இலங்கை வரலாற்று வினா விடை
-----------------------------------------------------------
-----------------------------------------------------------
21. சிகிரியா எங்கு அமைந்துள்ளது? உயரம் யாது?
- அனுராதபுரத்திற்கு தென்கிழக்குத்திசையில் 30 கிலோமீற்றர் தொலைவில்
- .தம்புள்ளைக்கு வடகிழக்குத் திசையில் 1.5 கிலோமீற்றர் தொலைவில் 180 மீற்றர் உயரம்
22. சிகிரியாவின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் யாவை?
- கொலு மண்டபம்
- வசந்த மாளிகை
- நடன அரங்கு
- ஸ்நானத் தடாகம்
- வினோதப் பூங்காவனம்
23. சிகிரியா ஓவியங்கள் எங்கு அமைந்துள்ளன?
சிகிரியா மலையின் மேற்குப் பகுதியிலுள்ள குகையில்
24. சிகிரியா ஓவியங்களின் அமைப்பினைத் தருக.
- ஒரு பெண் உருவமும் இரு பெண் உருவங்களும் உள்ளன.
- தங்கநிற உருவங்கள் மலர்களை ஏந்தியுள்ளன.
- நீலநிற உருவங்கள் மலர்தட்டங்களை ஏந்தியுள்ளன.
25. பௌத்த மதத்தின் வருகையால் ஏற்பட்ட நன்மைகள் 4 தருக.
- சிங்கள இலக்கியம் வளம் பெற்று வளர்ந்தது.
- கட்டிடக்கலை, சிற்பக்கலை
26. எல்லாளன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தான்?
44 ஆண்டுகள்
27. கவாந் திஸ்ஸ மன்னின் பிள்ளைகள் யார்?
துட்டகைமுனு, திஸ்ஸன்