EB - மாதிரி வினாத் தொகுப்புக்கள்: கணக்கீட்டு முறைமை
சகல வினாக்களுக்கும் விடை தருக
1. பொது நிதி என்றால் என்ன?
2. பொது நிதி மீது பாராளுமன்றத்தின் கட்டுப்பாடு என்ன?
3. பொது நிதி மீது திறைசேரியின் கட்டுப்பாடு என்ன?
4. அரசிலமைப்பின் பிரகாரம் பொது நிதி மீது கணக்காய்வாளர் அதிபதியின் பங்கு என்ன?
5. கணக்கீட்டு அலுவலர் என்பவர் யார்? அவரது பொறுப்புக்கள் என்ன?
6. பிரதான கணக்கீட்டு அலுவலர் என்பவர் யார்? அவரது கடமைகளும், வகிபாகமும் யாது?
7. நிதி ஏற்பாடு என்பதற்கும் நிதி ஒதுக்கீடு என்பதற்குமான வேறுபாடு என்ன?
8. நட்டங்கள்/ இழப்புக்கள் என்பதனால் நீர் விளங்கிக் கொள்வது என்ன?
9. வகை மாற்றம் என்றால் என்ன?
10. குறை நிலை வரவு செலவுத்திட்டம்/ குறை நிரப்பு வரவு செலவுத்திட்டம் என்பதனால் நீர் விளங்கிக்கொள்வது யாது?
11. பெறுகை நடைமுறை என்றால் என்ன? பெறுகை குழுக்கள், தொழில்நுட்ப மதிப்பாய்வுக் குழுக்கள் பற்றி தெரிவிக்க.
12. திரண்ட நிதி என்றால் என்ன?
13. காசோலை/ காசுக் கட்டளை பெறப்படும் போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் எவை?
14. காணாமல் போன காசோலை தொடர்பாக எடுக்க வேண்டிய நடைமுறைகள் எவை?
15. கணக்கீட்டு நடவடிக்கைகளுக்காக அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பிரதான ஏடுகளை/ துணை ஏடுகளைப் பட்டியற்படுத்தி சுருக்கமாக விளக்குக.
16. அலுவலக வங்கிக் கணக்கு ஒன்றினை ஆரம்பிக்கும் போது கைக்கொள்ளும்; நடைமுறைகள் தொடர்பான விடயங்களைச் சுருக்கமாகக் குறிப்பிடுக.
17. புதிதாக நியமனம் பெற்றுள்ள ஊழியர் ஒருவருக்கு சம்பளம் வழங்குதலின்போது நீர் அவசியம் கருத்திற்கொள்ளவேண்டிய விடயங்களைத் தருக.
18. வருடாந்த வரவு செலவுத்திட்ட வரைபு அறிக்கையினை தயாரித்து பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தின்பேரில் சபாநாயகரின் ஒப்புதலைப்பெற்று ஒதுக்கீட்டுச் சட்டமாக மாறும் வரையிலான விடயங்களை படிமுறையாகத் தருக.
19. களஞ்சிய அலுவலரையும், களஞ்சியக் காப்பாளரின் கடமைகளையும் வேறுபடுத்துக.
இபிக்கான குறிப்புக்களை பெற்றுக்கொள்ள முடியுமா?
ReplyDeleteyes
Delete