Type Here to Get Search Results !

பொது அறிவு பயிற்சி வினாக்கள் - 2018

 கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் இலங்கை மாணவர்களுக்கான பொது அறிவு பயிற்சி வினாக்கள் - 2018





1. 25 வது பொதுநலவாய மகாநாடு எங்கு நடைபெறவுள்ளது?


பிரித்தானியாவின் லண்டன் நகரில்


2. கியுபாவின் கஸ்ரோ யுகத்திற்குப் பின் ஜனாதிபதி பதவி பெற்றவர் யார்? மிகுவல் டயஸ் கெனல்


3. 2018 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன? 


இந்தோனேசியாவில்


4. இந்திய அரசால் தங்க விருது கொடுத்து கௌரவிக்கப்பட்ட இலங்கையின் பிரபல சிங்கள இயக்குனர் அண்மையில் இறந்தார். அவர் யார்? 


லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்


5. தனது நீண்ட கால பகையை கைவிடுவதற்கு அறிகுறியாக எதிரிநாட்டின் நேரத்திற்கு சமமாக தனது நேரத்தை மாற்றிக் கொண்ட ஆசிய நாடு எது? 


வடகொரியா


6. 2020 இல் ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன?


யப்பானில் டோக்கியோ நகரில்


7. 2018இல் உள்ளூராட்சித் தேர்தல் எம்முறையில் நடைபெற்றது?


வட்டாரத் தேர்தல் முறை (தொகுதிவாரி 60%. விகிதாசாரம் 40%)


8. இந்தியாவின் குடியரசுத்தலைவர் யார்?


ராம் நாத் கோவிந்த்


9. மியன்மாரில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு பங்களாதேஸில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் குழுவினர் யார்?


ரோகின்யோ (Rohingya) முஸ்லிம்கள்


10. ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கிகரித்து பலஸ்தீனத்தில் வன்முறைகள் அதிகரிக்க காரணமான நாடு எது?


அமெரிக்கா


11. இலங்கையின் ராஜகிரிய மேம்பாலம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு நிதியுதவி வழங்கிய நாடு எது? 


ஸ்பெயின்


12. இரு சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் நாடு யாது? 


சீனா


13. 21வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் எங்கு இடம்பெற்றன? 


அவுஸ்ரேலியா


14. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் 4வது முறையாக 2018இல் சம்பியனான அணி யாது? 


இந்தியா


15. இலங்கையில் 2018 இல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மிகப் பெரிய நீர்ப்பாசனத்திட்டம் எது?


மொறகஹந்த திட்டம்


16. 2018இல் இலங்கையின் ஒலிம்பிக் குழுவின் தலைவராக நியமனம் பெற்றவர் யார்?


சுரேஸ் சுப்ரமணியம்


17. 90வது ஒஸ்கார் விருது பெற்ற சிறந்த திரைப்படம் எது?


The shape of water


18. 2018 இல் உலகின் முதல் பணக்ககாரர் யார்? 


ஜெப் வேசஸ் (Jeff Bezos) - அமெரிக்க நாட்டவர்


19. 2018 இல் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் எங்கு நடைபெறும்?


ரஸ்யாவின் மொஸ்கோ நகரில் 


20. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதி 2018இல் மரணமானார். அவர் யார்?


அநா மக்குவலி (Una Maccully)


21. அண்மையில் மரணமான இயற்பியலின் தந்தை எனப் போற்றப்படும் இங்கிலாந்து விஞ்ஞானி யாது?


ஸ்ரீபன் ஹாங்கிங்


22. இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் நீதியமைச்சர் யார்?


தலதா அத்துக்கோறள


23. சர்வதேச சூரியசக்தி மகாநாடு இந்தியாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்குபற்றிய நாடுகள் எத்தனை?


131


24. தனது ஆயட்காலம் முழுவதும் பதவி வகிப்பதற்கான சட்டத்தை உருவாக்கியுள்ள சீன ஜனாதிபதி யார்?


ஜி சிங் பிங்


25. அமெரிக்காவிற்கும், வட கொரியாவுக்குமான வரலாற்று சந்திப்பு 2018இல் எந்நாட்டில் இடம்பெறவுள்ளது?


சிங்கப்பூரில்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad