இலங்கையின் தரைத்தோற்ற அம்சங்கள்
இலங்கை இந்துசமுத்திரத்திலுள்ள ஒரு தீவாகும். இது இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்கே அமைந்துள்ளதுடன், 65,525 சதுரகி.மீ நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. தீவின் நீர்ப்பரப்பு தவிர்ந்த 62,336 சதுரகி.மீ காணப்படுகிறது. இது வட அகலாங்கு 6 – 10 இடையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 – 82 இடையிலும் அமைந்துள்ளது. இதன் உயர்ந்த பட்ச நீளமாக தெய்வந்திரமுனை தொடக்கம் பருத்தித்துறை வரை 432 கி.மீ.உம், அதிகபட்ச அகலமாக கொழும்பிலிருந்து சமனகந்த வரை 224 கி.மீ உயரமாகவும் உள்ளது. தண்ணீர்த்துளி வடிவத்தினையுடைய இலங்கையானது அதன் ஆச்சரியமூட்டும் தரைத்தோற்ற அம்சங்களை நிறைந்து கொண்டுள்ளதுடன், உலகிலேயே மிக இயற்கை அழகுள்ள இடமாகவும் மாற்றுகின்றது. துலாம்பரமாக தெரியும் உயர வேறுபாடுகளினால் மத்திய மலைநாடு, சமவெளி, கரையோர நிலைம் என்ற மூன்று வலயங்களைக் கொண்டுள்ளது.
கரையோர ஒடுங்கிய நிலையமானது தீவைச் சூழ்ந்துள்ளதுடன் மணற்கடற்கரைகளையும், கடனீரேரிகளையும் கொண்டுள்ளது. சிறந்த கடற்கரையோரமாக தென்கரையோரமாகவும், தென்மேற்கு கரையோரமாகவும், கிழக்குகரையோரமாகவும் உள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கில் கரையோரமானது பளிங்குப்பாறைகள், செங்குத்துப்பாறைகள், விரிகுடாக்கள் மற்றும் கரைக்கு கிட்டிய தீவுகளின் பல்வேறுபட்ட பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன், வடகிழக்கு கரையோரத்தில் திருகோணமலையானது உலத்தில் சிறந்த இயற்கை துறைமுகத்தை உருவாக்குகின்றது.
அத்துடன் தென்மேற்கிலே காலியில் சிறிய பாறைத்துறைமுகமும் உள்ளது. வடமேற்கிலே மன்னார் தீவானது பிரதான நிலத்தை ஒரு பாலம் மூலம் இணைக்கிறது. ஆதாம் பாலாமாக என அழைக்கப்படும் இது சிறுதீவுகளையும், மணற்திட்டிகளையும் கொண்ட நீண்ட சங்கிலித்தொடராக தென்னிந்தியாவுடன் இணைப்பை ஏற்படுத்துகிறது.
இலங்கையின் ஆறுகள் மத்திய மலைநாட்டில் சிவனொளிபாதமலைக்கு அண்மையில் உருவாகி ஒடுங்கிய அகன்ற பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளிகளின் ஊடாக பாய்ந்து இறுதியாக திருகோணமலைக்கு அண்மையில் கடலைக் கலந்து மலைச்சரிவு, நீர்வீழ்ச்சி ஆழ பள்ளத்தாக்குகள் போன்ற தரைத்தோற்றங்களை உருவாக்கி சென்று கடலைக் கலக்கிறது. அநேகமான ஆறுகள் குறுகியனவாகவும், தொடர்ச்சியற்ற சமவெளிகளால் அடிக்கடி குறுக்கிடப்படுவனவாகவும் உள்ளன.
இலங்கையின் மிக நீளமான நதி மகாவலி கங்கையாகும். இதன் நீளம் 335 கி.மீற்றர்கள். ஆற்றின் மேற்பகுதியானது கடுமையானதாகவும் ஆழம் அகலம் காண முடியாததாகவும் அதன் கீழ்ப்பகுதியானது காலத்திற்கு காலமான வெள்ளங்களை கொண்டு செல்வதாக உள்ளது. இவ்வாறானது இயற்கை மழைவீழ்ச்சி குறைவாக உள்ள வடகிழக்கு பிராந்தியத்தில் நீர்ப்பாசன முறைமைக்கு தேவையான மிக முக்கியமான நீரை வழங்குகின்றது.