Srilanka GK எம் இனிய வாசகர்கள் அனைவருக்கும் இன் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே… போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே…
உலககெங்கிலும் பரந்து வாழும் கிறிஸ்தவ சகோதரர்கள் அனைவருக்கும் குழந்தை யேசு பிரானின் பிறந்தநாளான இன்று புனித கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் Srilanka GK பெருமையடைகின்றது.
இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் முகமாக கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்து பிறப்புவிழா (கிறிஸ்மஸ்) கொண்டாட்டங்களில் ஆலய வழிபாடு, இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் சிறிய பொம்மைகளால் செய்யப்பட்ட மாட்டுத்தொழுவ காட்சிகள், சண்ட குலோஸ், வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்மஸ் கெரொல் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும்.
கிறிஸ்தவ கருத்துக்களோடு, கிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்கால கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறிஸ்துமஸ் தன்னகத்தே கொண்டுள்ளது.
இக்கொண்டாட்டத்தின் மதம் சாரா பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.