1) இலங்கையில் ஏறத்தாழ எந்த நூற்றாண்டில்ஆரியர்கள் குடியேறினர்?
கி.மு 5ம் நூற்றாண்டில்
2) ஆரியர்கள் வடமேற்கில் எந்த நதி ஓரங்களில் குடியேறினார்கள்?
மல்வத்து ஓயா நதி ஓரம்
3) ஆரியர்கள் தென்கிழக்கில் எவ்வாற்றங்கரையோரம் குடியேறினர்?
வளவகங்கை, மாணிக்க கங்கை, கிரண்டி ஓயா, கும்புக்கன் ஓயா
4) இலங்கை மக்கள் கற்காலத்தில் இருந்த போது ஆரியர்கள் எதனுடைய
உபயோகத்தை புகுத்தினர்?
இரும்பின் உபயோகம்
5) நெற்பயிர்ச் செய்கை முறையை அறிமுகம் செய்தவர்கள் யார்?
ஆரியர்
6) இலங்கையில் முதல் அரசனாக கருதப்படுபவர்?
விஜயன்
7) கி.மு 247இல் இலங்கைக்கு பௌத்த மதத்தை கொண்டு வந்த பிக்கு
யார்?
மகிந்தன்
8) மகிந்தன் இலங்கையில் புகுத்திய பௌத்த மதம் எப்பிரிவை சார்ந்தது?
தேரவாதப் பிரிவு
9) மகிந்தனுடன் வந்தவர்கள் தங்கிய மலைக்கு வழங்கப்பட்ட பெயர்?
மிகிந்த மலை
10) பௌத்த மதம் இலங்கையில் பரப்பப்பட்ட போது இலங்கையை ஆண்ட
மன்னன்?
தேவநம்பிய தீசன்
11) மகிந்தனை இலங்கைக்கு அனுப்பிய பேரரசன்?
அசோக சக்கரவர்த்தி
12) மகா மேக வண்ண தோட்டத்தில் கட்டியெழுப்பப்பட்ட விகாரை எது?
மகா விகாரை
13) இலங்கைக்கு வெள்ளரசு மரக்கிளையுடன் முதன்முனல வருகை தந்த
பௌத்த பிக்குனி யார்?
சங்கமித்தை
14) மகிந்தனின் புனித பொருட்கள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் தாது
கோபுரம் எங்கு உண்டு?
மிகிந்தலையில்
15) தேரவாத பௌத்தத்திற்கு மாறான கொள்கையை உடைய பௌத்த மதம்
பின்பற்றப்பட்ட மூன்று விகாரைகள் எவை?
தக்கன விகாரை, அபயகிரி விகாரை, சேதவனராம விகாரை