Type Here to Get Search Results !

Sri Lanka இலங்கை வரலாற்று வினாக்கள்


1. சுரங்கவழி நீர்பாசனம் அமைத்த மன்னன் யார்?

        வசப மன்னன்
2. தீசவாவி எந்த நதியை மறித்துக் கட்டப்பட்டது?
   மல்வத்து ஓயா

3. சிறந்த உயர் தொழில்நுட்பத்திற்கு உதாரணமாக விளங்கும்  கால்வாய்  யாது?
ஜயகங்கை/ யோத கால்வாய்

4. பின்வரும் குளங்களைக் கட்டிய மன்னர்களின் பெயர்களைத் தருக?

         கந்தளாய்       - 2ஆம் அக்போ

         பதவியா        - 2 ஆம் முகலன்

         மின்னேரியா - மகாசேனன்

         கலாவாவி  - தாதுசேனன்



5. நதியின் நீரோட்ட வேகம் குறைவான இடங்களில் கட்டப்பட்ட இரு 

        அணைக்கட்டுக்களின் பெயர்களைத் தருக?

.        ரிதிபெஸ்தி, மினிபே





6. கீழே தரப்பட்டுள்ள குளத்தின் கூறுகளின் பயன்பாட்டைத் தருக?

         அலைதாங்கி  - .குள்க்கட்டை நீர் அரிப்பிலிருந்து பாதுகாத்தல்

         கலிங்கல் தொட்டி  -நீரின் அமுக்கத்தைக் கட்டுப்படுத்தல்

         சுருங்கை  - மேலதி நீரை வெளியேற்றுதல்

         கலிங்கல்   -குளத்திலிருந்து நீரை வெளியேற்றுதல்.





7. பண்டைய நீர்ப்பாசனத் துறையில் தொழில்நுட்பம் சிறந்து  விளங்கியது என்பதற்கான சான்றுகள் மூண்று தருக?

 1. சுவடுகளை இணைத்து குளக்கட்டை அமைத்தல்

 2. சுரங்க வழி நீர்ப்பாசனம்

        3. குளம் பல கூறுகளுடன் அமைக்கப்பட்டது

         4. சாய்வுத் தன்மை பயன்படுத்தப்படல்

         5. நீரின் வேகம் குறைவான இடங்களில் அணைக்கட்டு அமைக்கப்படல்



8. பின்வரும் துறைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் யாவர்?

         திறை சேரிக்குப் பொறுப்பான அதிகாரி  -  பண்ட கரிக்க

         வைத்தியத் துறைக்குப் பொறுப்பானவர்   - வெதனா

         அரச குடும்பவைபவங்களை நடாத்துபவர் -  புரோகிதர்

         போர் உபகரணங்களுக்குப் பொறுப்பானவர் - அசிக்காசிக.



9. அநுராதபுர இறுதிக் காலப்பிரிவில்  காணப்பட்ட நிர்வாக அலகுகள் எவை?

         ராஜரட்டை, தக்கணதேசம், றுகுணுரட்டை, மலையரட்டை



10. கிராம சபையின் முக்கிய பணிகள் எவை?

           கிராமத்தின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டல் 

          இராஜ காரிய முறையை உரிய விதத்தில் செயற்படுத்தல்

          வாவிகளை சேகரித்தலும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தல்

          குற்றவாளிகளை பிடித்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தல்





11. நீர் விநியோக முறையின் தேவை தோன்றிமைக்கான காரணங்கள் 2 

        தருக?

        நிட்சயமற்ற மழைவீழ்ச்சி 

        உலர்வலயம் ஒருவருடத்தில் ஒருபருவத்தில் மட்டும் மழை கிடைக்கப் 

         பெறுதல்

         அதிகரித்த சனத்தொகை

         நீரின் தேவை அதிகரித்தல்ஒரு சில காலங்களில் மழைவீழ்ச்சி 

         கிடைக்காமை







01.  நீர்வள நாகரிக காலத்தில் செங்கல் ஓடு தொழில் செய்பவர்கள் 

        எப்பெயரால் அழைக்கப்பட்டனர்?

 ஒலுவடு



02. 'அந்தராப்பன' என்ற பெயரில் அழைக்கப்படும் சந்தை எந்த இடத்தில் 

         அமைந்திருந்தது?

 உபதீசகம



03. நீர்வள நாகரிக காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டு வர்த்தகத்தில் 

         பொற்காசுகளைக் கொடுத்து வாங்கிய பொருட்கள் மூன்று தருக.

 மானிறைச்சி, எண்ணெய், சுண்ணாம்பு



04. இலங்கை புராதான காலத்தில் வெளிநாட்டு வர்த்தகம் மேற்கொண்டிருந்த

       மேலைத்தேய நாடுகள் இரண்டினைத்தருக.

       கிரேக்கம், உரோம்



05. இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்தில் செல்வாக்குச் செலுத்திய 

         காரணிகள் மூன்று தருக?

 மேற்கு, கிழக்கு வர்த்தகப் பாதையில் காணப்படல் 

         நீரோட்டப்பாதையில் அமைந்திருத்தல் 

          இயற்கைத் துறைமுககங்கள் காணப்படல்.



06. இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 

        பொருட்கள் மூன்று தருக?

 முத்துக்கள், இரத்தினக்கல், யானை, யானைத்தந்தம், வாசனைத் 

         திரவியங்கள்.



07. இலங்கையில் பௌத்தமதம் விரைவாக வளர்ச்சியடைந்தமைக்கான காரணங்கள் மூன்று தருக?

         அரசன் பௌத்த சமயத்தவனாகக் காணப்பட்டமை.

         அமைச்சர்கள், பிரதானிகள் பௌத்த சமயத்தைச் சார்ந்திருந்தமை.

         இதற்கு முன்னர் ஒழுங்கமைப்பட்ட மதம் காணப்படாமை.

         கலை அம்சங்களும் விருத்தியடைந்தமை.





08. பொலநறுவைக்காலத்தில் காணப்பட்ட உரைநடை இலக்கியங்கள் 

         மூன்றின் பெயர் தருக?

 ஜானகிகரண, தடாவங்ச, ஜானகசன்யை, வொஸதுருதாசன்யை.



09. எல்லாள மன்னன் படையெடுத்தபோது இலங்கையை ஆட்சி செய்த 

         மன்னன் யார்?

 அசேலன்.



10. தென்னிந்திய மன்னர்களின் உதவியைப் பெற்று ஆட்சியமைத்த இலங்கை   

        மன்னர் இருவரின் பெயர் தருக?

 அபயநாகன், 1ம் முகலன், 3ம் அக்கிரபோதி, சிறிநாகன்.



11. கலிங்க மாகன் எந்த ஆண்டில் இலங்கை மீது படையெடுத்தான்?

 கி.பி 1215



12. புராதான காலத்தில் இந்தியாவுடன் இலங்கை எவ்வகையான 

        தொடர்புகளைக் கொண்டிருந்தது?

 ஆக்கிரமிப்பு, குடியேற்றம், திருமணம், உதவிகோரல்.



13. இலங்கையில் ஏற்பட்ட ஆரியக் குடியேற்றங்களை ஒழுங்கு முறையாகத்

        தருக?

 விஜயன் குழுவினர், 

        மதுரை இளவரசி, 

        பண்டுவாசுதேவன், 

        பக்தகச்சனா, 

        மகிந்ததேரர், 

        சங்கமித்தை.



14. பொலநறுவைக் காலத்தில் இந்துமதச் செல்வாக்கு காணப்பட்டமைக்கானசான்று இரண்டு தருக?

 16ம் சிவன் கோயில் காணப்பட்டமை, 

         சிவன், பார்வதி சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டமை,

         சந்திரவட்டக்கல்லில் எருது வடிவம் நீக்கப்பட்டமை.



15. நீர்வள நாகரிகம் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்கள் மூன்று தருக?

 மாகன் படையெடுப்பு, சிங்காசன உரிமைப் போட்டிகள்,

        மத்திய நிர்வாகத்தில் ஏற்பட்ட குழப்பம், 

         நீர்பாசனத் திட்ட சீர்குலைவு, பிற்கால மன்னர்களின் பலவீனம், 

         மக்கள் பாதுகாப்புத்தேடி இடம் பெயர்ந்தமை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad