Type Here to Get Search Results !

முகாமைத்துவ சேவை - உத்தியோகத்தர் சேவை சிறு விரிவாக்கம்

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை


பதவியணியினர்-35500

ஆட்சேர்ப்பு

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு III இற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதுடன், அவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவது இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் சார்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்படுகின்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் தகைமைகளை பரீசீலனை செய்வதற்கான நேர்முகப் பரீட்சையில் தகைமை பெறுகின்றவர்கள் மாத்திரமாகும். முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு III இல் காணப்படுகின்ற மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கையில் 70% திறந்த அடிப்படையிலும், 30% இற்கு மேற்படாதவாறு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் ஆட்சேர்ப்புச் செய்யப்படும்.

விண்ணப்பித்தல்

அரசாங்க வர்த்தமானியில் பரீட்சை அறிவித்தல் வெளியிடப்படுவதன் ஊடாக ஆட்சேர்ப்புக்கான பரீட்சைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய முறை பற்றி தகவல்கள் வெளியிடப்படும்.

சேவைக்கான ஆகக் குறைந்த தகைமைகள்

திறந்த அடிப்படையிலானது:

இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்
விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இறுதித் திகதியில் 18 வயதுக்கு குறையாதவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்
ஆகக் குறைந்த கல்வித் தகைமைகள் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, கணிதம் மற்றும் வேறு இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு பாடங்களில் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்

க.பொ.த. (உ.த.) பரீட்சையில் பொது விடயப் பரீட்சை தவிர்ந்த சகல பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல்.

மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலானது:

அரசாங்க சேவையின் நிரந்தர கனிஷ்ட ஊழியராக இருத்தல் வேண்டும்
உரிய திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனத்தின் கீழ் தொடர்ச்சியாக 5 வருட திருப்திகரமான சேவைக் காலத்தை பூர்த்தி செய்திருப்பதாக உரிய திணைக்களத் தலைவர் உறுதி செய்தல் வேண்டும்.

2001.11.26 ஆம் திகதிக்கு பின்னர் சேவையில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள கனிஷ்ட ஊழியர்கள், மொழி / இலக்கியம் மற்றும் கணிதம் உள்ளடங்களாக ஆறு பாடங்களில் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad