Type Here to Get Search Results !

இலங்கையின் கல்விப்புலம் சார்ந்த முக்கிய தகவல்கள்




1. இலங்கை ஆசிரியசேவையில் காணப்படும் தரங்கள். 5
                                       3-11, 3-1, 2-11, 2-1, 1
2. மகாத்மா காந்தியின் 3ர் வுhநழசல.
  • தலை (Head)
  • கை (Hand)
  • இதயம் (Heart)
  • பின்னர் Health & Habit போன்றவையும் இணைந்ததுக் கொள்ளப்பட்டன.


3. இலங்கை அரச பாடசாலைகளின் வகைகள்.
  • 1AB (A/L கலை, வர்த்தக விஞ்ஞான, தொழிநுட்ப துறைகள் காணப்படும் பாடசாலைகள்)
  • 1C (A/L கலை, வர்த்தக துறை மட்டும் காணப்படல்)
  • Type 2 (தரம் 11 வரை மட்டும் காணப்படும் பாடசாலைகள்)
  • Type 1 (தரம் 5 வரை மட்டும் காணப்படும் பாடசாலைகள்)
  • கடந் ஆட்சியில் 1AB Super பாடசாலைகள் உருவாக்கப்படல் (IT Centre காணப்படல்)

4. தேசிய நிருவாக அடிப்படையில் பாடசாலைக் கல்வி நிலையங்களின் முக்கிய 3 வகைகள்.
  • மத்திய அரச பாடசலைகள் (தேசிய பாடசாலைகள்)
  • மாகாண பாடசாலைகள்
  • பிரிவேனாக்கள்

5. அடிப்படை கற்றல் தேர்ச்சிகள் (தேசிய கல்வி ஆணைக்குழுவால் விதந்துரைக்கப்பட்டது). 7
  • சூழல் தொடர்பான தேர்ச்சி
  • தொடர்பாடல் தேர்ச்சி
  • சமயமும் ஒழுகலாறும்
  • விளையாட்டும் ஓய்வுநேர பயன்பாடும்
  • கற்றலுக்காக கற்றல்
  • வேலையுலகிற்கு தயார் செய்தல்
  • ஆளுமை விருத்தி

6. கல்விப் புலத்துடன் தொடர்புடைய சில இணையத்தள முகவரிகள்.
  • இலங்கை கல்வி அமைச்சு - www.moe.gov.lk
  • தேசிய கல்வி ஆணைக்குழு (NEC) - www.nec.gov.lk
  • தேசிய கல்வி நிறுவனம் (NIE) - www.nie.lk
  • இலங்கை பரீட்சைத் திணைக்களம் - www.doenets.lk
  • கல்வி வெளியீட்டுத் திணைக்களம் - www.edupub.gov.lk
  • இலங்கை திறந்த பல்கலைக்கழகம் - www.ou.ac.lk
  • 7. 5 E கற்பித்தல் முறை
  • Engagement - நிச்சயித்தல்
  • Exploration - ஆராய்தல்
  • Explanation - விளக்குதல்
  • Elaboration - விரிவுபடுத்தல்
  • Evaluation - மதிப்பிடல்

8. 3 T யினால் தரப்படும் ஆசிரிய வகிபாகங்கள் (கற்பித்தல் முறைகள்)
கடத்தல் - Transmission (ஆசிரியர் மட்டும் தகவல்களை வழங்கள்)
  • பரிமாற்றல் - Transaction (ஆசிரியர் & மாணவர் தகவல்களை பறிமாறல்)
  • நிலைமாற்றல் - Transformation (ஆசிரியர் மாணவர் மையக் கல்வியை திட்டமிட்டு விருத்தி செய்தல்)


9. யுனெஸ்கோவின் 4 தூண்களும் எவை?
அறிவதற்காககற்றல்
  • செயலாற்றுவதற்காக கற்றல்
  • வாழக்கற்றல்
  • இணைந்து வாழக்கற்றல்

10. 2016-2020 கல்விக்கொள்கையின் அபிவிருத்தியின் முக்கிய 3 தொனிப்பொருள்கள்
  • கல்வித்துறையில் ஆளுமை, பணி வழங்குவதை உறுதிப்படுத்தல்
  • 1ம், 2ம் தரங்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தல்
  • 1ம், 2ம் தரக்கல்வியை சமமான முறையில் பெற்றுக்கொடுத்தல்
  • 11. பாடசாலை கலைத்திட்டத்தில் உள்ளடங்கும் பிரிவுகள்
  • முறைசார் (கற்பிக்கவேண்டிய காலப்பகுதி)
  • முறைசாரா (சுற்றுலா, விளையாட்டு, முதலுதவி)
  • மறை (காலைக் கூட்டம்)

12. கல்வியுடன் தொடர்புடைய 3 அமைச்சுக்கள்
  • கல்வி அமைச்சு
  • உயர் கல்வி அமைச்சு
  • இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு
  • 13. தேர்ச்சி (Competency) அதன் வகைகள்

அறிவு, திறண், மனப்பாங்கு, பிரயோகம் என்பவற்றின் கூட்டுச் செயற்பாடே தேர்ச்சியாகும்.
  • அடிப்படைத் கற்றல் தேர்ச்சி (Essential Learning Competency)
  • ஏதிர்பார்க்கப்படும் கற்றல் தேர்ச்சி (Desired Learning Competency)
  • 14. கல்வியுடன் தொடர்புடைய அரச சேவைகள்
  • இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS)
  • இலங்கை அதிபர் சேவை (SLPS)
  • இலங்கை ஆசிரியர் சேவை (SLTS)
  • இலங்கை கல்வியலாளர் சேவை (SLTES)


15. பேண்தகு அபிவிருத்தி பாடசாலை மட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டம்

இது தன்னிறைவான, சுபீட்சமான தேசமாக நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கும், நாட்டின் எதிர்கால சந்ததியினரை சிறந்தவொரு சமூகமாகக் கட்டியெழுப்புவதற்கான ஒரு நிகழ்ச்சித்திட்டமாகும்.
பாடசாலை பிள்ளைகளை அவதானம் நிறைந்த நடத்தைக்கோலங்களிலிருந்து பாதுகாத்து நடைமுறைச் சூழலுக்கும், சமூகத்திற்கும் இசைந்து நடப்பதற்கு அவர்களை பழக்குவதுடன் அவர்களை சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்களாக ஊக்கப்படுத்துதலே இச்செயற்திட்டத்தின் பிரதான குறிக்கோளாகும்.
உள்ளடங்கும் பிரிவுகள்
  • உணவு உற்பத்தி
  • சுற்றாடல் பாதுகாப்பு
  • போதைப்பொருள் தடுப்பு
  • சிறுநீரக நோய் தடுப்பு
  • பிள்ளைகள் பாதுகாப்போம்

16. கல்வி அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள 4 திணைக்களங்கள்
  • இலங்கை பரீட்சைத் திணைக்களம்
  • கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
  • தேசிய சுவடிகள் திணைக்களம்
  • தொள் பொருளியல் திணைக்களம்


17. அவசர தொலைபேசி இலக்கங்கள்
  • சிறுவர் உதவிச் சேவை - 1929
  • மனித உரிமைகள் சேவைக்கான அவசர உதவி - 1996
  • அவசர பொலிஸ் பிரிவு - 119, 011-5717171
  • அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் - 1919
  • போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் - 1984
  • கல்வி அமைச்சு - 1988
  • பரீட்சை திணைக்களம் - 1911
  • அவசர அதிவேக பிரிவு - 1969


18. க.பொ.த(உ/த) தொழினுட்ப பாடத்துறைக்குரிய பாடங்கள்
பொறியியற் தொழிநுட்பம் / உயிர்முறையியற் தொழிநுட்பம்
தொழினுட்பத்துக்கான விஞ்ஞானம்
கணிதம் ,வரலாறு, புவியியல், IT ... போன்றவற்றிலிருந்து ஒன்று
19. கல்வியுடன் தொடர்புடைய சில சர்வதேச தினங்கள்
  • உலக ஆசிரியர் தினம் - ஓக்டோபர் 05
  • இலங்கையில் ஆசிரியர் தினம் - ஓக்டோபர் 06
  • சர்வதேச மாணவர் தினம் - நவம்பர் 17
  • சர்வதேச எழுத்தறிவு தினம் - செப்படம்பர் 08
  • சர்வதேச விஞ்ஞான தினம் - நவம்பர் 10
  • சர்வதேச புத்தக தினம் - ஏப்ரல் 23
  • இலங்கையில் புத்தாக்குனர் தினம் - ஒக்டோபர் 26
  • உலக சாரணர் தினம் - ஆகஸ்ட் 01

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad