Type Here to Get Search Results !

Sri Lanka - 2020 - இலங்கை

இலங்கை  இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.




இலங்கையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு மூவாயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இதன் புவியியல் அமைவு மற்றும் ஆழமான திருகோணமலை துறைமுகம் என்பன புராதன பட்டுப் பாதை காலந்தொட்டுஇரண்டாம் உலக யுத்தம் வரை தந்திரோபாய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாகவுள்ளது. இது சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும்.இலங்கை வளமான பௌத்த மரபுரிமையைக் கொண்டு, முதலாவது பௌத்த படைப்புக்களை இத்தீவில் உருவாக்கியது. இந்நாட்டின் தற்கால வரலாறு மூன்று தசாப்த கால ஈழப் போரில் அகப்பட்டு மே 2009 இல் இராணுவ ரீதியிலான வெற்றியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை அதிபர் முறைமூலம் குடியரசு மற்றும் ஒற்றையாட்சி அரசால் ஆளப்படும் நாடாகும். கொழும்பு குடியேற்றவாத ஆட்சிக்காலம் முதலே இலங்கையின் தலைநகராக இருந்து வந்துள்ளது. 1977 ஆம் ஆண்டில், இலங்கையின் நிர்வாகத் தலைநகராக அண்மையில் உள்ள சிறீ ஜெயவர்த்தனபுர கோட்டையை ஆக்கும் பொருட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடம் அங்கே கட்டப்பட்டு, கொழும்பு நகரில் உள்ள சிறீ ஜெயவர்த்தனபுர கோட்டை தலைநகராக அமைந்துள்ளது. இலங்கை தேயிலை, கோப்பி, இரத்தினம், தெங்கு, இறப்பர், கருவா ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றது.

இலங்கை "இந்து சமுத்திரத்தின் முத்து" என அதன் இயற்கை அழகினால் அழைக்கப்படுவதுண்டு. மேலும், இது "புன்னகைக்கும் மக்களின் தேசம்" எனவும் அறியப்படுவதுண்டு. இத்தீவு வெப்பமண்டலக் காடுகளையும் உயர் உயிரியற் பல்வகைமை கொண்ட பல்வேறுவகையான இயற்கை அமைப்பினைக் கொண்டது.

இந்நாடு பன்னாட்டுத் தொடர்பில் நீண்ட வரலாற்றைக் கொண்டது. இது சார்க் ஆரம்ப உறுப்பினரும், ஐக்கிய நாடுகள் அவை, பொதுநலவாய நாடுகள், ஜி77, கூட்டுசேரா இயக்கம் ஆகியவற்றின் உறுப்பினரும் ஆகும். இது ஒன்றே தென்னாசியாவில் "உயர்" மனித வளர்ச்சிச் சுட்டெண் கொண்ட நாடாகும்.

இலங்கையின் முக்கிய நகரங்களாகக் கண்டி, காலி, குருநாகல், அநுராதபுரம், யாழ்ப்பாணம், நுவரேலியா, திருகோணமலை, மட்டக்களப்பு என்பவை காணப்படுகின்றன.


இலங்கை பற்றிய பொதுவான தகவல்கள்


வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளைக் கவர்ந்த ஒரு நாடாகும். இலங்கை 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவாகும். இந்தியாவின் தென்முனைப்பகுதியில் இது அமைந்துள்ளது., இதன் சிறப்பான அமைவிடமானது பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் இலங்கையை மிகவும் பிரபலமான ஒரு இடமாக ஆக்கியுள்ளது.வளைகுடாப் பிராந்தியத்தின் எல்லாப் பிரதான நகரங்களில் இருந்தும் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்தும் இலங்கைக்கான விமானப் பயண நேரம் மூன்றரை மணித்தியாலங்கள் மட்டுமே மேலும் ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வர்த்தகப் பாதையின் அரைவாசியில் இலங்கை அமைந்துள்ளது.

 நாட்டின் தென்பகுதி பொன்நிறமான கடற்கரையையும், மத்திய பகுதி பனிபடர்ந்த மலைகளையும் கொண்டுள்ளது. இவை தவிர சிதைந்து போன கலாசார முக்கோணங்கள், கன்னிமலைக்காடுகள், பசுமையான புல்வெளிகளும், வயல்வெளிகளும் இலங்கையின் அழகுக்கும், எழிலுக்கும் மெருகு சேர்ப்பதோடு இந்த மிதமிஞ்சிய எழில் கொஞ்சும் இயற்கை அழகுகள் காரணமாக உண்மையிலேயே ஒரு சொர்க்கபுரித்தீவாக இலங்கை உலகில் இடம்பிடித்துள்ளது.

ஓய்வுக்காக இலங்கைக்கு விஜயம் செய்கின்றவர்களுக்கு இலங்கை மக்களின் விருந்தோம்பல் உண்டையிலேயே அவர்களின் பயணத்தைப் பெறுமதிமிக்கதாக்குகின்றது.வர்த்தகப் பயணிகளுக்கு செறிவான கைத்தொழில் பிரிவுகளும், சிறிய கைத்தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு ஆற்றல் மிக்க வர்த்தகத் தொடர்புடன் கூடிய கல்வியறிவு மிக்க மக்களும் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாகும்.
தொழில் பயிற்சி ஆற்றல் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை ஏன் இலங்கையிலிருந்து தெரிவு செய்ய வேண்டும்?

பாரம்பரிய தொழில் ஆற்றல்

ஸ்தூபிகள்,கோபுரங்கள்,மடாலயங்கள்,மாளிகைகள்,நீர்பாசனத்திட்டங்கள் (குளங்கள்) என்பனவற்றின் சிதைவுகள் பண்டைய இலங்கையின் பொறியியல் தொழில் ஆற்றல்,செழுமையான வளங்கள் மற்றும் சாமர்த்தியம் என்பனவற்றுக்குச் சான்றாக அமைந்துள்ளன.இந்தத் தொழில் ஆற்றலாானது தலைமுறை தலைமுறையாகக் கடந்துவந்து ,தற்போது மேலதிக நவீன தொழில் நுட்பத்தால் பட்டைதீட்டப்பட்டுள்ளது.

உயர் எழுத்தறிவு மட்டம்

இலங்கையில் இரண்டாம் (ஆண்டு13) மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி மட்டத்தோடு ஆற்றலும்,பயிற்சியும் கொண்ட மனிதவலுவுடன் கூடிய பாரிய அளவிலான வெளியீடுகள் உள்ளன. நூற்றுக்கணக்கான ஏ தரம் கொண்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் வலைப்பின்னலூடாக உயர்மட்டக் கல்வி பேணப்படுகின்றது. இங்கு எழுத்தறிவு வீதம் 92 ஆக இருப்பது ஆசியாவில் மிகவும் உயர்மட்டத்தில் ஒன்றாகும்.


விரைவாகப் படிப்பதகான இயல்பூக்கம் மற்றும் இலகுவாக இசைவாக்கம் பெறல்         
 இலங்கையர்கள் இயல்பாகவே விவேகமானவர்கள் தொழில்தன்மையுடையவர்கள்,கடின உழைப்பாளிகள் மற்றும் புதிய தொழில்களில் தம்மை இயல்பாகவே இசைவாக்கிக் கொள்ளக் கூடியவர்கள்,எந்தத் தொழில் தேவையையும் இலகுவாகவும்,விரைவாகவும் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள்.இவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களைத் திருப்திப்படுத்துகின்றன.

சிறந்த விருந்தோம்பல் மற்றும் ,இயல்பான பெருந்தன்மை என்பன இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாடுகளில் தொழில் செய்யும்  இடங்களில் மாறுபட்ட சீதோஷ்ண நிலைமைகளுக்கும் விரைவாகவே பரிச்சயமடைய செய்கின்றன.அவர்கள் தொழில் திருப்தியை இலகுவாகப் பெற்றுக் கொள்கின்றனர்.அத்தோடு மகிழ்ச்சியும் அடைகின்றனர்.இவை வெற்றிகரமான தொழில் தருனர் மற்றும் தொழிலாளி உறவுகளுக்கு மிகவும் அவசியமானவை.இலங்கையர்கள் உறுதியான குடும்பத் தொடர்புகளையும் பேணிவருவதால் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்பே வீடு திரும்ப ஆர்வம் கொண்டுள்ளனர்.

காலநிலை:
தாழ்நிலம்-வெப்பமண்டலம் சராசரி உஷ்ணம் 27 சென்ரிகிரேட்  மத்தியமலை நாடு-குளிர்பிரதேசம் உஷ்ணநிலை 14 சென்ரிகிரேட்டாக குறையும்.இயல்புடையது.தென்மேற்கு பருவகால மழை மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேற்கு,தெற்கு மற்றும் மத்தியப் பிரதேசங்களில் பெய்யும்.வடகிழக்கு பருவ மழை டிசம்பர் ஜனவரி மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்யும்.

தொழிற்துறைகள்
இறப்பர்,தேயிலை,தென்னை என்பன பிரதான தொழிற்துறைகள் அத்தோடு விவசாய உற்பத்திகள், ஆடைத்தொழில், சீமேந்து, பெற்றோலியம்சுத்திகரிப்பு, ஜவுளி,புகையிலைத் தொழிற்துறைகளும்.

விவசாய உற்பத்திகள்: 
அரிசி, கரும்பு, தானியங்கள், பருப்புவகைகள், எண்ணைவிதைகள், கிழங்குவகைகள், நறுமணத்திரவியங்கள், தேயிலை, இறப்பர், தென்னை, பால்முட்டை, மிருகத்தோல் மற்றும் இறைச்சிவகைகள்.



1. இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
9 மாகாணங்கள் அவையாவன:
► வடக்கு மாகாணம்
► கிழக்கு மாகாணம்
► வடமத்திய மாகாணம்
► வடமேல் மாகாணம்
► மத்திய மாகாணம்
► சபரகமுவை மாகாணம்
► ஊவா மாகாணம்
► தென் மாகாணம்
► மேல் மாகாணம்

2. இலங்கையில் எத்தனை அரச சேவை மாவட்டங்கள் உள்ளன? – 25 மாவட்டங்கள். அவையாவன:
1) கொழும்பு
2) கம்பகா
3) கழுத்துறை
4) கண்டி
5) மாத்தளை
6) நுவரெலியா
7) காலி
8) மாத்தறை
9) அம்பாந்தோட்டை
10) யாழ்ப்பாணம்
11) மன்னார்
12) வவுனியா
13) முல்லைத்தீவு
14) கிளிநொச்சி
15) மட்டக்களப்பு
16) அம்பாறை
17) திருகோணமலை
18) குருநாகல்
19) புத்தளம்
20) அனுராதபுரம்
21) பொலன்னறுவ
22) பதுளை
23) மொனராகலை
24) இரத்தினபுரி
25) கேகாலை
3. இலங்கையில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளன? – 22
4. இலங்கையின் தலைப்பட்டினம் எது? ஸ்ரீ ஜயவர்தனபுர
5. இலங்கையின் பெரிய நகரம் எது? – கொழும்பு
6. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச
இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல்.
► மேன்மைதங்கிய வில்லியம் கொபல்லாவ (மே 22, 1972 – பெப்ரவரி 4, 1978)
► மேன்மைதங்கிய ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (பெப்ரவரி 4, 1978 – ஜனவரி 2, 1989)
► மேன்மைதங்கிய ரணசிங்க பிரேமதாசா (ஜனவரி 2, 1989 – மே 1, 1993)
► மேன்மைதங்கிய டிங்கிரி பண்டா விஜயதுங்கா (மே 2, 1993 – நவம்பர் 12, 1994)
► மேன்மைதங்கிய சந்திரிகா குமாரதுங்க (நவம்பர் 12, 1994 – நவம்பர் 19, 2005)
► மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ச (நவம்பர் 19, 2005 – 2015)
► மேன்மைதங்கிய மைத்திரி பால சிறிசேன  (நவம்பர்,2015 – 2019வரை)
►சபாநாயகர் கரு ஜயசூரிய[2020]
►தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய[2020]

7. இலங்கையின் தற்போதைய பிரதம மந்திரி யார்? மாண்புமிகு மகிந்த ராஜபக்ச அவர்கள்
8. இலங்கையின் பரப்பளவு என்ன? 65,610 கிமீ² / 25,332 சதுரமைல்
( பூமியின் பரப்பளவு : 196,936,481 – சதுர மைல் பூமியின் நிலப் பரப்பளவு : 57,505,431 – சதுர மைல் பூமியின் நீர்ப் பரப்பளவு : 139,431,011 – சதுர மைல் இந்தியாவின் பரப்பளவு : 1,222,559 – சதுர மைல் )
9. இலங்கை எப்போது (பிரித்தானியவிடம் இருந்து) சுதந்திரம் பெற்றது?. – 04.02.1948ல்
10. இலங்கை அரசை எவ்வாறு அழைக்கப்படுகின்றது? – இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு (Democratic Socialist Republic of Sri Lanka)
11. இலங்கையில் உயர்ந்த நீவீழ்ச்சி எது? – பம்பரகந்த.
12. இலங்கையில் நீளமான ஆறு எது? – மகாவலி கங்கை 335 கி. மீ
13. இலங்கையின் உயர்ந்த மலை எது? – பிதுருதலாகல (Pidurutalagala) கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி)
14. மக்கள் தொகை என்ன? 2009 மதிப்பீடு 20,238,000 – July 2008 குடிமதிப்பு 21,324,791
15. இலங்கையில் பாவனையில் உள்ள நாணயம் என்ன?: இலங்கை ரூபாய் (LKR)
16. இலங்கையின் நேர வலயம்: (ஒ.ச.நே + 5.30 மணி (கிறீன்வீச் நேரத்துடன் 5.30 மணி கூட்டவேண்டும்)
17. இலங்கையின் இணையக் குறி என்ன?: lk
18. இலங்கையின் தொலைபேசி எண் என்ன?: +94
19. இலங்கையில் பாவனையில் உள்ள மின்னழுத்தம் எது?: 230V
20. இலங்கை எங்கே அமைந்துள்ளது?: இந்து சமுத்திரத்தில் மையக்கோட்டிற்கு வடக்காக 6 பாகை 54 கலைக்கும் (6°54’ – 6° 9’N), நெட்டாங்கிற்கு கிழக்காக 79°54’ – 79°9’E வும் அமைந்துள்ளது
இலங்கையின் முக்கிய நிலையங்கள்
1. செய்மதி தகவல் தொடர்பு நிலையம் – பாதுக்கை
2. புடைவைக் கைத்தொழில் நிலையம் – வியாங்கொடை, பூகொட துல்கிரிய
3. எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் – சப்புகஸ்கந்த
4. பிறிமா மாவு ஆலை – திருகோணமலை
5. விவசாய ஆராட்சி நிலையம் – 
                           மகாஇலுப்பள்ளம, இங்குராகொட, பதல்கொட
6. தாவரவியல் பூங்காக்கள் – பேராதனை, கனோபத்த, ஹக்கல
7. தேயிலை ஆராட்சி நிலையம் – தலவாக்கலை
8. சோயா ஆராட்சி நிலையம் – பல்லேகலை, கண்ணொறுவ
9. ரயர் (டயர், டியூப்) தொழிற்சாலை – களனி
10. இறப்பர் ஆராட்சி நிலையம் – அகலவத்தை
11. வனவிலங்குச் சரணாலயம் – வில்பத்து, யால, உடவளவை, றுகுணு, லகுகல
12. பருத்தி ஆராட்சி நிலையம் – அம்பாந்தோட்டை
13. உருளைக்கிழங்கு ஆராட்சி நிலையம் – நுவரேலியா
14. சீமெந்து தொழிற்சாலை – புத்தளம், காலி
15. ஓட்டுத் தொழிற்சாலை – அம்பாறை
16. ஆயுர்வேத ஆராட்சி நிலையம் – நாவின்ன
17. அரசினர் சுதேச வைத்தியசாலை – இராஜகிரிய
18. பறவைகள் சரணாலயம் – முத்துராஜவெல, குமண, பூந்தல
19. குஷ்டரோக வைத்தியசாலை – மாந்தீவு மட்டக்களப்பு
20. கலாசார முக்கோண வலையம் – கண்டி, அனுராதபுரம், பொலநறுவை
21. சீனித் தொழிற்சாலை – கந்தளாய்
22. காரீயச் சுரங்கம் – போகலை
23. புற்றுநோய் வைத்தியசாலை – மகரகம
24. துறைமுகங்கள் – கொழும்பு, திருகோணமலை, காலி, அம்பாந்தோட்டை, காங்கேசந்துறை
25. காகிதத் தொழிற்சாலை – வாளைச்சேனை
26, ஏற்றுமதிப் பொருட்கள் – தேயிலை, றபர், கறுவா
27. மிருகக்காட்சிச்சாலை – தெஹிவளை
இலங்கையின் தேசிய சின்னங்கள்
1. இலங்கையின் தேசிய மரம் – நாகமரம்
2. இலங்கையின் தேசியப் பறவை – காட்டுக்கோழி
3. இலங்கையின் தேசிய மிருகம் – யானை
4. இலங்கையின் தேசிய மலர் – நீலஅல்லி

