01.பொருளாதாரம் என்பதை வரைவிலக்கணப் படுத்துக. ஒரு பொருளாதாரம் எதிர் நோக்கும் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினை யாது?
02.மனித தேவைகளுக்கும் வளங்களுக்கும் இடையிலுள்ள பரஸ்பரத் தொடர்பினைக் கூறுக.
03.வளங்கள் மாற்றுப் பயன்பாடுடையவை என்பதை விளக்குவதற்கு உற்பத்தி இயல்தகவு எல்லையை எவ்வாறு பயன்படுத்தலாம்?
04. பொருளாதாரமொன்றின் வளங்களில் உள்ளடக்கப்படுபவை எவை? நடைமுறையிலுள்ள வளங்களின் அளவு குறைவடைவதில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய காரணிகள் எவை?
05.ஊழிய நிரம்பலினை வரையறுக்க.
06. ஊழியம் விளைதிறனுள்ளதோர் உற்பத்திக் காரணியாகும். இவ்வாறு கூறப்படுவதற்கான காரணங்கள் எவை?
07.ஊழிய நகர்வை வரைவிலக்கணப்படுத்தி, ஊழிய நகர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் 5 விடயங்களைக் கூறுக.
08.ஊழியப்படை, ஊழியப் பங்கு கொள்ளல் வீதம் என்பன கணிப்பிடப்படும் முறையினைக் கூறி அவ்வாறு கணிப்பிடப்படுவதன் அவசியத்தை விளக்கும் இரு காரணிகளைக் கூறுக.
09.“மீள உருவாக்க முடியாத வளங்கள்” உதாரணங்கூறி விளக்குக. இவ்வகை வளங்கள் “கட்டாயமாகப் பாதுகாக்கப்படல் வேண்டும்” ஆராய்க.
10.சுழலும் மூலதனத்தின் பிரதான இயல்புகளைப் பெயரிட்டு அதன் பொருளாதார ரீதியிலான முக்கியத்துவத்தினை விளக்குக.
11.2000இன் இறுதி மூலதன இருப்பு ஸ்ரீ 10000மில். ரூபா
2001இன் இறுதி மூலதன இருப்பு = 15000மில். ரூபா
2001இன் மொத்த முதலீடு = 7000மில். ரூபா
- 1. 2001இன் தேறிய முதலீடு யாது?
- 2001இன் ஈடுசெய் முதலீடு யாது?
12. முயற்சியாண்மைத் தொழிற்பாடுகளில் “புதியன புனைதல்” என்பது உமக்குணர்த்துவதென்ன? இன்றைய நவீன பொருளாதாரத்தில் அதன் முக்கியத்துவம் யாது? – பரிசீலிக்க.
13.குறிப்பிட்ட பொருளாதாரமொன்று மாறாத தொழிநுட்பத்தின் அடிப்படையில், தன்னிடமுள்ள முழு வளங்களையம் பயன்படுத்தி X பொருளில் 100 அலகுகளை, அல்லது Y பொருளில் 1500 அலகுகளை உற்பத்தி செய்ய வல்லது எனவும் X பொருளுக்கான அமையச் செலவுகள் 5, 10, 15, 20, 25 Y பொருட்களாகவும் காணப்படுகின்றது எனக் கொள்க.
- I. X,Y பொருட்களின் உற்பத்திச் சேர்க்கைப் புள்ளிகளின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்து, உற்பத்திச் சாத்திய எல்லையினை வரைக.
- II. X பொருளின் உற்பத்தியில் எற்பட்;ட தொழிநுட்ப முன்னேற்றம் காரணமாக அதன் உற்பத்தி 25% வீதத்தால் அதிகரித்துள்ளது எனக் கொண்டு புதிய உற்பத்திச் சேர்க்கைப் புள்ளிகளைப் பெற்று உற்பத்தி சாத்திய எல்லையை வரைக.
- III. தற்பொழுது X பொருளின் அமையச் செலவு எவ்வாறு மாற்றடைந்துள்ளது எனக் கூறி அவ்வமையச் செலவின் இயல்பினை விளக்குக.