Sri Lanka, இலங்கை
➤ நீண்ட பெயர்- இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
➤ ஏற்றுக்கொள்ளப்பட்ட குறுகிய பெயர் - இலங்கை
அளவு
- பரப்பளவு 65,610 சதுர கிலோ மீற்றர்
- நீளம் 445 கிலோ மீற்றர்
- அகலம் 225 கிலோ மீற்றர்
தலைநகரம் - ஸ்ரீ ஜயவர்தனபுர
வணிகத் தலைநகரம் - கொழும்பு
➤ அரசாங்கம்
இலங்கை அரசாங்கம்
இலங்கையானது ( 2004 மதிப்பீட்டின்படி ) 19.5 மில்லியன் மக்களைக் கொண்ட சுதந்திரமும் தன்னாதிக்கமும் உடைய நாடாகும். விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் சர்வசன வாக்குரிமையின் மூலமாகத் தெரிவுசெய்யப்படுகின்ற பாராளுமன்றத்தினால் சட்டவாக்க அதிகாரம் பிரயோகிக்கப்படுகின்றது. பொதுமக்களாலேயே தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி பாதுகாப்பினை உள்ளிட்ட நிறைவேற்று அதிகாரத்தை அமுலாக்கி வருகின்றார். பலகட்சிமுறை நிலவுகின்ற இலங்கை மக்கள் ஆறு வருடங்களுக்கு ஒருதடவை புதிய அரசாங்கமொன்றைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கின்றனர்.
- சனத்தொகை 20.3 மில்லியன் ஆகும்
- சனத்தொகை அடர்த்தி சதுர கிலோ மீற்றருக்கு 296 பேர்
- ஆயுள் எதிர்பார்ப்பு பெண்கள் 76.4 ஆண்கள் 71.7 (2001 மதிப்பீட்டின் பிரகாரம்)
- எழுத்தறிவு விகிதம் 92.7 சதவீதம் (2003 மதிப்பீட்டின் பிரகாரம்)
➤ மொழிகள்
சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் இலங்கையில் பரவலாகப் பாவனையில் உள்ளது.
➤ இனப்பிரிவுக் கலப்பு
சிங்களவர் 74.9%. தமிழர் 15.4%. முஸ்லிம்கள் 9.2%, பறங்கியரும். (ஒல்லாந்த மற்றும் போர்த்துக்கேய வழித்தோன்றல்கள்) பிற இனத்தவர்களும் 0.5% . (2012 மதிப்பீட்டின் பிரகாரம்)
மதம்
பௌத்தம் 70.19 %, இந்து 12.61%, கிறிஸ்தவம் 7.45%, இஸ்லாம் 9.71%
காலநிலை
தாழ்நிலப் பிரதேசங்கள் - வெப்ப வலயத்தைச் சேர்ந்தவை சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். மத்திய மலைநாடு – மிகவும் குளிரானது. வெப்பநிலை 14 பாகை செல்சியஸ் வரை வீழ்ச்சியடையும். தென்மேல் பருவக்காற்று மழை மே முதல் யூலை வரை மேற்கு, தெற்கு மற்றும் மத்திய பிரதேசங்களுக்கு கிடைக்கும். வட கீழ் பருவக்காற்று மழை டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களுக்கு கிடைக்கும். உல்லாசப் பயணிகளின் மனதைக் கவரக்கூடிய காலநிலை ஆண்டுபூராவிலும் நிலவுகின்றமை இலங்கையின் தனித்துவமான பண்பாகும்.
வருடாந்த தலா வருமானம் GNP
2580 அமெரிக்க டொலர்கள் (2011 மதிப்பீட்டின் படி)
கைத்தொழில்கள் இறப்பர், தேயிலை, தெங்கு மற்றும் வேறு விவசாயப் பொருட்களைப் பதனிடல், ஆடை தயாரிப்பு, சீமெந்து, பெற்றோலிய சுத்திகரிப்பு, துணிமணிகள் மற்றும் புகையிலை.
விவசாய உற்பத்திகள்
அரிசி, கரும்பு, தானிய வகைகள், அவரையினத் தாவரங்கள், எண்ணெய் தயாரிக்கும் விதையினங்கள், கிழங்கு வகைகள், பலசரக்கு சாமான்கள், தேயிலை, இறப்பர், தேங்காய், பால், முட்டை, தோல், இறைச்சி.
புழக்கத்திலுள்ள பணம்
தசம பண முறை கடைப்பிடிக்கப்படகின்ற இலங்கையில் ரூபா 2,10,20,50,100,500,1000 மற்றும் 5000 பெறுமதியான தாள்கள் பாவிக்கப்படுகின்றன. 1,2,5,10,25,50 சத நாணயக் குற்றிகளும் ரூபா 1,2,5,10 பெறுமதியான நாணயக் குற்றிகளும் உள்ளன. சர்வதேச ரீதியாக பணத்தின் பெறுமதி கணிப்பிடப்படுகையில் டொலர் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.
விசா அனுமதிப் பத்திரம்
உங்கள் நாட்டின் இலங்கைத் தூதரகத்திடமிருந்து, கொன்சியுலேற் அலுவலகத்திடமிருந்து, சுற்றுலாத்துறை அலுவலகத்திடமிருந்து அல்லது உங்ளின் உல்லாசப் பயணத்துறை முகவரிடம் விசாரிக்கவும்.
வாரத்தின் வேலை நாட்கள்
திங்கள் முதல் வெள்ளி வரையான ஐந்து நாட்களைக் கொண்ட வாரமே இலங்கையில் நடைமுறையில் உள்ளது.
அலுவலக நேரங்கள்
- அரசாங்க அலுவலகங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 8.30 முதல் பி.ப. 4.30 வரை திறந்திருக்கும்.
- வங்கிகள் திங்கள் முதல் சனி வரை மு.ப. 9.00 மணி முதல் பி.ப.1.00 மணி வரை அல்லது பி.ப. 3.00 மணி வரை திறந்திருக்கும்.
அஞ்சல் அலுவலகங்கள்
திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரையும் சனிக்கிழமைகளில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 1.00 மணி வரையும் திறந்திருக்கும். மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ளது. 24 மணிநேரமும் திறந்திருக்கும் ( தொலை பேசி – 2326203 )
இடஅமைவு
இந்து சமுத்திரத்தில் மத்திய கோட்டிலிருந்து 880 கிலோ மீற்றர் வடக்கில் இந்தியாவின் தென்கிழக்கு கரையோரத்திற்குத் தொலைவில் அமைந்துள்ள தீவாகும். அது மத்திய கோட்டிற்கு வடக்கே 5° 55' மற்றும் 9° 55' இடையேயும், கிழக்கு நிலநடுக்கக் கோட்டிற்கு 79° 42' மற்றும் 81° 52' இடையேயும் அமைந்துள்ளது.
சிறப்பம்சம்
அழகான வறள் வலய கடற்கரை, கண்கவர் விருட்சங்கள், புராதன தாதுகோபுரங்கள் போன்றன காணப்படுவதுடன் அனைவரும் விரும்பத்தக்க அழகான கண்கவர் காட்சிகளால் நிரம்பி வடிகின்றன. நாட்டிலே புவிசரித்திரவியல் மாற்றங்கள், மத்திய மலை நாட்டிலிருந்து ஓரளவு தெற்கே, 2500 மீட்டரை விடவும் உயரமான பல மலைத் தொடர்கள், அதைச் சுற்றியுள்ள சமவெளிகள் என்பவற்றையும் கொண்டுள்ளது. தென்னை மரங்கள் நிரம்பிய கடற்கரையால் சூழ்ந்து காணப்படுகின்ற இந்தத் தீவிலே கடல் வெப்ப நிலையானது 27° பாகை செல்சியஸ்ஸை விடவும் குறைவது சில சமயங்களிலாகும்.
இலங்கையில் வரலாறு
புதிய சீலா யுகத்தில்கூட இலங்கையில் உணவுகளை சேகரிப்போர், நெற்பயிர் செய்கை விவசாயிகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் காலம் பற்றி தெரிந்த விடயங்கள் மிகவும் குறுகியவையாகும். எமது எழுத்து மூலமான வரலாறானது, இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களின் வருகையுடனேயே ஆரம்பமாகின்றது. ஆரியர்கள் இரும்பு பாவனை, வளர்ச்சியடைந்த விவசாயம் மற்றும் நீர்ப்பாசன முறைமைகளை அறிமுகப்படுத்தினர்.
அவர்கள் நாட்டை நிர்வகிக்கும் அரசாங்க முறைமையையும் அறிமுகம் செய்தனர். ஆரிய குடியிருப்புக்களில் அநுராதபுர பண்டுகாப்பய மன்னனின் ஆட்சியின் கீழ் பலமிக்க இராசதானியொன்று உருவானது. மரபு வழியான வரலாற்றின் பிரகாரம் அநுராதபுரத்தின் ஸ்தாபகராகவும் அவரே கருதப்படுகிறார்.
பண்டுகாப்பய மன்னனின் வம்ச வழியாக வரும் ஒருவரான தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் ஆட்சிக் காலத்தில் கி.மு. 247 இல் இந்நாட்டிற்கு பௌத்த தர்மமானது. இந்தியாவின் அசோக்க சக்கரவர்த்தியின் மகனான மஹிந்த தேரரினால் கொண்டுவரப்பட்டது. பௌத்த தர்மமானது இந்நாட்டின் கலாசார சிறப்புத் தன்மைக்கு வழிகாட்டியமையால் இலங்கை வரலாற்றிலே இந்நிகழ்வானது மிக முக்கியத்துவமிக்க ஒன்றாக கருதப்படுகின்றது.
இவ்வாறானதொரு புதிய கலாசாரம் தோற்றம் பெற்றமையால் இலங்கையானது செழிப்புமிக்க ஒரு நாடாக மாறியது. கி.மு. 2 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின் பாரியதொரு பகுதி தென் இந்திய ஆக்கிரமிப்பாளன் ஒருவரின் கட்டுப்பாட்டிற்கு உள்ளானது. கிறிஸ்தவ ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு வரையில் இலங்கையை ஆட்சிசெய்தவர்ளாக, நீர்ப்பாசனத் துறையில் கவனம் செலுத்தி பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக வம்ச வழியாக வந்தவர்களான லம்பகர்ன எனும் வம்சாவளியினரைக் குறிப்பிடலாம். இந்த வம்சத்தின் சிரேஷ்ட மன்னரான (கி.பி. 3 ஆம் நூற்றாண்டிலே) மஹாசேன மன்னன், பாரிய அளவிலான வாவிகளாக காணப்படுகின்ற நீர்பாசன நீர்த்தேக்கங்களை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்தார்.
குளங்களை கட்டுவித்த மற்றுமொரு சிரேஷ்ட மன்னராக தாதுசேன மன்னரைக் குறிப்பிடலாம். இந்த மன்னரை கொலை செய்த அவரது மகன் காசியப்பன் சீகிரியாவை தமது அரச நகரமாக மாற்றியமைத்துக்கொண்டு சீகிரியா கல்லின் உச்சியினை தமது ஆட்சியின் தலைநகரமாக மாற்றிக் கொண்டான். தென் இந்திய ஆக்கிரமிப்புக்களின் பிரதிபலனாக அநுராதபுர இராசதானியானது கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில் தோல்விகண்டது.
1 ஆவது விஜயபாகு மன்னன் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்து கி.பி. 11 ஆவது நூற்றாண்டிலே பொலன்னறுவையை தமது தலைநகரமாக மாற்றினான். பொலன்னறுவையை ஆட்சி செய்த ஏனைய சிரேஷ்ட மன்னர்களாக மஹா பராக்கிரமபாகு மற்றும் நிஸ்ஸங்கமல்ல எனும் மன்னர்கள் காணப்பட்டதுடன், அவர்கள் கட்டடக் கலை துறையில் பெறுமதிமிக்க பல கட்டடங்களை நிர்மாணித்து நகரத்தை அலங்கரித்தனர்.
எதிரிகளின் ஆக்கிரமிப்புக்கள் அடிக்கடி இடம்பெற்று வந்தமையால் தலைநகரமானது இடத்திற்கிடம் மாற்றப்பட்டு, 1505 ஆம் ஆண்டிலே போர்த்துக்கேயர்கள் ஆக்கிரமிக்கும்போது மேற்குப் பிரதேசத்தின் சமவெளியான கோட்டையானது பிரதான நகரமாக காணப்பட்டது. போர்த்துக்கேயர் பலசரக்கு வியாபார நோக்கத்திற்காகவே இங்கு வந்தனர். எனினும் கடற்கரை பிரசேங்களை தமது கட்டுப்பாட்டின்கீழ் 1956 ஆம் ஆண்டுவரையில் வைத்திருந்ததுடன், அதன் பின்னர் அதனை ஆக்கிரமித்த ஒல்லாந்தர்களும் இதனையே பின்பற்றினர்.
ஒல்லாந்தர்களின் ஆட்சியானது, 1656 முதல் 1796 வரையில் காணப்பட்டது. 1796 ஆம் ஆண்டிலே அவர்களை விரட்டியடித்து பிரித்தானியர்கள் ஆட்சியினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இந்தக் காலத்தில் மலைநாட்டு இராசதானியானது கண்டியினைத் தலைநகரமாகக் கொண்டு இயங்கியது. நாட்டின் ஏனைய பிரதேசங்களை நிருவகித்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் திரும்பத்திரும்ப தாக்கியபோதிலும் அவர்கள் தமது சுதந்திரத்தை பாதுகாத்து வந்தனர்.
1815 ஆம் ஆண்டிலே கண்டி இராசதானியானது பிரித்தானியர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரப்பட்டதுடன், இதனூடாக அவர்கள் முழு நாட்டையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். நவீன தொடர்பாடல் முறைமைகள், மேலைத்தேய மருத்துவ முறைகள், ஆங்கிலக் கல்வி உட்பட பெருந்தோட்டக் கைத்தொழில் (முதன்முதலில் கோப்பி, அதன் பின்னர் தேயிலை, அதன் பின்னர் இறப்பர் மற்றும் தெங்கு) ஆகிய இவைகள் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் வளர்ச்சியடைந்தது.
அமைதியான அரசியலமைப்பு பரிணாமத்தின் பின்னர் இலங்கையானது தமது சுதந்திரத்தை 1948 ஆம் ஆண்டிலே மீளப் பெற்றுக்கொண்டது. தற்போது இறைமையுள்ள குடியரசு ஒன்றான இலங்கையானது பொதுநலவாய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றில் அங்கத்துவம் வகிக்கின்றது.
இலங்கையில் பொருளாதாரம்
இலங்கையானது பிரதானமாக விவசாய நாடொன்றாகும். பிரதான பயிரான அரிசியினால் இலங்கையானது தன்னிறைவடைந்து காணப்படுகின்றது. தேயிலை, இறப்பர், தெங்கு என்பனவும் முக்கியமான விவசாயப் பயிர்களாகக் காணப்படுவதுடன், அதிலே தேயிலையானது அந்நிய செலாவணியைப் பெற்றுத்தரும் முக்கிய பயிராகவும் விளங்குகின்றது. இவற்றைவிட ஏனைய முக்கிய பயிர்களாக கொக்கோ, கறுவா, ஏலம், சாதிக்காய், மிளகு, கராம்பு என்பன பலசரக்குகளாகும். சமரேகை மற்றும் நடுநிலையான காலநிலை வலயங்களுக்குத் தனித்துவமிக்க பழவகைகள் மற்றும் மரக்கறி வகைகள் என்பன இலங்கையிலும் சிறப்பாக வளர்கின்றன. இலங்கையர்களின் ஊடாக கிடைக்கப்பெற்ற அந்நியச் செலாவணியின் பெறுமதியானது அதிக அளவாகும்.
கடந்த மூன்று தசாப்பதங்களினுள் சுற்றுலாக் கைத்தொழிலும் முக்கியமானதொரு கைத்தொழிலாக வளர்ச்சிகண்டுள்ளது. உற்பத்திக் கைத்தொழில்களிலும் துரித முன்னேற்றமொன்று ஏற்பட்டுள்ளதுடன், அதனூடாக மசகு எண்ணெய் உற்பத்தி, தோல் பொருட்கள், தைத்த ஆடைகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
Sri Lanka's Population Rate இலங்கையின் சனத்தொகை வீதம்
இலங்கையின் சனத்தொகையானது 18.5 மில்லியனாகும். அதில் பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்களாவர் (74%). ஏனைய இனத்தவர்களாக இலங்கை தமிழர்கள் (12.6%), இந்திய தமிழர்கள் (5.55%), மலேயர்கள் (போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்களின் மரபுவழி வந்தவர்கள்) பர்கர் 7.9% போன்றோர் காணப்படுகின்றனர்.
இலங்கையானது பல சமயத்தவர்கள் வாழும் ஒரு நாடாகக் காணப்படுகின்றபோதிலும் (69.3%) வீதத்தினர் பௌத்தர்களாவர். ஏனைய சமயத்தவர்களாக, இந்துக்கள் (15.5%) முஸ்லிம்கள் (7.6%) மற்றும் கிறிஸ்தவர்கள் (7.5%) போன்றோர் காணப்படுகின்றனர். 88.6% வீதமாகக் காணப்படுகின்ற இலங்கையின் எழுத்தறிவு வீதமானது ஆசியாவிலேயே காணப்படும் உயர் எழுத்தறிவு வீதமாகும்.
மொழி மற்றும் சமயம்
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்பன அரசகரும மொழிகளாகும். இந்து, ஆரிய மொழிகளின் கலவையால் தோற்றம் பெற்ற சிங்கள மொழியே அதிகம் மக்கள் உபயோகிக்கும் மொழியாகும்.
இலங்கையில் வட கிழக்கு மக்களால் பெரும்பான்மையாக பேசப்படும் தமிழ் மொழி ஒரு திராவிட மொழியாகும். ஆங்கில மொழியும் அதிகம் பயன்படுத்தப்படுவதுடன், அதிகமானோருக்கு அதனை விளங்கிக்கொள்ளவும் முடியும்.இடங்களைக் குறிக்கும் பெயர் பலகைகள், பஸ் வண்டிகள், புகையிரதங்கள் போன்றவற்றின் சமிக்ஞை பலகைகள் என்பன பொதுவாக மும்மொழிகளிலும் காணப்படுகின்றன.
இலங்கை என்பது மதச் சுதந்திரம் காணப்படும் தாம் விரும்பிய மதத்தினைப் பின்பற்றுவதற்கும் வழிபடுவதற்குமான சுதந்திரம் காணப்படும் ஒரு நாடாகும்.
எந்தப் பிரதேசத்திற்குச் சென்றாலும் அந்தந்த மதங்களுக்குத் தனித்துவமிக்க கட்டடக் கலை வடிவமைப்புக்களைக் கொண்ட பௌத்த விஹாரைகள் தாதுகோப்பாக்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள் என்பவற்றைக் காணக்கூடியதாக உள்ளன. மதவழிபாட்டுத் தலங்களுக்குள் நுழையும்போது அவற்றிற்கு அவமரியாதை ஏற்படாதவாறு ஆடை அணிகலன்களை அணிந்து செல்வது கடமையாகும்.
உலக உரிமைக்கு இலங்கையின் பங்களிப்பு: பௌத்த தர்மம்: விடுதலையை நோக்கி பயணித்த புத்தரின் வழி
இலங்கையின் பிரதான மதம் பௌத்த சமயமாகும். அது இந்நாட்டிலே உத்தியோகபூர்வமாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் ஆட்சிக் காலத்தில் தோற்றம் பெற்றுள்ளது. அது இந்தியாவின் அசோக சக்கரவர்த்தியின் மகனான மஹிந்த தேரரினால் இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதனை இந்நாட்டிற்கு கொண்டுவந்த உடனேயே புதிய தர்மத்தை நாட்டு மக்கள் துரிதமாக பின்பற்றி வந்தமையால் ஒருசில மாதங்களினுள் நாடு முழுவதிலும் பௌத்த தர்மம் பரவியது. இலங்கையானது பௌத்த தர்மத்தின் வளர்ச்சிக்கு செழிப்பான பிரதேசமாக மாறியது.
பௌத்த தர்மம் எனும்போது கி.மு. 6 ஆவது நூற்றாண்டிலே பாரத நாட்டு இளவரசராக பிறந்து பின்னர் புத்தர் நிலையை அடைந்த, கௌதம புத்த பெருமான் அவர்களினால் மனித வர்க்கத்திற்கு போதித்த உளவியல் மற்றும் தத்துவ ரீதியான அறவழியினைக் கொண்ட செயல்முறை ரீதியான வாழ்க்கை முறையொன்றாகும்.
அன்னார் மத்திய பாரத தேசத்தில் கபிலமுனி இராசதானியின் பிராந்திய ஆட்சியாளர் ஒருவரான சுத்தோதனனின் மகனாக கி.மு. 623 ஆம் ஆண்டு மே மாதம் பூரண பௌர்ணமி தினமன்று பிறந்தார்.அன்னாரது தர்மமானது இன்று உலக சனத்தொகையில் சுமார் நான்கில் ஒரு பகுதியினர் மத்தியில் செல்வாக்கு செலுத்தக் கூடிய மற்றும் வழிகாட்டக் கூடிய சர்வதேச சமயமொன்றாக மாறியுள்ளது.
சித்தார்த்த குமாரர் இல்லற வாழ்வில் இருபத்தி ஒன்பது வருடங்களை கழித்துள்ளார். அதில் இறுதி பதின்மூன்று ஆண்டுகள் யஷோதரா தேவியுடன் கழித்த விவாக வாழ்க்கையும் அடங்கும். அனைத்து சுகபோகங்களையும் கொண்ட இளவரசர் ஒருவராக பிறந்து, வீட்டிலே சிறந்ததொரு வாழ்க்கையினை வாழ்ந்து வந்தார்.
அவ்வாறாயினும், இளம் பராயத்திலிருந்தே அன்னார் மனிதர்களின் பிரச்சினைகள் பற்றி மனம்வருந்தி வந்தார். அதனால் சுகபோக அரச வளங்கள் அவருக்கு திருப்தியளிக்கவில்லை. அவ்வாறானதொரு மகிழ்ச்சிகரமான வாழ்விற்கு அவர் ஆசைப்படவில்லை. சுகபோகம் என்பது தற்காலிகமானது, நிரந்தரமற்றது என்பதே அன்னாரின் இறுதி பகுப்பாய்வாக அமைந்தது. இதன் கருத்து வாழ்க்கையென்பது துக்கமிக்க ஒன்று என்பதாகும்.
பலர் இன்பமாக கருதும் அனைத்தும் மாயமானவையே. மகிழ்ச்சி மற்றும் சௌபாக்கியம் என்பவற்றிற்கிடையே மனித வாழ்க்கையில் உரிமை கொண்டுள்ள, உலகம் முழுவதிலும் பரவிக் காணப்படுகின்ற துக்கத்தினை அவர் கண்கூடாகக் கண்டார்.
இந்த உலகிலே மனிதர்கள் இன்பத்தை அடைவதற்கு எவ்வளவு முயற்சித்த போதிலும்கூட எல்லா உயிரினங்களிடமும் துக்கமானது குடிகொண்டுள்ளது. லௌகீக சுகபோகங்களை தேடிச் செல்வதனை வெறுத்த அன்னார், மிகவும் எளிமையான துறவி உடையணிந்து தனிமையாக காசு எதுவுமின்றி வீட்டிலிருந்து வெளியேறி வீடுகள் எதுவுமே இல்லாத இடம் நோக்கிச் சென்று, தம்மால் அடைந்துகொள்ள முடியுமென தாம் எண்ணிய மகிழ்ச்சி மற்றும் அமைதி என்பவற்றை தேடிச் சென்றார்.
ஆரம்பத்திலே அன்னார் அக்காலத்தில் இருந்த மாண்புமிக்க ஆசான்களிடம் சென்றார். தாம் எதிர்பார்த்தவற்றை அவர்களினால் நிறைவேற்ற முடியவில்லை. அதனை சுய முயற்சியின் மூலம் பெற்றுக்கொள்ள அவர் திடசங்கற்பம் பூண்டார்.
அதன் பின்னர் நான்கு வருடங்கள் அதற்காக அரும் பாடுபட்டார். உடம்பினை துன்பப்படுத்துவதன் மூலம் அதனை அடைந்துகொள்ள முடியாது என்பது அதன்போது அவருக்கு தெளிவானது, அவ்வாறாயினும், கண்டுபிடிப்புக்கள் மூலம் தாம் ஆத்மீகத்தின் பக்கம் நெருங்கி இறுதியிலே அவர் தமது எதிர்பார்ப்பினை வெற்றிகொண்டார்.
இந்நிகழ்வு கி.மு. 588 ஆம் ஆண்டு வெசாக் பூரண பௌர்ணமி தினத்தன்று இந்தியாவின் புத்தகயாவிலுள்ள ஸ்ரீ மஹாபோதியின் அடியில் நிகழ்ந்தது.பௌத்த நூல்கள் வெளியீட்டுச் சங்கத்தின் உதவிப் பணிப்பாளர்)
காலநிலை மற்றும் பயிரிடும் காலங்கள்
மலைகளற்ற தாழ்நிலத்தைக் கொண்ட பிரதேசங்களில் பெறும்பாலும் வரண்ட பிரதேச காலநிலை நிலவுகின்றது. கொழும்பு பிரதேசத்தில் சராசரி வெப்பநிலை 27° பாகை செல்சியஸ் ஆக காணப்படுவதுடன், சுமார் 2000 மீட்டர் வரையிலான உயர் நிலங்களில் இந்நிலையானது 16° பாகை செல்சியஸ் வரையில் குறைந்து காணப்படுகின்றது. பருவக்காற்று மழைக் காலங்களில் உட்பட நாளாந்தம் காணக்கூடிய பொதுவானதொரு தன்மையாக பிரகாசமிக்க சூரிய வெளிச்சம் காணப்படுகின்றது.
காலநிலை ரீதியாக விவசாயத்திற்கு பொருத்தமற்ற அகாலபருவங்கள் இலங்கையில் காணப்படுவதில்லை. மே முதல் யூலை வரையிலான காலப்பகுதியினுள் தென்மேல் பருவக்காற்று மழை வீழ்ச்சியானது நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களுக்குக் கிடைக்கப் பெறுவதுடன், திசெம்பர், சனவரி மாதங்களில் வடகிழக்கு பருவக்காற்று மழைவீழ்ச்சியானது வடக்கு, கிழக்கு பிரதேசங்களிற்கு கிடைக்கப்பெருகின்றன.
இலங்கையின் தேசிய சின்னங்கள்.
இலங்கை தேசிய கீதம்
இலங்கைக்கு 1948 ல் சுதந்திரம் வழங்கப்பட்டதற்கு பிறகு, ஒரு தேசிய கீதத்திற்கான தேவை எழுந்தது. ஒரு போட்டியில் முடிவாக, சிங்கள மொழியினால் எழுதப்பட்ட ஆனந்த சமரகோனின் பங்களிப்பு, புதிய கீதமாக தேரிவு செய்யப்பட்டது. தமிழ் பாடல் வரிகளின் பொருளானது, சிங்கள பாடல் வரிகளின் அதே பொருளைக் கொண்டுள்ளது. அது முதன் முதலாக 1952 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இடம்பெற்ற நான்காவது ஆண்டு சுதந்திர வைபவத்தில் நிகழ்த்தப்பட்டது.
இலங்கை தேசிய கொடி
1948 பெப்ரவரி 4 ஆந் திகதி இலங்கை சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பிருந்தே அதன் தேசியக் கொடிக்கான தேவை குறித்து கலந்துரையாடப்பட்டு வந்துள்ளது. மட்டக்களப்புக்கான பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த ஏ.சின்னலெப்பை அவர்கள் 1815 இல் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க அரசின் சிங்கக் கொடியை தேசியக் கொடியாக பிரகடனப்படுத்துமாறு 1948 ஜனவரி 16 ஆந் திகதியன்று அரச பேரவையில் தனது எண்ணத்தை முன்வைத்தார். இவ்விடயம் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், அதன்பின்பு பிரதம மந்திரி கௌரவ டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள், திரு.எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க (தலைவர்), சேர் ஜோன் கொத்தாலாவல, திரு.ஜே.ஆர்.ஜயவர்தன, திரு.டி.பி.ஜயா, கலாநிதி.எல்.ஏ.ராஜபக்ஷ, திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் செனட்டர் எஸ்.நடேசன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழுவொன்றைப் நியமித்தார்.
1948 பெப்ரவரி 04 ஆந் திகதி இலங்கை அதன் முதலாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய வேளையில் தேசியக் கொடி உருவாக்கத்திற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்த போதிலும், எந்தவொரு இறுதி முடிவுகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தபோதிலும், அன்றைய தினம் சிங்கக்கொடி ஏற்றப்பட்டது. 1948 பெப்ரவரி 19ஆந் திகதி சுதந்திர இலங்கையின் (அப்போதைய சிலோன்) முதலாவது பாராளுமன்ற தொடக்க நிகழ்வில் சிங்கக்கொடி மற்றும் பிரிட்டனின் கொடி ஆகியன ஏற்றப்பட்டன. 1948 பெப்ரவரி 12 ஆந் திகதி கண்டியில் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பிரதம மந்திரி டி.எஸ்.சேனாநாயக்க அவர்களினால் பட்டிருப்புவவில் சிங்கக்கொடி பெருமையுடன் ஏற்றப்பட்டது.
விசேடக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட தேசியக் கொடி 1951 மார்ச் 02 ஆந் திகதி திரு.டி.எஸ். சேனாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில் பச்சை நிறம் முஸ்லீம் மக்களையும், செம்மஞ்சள் நிறம் தமிழ் மக்களையும் குறிப்பதாக இருபட்டைகள் காணப்பட்டன. இக்கோடுகள் ஒவ்வொன்றும் தேசியக்கொடி அளவின் ஏழில் ஒன்றுக்கு சமனாகும் வகையில் அமைந்திருந்தது.
1972 இல் இலங்கையானது முதல்முறையாக குடியரசாக உருவாக்கப்பட்ட போது, இயற்கையான அரச இலைகளை ஒத்திருப்பதாக பராம்பரிய அரச இலைகள் சேர்க்கப்பட்டு தேசியக்கொடியில் மாற்றம் செய்யப்பட்டது. மாற்றம் செய்யப்பட்ட இந்த தேசியக்கொடியானது 1972 மே மாதம் 22 ஆந் திகதி குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது முதல்முறையாக ஏற்றப்பட்டது. 1978 செப்டெம்பர் 09 ஆந் திகதி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 6 ஆவது பிரிவின் இரண்டாவது அட்டவணையில் இத் தேசியக்கொடி இணைக்கப்பட்டுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்ட அரச இலைகளைத் தவிர்ந்த தேசியக் கொடியினையே, 1951 மார்ச் 02 ஆந் திகதி தேசியக்கொடி உருவாக்கத்திற்கான குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது.
இலங்கையின் தேசியச் சின்னம்
இலங்கையானது பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் இருந்த காலக்கட்டத்தில் பிரித்தானிய சின்னத்தை பயன்படுத்தியதோடு, 1948 சுதந்திரமடைந்த பின்னரும் கூட அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தது. இலங்கைக்கு (சிலோன்) மிகவும் பொருத்தமான அரச சின்னமொன்றினை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் சிபாரிசுகளுக்கமைய, அவர்கள் புதிய அரசச் சின்னமொன்றினை உருவாக்குவதில் செயற்பட்டு வந்தனர். மேலாக ‘பலப்பெத்தி’ வடிவமைப்புடன் வலது கையில் வாளொன்றினைப் பிடித்தவாறான சிங்கமொன்று இலங்கையின் அரசச் சின்னமாக உருவாக்கப்பட்டது. அதன் கீழ் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நாட்டின் பெயர் பொறிக்கப்பட்ட பட்டை காணப்பட்டது.
1972 மே 22 ஆந் திகதி குடியரசாக நாடு பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து இப் புதிய குடியரசுச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. வாளுடன் கூடிய சிங்கம் மற்றும் ‘பலப்பெத்தி’ வடிவமைப்பு ஆகியவற்றுக்கு மேலதிகமாக அதில் பூரணக்கலசம், தர்மச்சக்கரம், சூரியன், சந்திரன் மற்றும் இரு நெற்கதிர்கள் ஆகியன உள்ளடக்கப்பட்டன.
இலங்கையின் தேசிய மலர்
1986 பெப்ரவரி 26 ஆந் திகதி இலங்கையின் தேசிய மலராக நீல அல்லி மலர் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் தாவரவியல் பெயர் ‘நைஃபி ஸ்டெல்லட்டா’ ஆகும். பெரும்பாலான சிங்கள, பாலி மற்றும் சமஸ்கிரத இலக்கியத்தில் இம்மலர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ‘குவளய’, ‘இந்தீவர’, ‘நிலுப்பல’ ‘நீலோற்பலா’ மற்றும் ‘நிலுபுல்’ என அறியப்படும் இம்மலர் பௌத்த இலக்கியத்திலும் சிறப்பான இடத்தினைப் பெற்றுள்ளது.
சித்தார்த்த இளவரசரின் பாதச்சுவடுகளில் இருந்ததாக கருதப்படும் 108 வடிவமைப்புகளில் இந்த ‘நீல அல்லி மலர்’ உம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே இம்மலரானது வரலாற்றில் விசேடத்துக்குரிய மலராக இருந்துள்ளமையை சான்று பகர்வதாக இதுவமைந்துள்ளது. சிகிரியாவின் சுவர் ஓவியங்களிலுள்ள கன்னிப் பெண்களின் கைகளிலும் நீல அல்லி மலரே காணப்படுவதாக நம்பப்படுகிறது. பாரம்பரிய கவிதையாக அறியப்படும் ‘சந்தேஷ காவ்ய’ விலும் பெண்களின் கண்களை நீல அல்லி மலருக்கு ஒப்பானதாக சித்திரிக்கப்பட்டுள்ளதுடன், காதணிகளாகவும் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிக ஆழமற்ற நீரில் வளரக்கூடிய நீல அல்லி மலரானது நாட்டின் அனைத்து பாகங்களிலும் காணக்கிடைக்கிறது.
இம்மலர் நடுவே அதிக நெருக்கமான பூவிதழ்களுடன் ஊதா மற்றும் நீல நிறத்தில் காணப்படுகிறது. இம்மலரானது உண்மை, தூய்மை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றுக்கான சின்னமாகவும் கருதப்படுகிறது.
இலங்கையின் தேசிய மரம்
இலங்கையின் தேசிய மரமாக நாக மரத்தினை பிரகடனப்படுத்துமாறு கையளிக்கப்பட்ட முன்மொழிவு, 1986 பெப்ரவரி 26 ஆந் திகதி அமைச்சரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல நூற்றாண்டுகளாக சமூக மற்றும் கலாச்சார ரீதியாக இலங்கையானது நாக மரத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது கீழ்வரும் 7 காரணங்களுக்காக தேசிய மரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கே உரிய தாவர மரமாகும்
அதனுடைய பயன்பாட்டுத்தன்மை
வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம்
புறத்தோற்றம் - பரந்துபட்டத்தன்மை ;
நிறம் மற்றும் இயல்பு - இலகுவாக வரையக்கூடியதன்மை.
இதன் தாவரவியல் பெயர் ‘மெசுஹா நாகசாரியம்’ எனவும், ஆங்கிலத்தில் அயர்ன் வூட் மரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கம்பீரமான அழகு காரணமாக இம்மரம் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகின்றன. இதன் ஆங்கிலப் பெயரானது அதன் கடினத்தன்மை மற்றும் நீடித்தத்தன்மையைக் குறிப்பிடுவதுடன், கோயில்கள் மற்றும் தேவாலயங்களின் கட்டுமானத்தின் போதும் பயன்படுத்தப்படுகிறது.