இலங்கையில் உள்ள குளம்
  • கிளிநொச்சி மாவட்டம்

  1. இரணைமடுக்குளம்
  2. கணகாம்பிகைகுளம்
  3. அம்பாள்குளம்
  4. அக்கராயன்குளம்
  5. மணியன்குளம்
  6. பாலன்குளம்
  7. கோட்டக்கட்டிகுளம்

  • முல்லைத்தீவு மாவட்டம்

  1. மாங்குளம்
  2. கணகராயன்குளம்
  3. வெல்லான்குளம்
  4. புளியன்குளம்
  5. முத்தையன்கட்டுகுளம்
  6. வவுனிக்குளம்
  7. ஒட்டறுத்தகுளம்
  8. முறிப்புக்குளம்
  9. பனங்காமம்குளம்
  10. வன்னிவிளான்குளம்
  11. கொம்புவைத்தகுளம்
  12. மூண்றுமுறிப்புக்குளம்
  13. குஞ்சுக்குளம்
  14. மல்லாவிக்குளம்
  • வவுனியா மாவட்டம்
  1. பாலமோட்டைகுளம்
  2. நெலுங்குளம்
  3. பூவரசன்குளம்
  4. இழுப்பைகுளம்
  5. இலமருதன்குளம்
  6. கள்ளிக்குளம்
  7. ஈரப்பெரியகுளம்
  8. இரணை இழுப்பைகுளம்
  • கிழக்கு மாகாணம்
  1. தேராவில்குளம்
  2. கரிப்பட்டமுறிப்புகுளம்
  3. உன்னிச்சை குளம்
  4. புழுகுநாவிக்குளம்
  5. வடமத்திய மாகாணம்
  6. பூலன்குளம்
  7. பாசவக் குளம்
  8. குஞ்சுக் குளம்

இலங்கையின் மிகப்பெரிய நீர்த்தேக்கம்


விக்டோரியா அணை இலங்கையின் மகாவலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓர் அணை. இவ் அணையில் ஒரு நீர் மின்நிலையமும் உள்ளது. இதுவே இலங்கையின் மிகப்பெரிய நீர்மின்நிலையமாகும். இலங்கையின் உயரமான அணையும் இதுவே. இதன் மின்னுற்பத்தித் திறன் 210 மெகாவாட் ஆகும்.
1978-ஆம் ஆண்டு கட்டத்தொடங்கபட்ட இந்த அணை 1985 ஏப்ரலில் நிறைவடைந்தது.
  • உயரம்-122 m (400 ft)
  • நீளம்-520 m (1,706 ft)
  • அகலம் - 25 m (82 ft)
  • அமைவிடம்-தெல்தெனிய
  • நோக்கம்-மின் ஆற்றல்
மாகாணம் ஆளுநர்கள் 2020
  • மத்திய மாகாணம் – லலித் கமகே
  • கிழக்கு மாகாணம் – அனுராதா யகம்பத்
  • வடமத்திய மாகாணம் – திச விதாரண
  • வட மாகாணம் – பி. எஸ். எம். சார்லசு
  • வடமேல் மாகாணம் – ஏ. ஜெ. எம். முசம்ம்மில்]]
  • சப்ரகமுவா மாகாணம் – திக்கிரி கொப்பேக்கடுவா
  • தென் மாகாணம் - வில்லி கமகே
  • ஊவா மாகாணம் - ராஜா கொலூர்
  • மேல் மாகாணம் – சீதா அரம்பேப்பொல
புகழ் பெற்ற இலங்கையர்கள்


இலங்கையின் சனாதிபதிகள்
  • வில்லியம் கோபல்லாவ
  • ஜே.ஆர் ஜெயவர்த்தனா
  • ரணசிங்க பிரேமதாசா
  • டி.பி.விஜயதுங்க
  • சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க
  • மகிந்த ராஜபக்ச
  • Maithripala Sirisena

இலங்கையின் பிரதமர்கள்
  • டி.எஸ்.சேனநாயக்கா 1948-1952
  • டட்லி சேனாநாயக்க 1952-1953, 1960-1960, 1965-1970
  • ஜொன் கொதலாவல 1953-1956
  • எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 1956-1959
  • டப்ளியூ. தகநாயக்க 1959-1960
  • சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960-1965, 1970-1977, 1994-2000
  • ஜே.ஆர் ஜெயவர்த்தனா 1977-1978
  • ரணசிங்க பிரேமதாசா 1978-1989
  • டி.பி.விஜயதுங்க 1989-1993
  • ரணில் விக்கிரமசிங்க 1993-1994, 2001-2004
  • சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க 1994-
  • இரத்னசிறி விக்கிரமநாயக்கா 2000-2001
  • மகிந்த ராஜபக்ச 2004-2010
  • ரணில் விக்கிரமசிங்க 2015-2019
  • மகிந்த ராஜபக்ச 2019-now

இலங்கையின் அரசியல்வாதிகள்
  • சர். பொன். இராமநாதன்
  • சர். பொன். அருணாசலம்
  • பிலிப் குணவர்த்தனா
  • என். எம். பெரேரா
  • கொல்வின் ஆர். டி சில்வா
  • பீட்டர் கெனமன்
  • ஜீ. ஜீ. பொன்னம்பலம்
  • எஸ். ஜே. வி. செல்வநாயகம்
  • சௌமியமூர்த்தி தொண்டமான்
  • அ. அமிர்தலிங்கம்
  • ரோஹண விஜேவீர
  • லக்ஷ்மன் கதிர்காமர்
  • வேலுப்பிள்ளை பிரபாகரன்

இலங்கையின் விளையாட்டு வீரர்கள்
  • டங்கன் வைட்
  • துலிப் மெண்டிஸ்
  • அர்ஜூன றணதுங்க
  • அரவிந்த டி சில்வா
  • சமிந்த வாஸ்
  • முத்தையா முரளிதரன்
  • மஹேல ஜயவர்த்தன
  • சனத் ஜெயசூரிய
  • சுசந்திகா ஜயசிங்க
  • தமயந்தி தர்சா
  • சிந்தன விதானகே

இலங்கையின் அறிஞர்கள்
  • சைமன் காசிச்செட்டி
  • பரணவிதான
  • ஆனந்த குமாரசுவாமி
  • சுவாமி விபுலாநந்தர்
  • சி. வை. தாமோதரம்பிள்ளை
இலங்கை தமிழ் பெயர்கள் 
இலங்கை, இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad