதிகரிக்க சிவில் சேவையாளர்களின் எண்ணிக்கையூம் அதிகரித்தது. கணக்காளர் சேவைஇ இலிகிதர் சேவை போன்றனவூம் உருவாக்கப்பட்டன. மேலும் இவ்வரசியல் திட்டத்தின் கீழ் முன்னைய அரசியல் திட்டத்தில் காணப்பட்ட நிலையை விடவூம் அரசாங்க அதிபரின் நிலையானது சற்றுக் கீழ் நிலைக்கே கொண்டு செல்லப்பட்டது. அமைச்சுக்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் பயனாக பல திணைக்களங்கள் உருவாக்கப்பட்டதனால் அத்திணைக்களங்கள் அரசாங்க அதிபர் முன்னர் பெற்றிருந்த அதிகாரங்களை கைப்பற்றிக் கொண்டன.
சுதந்திர இலங்கையின் சிவில் சேவையானது இவ்வாறாக இருந்த அதே வேளை 1956ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது சிவில் சேவையில் மேலுமொரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது இக்காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட சிங்கள மொழிச்சட்டமானது அரச ஊழியர்கள் கல்விப் பொதுத்தராதர சாதாரன தரத்தில் சிங்கள மொழியில் சித்தியடைய வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்தியது. இச்சட்டம் அக்காலத்தில் வேலையற்றிருந்த சிங்கள மக்கள் பலரின் ஆதரவைப் பெற்றிருந்தாலும் அக்காலத்தில் ஆங்கில மொழிமூலம் கல்வி கற்று சிவில் சேவையில் பணியாற்றிய தமிழரை வெகுவாகப் பாதித்தது. ஆயினும் இதன் மூலம் சுதேசிய மொழியில் மொழியில் கல்வி கற்ற கீழ் மத்தியதர மக்கள் அரச சேவையில் பங்கெடுக்க வாய்ப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1960ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தமானது சிவில் சேவை மீலொழுங்கு செய்யப்பட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. இச்சீர்திருத்தம் தேசிய பொருளாதார விருத்தியில் மாவட்டங்களை இணைத்ததுடன் கச்சேரி முறையையூம் மீலொழுங்கு செய்து மக்களை அபிவிருத்தியில் பங்கெடுக்கச் செய்தது. ஆகவே 1960ம் ஆண்டு செய்யப்பட்ட மாற்றங்களினால் சிவில் நிர்வாகம் துரித வேலைத்திட்டங்களுக்கு ஏற்றதொரு அமைப்பாக மாற்றியமைக்கப்பட்டது.
“இலங்கை சிவில் சேவை”யானது 1963ம் ஆண்டு “இலங்கை நிர்வாக சேவை” என மாற்றப்பட்டமை சிவில் சேவையில் ஏற்பட்ட முக்கியமான மாற்றமாகும். இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பல சமூக அபிவிருத்தித் திட்டங்களினால் சுதேசியர்கள் பலர் சிவில் சேவையில் அதிகமாக உள்வாங்கப்பட்டனர் எனவே இத்தகு மாற்றங்களினை கருத்திற் கொண்டே “இலங்கை நிர்வாக சேவை” என பெயர் மாற்றப்பட்டதுடன் சிவில் சேவையில் இணைவோருக்கு முகாமைத்துவ பயிற்சி நுட்பங்களை போதிக்கவென 1966ல் “நிர்வாக கற்கைகளுக்கான நிலையம்”(யூஉயனநஅல ழக யூனஅinளைவசயவiஎந ளுவரனநைள) நிறுவப்பட்டது.
இக்காலத்தில் சிவில் சேவையினைக் கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பாக அரசாங்க சேவை ஆணைக்குழு விளங்கியது. இவ்வாணைக்குழு அரச ஊழியர்களின் நியமனம்இ இடமாற்றம்இ பதவியூயர்வூஇ ஒழுக்கக் கட்டுப்பாடுஇ பதவி நீக்கம் என்பனவற்றில் அரசியல் தலையீடுகளை மட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டாலும் 1956ம் ஆண்டின் பின்னர் இவ்வாணைக்குழுவின் செயற்பாட்டில் அரசியல் தலையீடுகள் அதிகரிக்கலாயின. இச்செயற்பாடானது பொதுச்சேவையின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தியதுடன் இதன்விளைவாக அபிவிருத்திச் செயற்பாடும் பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1970ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கமானது இடதுசாரி கொள்கை உடையோரை பொரும்பாண்மையாக கொண்டிருந்ததால் அரசியல் முறையை மாற்ற விரும்பி 1972ம் ஆண்டு புதிய யாப்பினை அறிமுகம் செய்ததுடன் சிவில் நிர்வாகத்திலும் பல்வேறு மாற்றங்களினை அறிமுகம் செய்தது. 1972ம் ஆண்டு யாப்பானது பொதுச்சேவை ஆலோசனை சபைஇ பொதுச்சேவை ஒழுக்காற்று சபை எனும் இரு சபைகளினைக் கொண்ட பொதுச்சேவை ஆணைக்குழுவை உருவாக்கியது. இதில் பொதுச்சேவை ஆலோசனை சபை பொதுச்சேவை பதவிக்குரியவர்களை நியமித்தல்இ பதவியூயர்வூஇ இடமாற்றம் என்பன தொடர்பில் அமைச்சரவைக்கு ஆலோசனை கூறும் சபையாக தொழிற்பட்டது.
பொதுச்சேவை ஒழுக்காற்று சபையானது பொதுச்சேவை பணியாளரின் ஒழுக்காற்று நடவடிக்கைஇ பதவி நீக்கம் போன்றன தொடர்பில் தீர்மாணங்களை மேற்கொண்டு அமைச்சரவைக்கு ஆலோசனைகளை முன்வைக்கும் ஒரு சபையாக விளங்கியது. எனவே இக்காலப்பகுதியில் பொதுச்சேவை தொடர்பான ஆலோசனைகளை மட்டுமே பொதுச்சேவை ஆணைக்குழு முன்வைத்ததே தவிர இறுதி முடிவூகளை எடுப்பது அமைச்சரவையே ஆகும். இதனால் இக்காலத்தில் பொதுச்சேவையானது அரசியல் தலையீடுகள் நிறைந்து விளங்கியது.
இதன் பின்னர் 1978ம் ஆண்டு 4ஃ5 பெரும்பாண்மை பெற்று ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி யாப்பு மாற்றங்களை செய்த போதும் பொதுச்சேவையில் பாரிய மாற்றங்கள் எதனையூம் செய்யவில்லை. ஆயினும் முன்னைய யாப்பில் காணப்பட்ட பொதுச்சேவை ஆலோசனை சபைஇ பொதுச்சேவை ஒழுக்காற்று சபை எனும் அமைப்புகளுக்குப் பதிலாக பொதுச்சேவை ஆணைக்குழுவை தோற்றுவித்தது. இவ்வாணைக்குழுவின் உறுப்பினர்கள் யாப்பின் 17வது திருத்தத்திற்கு அமைவாக அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டுமாயினும் நடைமுறையில் இப்பேரவையானது செயலிழந்து உள்ளமையினால் இன்றைய நிலையில் சிவில் சேவையில் அரசியல் தலையீடுகள் நிறைந்துவிட்டன என்றே கூற வேண்டியள்ளது.
எவ்வாறாயினும் 1978ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் “அபிவிருத்தியில் மக்கள் பங்குபற்றல்” எனும் எண்ணக்கருவூக்கு முக்கியமளித்து செயற்பட்டதனால் மாவட்ட அபிவிருத்தி சபைகள் உருவாக்கப்பட்டு அவையே ஒவ்வொரு மாவட்டத்தினதும் விருத்திக்கு பொறுப்பாக்கப்பட்டதுடன் அரசாங்க அதிபர் ஒவ்வொரு மாவட்டத்தினதும் திட்ட அமுலாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பொறுப்பாக்கப்பட்டார். மாவட்ட மட்டத்துக்கு அடுத்த நிலையில் உதவி அரசாங்க அதிபர் பிரிவூகள் தோறும் அப்பிரதேசங்களின் திட்ட அமுலாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்குமாக பிரதேச அபிவிருத்தி சபைகள் உருவாக்கப்பட்டன. உதவி அரசாங்க அதிபர் இச்சபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
எனவே இலங்கையில் முறையான சிவில் வேவையானது பிரித்தானியரின் வருகையூடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் யாப்பு மாற்றங்களுக்கு ஊடாகவூம்இ ஆட்சி மாற்றங்களின் ஊடாக ஏற்பட்ட கொள்கை மாற்றங்களுக்கு ஊடாகவூம் வளர்ச்சியடைந்து தற்போது பொது மக்களின் தேவைகளினை பூர்த்தி செய்வதும்இ அரச இயந்திரத்தின் செயற்பாட்டினை இலகுபடுத்துவதுமான ஒரு பாரிய அமைப்பாக வளர்ச்சியடைந்துள்ளது.