Type Here to Get Search Results !

இலங்கையின் ஆறுகள்

இலங்கையின் ஆறுகள் 

இலங்கையின் ஆறுகள் நாட்டின் மத்திய உயர்நிலத்தில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கின்றன. 1959 ஆண்டு ஆய்வொன்றின் படி இலங்கையில் மொத்தம் 103 ஆறுகள் காணப்படுகின்றன. இவற்றுள் 10 ஆறுகள் முக்கியமானவையாகும். மகாவலி கங்கை மிக நீளமான ஆறாகும். இலங்கையின் முக்கிய ஆறுகளில் கலா ஓயா மாத்திரமே உயர்நிலமல்லாத குளம் ஒன்றில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இலங்கையின் ஆறுகளில் களு ஆறு, களனி ஆறு, ஜின் ஆறு, நில்வல ஆறு, மகாவலி கங்கை என்பன வெள்ளப்பெருக்கு அபாயத்துக்கு உட்பட்டவையாக கருதப்படுகின்றன.

மகாவலி ஆறு அல்லது மகாவலி கங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். இது பீதுறுதாலகால இருந்து ஊற்றெடுத்து திருகோணமலையில் கடலில் சேர்கின்றது இது இலங்கையின் மிக நீளமான ஆறாகும், மேலும் நீரோட்டத்தின் படி முதலாவது பெரிய ஆறும் ஆகும். இந்த ஆற்று நீரைப் பயன்படுத்தி வேளாண்மையும் நீர்மின் உற்பத்தியும் பெருமளவில் நடைபெறுகிறது. சுமார் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலம் இவ்வாற்று நீரின் மூலம் பயிரிடப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மகாவலி கங்கை என்பது சிங்கள மொழியில் மணற்பாங்கான பெரும் ஆறு  எனப் பொருள் தரும். இதன் நீரேந்து பகுதியில்  சராசரியாக ஆண்டுக்கு  22282 மில்லியன் கனமீட்டர் மழை  பெய்கிறது, இதில் சுமார் 40 சதவீதமான நீர்  கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 10237 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் முதலாவது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.

இலங்கையின் முக்கிய நீர்மின் திட்டங்கள் மகாவலியை மறித்துக் கட்டப்பட்ட அணைகள் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. இவற்றில் முக்கிய நீர்மின் திட்டங்கள்:

                   ➤        மேல் கொத்மலை நீர் மின் திட்டம்

கொத்மலை அணை இலங்கையில் உள்ள மகாவெலி கங்கை ஆற்றின் துணை ஆறான கொத்மலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓர் அணை ஆகும். இவ்வணை நீர்மின் உற்பத்திக்கும், நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள நீர்மின் நிலையம் இலங்கையின் இரண்டாம் பெரிய நீர்மின் நிலையமாகும். இங்குள்ள மூன்று விசையாழிகள் மூலம் பெறப்படும் இதன் மொத்த மின்னுற்பத்தித் திறன் 201 மெகாவாட் ஆகும். சுவீடன் அரசின் நிதியுதவியுடன் பெப்ரவரி 1979 ஆம் ஆண்டு தொடங்கிய இவ்வணையின் கட்டுமானம் 1985-இல் முடிக்கப்பட்டது.

                   ➤        கொத்மலை நீர் மின் திட்டம்

                   ➤        உக்குவளை நீர் மின் திட்டம்
கொட்டும் நீரில் இருந்து நீர்மின்சாரம் பெறப்படுகின்றது. 2000 வருடங்களுக்கு முன்னர் பண்டைய கிரேக்கர்கள் தானியங்களை அரைப்பதற்காகச் சக்கரங்களைச் சுழற்ற நீரின் சக்தியினைப் பயன்படுத்தியுள்ளனர். இன்று மின்சாரப் பிறப்பாக்கத்திற்கான மிகவும் செலவுச் சிக்கனமான முறைகளில் ஒன்றாக இது இருந்து வருவதுடன் மிகவும் விரும்பத்தக்க முறையாகவும் இருந்து வருகின்றது. உலகின் பாரிய நீர்மின் ஆலையின் சக்தி 22.5 கிகாவற் ஆகும். இது சீனாவிலுள்ள Three Gorges அணைக்கட்டு என அறியப்படுகின்றது.  இது வருடத்திற்கு 80 முதல் 100 டெராவற் உற்பத்தி செய்கின்றது. இது 70 முதல் 80 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்குப் போதியதாகும்.

சிறிய அளவில் இயங்கும் நீர்மின் கருத்திட்டங்கள் தூரமான இடங்களில் வாழும் சமுதாயங்களுக்குப் பெரிய நன்மையினை ஏற்படுத்தலாம்.

நீர்மின்சாரப் பிறப்பாக்கத்தின் அடிப்படைக் கோட்பாடு டேர்பைன்களைச் சுழலச் செய்ய நீரினைப் பயன்படுத்துவதாகும். நீர்மின் ஆலைகள் இரண்டு அடிப்படையான அமைப்பினைக் கொண்டுள்ளன: அணை மற்றும் நீர்த்தேக்கத்துடன் உள்ளவை மற்றும் இவைகள் இல்லாதவை.  பாரிய நீர்த்தேக்கத்துடனான நீர்மின் அணைக்கட்டுக்கள் உச்சக் கிராக்கியினைப் பூர்த்திசெய்வதற்காகக் குறுகிய காலத்திற்கு அல்லது நீண்ட காலத்திற்கு நீரினைச் சேமிக்கக்கூடியவையாகும். இந்த வசதிகளைச் சிறிய அணைக்கட்டுக்களாக வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பிரிக்க முடியும். அதாவது நீரிறைப்பதற்காக மற்றும் மின் பிறப்பாக்கத்திற்காக இரவு அல்லது பகல் பயன்பாடு, பருவகாலப் பயன்பாடு, இறைக்கப்படும் மீளப்பெறக்கூடிய ஆலைகள். அணைக்கட்டுக்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இல்லாத நீர்மின் ஆலைகள் சிறிய அளவில் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதைக் குறிக்கின்றன என்பதுடன் பொதுவாக இவை ஆறு ஒன்றின் ஓட்டத்தினைக் குழப்பாது இயக்கப்படுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை ஆற்றின் ஓட்டத்தில் இயங்கும் கருத்திட்டங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. சிறிய அளவிலான நீர்மின் கருத்திட்டங்களைப் பலரும் சுற்றாடலுக்குத் தீங்கு விளைவிக்காத தெரிவு எனக் கருதுகின்றனர்.

நீர்மின்சாரம் இலங்கையில் மின்சார உற்பத்திக்கான பிரதான சக்தி மூலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது 1990களின் ஆரம்பப் பகுதி வரை அனேகமாக மின் தேவை அனைத்தையும் வழங்கியது என்றே கூறலாம். பாரிய நீர்மின் ஆற்றலின் பெரும்பங்கு ஏற்கனவே விருத்திசெய்யப்பட்டு நாட்டிற்குப் பெறுமதிமிக்க குறைந்த செலவிலான மின்சாரத்தினை வழங்கி வருகின்றது. தற்போது உச்சக் கிராக்கிமிகு மின்சாரத்தி்னை வழங்குவதற்காகவும் அடிப்படை மின்சாரப் பிறப்பாக்கத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் நீர்மின் நிலையங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. நியமமாக்கப்பட்ட மின்சக்திக் கொள்வனவு உடன்படிக்கையின் (SPPA) கீ்ழ் நீடுறுதியான எண்ணிக்கையிலான சிறிய நீர்மின் சக்தி ஆலைகள் இயங்கிவருவதுடன் அடுத்த சில வருடங்களில் இவற்றுடன் இன்னும் பல சேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

                   ➤        விக்டோரியா நீர் மின் திட்டம்

                   ➤        இரந்தெனிகலை நீர் மின் திட்டம்
                   ➤        இரந்தம்பை நீர் மின் திட்டம்
                   ➤        போவதன்னை நீர் மின் திட்டம்
                   ➤        உக்குவளை நீர் மின் திட்டம்

இவற்றுக்கு மேலதிகமாக பல நீர்பாசனத் திட்டங்களும் அவற்றில் அமைக்கப்பட்டுள்ளன:

மினிப்பே

மினிப்பே இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவாகும்.மினிப்பே என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. 

இலங்கையின் நீண்ட ஆறான மகாவலி கங்கையின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்துக்கு அருகில் மகாவலி கங்கையின் நீரை விவசாயத்துக்காக திசைதிருப்பும் மினிப்பே அணைக்கட்டு இங்கு அமைந்துள்ளது. இதில் இருந்து மகாவலி வலதுகரை கால்வாய் ஆரம்பிக்கிறது. 

மினிப்பேக்கு அருகே இலங்கையின் பெரிய நீரைக்கொண்டுச் செல்லும் நீர்ப்பாலம் அமைந்துள்ளது. இதனைச் சூழவுள்ள பெரும்ப்பாலான பிரதேசங்கள் அதியுயர் பாதுகப்பு வலயமாகவோ வனவிலங்கு சரணலாயமாகவோ காணப்படுகிறது.

பொல்கொல்லை
உல்கிட்டிய/ரக்கிந்தை
மாதுரு ஓயா

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad