Type Here to Get Search Results !

இலங்கையில் வரலாற்றுக்காலம்..

இலங்கையில் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் (125000) ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மனிதன் வாழ்ந்திருந்தான்.



இந்து சமுத்திரத்தை கடந்து வந்து  பிளைத்தோசீன் எனப்படும் மனித ஊழியக் காலத்தில் ஹோமோசேப்பியன் என்னும் நவீன மனிதன் நாட்டின் நாலா பக்கங்களிலும் பரவி வாழ்ந்து வந்துள்ளான். 

இலங்கையில் மானிட வாழ்க்கை வரலாறுஇ தொழிநுட்பம் இ வாழ்க்கை முறை என்ற அடிப்படையில் மூன்று கால கட்டங்களாக வகுக்கப்படுகின்றது.
                     1.வரலாற்றுக்கு முற்பட்டகாலம் 
                     2.முன் வரலாற்றுக்காலம்
                     3.வரலாற்றுக்காலம்   என எடுத்து நோக்கப்படுன்றது.

                                   வரலாற்றுக்கு முற்பட்ட காலம் 

    அறிமுகம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது எழுத்து மூலாதாரங்கள் அன்றி ஆவணப்படுத்தப்பட்ட மூலாதாரங்கள் அன்றி தொல் பொருட் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு வரலாறு கணிக்கப்பட்ட காலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ஆகும். 

ஏறத்தாழ (கி.மு 125000 – 1800) வரையான காலம் ஆகும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது நீண்ட காலம் நிலைத்திருந்த கற்காலம் ஆகும்.

இலக்கிய மூலாதாரங்களில் குறிப்பிடப்படும் புராதன காலத்திற்கு முன்னைய காலம் பொதுவாக வரலாற்றுக்கு  முற்பட்டகாலம்  எனப்படுகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் பற்றி  நோக்குகையில் 
   ➤   குடியேற்றங்களின் பரம்பல்
   ➤   வரலாற்றுக்கு முற்ப்பட்ட கால இலங்கையில் மனிதன் வாழ்ந்த இடங்கள்
   ➤   காலநிலை வலயங்களில் குடியிருப்புகளின் பரம்பல்
   ➤   வரலாற்றுக்கு முற்பட்ட கால கட்டங்கள்
   ➤   குடியிருப்புக்களின் அடிப்படை இயல்பு
   ➤   வாழ்க்கை முறை
   ➤   உணவூ ப்பழக்கம்
   ➤    எழும்பு கூடுகள்
   ➤   தொழில்நுட்பம்
   ➤  மனிதனின் உடலமைப்பு
   ➤  சடங்கு சம்பிரதாயமுறை   போன்ற அடிப்படையில் நோக்கலாம். 

குடியேற்றங்களின் பரம்பல் இலங்கையில் ஆதி மனிதன் ஹோமோசேப்பியன் இன மனிதனே முதலில் குடியேறியூள்ளான்
வேட்டையாடுதல்இ இடத்துக்கிடம் நகர்ந்து உணவூ சேகரித்தல் என்பன பிரதான ஜீவனோபாயமாக காணப்பட்டது.

இலங்கையில் ஆதி மனிதன் ஹோமோசேப்பியன் இன மனிதனே முதலில் குடியேறியூள்ளான்
வேட்டையாடுதல்இ இடத்துக்கிடம் நகர்ந்து உணவூ சேகரித்தல் என்பன பிரதான ஜீவனோபாயமாக காணப்பட்டது.

 ➤  இலங்கையில் கற்காலத்திற்குரிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகின்ற இடங்களாக 
1. இரத்தினபுரி  
2. இரணைமடு  
கற்காலத்திற்குரிய கல்லாயூதம் கிடைக்கப்படுகின்றது.
இரத்தினபுரி இரணைமடுப் படிவூகளை பிளைத்தோசீன் என்னும் புவியியற் காலத்திற்குரியதாகும்

               இரத்தினபுரி படிவூ

 ➤  கற்காலத்திற்குரிய முதலாவது ஆதாரம் கிடைக்கப் பெற்ற இடமாக இரத்தினபுரி மற்றும் அதன் அயற் சூழலில் அமைந்துள்ள இரத்தினக்கல் சுரங்கமாகும் 

 ➤  இரத்தினபுரி படிவூ பிளைத்தோஸின் என்னும் புவியியற் காலத்திற்கு உரியதாகும்.

