Type Here to Get Search Results !

பெப்ரவரி 29 (February 29) அல்லது லீப் நாள் நிகழ்வுகள்

பெப்ரவரி 29 (February 29) அல்லது லீப் நாள்    நிகழ்வுகள்

1504 – கிறித்தோபர் கொலம்பசு அன்றிரவு சந்திர கிரகணம் குறித்த தனது அறிவைப் பயன்படுத்தி யமேக்கப் பழங்குடி மக்களை அவருக்குத் தேவையான பொருட்களை வழங்கும்படி வைத்தார்.

1644 – ஏபெல் டாசுமானின் இரண்டாவது கடல்வழிப் பயணம் ஆரம்பமானது.

1704 – பிரெஞ்சுப் படைகளும் அமெரிக்கப் பழங்குடிகளும் இணைந்து மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் டியர்பீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1712 – சுவீடனில் சுவீடன் நாட்காட்டியில் இருந்து யூலியன் நாட்காட்டிக்கு மாறுவதற்காக பெப்ரவரி 29 ஆம் நாளுக்குப் பின்னர் பெப்ரவரி 30ம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1720 – சுவீடன் அரசி உல்ரிக்கா எலனோரா முடி துறந்தார். இவரது கணவர் முதலாம் பிரெடெரிக்கு மன்னரானார்.

1752 – பர்மாவின் கடைசி மன்னராட்சியின் கடைசி வம்சம் கோன்பவுங்கை அலோங்பாயா மன்னார் தொடங்கினார்.

1796 – ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே அமைதியான வணிகம் நடைபெறுவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்டில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 15,000 அமெரிக்க ஒன்றியப் படையினரை விடுவிக்கௌம் முயற்சி தோல்வியடைந்தது.

1916 – டோக்கெலாவ் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

1916 – குழந்தைத் தொழிலாளர்: அமெரிக்காவின் தென் கரொலைனாவில் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களின் குறைந்த வயதெல்லை 12 இல் இருந்து 14 ஆக அதிகரிக்கப்பட்டது.

1920 – செக்கோசிலோவாக்கியாவின் தேசியப் பேரவை 1920 அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது.

1936 – தோக்கியோவில் பெப்ரவரி 26 இல் ஆரம்பமான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது.

1940 – பின்லாந்து பனிக்காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுகளை ஆரம்பித்தது.

1940 – இரண்டாம் உலகப் போர் காரணமாக, இயற்பியலாளர் எர்னஸ்ட் லாரன்சு தனது 1939 நோபல் பரிசை கலிபோர்னியாவின் பெர்க்லி நகரில் பெற்றுக் கொண்டார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகள் டக்ளசு மக்கார்த்தர் தலைமையிலான அமெரிக்கப் படைகளினால் முற்றுகைக்குள்ளானது.

1960 – மொரொக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 12,000 பேர் வரையில் உயிரிழந்தனர்..

1972 – வியட்நாம் போர்: தென் கொரியா தனது மொத்தமுள்ள 48,000 படையினரில் 11,000 பேரை வியட்நாமில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.

1988 – தென்னாபிரிக்காவின் ஆயர் டெசுமான்ட் டுட்டு உட்பட 100 மதகுருமார் இனவொதுக்கலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது கேப் டவுன் நகரில் கைது செய்யப்பட்டனர்.

1992 – பொசுனியாவின் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு ஆரம்பமானது.

1996 – சாரயேவோ மீதான செரப்சுக்கா குடியரசின் முற்றுகை முடிவுக்கு வந்தது.

1996 – பெரு விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 123 பேரும் உயிரிழந்தனர்.

2000 – செச்சினியாவில் 83 உருசிய படையினர் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

2004 – எயிட்டியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சான்-பெட்ரான்ட் அரிசுட்டைடு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

2012 – உலகின் மிகப்பெரிய கோபுரம் தோக்கியோ இசுக்கைட்றீ கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 634 மீட்டர்கள் ஆகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad