இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1978ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 22ஆம் திகதி அன்று உருவாக்கப்பட்டது. இது இலங்கையில் 1978ஆம் ஆண்டு உருவான பல்கலைக்கழக சட்டத்தின் 16 ஆம் விதியின் கீழ் இயங்குகிறது. கல்விக்கான அரச பொது நிதி ஒதுக்கீடுகளை உயர் கல்வி நிறுவனங்களுக்குப் பங்கிடுவதும், உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களை குறித்த முறைமைக்கு ஏற்ப வழி நடத்துவதும் பல்கலைக்கழகங்களில் பட்டப்பயில் கற்கை நெறிகளுக்கு அனுமதிப்பதற்கான மாணவர்களை தெரிவு செய்வதுமே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய பணியாகும். இலக்கம் 20, வார்டு இடத்தில் இதன் பணியகம் அமைந்துள்ளது.
நோக்கம்
உள்நாட்டு உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி முறைமையின் உயர்தரத்தை உறுதிப்படுத்தலும், அனைத்துலக கல்வித் தரத்திற்கு ஏற்ப உருவாக்குவதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நோக்கம் ஆகும்.
செயல் திட்டம்
இலங்கையின் உயர்கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தேசிய கல்வி வளத்தை பெருக்குவதும் உயர் கல்வி நிறுவனங்கள் வழியாக தகுதியுள்ள சிறந்த மனித வளத்தை உருவாக்கி ஆராய்ச்சி மற்றும் ஆளணியை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
பணிகள்
- ஆணைக்குழுவின் முதன்மைச் செயற்பாடுகள்:
- உயர் கல்விக்கான வளங்கள் மற்றும் நிதியை உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்குதல்.
- பல்கலைக்கழக கல்வி முறைகளை திட்டமிடலும் மேற்பார்வை செய்தலும்.
- கல்வித் தகுதிகளை மேற்பார்வை செய்தல்.
- உயர் கல்வி நிறுவனங்களை மேலாண்மை செய்தல்
- பட்டப்பயில் கற்கை நெறிகளுக்குச் சேர்ப்பதற்கான மாணவர்களை தெரிவு செய்வது.
ஆணைக்குழு உறுப்பினர்கள் இதன் உறுப்பினர்கள் தலைவரால் நியமிக்கப்படுவர்:
- பேரா. S. V. D. G. காமினி சமரநாயக்க -தலைவர்
- பேரா. M. T. M. ஜிப்ரி - துணைத் தலைவர்
- பேரா. கார்லோ பொன்சேகா - ஆணைக்குழு உறுப்பினர்
- பேரா. ரோகன் ராஜபக்ச - ஆணைக்குழு உறுப்பினர்
- பேரா. S. K. சிற்றம்பலம் - ஆணைக்குழு உறுப்பினர்
- பேரா. S. B. S. அபயகோன் - ஆணைக்குழு உறுப்பினர்
- வித்தியஜோதி பேரா. H. ஜனக தே சில்வா - ஆணைகுழு உறுப்பினர்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் தேசிய பல்கலைக்கழகங்கள்
- கொழும்பு பல்கலைக்கழகம்
- University of Colombo School of Computing
- Institute of Indigenous Medicine
- Institute of Worker's Education
- e National Institute of Library and Information Scienc
- National Center for Advanced Studies in Humanities & Social Sciences
- Institute of Biochemistry, Molecular Biology and Biotechnology (IBMBB)
- Postgraduate Institute of Medicine, Colombo
- Sri Palee Campus
- பேராதனைப் பல்கலைக் கழகம்
- Postgraduate Institute of Science, Peradeniya
- Postgraduate Institute of Agriculture, Peradeniya
- ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக் கழகம்
- களனிப் பல்கலைக்கழகம்
- Gampaha Wickramaracchi Institute of Ayurvedic Medicine
- Postgraduate Institute of Pali & Buddhist Studies, Colombo
- மொறட்டுவப் பல்கலைக்கழகம்
- Institute of Technology, Moratuwa
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- வவுனியா வளாகம்
- ருகுண பல்கலைக் கழகம்
- இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
- கிழக்குப் பல்கலைக்கழகம்
- Swamy Vipulananda Institute of Aesthetic Studies
- திருகோணமலை வளாகம்
- ரஜரட பல்கலைக்கழகம்
- சபரகமுவ பல்கலைக்கழகம்
- ஊவா வெல்லசை பல்கலைக்கழகம்
- வயம்ப பல்கலைக்கழகம்
- University of the Visual & Performing Arts
- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
- National Center for Advanced Studies
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் இவ்வகையான முறை சார்ந்த கல்வியை வழங்குவதில் அரசாங்கம் முன்னிலை வகித்து வந்துள்ளது. பொதுவுடைமை நாடுகள் தவிர்ந்த ஏனைய வளர்முக நாடுகளில் அரசாங்கத்துறையோடு தனியார் துறை சார்ந்த கல்வி நிறுவனங்களையும் காணமுடியும். உதாரணமாக இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் நடாத்தும் பாடசாலை முறைக்கு அப்பால் கல்வித்துறையில் தனியார் துறையின் பங்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், இலங்கையில் கடந்த ஆறு தசாப்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் விளைவாக, கல்வித்துறையில் அரசாங்கத்தின் பங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு இலங்கை உள்ளடங்கிய வளர்முக நாடுகளில் பாடசாலை மற்றும் உயர்கல்வியில் அரசாங்கத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறக் காரணம்.
அரசாங்க உதவியும் தலையீடும் இன்றி நலிவடைந்த பிரிவினர் கல்வி வாய்ப்புகளைப் பெற முடியாது என்பதாகும். இலங்கையில் அரசாங்கம் வழங்கும் இலவசக்கல்வி, புலமைப்பரிசில்கள், கிராமப்புறங்களில் விரிவான முறையில் அரசாங்கம் அமைத்துள்ள பாடசாலைகள், இலவச பாடநூல், இலவச சீருடை - இவையாவும் நலிவடைந்த கிராமப்புற, நகர்ப்புறப் பிரிவினருக்கும் தோட்டப்பகுதிப் பிள்ளைகளுக்கும் பெரிய உதவியாக அமைந்துள்ளதை மறுக்க முடியாது.
இன்று இலங்கையில் கல்வித்துறையில் தனியார் மயமாக்கத்துக்கு எதிராக முன் வைக்கப்படும் முக்கிய வாதம், அந்நடவடிக்கை நலிவடைந்த பிரிவினரின் கல்வி மேம்பாட்டுக்கு எதுவித உதவியையும் வழங்காது என்பது தான். இலங்கையில் வளர்ச்சிபெற்ற சமூகநல அரசு வழங்கிய இலவசக் கல்வி, இலவச சுகாதார வசதிகள் என்பன, நலிவுற்ற பிரிவினரும் மனித வள மேம்பாட்டுக்கான வரப்பிரசாதமாக அமைந்ததை மறுக்க முடியாது.
தற்போது இச்சமூகநல நோக்குடன் பெருமளவு நிதியை அரசாங்கம் கல்விக்கு ஒதுக்கி வருகின்றது. இது சுதந்திரகாலம் முதல் செய்யப்பட்டு வரும் உதவி. அண்மைக்காலங்களில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, போருக்கான ஆயத்தத்துக்கு ஒதுக்கப்படும் பெரிய அளவிலான நிதி என்பன கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் பல வீழ்ச்சிகள் ஏற்படக்காரணமாக உள்ளன. இது இலங்கைக்கு மட்டுமன்றி ஏனைய வளர்முக நாடுகளும் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாகும்.
அரசாங்கங்களின் கல்விச் செலவு ஒப்பீட்டு ரீதியில் தேசிய வருமானத்தினதும் அரசாங்கச் செலவினதும் எத்தனை வீதமாக இருக்கின்றது என்று பார்க்கும்போது அதில் பல வீழ்ச்சிகளைக் காணமுடியும்.
இப்புள்ளி விபரம் இலங்கையில் அரசாங்கத்தின் கல்விச் செலவு குறைந்திருப்பதையே காட்டுகின்றது. தேசிய வருமானம், அரசாங்கச் செலவு என்பவற்றுடன் கல்விச் செலவை ஒப்பிட்டுக் காணும் வீதாசாரமும் 1998 முதல் குறைந்து சென்றுள்ளது. தேசிய வருமானத்தின் வீதாசாரமாகக் கல்விச் செலவு 1998 இல் 3.1 ஆக இருந்து 2002 இல் 2.9 வீதமாகக் குறைந்தது. இதே காலப்பகுதியில் அரசாங்கச் செலவின் வீதாசாரமாக கல்விச் செலவு 8.4 சதவீதத்திலிருந்து 6.8 ஆகக் குறைந்துள்ளது.
தற்போது பல சிரமங்களுடன் கல்வித் துறைக்கு ஆண்டுக்கு 4000 கோடி ரூபா ஒதுக்கப்படுகின்றது. இவ்வாறு சிரமத்துடன் ஒதுக்கப்படும் அரசாங்க நிதியும் கல்விக்கான வெளிநாட்டு உதவிகளும் எக்கல்வி நிலைக்குப் பிரதானமாகச் செலவிடப்படல் வேண்டும்? பல்வேறு கல்வி நிலைகளில் எந்நிலைக்கு நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்? என்ற முக்கிய வினாக்கள் எழுகின்றன.
முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய கல்விநிலை இதுதான் என எவ்வாறு முடிவுசெய்ய முடியும்? குறிப்பிட்ட கல்விநிலைக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமாயின் அக்கல்வி நிலை சமூகத்துக்கும் தனி மனிதனுக்கும் அதிக அளவிலான பயனைத் தருவதாக இருத்தல் வேண்டும். இப்பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி சமூகத்துக்கும் தனி மனிதனுக்கும் அதிக பலனை அளிக்கக் கூடிய கல்வி நிலையைத் தெரிவு செய்வது தான். அவ்வாறு தெரிவு செய்யப்படும் கல்விநிலைக்கு நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கினால் இப்பிரச்சினை தீர்கின்றது என்பது கல்வியின் சமூக விளைவுகள் பற்றியும் தனியாள் விளைவுகள் பற்றியும் ஆராய்பவர்களின் கருத்தாகும்.
இவ்வாறு கல்விமுறையைத் திட்டமிட முனைந்தவர்கள், தாம் எதிர்நோக்கிய இந்த நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளக் கையாண்ட வழிமுறைதான் விளைவு வீத அணுகுமுறையாகும். (Rate of Return Approach)
இலங்கையில் கல்வியின் மீது இடப்படும் முதலீடு பல நன்மைகளைத் தரும் என பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. அவையாவன:
- பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்தல்;
-இரு சமூக தலைமுறையினருக்கிடையில் சமூக நகர்வை ஏற்படுத்துதல்;
-உழைப்பாளரின் உற்பத்தித் திறனையும் சம்பாத்தியத்தையும் கூட்டுதல்;
-உடல் ஆரோக்கியமான செல்வம்மிக்க சமூகத்தை உருவாக்குதல்;
இவற்றோடு ஆய்வாளர்கள் கல்வியின் மீதான முதலீட்டினால் இரு சமூக நன்மைகளையும் (Returns) எதிர்பார்த்தனர்.
-வினைத்திறன் மற்றும்
-சமூக நியாயத்தில் ஏற்படும் முன்னேற்றங்களே அவையாகும்.
இலங்கையில் உலகவங்கி செய்த இவ்விளைவு வீதம் தொடர்பான ஆய்வுகள் பல முக்கிய முடிவுகளைத் தந்துள்ளன. இவை எக்கல்வி நிலைகள் சமூகப்பயனையும் தனியாருக்கான நன்மையையும் வழங்குவன என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
ஆண்களின்
(1) பல்கலைக்கழக கல்வியினால் 11 சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மையை விட கட்டாயக் கல்வி நிலையும் 15 சிரேஷ்ட இடைநிலைக் கல்வியும் 20 சமூகத்துக்கு வழங்கும் நன்மை, பயன் அதிகமானது.
(2)பெண்களும் கட்டாயக் கல்வியினால் பயனடைகின்றனர். (20). பல்கலைக்கழகக் கல்வி, சிரேஷ்ட இடைநிலைக் கல்வி என்பவற்றால் பெண்கள் பெறும் சமூகப் பயன்குறைவு (முறையே 10, 18)
இவ்விரண்டு ஆய்வு முடிவுகளும் ஒப்பீட்டு ரீதியில் பல்கலைக்கழகங்களின் சமூக நன்மை குறைவானது என்பதையே வலியுறுத்துகின்றன. அத்துடன், பல்கலைக்கழகக் கல்வி நிலையை விட கட்டாயக் கல்வி நிலையே அதிக அளவு சமூகப் பயனுடையது என்பதையே உலக வங்கியின்
2002 ஆம் ஆண்டின் இலங்கை ஆய்வு எடுத்துக் காட்டுகின்றது.
இலங்கையில் (2002) செய்யப்பட்ட இந்த ஆய்வு ஏறத்தாழ 1973, 1980 களில் செய்யப்பட்ட பல உலகளாவிய ஆய்வு முடிவுகளை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டுகளில் Psacharopoulos என்ற ஆய்வாளர் இவ்வாய்வை 60 நாடுகளில் செய்து கல்வியின் விளைவு வீதத்தைக் கணித்தார். அவருடைய ஆய்வின்படி வளர்முக நாடுகளில் கல்வியின் விளைவு வீதம் பின்வருமாறு அமைந்தது:
கல்விநிலை விளைவு%
ஆரம்பக்கல்வி 27%
இடைநிலைக்கல்வி 16%
உயர்கல்வி 11%
இவ்வாய்வு முடிவுகளை ஏறத்தாழ ஒத்ததாக இலங்கையின் ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளன.
இவ்வாய்வுகளின் பின்புலத்தில், இவ்வாய்வு முடிவுகளை ஆதாரமாகக் கொண்டு நோக்குமிடத்து "கல்வி முதலீட்டைப் பொறுத்தவரையில் ஆரம்பக்கல்விக்கே அதிக முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்;
அத்தோடு உயர்கல்வியின் சமூகப் பயன்குறைவு என்பதால், அதன் மீது அதிக அளவு மானியங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வு முடிவுகள் உயர்கல்வியின் வளர்ச்சிக்குச் சாதகமாக இல்லை என்பதோடு அக்கல்வி நிலையை ஊக்குவிக்கவில்லை.
இத்தகைய, ஆய்வுகள் இலங்கை போன்ற நாடுகளில் ஒரு கட்டுப்பாடான, வளர்ச்சி குன்றிய உயர்கல்வி நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன. ஆரம்பக்கல்வி வயதினரில் சேர்வு வீதம் 100 என்றால் உயர்கல்வி வயதினரின் சேர்வு வீதம் (பல்கலைக்கழகத்தில்) இன்று 3 ஆக மட்டுமே உள்ளது.
வேலையில்லாதவர்களின் பட்டியலைப் பார்த்தால் அவர்களில் உயர்கல்வி படித்தவர்கள் அதிகம்; ஆரம்பக்கல்வி பயின்றவர்கள் வீதம் குறைவு.
அண்மைக்காலத்தில் 40,000 பட்டதாரிகள் வேலையற்று இருந்த நிலையில் அவர்களுடைய சமூக விளைவு குறைவாக இருந்திருப்பதில் ஆச்சரியமில்லை. சுதந்திரம் பெற்றது முதல் தொடர்ந்து பதவி ஏற்ற அரசாங்கங்கள் பல்கலைக்கழகக் கல்வியின் விரிவினைக் கட்டுப்படுத்தி வந்துள்ளமைக்கு அக்கல்வி நிலையின் குறைந்த சமூக நன்மை ஒரு காரணமாக இருக்கலாம். ஆண்டுதோறும் வெளியேறும் 9000 பட்டதாரிகள் உடனடியாக வேலையின்மைப் பிரச்சினையைப் பலகாலங்களுக்கு எதிர்நோக்குகின்றனர். தாங்கள் உருவாக்கிய பட்டதாரிகளைத் தாங்களே மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அரசின் மீது உண்டு. அரச பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் பட்டதாரிகளுக்கு அது தெரியாது, இது தெரியாது (ஆங்கில, தகவல் தொழில்நுட்பம்) என்பதால் அவர்கள் வேலைகளில் அமர்த்தப்பட முடியாதவர்கள் (Unemployable) என்ற கருத்தைச் சில அதிகார தரப்பினரே தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இவ்வாய்வுகள் உயர்கல்வியின் சமூக பயனைக் குறைத்தும் ஆரம்பக்கல்வியின் பயனை அதிகமாகவும் மதிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்கள் உயர்கல்வியின் விரிவுக்கு ஆதரவளிப்பதில்லை. இலங்கை போன்ற வளர்முக நாடுகள் தமது பற்றாக்குறையான நிதியை ஆரம்பக் கல்வியில் செலவிடுவது பயனுடையது என்பது உலக வங்கியின் ஆலோசனைகளின் அடிப்படையானது.
"ஆரம்பக்கல்வியில் மேலும் அதிகளவு நிதியை முதலீடு செய்யுங்கள்; இதற்காக, பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கும் நிதியைக் குறைத்தாலும் ஆட்சேபனையில்லை" என்ற முறையில் உலக வங்கியின் ஆலோசனைகள் அமைகின்றன.
இன்று சார்பளவில் இலங்கையில் ஆரம்பக்கல்வி அடைந்திருக்கும் வளர்ச்சிக்கும் (சேர்வு வீதம் ஏறத்தாழ 100%) பல்கலைக்கழகக் கல்வி அடைந்திருக்கும் வீழ்ச்சிக்கும் (சேர்வு வீதம் 3% மட்டுமே) இவ்வாறான கல்விநிலைகள் தொடர்பான விளைவு வீத ஆய்வு முடிவுகளின் செல்வாக்கே காரணம் எனலாம். சுருங்கக்கூறின், இந்த ஆய்வு முடிவுகள் பல்கலைக்கழகக் கல்வியை விட கட்டாயக் கல்வி நிலையே சார்பளவில் சமூகப் பயனுடையது என்பதை வலியுறுத்துகின்றன. இந்த ஆய்வுமுறைகள் எப்படிப்பட்டவை? அவை பற்றிய விமர்சனங்கள் எவை? என்னும் விடயங்கள் தனியாக நோக்கப்பட வேண்டியவை.