Type Here to Get Search Results !

Srilanka Gk வேதகாலம் வரலாறு - பொது அறிவு வினா-விடை

 Srilanka Gk வேதகாலம்  வரலாறு  - பொது அறிவு வினா-விடை

1. இந்தியாவில் ஆரியர்கள் குடியேறிய பகுதி ................. என்று அழைக்கப்படுகிறது? - ஆரிய வர்த்தம்

2. வேதகாலத்தை எத்தனை வகையாக பிரிக்கலாம்? - இரண்டு, அவை : முற்பட்ட வேதகாலம், பிற்பட்ட வேதகாலம்

3. முற்பட்ட வேதகாலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - ரிக் வேதகாலம்

4. ஏழு நதிகள் பாயும் நிலத்தை எவ்வாறு அழைப்பர்? - சப்தசிந்து

5. வேதகால மக்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை .................... மூலம் அறிய முடிகிறது. - ரிக்வேதம்

6. ஆரியர்களின் சமுதாய அமைப்பு எவ்வாறு அமைந்திருந்தது? - குடும்பம் ➞ கிராமம் ➞ விஸ் ➞ ஜனா ➞ ஜனபதா

7. கிராமத்தின் தலைவர் யார்? - கிராமணி

8. பல கிராமங்கள் இணைந்து .................. என்ற பெரிய குழுவானது. - விசு(விஸ்)

9. விசு(விஸ்) என்ற பெரிய குழுவின் தலைவர் யார்? - விசுவபதி

10. பெரிய ஆட்சி அமைப்பு ................ - ஜனா

11. ராஜ்யத்தில் வாழ்ந்த மக்கள் .................... எனப்பட்டனர். - பிரஜைகள்

12. அரசர்களை எவ்வாறு அழைப்பர்? - பிரஜாபதி

13. மகாஜனபதம் என்பது என்ன? - மகாஜனபதம் என்பது பல சிற்றரசுகள் இணைந்த பெரிய அரசு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad