• இலங்கை மத்திய வங்கி என்றால் என்ன?
ஆரம்பத்தில் 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க சட்டத்தினால்; இயற்றப்பட்ட நாணய விதிச் சட்டத்தின் கீழ் இந் நியதிச் சபை நிறுவப்பட்டது. இந் நாணய மேலாண்மைச் சபையானது, இலங்கை நாணய முறைமை நிறுவப்பட்டதன் நோக்கம் நிருவாகம் மற்றும் ஒழுங்கு விதிகள் என்பனவற்றிற்குத் தேவையான அதிகாரங்களையும், தொழிற்பாடுகளையும் பொறுப்புக்களையும் கொண்டிருக்கிறது.
நாணய விதிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு இலங்கை மத்திய வங்கியின் இரு மையக் குறிக்கோள்களான, பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாடு, நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பனவற்றினை காத்திரமான நாணயக் கொள்கை, முன்மதியுடைய மேற்பார்வை மற்றும் வங்கித்தொழில் நிறுவனங்களின் ஒழுங்கு விதிகள் என்பனவற்றினூடாக நாட்டில் ஏற்படுத்துவதேயாகும்.
• மத்திய வங்கி எங்களுக்கு ஏன் தேவை?
மத்திய வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமானதெனினும், இது அதன் வரவு செலவுத்திட்டம் (நாடாளுமன்றத்தினால் ஒப்புதலளிக்க வேண்டிய தேவையில்லை) மற்றும் கொள்கை (அரசாங்கத்தினை ஆலோசிக்காமலே பொருத்தமான நாணயக் கொள்கையினை மேற்கொள்ள முடியும்) என்பனவற்றில் சுயநிர்ணயித்தினைக் கொண்டுள்ளது.
• மத்திய வங்கி யாருக்குச் சொந்தம்?
மத்திய வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமானதெனினும், இது அதன் வரவு செலவுத்திட்டம் (நாடாளுமன்றத்தினால் ஒப்புதலளிக்க வேண்டிய தேவையில்லை) மற்றும் கொள்கை (அரசாங்கத்தினை ஆலோசிக்காமலே பொருத்தமான நாணயக் கொள்கையினை மேற்கொள்ள முடியும்) என்பனவற்றில் சுயநிர்ணயித்தினைக் கொண்டுள்ளது.
• மத்திய வங்கி வர்த்தக வங்கிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது?
நாணய மேலாண்மை அதிகாரசபையாக இருந்து வரும் மத்திய வங்கி நிதியியல் முறைமையின் உச்ச நிறுவனமாகவும், வர்த்தக வங்கிகளின் வங்கியாளராகவும் தொழிற்படுகின்றது. இது முறைமைக்கு ஒதுக்குகளை வழங்குகின்றது. வர்த்தக வங்கிகள் நடைமுறைக் கணக்குகளை பேணக்கூடிய அதிகாரங்களைக் கொண்டனவாகவும் தமது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வர்த்தக வங்கித்தொழில் பணிகளையும் வழங்கக்கூடிய வங்கித்தொழில் நிறுவனங்களாகவும் உள்ளன.
• நாணயச் சபை என்றால் என்ன?
நாணயச் சபை மத்திய வங்கியின் கொள்கைகளை மேற்கொள்ளும் உயர் சபையாக விளங்குவதுடன் மத்திய வங்கியின் முகாமைத்துவம், தொழிற்பாடுகள் மற்றும் நிருவாகம் என்பனவற்றிற்குப் பொறுப்பாகவுமுள்ளது.
• மத்திய வங்கிக்குப் பதிலாக, நாணயச் சபை ஏன் கூட்டிணைக்கப்பட்டிருக்கிறது?
மத்திய வங்கி நிறுவப்படுவதற்கு அடிப்படையாகவிருந்த ஜோன் எக்ஸ்ரர் அறிக்கை சட்ட கோட்பாடாக நாணயச் சபை கூட்டிணைக்கப்பட வேண்டும் என எடுத்துக்காட்டுவதனால், நிறுவனமொன்றிலும் பார்க்க நபர்களைக் கொண்ட சபையினை கூட்டிணைப்பது சிறப்பானதெனக் கருதப்பட்டது. இதுவும் பூர்வாங்க நடவடிக்கைகளை ஆளுகை செய்கிறது.