வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான பலர் நாட்டின் சில பகுதகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வதந்திகள் பரப்பப்படுவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளியைத் தவிர, வேறு எவருக்கும் இதுவரை கொரோனா தொற்று வைரஸ் ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா; சந்தேகங்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்!
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
- சுகாதார மேம்பாட்டு அலுவலகம் – 0710107107
- சுகாதார அமைச்சின் அனர்த்த பிரிவு – 0113071073
இத்தொலைபேசிக்கு அழைப்பெடுப்பதன் மூலம் வதந்திகளை தடுக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.