 ➤  சுமார் 90 அடி ஆழத்தில் இரத்தினக் கனிய படிவூகளில் காணப்படும் சரளைக் கற்களுடன் கூடிய மண் படைகளில் மிகப் புராதன காலத்தில் வாழ்ந்த 
   மனிதன் பயன்படுத்திய கல்லாயூதங்கள் 
   இல்லாது அழிந்து போன என்புக்கூடுகள் 
   என்பன பிளைத்தோஸின் காலத்திற்கு ஏற்றவையாக காணப்படுகின்றன

              இரனைமடு படிவூ

 ➤  பெரும் பனிக் காலத்தில் பூமியில் பெரும் மாற்றங்கள் இடம் பெற்றது கடற்கரையிலிருந்து 32 கிலோமீற்றர் தூரம் வரை நாட்டின் உட்பிரதேசத்தில் தாழ் நில படிவூகள் படிந்துள்ள மண்படையினைக் காணமுடிகின்றது. அது இரணைமடுப்படிவூ என அழைக்கப்பட்டது.

 ➤  இம்மண்படிவூ முதன் முதலாக இரணைமடுக் குளத்தின் சூழலிலே கண்டு பிடிக்கப்பட்டது.

 ➤  வரலாற்றுக்கு முந்திய கால கல்லாயூதங்கள் புதைக்கப்பட்டுள்ளது.

➤  இரணைமடுப் படிவூகளில் கற்காலத்திற்குரிய கல்லாயூதம் கிடைக்கப்படுகின்றது.

 ➤  இலங்கையில் அதிவறண்ட வலய நிலத்தடியில் களிமண்ணுடன் கூடிய மணல் மண்ணிணால் மூடப்பட்டுள்ள சரளைக் கற்படிவூகள் காணப்படுகின்றன இதனை தொல்பொருளாளர்கள் இரனைமடுப் படிவூ என அழைத்தனர் 

 ➤  இரணைமடுப் படிவூகளை பிளைத்தோசீன் யூகத்தின் சிறு உஷ்ண காலத்திலேயே நிலத்தில் புதைந்துள்ளது.

ஹோமோசேப்பிய மனிதனின் வருகை

ஹோமோசேப்பியன் என்னும் நவீன மனிதன் மனித பரிணாமத்தில் மிக முக்கியமான அடையாளம் ஆவான்.

நவீன மனித குலம் ஹோமோசேப்பியன் என்றே அழைக்கப்பட்டது.

 ➤ நவீன மனித குலத்தின் முதல் மனிதன் தோன்றியது இற்றைக்கு ஜந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாகும் (500000 - 200000) இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இவ் மனிதன் நவீன பிளைத்தோஸின் என்னும் காலப்பரப்பில் தோற்றம் பெற்றான். என தொல்லியல் ஆய்வாளர்கள் கணிப்பிடுகின்றனர்.


வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதன் இலங்கையில் வாழ்ந்த இடங்கள்

  • இரணைமடு
  • பொம்பரிப்பு
  • தம்புள்ள
  • களுதிய
  • கித்துல்கல
  • பெளிலேன அதுல 
  • பட்டதொம்பலேனா
  • இராவணா எல்ல
  • பெளிகல்ல
  • பெல்லன்பதிபெள்ளஸ்ஸ
காலநிலை வலயங்களின் குடியிருப்புகளின் பரம்பல்

  • தாழ்நில அதி வரள் வலயம்
  • தாழ்நில குறை வரள் வலயம்
  • தாழ்நில உலர் வலயம்
  • தாழ்நில இடை உலர் வலயம்
  • மலைநாட்டு இடை உலர் வலயம்
  • தாழ்நில இடை ஈரவலயம்
  • மலைநாட்டு ஈரவலயம்
  • உயர் மலைநாட்டு ஈரவலயம்

குடியிருப்புகளின் அடிப்படை இயல்பு

  1. இக்கால மனிதன் வெட்டவெளிகளிலும் கற்குகைகளிலும் வாழ்ந்தான்.      
  2. கரையோர வெட்டவெளிகள் . உதாரணம் : மினிகாகல்கந்த, புத்தல, பதிராஜவேல
  3. தாழ்நில ஈரவலய குகைகள். உதாரணம் : பாகியண்கல, பட்டதொம்பலென, கித்துல்கல, பெலிலேன
  4. தாழ்நில உலர் வலய குகைகள். உதாரணம் : சிகிரிய பொத்தான, அளிகல
  5. தாழ்நில உலர் வலய வெட்டவெளிகள். உதாரணம் : பெல்லன் பதி பெள்ளஸ்ஸ.
  6. மலையக பிரதேச வெட்டவெளிகள். உதாரணம் : பண்டாரவள, ஹோட்டன் சமவெளி.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad