Type Here to Get Search Results !

அலுவலக முறைமைகள் மாதிரி வினாக்கள்

அலுவலக முறைமைகள் மாதிரி வினாக்கள்

குறித்த ஒரு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பின்தங்கிய கிராமமொன்றின் மக்களின் நீண்டகால தேவையாகவுள்ள உள் வீதியொன்று கொங்கிறீட் இடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்தபோதும் கடந்த ஒரு வருட காலமாக மக்களின் பயன்பாட்டிற்கு உரியவாறு கையளிக்கப்படவில்லை. இதற்கான காரணம் அவ்வீதியில் ஏலவே மின்சாரம் வழங்கப்பட்டஅமைக்கப்பட்டிருந்த தூண்கள் அகற்றப்படாமையும், அக்குறித்த வீதியை அப்பிரதேசத்திற்கான பிரதேச சபையானது பாரமெடுக்காதமையுமாகும்.

i. மேற்படி வீதியை விரைவாக திறப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் எவை?
ii. இவ் வீதியை உரியவாறு திறப்பதற்கான அணுகுமுறைகள் எடுக்கப்பட்டுள்ளது எனக்கருதி அதற்கான அழைப்பிதழின் மாதிரியை தயாரிக்குக?


கடந்த ஆறு மாத காலமாக அரச அலுவலகமொன்றிற்கு வழங்கப்பட்ட மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையினால், மேற்படி மின் வழங்கலானது இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்டது. உரிய கட்டுநிதி அமைச்சிலிருந்து இக்குறித்த அலுவலகத்திற்கு வழங்கப்படாமையினால் இச்சம்பவம் எழுந்துள்ளதோடு இவ்வலுவலக பணிகள் செயலிழந்துள்ளதோடு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

i. மேற்படி பிரச்சினையை விளக்கி அமைச்சின் செயலாளருக்கு அனுப்புவதற்கான விபரமான மாதிரிக் கடிதத்தினை வரைபுபடுத்துக?
ii. இவ்வலுவலகத்தின் ஸ்தம்பித நிலையை கருத்திற்கொண்டு பொது மக்கள் சேவையின் தேவையினை முன்னிலைப்படுத்தி இதனை இயங்கச் செய்வதற்கு தற்காலிக ஏற்பாடாக அலுவலகத்திற்கு மின்சாரத்தை வழங்குமாறு கோரும் கடிதமொன்றை இலங்கை மின்சார சபைக்கு தயார்செய்க?


கடந்த ஆண்டில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது. மக்களின் வீடுகளும் உடமைகளும் பெரிதும் சேதமடையவும் மாவட்டத்திலுள்ள குளங்கள், வயல் நிலங்களும் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலைமையை விளக்கி உரியமீள் கட்டுமாணப்பணிக்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைக்கேதுவாக அறிக்கையொன்றை அனர்த்த நிவாரன சேவை அமைச்சின் செயலாளருக்கு அனுப்புவதற்குத் தயாரிக்குமாறு உம்மை மாவட்ட அரசாங்க அதிபர் பணித்துள்ளார் எனும் கருதுகோளின் அடிப்டையில்.

i. இவ் அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் யாவை?

ii. அலுவலகங்களில் தயாரிக்கப்படும் 05 அறிக்கைகளினைக் குறிப்பிடுக?


கர்ப்பிணித் தாய்மாருக்கு போசாக்கு உணவினை மாதாந்தம் வழங்குவதற்கான திட்டமொன்றின் அடிப்படையில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களின் விபரங்களைப் பெறவேண்டியுள்ள தேவையுள்ளது.

i. மேற்படி திட்ட முன்னெடுப்பிற்காக மாவட்டச் செயலாளரினால் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் பொருத்தமான நடவடிக்கைகளை உரியவாறு இனங்கண்டு இச்செயற்றிட்டம் தொடர்பில் சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தும் உள்ளக சுற்றுநிரூபமொன்றினைத் தயாரிக்குக?

ii. தரவு மற்றும் தகவல்களைப் பெறுவதற்கு உரிய படிவமொன்றைத் தயாரிக்கும்போது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் யாவை?


iii. மேற்படி செயற்றிட்டத்திற்கான மாதிரிப் படிவமொன்றை தயாரிக்குக?

சுருக்கமாக விடையளிக்குக.

1. அலுவலக முறைமை என்பது யாது?

2. அலுவலக நடைமுறை என்றால் என்ன?


3. அலுவலக முறைமையொன்றின் அடிப்படைப் பண்புகள் 05இனைத் தருக?

4. சிறந்த அலுவலக முறைமையினால் கிடைக்கும் நன்மைகள் 05 இனைத் தருக?

5. அலுவலகம் என்பதனை வரைவிலக்கணப்படுத்துக?

6. அலவலகமொன்றின் பிரதான பணிகள் யாவை?

7. அலுவலகமொன்றில் அன்றாடம் மேற்கொள்ளப்படும் செயன்முறைகளைப் பட்டியற்படுத்துக?

8. அலுவலகமொன்றில் கிடைக்கப்பெறும் தபால்களின் வகைகளைத் தருக?

9. அலுவலகத்தில் தபால் முகாமைத்துவம் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது எனச் சுருக்கமாக விளக்குக?

10. தபால் பதிவேட்டில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களைக் குறிப்பிடுக?

11. கிடைக்கப்பெற்ற கடிதம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் யாவை?


12. கோவைப்படுத்தல்முறை என்பதால் கருதப்படுவது யாது?

13. அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கோவைகளின் வகைகளைக் குறிப்பிடுக?

14. கோவைப்படுத்தலின் இரு பிரதான முறைகள் எவை?

15. பிளந்த கோப்பு முறை என்பது யாது? அதன் நன்மை மற்றும் தீமைகளைத் தருக?

16. புத்தக கோப்பு முறை என்பது யாது? அதன் நன்மை மற்றும் தீமைகளைத் தருக?

17. சிறந்த கோப்பு முறையின் நன்மைகளைப் பட்டியற்படுத்துக?


18. நவீன கோப்பு முறைகளைக் குறிப்பிடுக?

19. படிவம் என்றால் என்ன?

20. படிவமொன்று தயாரிப்பதற்கான நோக்கத்தினைத் தருக.

21. படிவ முகாமைத்துவத்தின் பிரதான அம்சங்கள் எழுதுக.

22. படிவமொன்றை திட்டமிடும்போது கவனத்திற்கொள்ளவேண்டிய விடயங்கள் எவை?


23. அரசாங்க அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட அழிக்கக்கூடிய ஆவணங்கள் யாவை?

24. அரசாங்க அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட அழிக்கமுடியாத ஆவணங்கள் யாவை?

25. ஆவணங்களை அழிப்பதற்கு முன்னராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் எவை?

26. அழிக்கப்பட வேண்டிய ஆவணங்களுக்கான விபரங்களை பதிவிடும் ஆவணப்பதிவேட்டில் பதியப்படவேண்டிய முக்கிய விபரங்களைத் தருக?


27. உத்தியோகபூர்வ கடிதமொன்றில் உள்ளடக்கப்படவேண்டிய பிரதான விடயங்கள் யாவை?

28. அரசாங்க அலுவலகங்களில் கடிதத்தொடர்பாடல் முறை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது எனச் சுருக்கமாக விளக்குக?

29. அரசாங்க அலுவலகங்களில் பின்பற்றப்படும் தொடர்பாடல் முறைகள் எவை?

30. அரசாங்க அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் தொடர்பாடல் கருவிகளைப் அட்டணைப்படுத்துக?

31. அலுவலக தளக்கோலம் என்பது யாது?

32. அலுவலக தள அமைப்பை திட்டமிடும்போது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் யாவை?

33. சிறந்த அலுவலகத் தள அமைப்பின் நன்மைகளைத் தருக?


34. அலுவலகமொன்றின் வெளியகச் சூழல் எவ்வாறு அமைந்திருத்தல் பயனுடையதாகும்?

35. அலுவலகமொன்றின் பணியாளர்கள், பொருட்கள் மற்றும்; உடமைகள் தொடர்பில் கவனத்திற்கொள்ளவேண்டிய விடயங்கள் யாவை?.


36. அறிக்கையென்றால் என்ன? அறிக்கைகளின் வகைகளை தகுந்த உ10ம்களுடன் விளக்குக?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad