இலங்கையின் கரையோர சூழற் பிரச்சனைகள்
இந்துசமுத்திர பரப்பில் ஒரு இயற்கை அமைப்பினையும் பார்பவர்களினை மிக எளிதில் கவரக்கூடியதுமான ஒரு அழகிய தீவாக இலங்கை காணப்படுகின்றது. இது வடஅகலாங்கு 5-10 பாகை வரையிலும் கிழக்கு நெட்டாங்கு 79-82 பாகை வரையிலும் அமைந்து காணப்படுகின்றது. இலங்கையின் கரையோர நீளம் 1340 கிலோமீட்டர் ஆகும். இங்கு 13 கரையோர மாவட்டங்கள் காணப்படுகின்றன.
அவையாவன
- கொழும்பு-31.2 கிலோமீட்டர்
- கம்பஹா-34.3 கிலோமீட்டர்
- களுத்துறை-34.3 கிலோமீட்டர்
- காலி-79.3 கிலோமீட்டர்
- முல்லைத்தீவு-66.8 கிலோமீட்டர்
- அம்பாறை-118 கிலோமீட்டர்
- புத்தளம்-241.3 கிலோமீட்டர்
- மாத்தறை-51.2 கிலோமீட்டர்
- அம்பாந்தோட்டை-145.5 கிலோமீட்டர்
- யாழ்ப்பாணம்-336.6 கிலோமீட்டர்
- மன்னார்-173.4 கிலோமீட்டர்
- மட்டகளப்பு- 120.6 கிலோமீட்டர்
- திருகோணமலை-83.9 கிலோமீட்டர்
இவ்வாறான கரையோரத்தினை கொண்ட இலங்கையில் பல்வேறு வகையிலான கரையோர சூழல் சார் பிரச்சனைகள் எழுந்துள்ளன. குறிப்பாக கரையோரத்தில் கட்டிடடங்களினை அமைத்தல், கண்டல்தாவர அழிப்பு, முருகைக்கல் அகழ்வு,மண் அகழ்வு, கழிவுநீர் கரையோரத்தில் சேருதல், சட்டவிரோத மீன்பிடிநடவடிக்கை, எண்ணெய் கசிவுகள் கடலில் சேருதல், சுற்றுலாத்துறை விருத்தி போறவற்றினை கூறிக்கொள்ளலாம்.
இன்று இலங்கையில் அபிவிருத்தி எனும் போர்வையில் கரையோரப்பகுதிகளில் கட்டிடடங்களினை அமைக்கின்றனர். குறிப்பாக கைத்தொழிற்ச்சாலைகள், பிராந்திய திடட்டமிடல் தொடர்பான கட்டிடங்கள், விடுதிகள், குடியிருப்புக்கள் முதலானவற்றினை அமைப்பதன் மூலம் அவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் கடற்கரைப்பகுதிகளில் நிறைந்து கரையோர சூழலானது மாசடைகின்றது. அதுமட்டுமல்லாமல் கடற்கரையோரத்தில் இவற்றினை அமைப்பதனால் கரையோரத்தில் காணப்படும் எல்லை அளவுகளில் மாற்றத்தை தோற்றுவிக்கின்றன.
உ+ம்:இலங்கையில் 2012ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பாரிய கொழும்பு துறைமுக நகர திட்டமிடல் அபிவிருத்தி மூலம் அதிகளவிலான இரும்புக்கழிவுகள், வெளியேறும் கழிவுநீர், ஏனைய திண்மகழிவுகள் கடற்கரை பகுதியில் சேருகின்றமையினால் கடற்கரையோர சூழலானது மாசடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
உ+ம்:காலிமுக திடலுக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள பிரதான விடுதிகளின் மூலம் வெளியேறுகின்ற கழிவுநீரானது காலிமுகத்திடலில் வந்து சேருகின்றது. இதனால் கரையோர பகுதியானது மாசடைகின்றது.
உ+ம்:இதுதவிர யாழ்ப்பாணம், மட்டகளப்பு, அம்பாறை, திருகோணமலை, ஆகிய பகுதிகளில் எழுப்பப்படும் கரையோர கட்டிடடங்களினால் கரையோர சூழல்சார் பிரச்சனைகள் தோற்றம் பெறுகின்றன.
