அலகு 6 : நிலைமின்புலம்
அலகு நிலைமின்புலமானது 30 பாடவேளைகள் கொண்டது.
- நிலைமின் விசை (08 பாடவேளைகள்)
- பொன்னிலை மின்காட்டியை உபயோகித்து ஏற்றங்களின் நடத்தை பற்றி நுணுகியாராய்தல்
- வெவ்வேறு மின்புலத்தில் மின் விசைக்கோடுகள்
- மின்புலமொன்றில் உள்ள ஏற்றமொன்றின் விசை
- மின்புலத்தின் செறிவு
- கூலோமின் விதி
- புள்ளி ஏற்றமொன்றிலிருந்து ஏதாவது ஒரு தூரத்தில் உள்ள புள்ளியொன்றின் புலச் செறிவு
- மின்புலச் செறிவு மாறலை காட்டும் வரைபு
- மின்புலத்திற்கான பாயமாதிரி (08 பாடவேளைகள்)
- மின்பாயமும் பாயக் கோடுகளும்
- கவுசின் தேற்றம் - Gauss's Theory
- கவுசின் விதியைப் பயன்படுத்தி மின்புலச் செறிவைத் துணிதல்
- புள்ளி ஏற்றமொன்றைச் சூழ
- ஏற்றங்கொண்ட முடிவிலிக் கடத்தியின் தளத்தின் அருகே
- ஏற்றங்கொண்ட கோளவடிவக் கடத்தியைச் சூழ
- சீரான ஏற்றங்கொண்டுள்ள கோள மின் காவலியைச் சூழ
- கோளத்தின் மையத்திலிருந்து தூரத்துடன் புலச் செறிவு மாறலை வரைபடத்தில் குறித்தல்
- ஏற்றங்கொண்ட முடிவிலி நீளம் உடைய மெல்லிய கம்பியின் அச்சிலிருந்து r தூரத்தில் புலச் செறிவு
- மின் அழுத்தம் (08 பாடவேளைகள்)
- புலமொன்றினுள் உள்ள புள்ளியொன்றில் அழுத்தத்தை வரைவிலக்கணப்படுத்தல்
- புள்ளி ஏற்றங்கொண்ட பொருள் ஒன்றிலிருந்து ஏதாவது ஒரு தூரத்திலுள்ள புள்ளியின் அழுத்தம் (நிறுவல் அவசியமல்ல)
- புள்ளி ஏற்றங்களின் பரம்பல் காரணமாக குறித்த புள்ளியில் அழுத்தம்
- இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள அழுத்த வித்தியாசம்
- மின்புலமொன்றில் உள்ள ஏற்றமொன்று கொண்டுள்ள அழுத்த சக்தி
- ஏற்றப் பரம்பல் கொண்டுள்ள தொகுதியொன்றின் அழுத்த சக்தி
- அழுத்த வித்தியாசத்திற்குக் குறுக்கே ஏற்றமொன்றை இயக்கும்போது செய்யப்பட்ட வேலையின் அளவு
- சம அழுத்தப் பரப்புக்கள்
- அழுத்தப்படித்திறன்
- அழுத்தப்படித்திறன், மின்புலச் செறிவு என்பவற்றிற்கிடையேயான தொடர்பு
- மின் கொள்ளளவு, ஏற்றப் பரம்பல் (06 பாடவேளைகள்)