நாளை, அலுவலகம் செல்பவர்கள் கட்டாயமாக பின்வரும் ஒழுங்குகளைப் பேணிக் கொள்ளுங்கள்.
01. கட்டாயமாக முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள்.
02. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஏனைய பயணிகளுடன் கதைப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
03.அலுவலகத்திற்கு சென்றடைந்ததும் கைகளை சவர்க்காரம் இட்டுக் கழுவிக் கொள்ளுங்கள்.
04. கைகளைக் கழுவும் முன் முகத்தை கைகளால் தொடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
05.தும்மல் வரும்போது அல்லது இருமும் போது முகத்தை துணியினால் மூடிக் கொள்ளுங்கள். அல்லது டிசு பேப்பரினால் மூடிக் கொள்ளுங்கள்.
06.அத்தியவசியத் தேவையில்லாத சந்தர்ப்பங்களில் பொது இடங்களுக்குச் செல்லாதீர்கள்.
07.சேவை பெறுநர்களுடன் மிக அருகில் செல்லாதீர்கள். குறைந்தது ஒரு மீட்டர் தூரத்தைப் பேணுங்கள்.
08.அலுவலக மின் தூக்கியைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருங்கள். மிக அருகருகே மின் தூக்கியில் செல்லாதீர்கள்.
09. பாவித்த டிசு பேப்பரை பொதுக் குப்பைகளுடன் வீசிவிடாதீர்கள்.
10. உங்கள் பாதுகாப்பே நாட்டின் பாதுகாப்பு என்பதை மறவாதீர்கள்.