இலங்கையில் கொரோனாவின் கோரத்தாண்டவம்
கொரோனா வைரஸ் தொற்றாளர் விபரம் இதோ
இவர் மத்தேகொட பகுதியை வசிப்பிடமாக கொண்ட ஜயந்த ரணசிங்க என்பவர், இத்தாலி மொழி பேசும் சுற்றுலா சாரதி வழிக்காட்டி என்பதுடன் விரிவுரையாளருமாவார்.
52 வயதான ஜயந்த ரணசிங்க கடந்த 9 ஆம் திகதியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் கடந்த மூன்றாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை சீகிரியா, பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன் அந்த இடங்களில் உள்ள விடுதிகள் பலவற்றிலும் தங்கியுள்ளனர்.
பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விடை கொடுத்து திருப்பியனுப்பிய ஜயந்த ரணசிங்க மத்தேகொடையில் உள்ள வீட்டிற்கு மீள சென்றுள்ளார்.
அதன் பின்னரே குறித்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டள்ளார்.
தற்போது அங்கொட தேசிய தொற்றுநோய் ஆய்வு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிபபிடத்தக்கது.
மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இத்தாலியைச் சேர்ந்த 10 பேர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இத்தாலியில் இருந்து வருகை தந்த பெண்கள் மற்றும் சிறு பிள்ளைகள் உள்ளிட்ட பத்து பேர் திடீர் சுகயீனம் காரணமாக தம்புள்ளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மீளவும் மட்டக்களப்பு தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலாபம் மருத்துவமனை அதிகாரிகள் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றுக்கான அனைத்து வெளிப்பாடுகளும் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய ஒருவருகே இவ்வாறு வைரஸ் தாக்கம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 10 மணிக்கு சிலாபம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒருமணிநேரத்திற்குப் பிறகு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கொரோனா சந்தேகத்தில் மேலும் இருவர் IDH இற்கு
கொரோனா என சந்தேகத்தின் அடிப்படையில், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேலும் இருவர் சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் நேற்று (11) இத்தாலியிலிருந்து வந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மற்றைய நபர் கடந்த 06 ஆம் திகதி இத்தாலியிலிருந்து இலங்கை வந்து சோமாவதி பெளத்த தலத்திற்கு சென்ற நிலையில் சுகவீனமுற்ற நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா; சந்தேகங்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்!
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
- சுகாதார மேம்பாட்டு அலுவலகம் – 0710107107
- சுகாதார அமைச்சின் அனர்த்த பிரிவு – 0113071073
இத்தொலைபேசிக்கு அழைப்பெடுப்பதன் மூலம் வதந்திகளை தடுக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.