இலங்கை வரலாற்று வினா விடை
1. இலங்கையில் ஏறத்தாழ எந்த நூற்றாண்டில் ஆரியர்கள் குடியேறினார்கள்?
கி.மு 5ம் நூற்றாண்டில்
2. ஆரியர்கள் வடமேற்கில் எந்த நதியோரங்களில் குடியேறினார்கள்?
மல்வத்து ஓயா நதி ஓரம்
3. ஆரியர்கள் தென்கிழக்கில் எவ் ஆற்றங்கரையோரம் குடியேறினர்;?
வளவ கங்கை , மாணிக்;க கங்கை , கும்புக்கன் ஓயா, கிரண்டி ஓயா
4. இலங்கை மக்கள் கற்காலத்தில் இருந்த போது ஆரியர்கள் எதனுடைய உபயோகத்தைப் புகுத்தினர்?
இரும்பின் உபயோகம்
5. நெற்பயிர்ச் செய்கை முறையை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள் யார்?
ஆரியர்
6. இலங்கையில் முதல் அரசனாகக் கருதப்படுபவர்?
விஜயன்
7. கி.மு. 247 இல் இலங்கைக்கு பௌத்த மதத்தைக் கொண்டு வந்த பிக்கு யார்?
மகிந்தன்
8. மகிந்தன் இலங்கையில் புகுத்திய பௌத்த மதம் எப்பிரிவைச் சார்ந்தது?
தேரவாதப்பிரிவு
9. மகிந்தனுடன் வந்தவர்கள் தங்கிய மலைக்கு வழங்கப்பட்ட பெயர் என்ன?
மிகிந்த மலை (மிகுந்துமலை)
10. பௌத்த மதம் இலங்கையில் பரப்பப்பட்ட போது இலங்கையை ஆண்ட அரசன் யார்?
தேவநம்பிய தீசன்
11. மகிந்தனை இலங்கைக்கு அனுப்பிய பேரரசன் யார்?
அசோக சக்கரவர்த்தி
12. மகா மேக வண்ணை தோட்டத்தில் கட்டியெழுப்பப்பட்ட விகாரை எது?
மகா விகாரை
13. இலங்கைக்கு வெள்ளரசு மரக்கிளையுடன் முதன் முதல் வருகை தந்த பௌத்த பிக்குனி யார்?
சங்கமித்தை
14. மகிந்தனின் புனித பொருட்கள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் தாது கோபுரம் எங்கு உண்டு?
மிகிந்தலையில் முதலாம் காசியப்ப மன்னன்
15. காசியப்பனின் தந்தை யார்?
தாதுசேனன்
16 காசியப்பன் அரசுரிமை பெறத் தடையாகவிருந்த காரணி யாது?
முகாராணியின் மகனாகப் பிறக்காமை
17. பட்டத்திற்குரிய இளவரசனாக விளங்கியவன் யார்?
முகலன்
18.காசியப்பன் எவ்வாறு அரசுரிமையைப் பெற்றான்?
படைவீரன் மிக்காரியின் உதவியுடன் தாதுசேனனைச் சிறையிலிட்டு அரசைக் கைப்பற்றினான்.
19. முகலன் ஏன் இந்தியாவிற்கு ஓடினான்?
காசியப்பனுக்கு எதிராக உதவிப்படை திரட்டுவதற்கு
20. காசியப்பன் அரசமாளிகையைச் சிகிரியாவில் அமைத்த காரணம் யாது?
இந்தியாவுக்கு ஓடிய முகலனிடமிருந்து தன்னைப் பாதுகாக்க.