கண்டல்தாவர அழிப்பினை எடுத்துக்கொண்டால் இலங்கையில் கட்டிடங்களினை அமைக்கும் முகமாக கண்டர்தாவரங்களினை அழிக்கின்றனர். குறிப்பாக இக் கண்டற்தாவரங்கள் கரையோர அரிப்பினை தடுப்பதற்காக உதவுகின்றன. இவ்வாறான கண்டல் தாவரங்கள் இலங்கையில் 8687கிலோமீட்டர் பரப்புகளில் காணப்பட்டது. இன்று கரையோரத்தில் கட்டிட அமைப்பு மற்றும் மீன்பிடி உபகரணம், வலைகளினை அமைப்பதற்காக, விறகுக்காக, பசளை உற்பத்திகளுக்காக, மருந்து பொருள் உற்பத்திக்காக அழிக்கப்படுகின்றது. இதனால் அலைகளினை கட்டுபடுத்த முடியாத சூழ்நிலை உருவாகின்றது. இதன்போது கடலரிப்பு எனும் சூழற்பிரச்னை மேற்கிளம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
உ+ம்: இலங்கையில் புத்தளம், கற்பிட்டி, கரையோரப்பகுதி, மடடகளப்பு வாவிபகுதி, வாழைச்சேனை ஆகியவற்றில் இறால் வளர்ப்பு நடவடிக்கைகளுக்காக கண்டல் தாவரங்கள் அழிக்கப்படுகின்றன.
உ+ம்:மட்டகளப்பு, நீர்கொழும்பு, பூநகரி, கௌதாரி முனை ஆகிய பகுதிகளின் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கண்டல் தாவரங்கள் அளிக்கப்படுகின்றன.
முருகைக்கல் அழிவினை எடுத்து நோக்கும்போது இலங்கையில் முக்கிய கரையோர சூழற்பிரச்சனையாக காணப்படுகின்றது. குறிப்பாக மீன்பிடித்தொழில், சுற்றுலாத்துறை விருத்தி, போர்நடவடிக்கை, சட்டவிரோத முருகைக்கல் அகழ்வு, கைத்தொழில் போன்ற செயற்பாடுகளின் காரணமாக அழிவடைகின்றன. இவ்வாறான இயற்கை வளமானது அழிவடைவதன் மூலம் மீனின்களின் இனப்பெருக்கம், இருப்பிடம் தடைபடுகின்றது. இதனால் இலங்கையின் மீன்னுற்பத்தி பாதிப்படைகின்றது.
உ+ம்: இலங்கையில் அம்பலாங்கொடை, தெவிநுவர, கற்பிட்டி, சிலாபம், ஹிக்கடுவை, மாத்தறை, தாங்கலை, மட்டகளப்பு, நீர்கொழும்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம்,மன்னார் ஆகிய பகுதிகளில் மேற்கூறப்பட்ட செயற்பாடுகள் காரணமாக முருகைக்கற்கள் அழிவடைகின்றது.
இலங்கையின் கரையோர சூழல்சார் பிரச்சனையில் ஒன்றாக மண்ணகழ்வு காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் கட்டிடங்கள் அமைத்தல், விடுதிகள் அமைத்தல், கைத்தொழிற்ச்சாலைகள் அமைத்தல் கரையோர அபிவிருத்தி திட்டங்கள் போன்றவற்றின் காரணமாக மண்ணகழ்வு ஏற்படுகின்றது. இதன்காரணமாக கால ஒடடத்தில் மண்ணரிப்பும் ஏற்படுகின்றது. இது இன்று முக்கிய பிரச்சனையாக காணப்படுகின்றது.
உ+ம்: 2012ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர திட்டம் காரணமாக திக்கொட்ட , நீர்கொழும்பு பகுதியில் மண்ணகழ்வு நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகள் சூழற்பிரச்சனைகள் எழுந்துள்ளன. மற்றும் மட்டகளப்பில் ஒத்தாச்சிமடம் முதல் வாகரை வரை 120கிலோமீட்டர் வரை மண்ணகழ்வு நடைபெறுகின்றது.
உ+ம்:நகராக்க செயற்பாடுகள் காரணமாக காலியில் 20%ம் , மாத்தறையில் 20%ம், களுத்துறையில் 20%ம், கொழும்பில் 9%ம் மண்ணரிப்பு ஏற்படுகின்றது.
கழிவுநீர் கடற்கரை பகுதிகளில் சேர்வதனால் கடற்கரையோர சூழலானது மாசடைகின்றது. குறிப்பாக வீட்டுக்கழிவுகள், கைத்தொழிற்ச்சாலைகள், வைத்தியசாலை கழிவுகள், விடுதிகளின் கழிவுகள் போன்றவற்றால் ஏற்படும் கழிவுநீரானது கரையோர சூழல் மாசடைவதோடு கடல்நீரும் மாசடைகின்ற நிலை காணப்படுகின்றது.
உ+ம்: யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை கழிவு நீரானது பண்ணை கடலில் இணைகின்றதால் அப்பகுதி மாசடைகின்றது. மற்றும் தெஹிவளை கல்கிசை பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது களணிக்கங்கை மூலம் இணைந்து கடலில் செருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினை எடுத்துக்கொண்டால் கடலில் மீனவர்கள் டைனமைட் வெடி போடுதல், வெடிகுண்டுகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதனாலும், நஞ்சூட்டபட் ட வலைகளினை உபயோகிப்பதனாலும் மீன்கள் இறப்பதோடு மட்டுமல்ல கடலில் சிறுசிறு அதிர்வுகள் ஏற்படுதல், பிளான்தன்கள், முருகைக்கற்கள் அழிவடைதல் போன்ற சூழல்சார் பிரச்சனைகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உ+ம்: இலங்கையில் கரையோர பகுதியில் இருக்கும் கடற்பகுதியினர் டுவேல் வலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கரையோரசூழல் பிரச்சனைகளில் ஒன்றாக எண்ணெய் கசிவுகள் கடலில் சேருகின்றமையினை குறிப்பிட்டு கொள்ளலாம். தொழிற்ச்சாலை மூலம் வெளியேறிய கசிவுகள், கழிவு எண்ணெய் தாங்கிகளினை கழிவகற்றல், கப்பல் திருத்துதல், விபத்துகள், போர்நடவடிக்கைகள் காரணமாகவும் கடலில் எண்ணெய் கசிவுகள் ஏற்படுகின்றன. இதனால் மீனினங்கள் இறத்தல், பிளான்தன்கள், இறத்தல் போன்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றது.
உ+ம்: கடந்த 2006ம் ஆண்டு வடக்கு பகுதியில் ஏற்பட்ட போர்சூழல் நடவடிக்கை காரணமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான “டோரா”‘ கப்பல் அழிவுக்கு உட்பட்டு கப்பல் எரிந்தது. இதன் காரணமாக எண்ணெய் படலங்கள் கடல்நீரில் கலந்து கடல்வாழ் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
உ+ம்:2018ம் ஆண்டு முத்துராஜாவால எண்ணெய் களஞ்சிய தொகுதி ஊடாக மசகு எண்ணெய் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக உஸ்வவெட்ட, யா -எல, பன்கமுவ பகுதியில் கரையோரப்பகுதி பாதிக்கபட்ட்து.அத்துடன் முத்துராஜாவால பகுதியில் முருகைக்கல் பகுதியும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இன்று அதிக வருமானத்தினை ஈட்டி தருகின்ற துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது. இதனால் கரையோரத்தில் விடுதிகள் அமைத்தல், கடற்கரையினை செழிப்புற வைத்தல் போன்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இதனால் சுற்றுலாப்பயணிகள் மூலம் கொண்டு வரும் பொருட்கள், பழைய பொலிதீன்கள், போத்தில்கள் ஆகியவற்றினை அவர்கள் கடற்கரை பகுதிகளில் வீசுவதனால் கரையோர பகுதிகளில் சூழல் மாசடைதல் ஏற்படுகின்றது.
உ+ம்:யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டகளப்பு, காலி, கொழும்பு, மன்னார் ஆகிய பகுதிகளை கூறிக்கொள்ளலாம்.
மேற்ககூறபடவாறு இலங்கையின் கரையோர சூழல் சார் பிரச்சனைகள் காணப்படுகின்றது.