Type Here to Get Search Results !

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் இலங்கை மாணவர்களுக்கான பொது அறிவு பயிற்சி வினாக்கள் - 2020

 கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் இலங்கை மாணவர்களுக்கான பொது அறிவு பயிற்சி வினாக்கள் - 2020



1. தெற்காசியாவின் பெரிய தாமரைக் கோபுரம் எந்நாட்டில் காணப்படுகின்றது? இலங்கையில் 2019 செப்ரெம்பர் 19இல் சீன வங்கியின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டது. இது உலகின் 19வது உயரமுடைய கோபுரமாகும். 



2. 2019இல் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பி வைத்த எவ்விண்கலம் பழுதடைந்தது? 


சந்திராயன் 2 எனும் விண்கலத்தை அனுப்பிய போது விக்ரம் லேண்டர் எனும் கருவி பழுதடைந்தது.



3. சவுதி அரேபியாவின் ஜமால் கசுக்கி எனும் ஊடகவியலாளர் துருக்கியில் வைத்து சவுதி அரேபியத் தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சவுதி இளவரசர் யார்? 


முகமட் பில் சல்மான் 




4. 2019 இல் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்குக் கிடைத்தது?


எதியோப்பியப் பிரதமர் அபி அஹ்மத்



5. 2022 இல் ககன்யான் விண்கலம் மூலம் அனுப்பவுள்ள நாடு எது? 


இந்தியா விண்வெளி வீரர்களை விண்ணுக்கு



6. இலங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இரு றோபோக்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. அவற்றை வழங்கிய நாடு எது? 


சீனா



7. இலங்கை அமெரிக்காவுடன் கைச்சாத்திடவுள்ளதாக கூறப்பட்ட சர்ச்சைக்குரிய உடன்படிக்கை எது? அதன் தாக்கம் யாது? 


மிலேனியம் சலேஜ் - MCC உடன்படிக்கை



8. 2019இல் யப்பானின் ஜோகோஹோமா நகரில் நடைபெற்ற உலகக்கிண்ண றக்பி போட்டியில் சம்பியனான அணி எது?


தென்னாபிரிக்கா. 


2ம் இடம் - இங்கிலாந்து 


3ம் இடம் - நியுசிலாந்து. 




9. இந்தியாவில் முக்கிய நகரம் சூழல் மாசடைதல் காரணமாக பாதிக்கப்பட்டு மக்கள் வெளியே வருவது கூட தடைப்பட்டிருந்தது. அம்முக்கிய நகரம் எது? 


புதுடில்லி



10. 2019 இறுதிப் பகுதியில் சார்க் நாடொன்றின் வரைபடம் திருத்தம் செய்யப்பட்டது. அந்நாடு எது? 


28 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் கொண்டு இந்திய வரைபடம் 09 உருவாக்கப்பட்டுள்ளது.



11. 2019 நவம்பர் 16 அன்று தேர்தலில் இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவானவர் யார்?


கோத்தாபாய ராஜபக்ஷ 52.25% (69இலட்சம் வாக்குகள்) 




12. தட்டம்மை நோய் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்ட ஐரோப்பிய நாடு எது? 


ஜேர்மனி



13.13வது சார்க் விளையாட்டுப்போட்டிகள் எங்கு இடம்பெற்றன?


நேபாளம் கத்மண்டு நகரில்



14. உலக காலநிலை மாற்றத்தைப் பற்றிய மாநாடு எங்கு 2019 டிசம்பரில் நடைபெற்றது? 


ஸ்பெயினின் மட்ரிட் நகரில் இடம்பெற்றது. முன்பு சிலியில் இடம்பெற இருந்தது. 




15. உலகில் இயற்கை அனர்த்தம் ஏற்படும் நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடத்தில் உள்ளது?


6 வது இடம் 




16. 2020இல் உலக அழகித் திருமதி பட்டம் பெற்ற இலங்கையைச் சேர்ந்த பெண் யார்? கரோலின் ஜூரி



17. கொழும்பு துறைமுகத் திட்டத்திற்கான நிதி உதவியை வழங்கிய நாடு எது? 


சீனா. 269 ஹெக்டேயர் பரப்புக் கொண்ட நிலம் கொழும்புத் துறைமுகத்துடன் 2020 இல் இணைக்கப்பட்டுள்ளது.



18. இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்காக 2020இல் உருவாக்கப்பட்ட சட்டம் எது? 


இந்தியக் குடியுரிமைச்சட்டம்



19.13 வது சார்க் போட்டிகளில் இலங்கை எத்தனையாவது இடத்தைப் பெற்றது? 


3ம் இடம் (2019 இல் இடம்பெற்றது)



20. தெரேசா மே பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து ஏன் விலகினார்?


இவர் Brexit கொள்கையை நடைமுறைப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவை விலக்கிக் கொள்ள முடியாத காரணத்தால் பதவி விலகினார்.



21. பிரித்தானியாவில் 2019 டிசம்பர் 13 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று


பிரதமராகத் தெரிவானவர் யார்? 


வொரிஸ் ஜோன்சன், கென்சவேட்டிக் கட்சி சார்பாக இவர் Brexit கொள்கையை ஆதரித்தமையால் இவருக்கு வெற்றி கிடைத்தது.



22. 2019இல் Google தளத்தில் அதிகம் தேடப்பட்ட நாடு எது? 


இலங்கை. காரணம் ஏப்ரல் 21 தீவிரவாதிகளின் தாக்குதல்.



23. அதிக விமான விபத்துக்களில் சிக்கியமையால் எவ் விமானங்கள் தயாரிக்கப்படுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது?


வொயிங் 737 max விமானங்கள். இவை ரஸ்யத் தயாரிப்பு விமானங்களாகும்.



24. அமெரிக்காவின் தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இந்தியர் யார்?


சேதுராமன் பஞ்சநாதன். இவர் தமிழ் நாட்டவர்.



25. சவுதி அரேபியாவின் ஜமால் கசுக்கி எனும் ஊடகவியலாளர் துருக்கியில் வைத்து சவுதி அரேபியத் தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதற்குக் காரணமான நபர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை யாது? 


குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.



26. இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி யார்?


பிபின் றொபர்ட். கடந்த 2019 டிசம்பரில் நியமிக்கப்பட்டார். 




27. சீனாவில் மரபணு மூலம் மனிதனை உருவாக்கிய பேராசிரியர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் யார்?


Jankui 




28. ஈராக்கில் வைத்து அமெரிக்கப் படையால் சுட்டுக்கொல்லப்பட்ட ஈரானியத்தளபதி யார்? 


காசிம் சூலேமானி, இச்சம்பவம் ஈரான், அமெரிக்க மோதலாக உருவெடுத்து ரஸ்யத் தலையீட்டால் தணிந்தது.



29. இச்சம்பவம் ஈரான். அமெரிக்க மோதலாக உருவெடுத்த போது ஈரான் அமெரிக்க விமானம் என நினைத்து எந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தியது? 


MOE-737 உக்ரேன் விமானம், அதில் ஈரானியர் அதிகம் பயணித்திருந்தனர்.



30. 2020இல் சிறந்த கடவுச் சீட்டைக் கொண்ட நாடாகத் தெரிவான நாடு எது? 


யப்பான், இதில் சிங்கப்பூர், தென்கொரியா என்பன அடுத்தடுத்த இடங்களைப் பெற்றன. இலங்கைக்கு 97வது இடம் கிடைத்தது.



31. பிரித்தானிய அரச குடும்பப் பொறுப்புக்களில் இருந்து விலகிய தம்பதியினர் யார்?


இளவரசர் ஹரி மேகன் தம்பதியினர்



32. 47 ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகிய தினம் யாது? 


இவ்வறிவிப்பு 2020 ஜனவரி 31இல் லண்டன் நேரப்படி இரவு 11 மணிக்கு விடுக்கப்பட்டது. 2020 டிசம்பர் 31 முதல் தீர்மானம் நடைமுறைக்கு வரும். 




33. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் எத்தனையாவது மாநாடு செப்ரெம்பரில் காணொளித் தொழிநுட்பம் ஊடாக இடம்பெற்றது? 


2020 75வது மாநாடு. இதில் 180 நாட்டுத்தலைவர்கள் காணொளித் தொழிநுட்பம் ஊடாக உரையாற்றினர்.



34. இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட பெண் யார்? 


பிம்சானி ஜசிங்காராச்சி. இவர் சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தைச் சேர்ந்தவர்.



35. அரசியல் யாப்புச் சபைக்குப் பதிலாக தற்போதைய ஜனாதிபதி 2020 இல் உருவாக்கியுள்ள அமைப்பு எது?


பாராளுமன்ற சபை



36. உலகின் சிறந்த அழகான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்ற நாடு எது?


கொஸ்டாரிக்கா, இலங்கை 32வது இடத்தைப் பிடித்தது. 



37. 2020இல் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட கிரிக்கட் போட்டிகளில் சம்பியனான அணி எது?


பங்களாதேஸ், இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெற்றது.



38. 92 ஆண்டுகால ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஆங்கிலம் அல்லாத திரைப்படத்திற்கு 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அத்திரைப்படம் எது? 


பெரசைட் எனும் தென்கொரியத் திரைப்படம். இயக்குனர் போங் ஜோன் கோ



39. சிறந்த நடிகராக ஜோக்கர் படத்தில் நடித்த எந் நடிகருக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது? 


வாக்கின் பீனிக்ஸ்



40. கருணைக் கொலைக்கான சட்டத்தை 2020இல் அங்கீகரித்த ஐரோப்பிய நாடு எது? போர்த்துக்கல் 




41. அமெரிக்காவிற்கும், தலிபான் சமாதான தீவிரவாதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை 2020இல் எந்நாட்டில் ஆரம்பமானது? 


கட்டார்



42. இலங்கையின் புதிய மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்? 


W.D லக்ஸ்மன்



43. விம்ஸ்டெக் அமைப்பின் 2020 மாநாடு எங்கு இடம்பெற இருந்தது? 


இலங்கை



43. ரஸ்யாவில் ஒருவர் இருமுறை மட்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டம் திருத்தப்பட்டுள்ளது. அச்சட்டம் எது?


அது ஒருவர் எத்தனை முறையும் ஜனாதிபதியாக வர முடியும். 




44. pandemic என்பதன் பொருள் யாது?


உலகில் ஒரே நேரத்தில் பரவும் மருந்து கண்டுபிடிக்கப்படாத தொற்று நோயாகும். 




45. வங்க தேசத்தின் தந்தை எனப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் யார்?


அப்துல் மஜேத் எனும் இராணுவ வீரர்



46. கொரோனா எனும் கோவிட் 19 நோய்க்கான தகவல்களை சரியாக வெளியிடும் அமெரிக்க பல்கலைக்கழகம் எது?


ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் 




47. தென்னாசியாவில் 2020இல் ஏற்பட்ட சூறாவளி யாது?


Amphan - இது தாய்லாந்து பெயர்



48. அமெரிக்காவில் வெள்ளையினப் பொலிஸாரால் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்ட கறுப்பினத்தவர் யார்? 


ஜோர்ஜ் ப்லொயிட் இதனால் அமெரிக்க மட்டுமன்றி பல நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.



49. 2020இல் உலக சமாதான சுட்டியின் படி முதலிடம் பெற்ற நாடு எது? 


ஐஸ்லாந்து



50. இந்திய, சீன நாடுகளுக்கு இடையே எவ் எல்லைப் பிரச்சினையால் யுத்தம் ஏற்பட்டுள்ளது?


கால்வான் பள்ளத்தாக்கு தொடர்பான சர்ச்சை



51. உலக சுகாதார அமைப்பிற்கு அதிக நிதியுதவி வழங்கும் எந்நாடு அவ் அமைப்பில் இருந்து விலகியுள்ளது? 


ஐக்கிய அமெரிக்கா. 


காரணம் - சீனாவுக்கு ஆதரவாக இவ்வமைப்பு நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டமையாகும். 




52. இவ்வருடம் இந்தியாவின் பிரபல கிரிக்கட் வீரர்கள் இருவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். அவர்கள் யார்? 


மகேந்திரசிங் தோனி, சுரேஸ் ரெய்னா



53. இவ்வருடம் மொரிசியஸ் தீவிற்கு அருகில் விபத்துக்குள்ளான யப்பானியக் கப்பலின் பெயர் யாது? 


wakashio



54. உலக சுகாதார ஸ்தாபனத்தில் தொற்று நோய் தொடர்பான பிரிவிற்குப் பொறுப்பான விஞ்ஞானி யார்?


சௌமியா சுவாமிநாதன் 




55. அண்மையில் கொரொனாவால் மரணமாகிய முன்னாள் இந்திய ஜனாதிபதி யார்?


பிரணாப் முகர்ஜி 




56. இலங்கையின் கிழக்குக் கடலில் தீ விபத்துக்குள்ளாகிய பனாமா நாட்டு எண்ணெய் கப்பல் எது? 


M.D நியு டயமன்ட், இது இந்தியாவிற்கு சென்ற கப்பல் ஆகும். 




57. ஆபிரிக்க நாடொன்றின் கிரிக்கட் சபை ஒன்றின் மீது ஊழல் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. அந்நாடு எது?


தென்னாபிரிக்கா



58. அமெரிக்காவின் நவம்பர் 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் யார்? 


joe biden. ஜோ வைடன்




59. இலங்கையில் பிரபல நாடொன்றின் 3 பல்கலைக்கழகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அந்நாடு எது?


ரஸ்யா



61. ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எத் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க உதவி வழங்க முன்வந்துள்ளது?


ரஜகல பிரதேச தொல்பொருட்கள்



62. யப்பானின் புதிய பிரதமராக 2020இல் பதவியேற்றவர் யார்?


yoshihide Suga . ஜோசிகிட் சுகா, 2020 செப்ரெம்பரில் தெரிவு



63. 2020இல் IPL போட்டிகள் எங்கு இடம்பெறுகின்றன?


ஐக்கிய அரபு இராச்சியத்தில்



64. 75 வது ஐக்கிய நாடுகள் சபையின் இணையவழி மாநாடு எத்நகரை மையப்படுத்தி இடம்பெற்றது?


நியுயோர்க்



65. சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மூடிய சிறைச்சாலை ஒன்று மீளவும் திறக்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அச்சிறைச்சாலை எது?


கண்டி போகம்பரைச் சிறைச்சாலை



66. சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் யாது?


போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் அதிகம் கைது இடம்பெறுகின்றமை.



67. இலங்கையில் நடைபெறுகின்ற குற்றங்களை செய்து முடிப்பதற்கு எந்நாட்டை அதிகம் குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர்?


இந்தியாவை



69. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் 02 தருக? மகாராஷ்டிரா(மும்பாய்)


தமிழ்நாடு (சென்னை)



70. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக இருந்து கொரோனா ஒழிப்புக்குப் பாடுபட்ட அனில் ஜெயசிங்க தற்போது எவ்வமைச்சின் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்?


சுற்றாடல் அமைச்சு



71. மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் எந்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்?


சிங்கப்பூர்



72. சார்க் அமைப்பில் எழுத்தறிவு வீதம் உயர்மட்டத்தில் உள்ள இரு நாடுகள் எவை?


மாலைதீவு, இலங்கை 




73. புதிய அரசியல் யாப்பை எழுத உருவாக்கப்பட்ட 09 பேர் கொண்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகள் யார்?


கலாநிதி அருளானந்தம் சர்வேஸ்வரன், பேராசிரியர் நஜீமா கமர்தீன்



74. இலங்கையின் தற்போதைய பிரதம நீதியரசர் யார்?


47 வது ஜயந்த ஜயசூரிய



75. இலங்கையின் தற்போதைய சட்டமா அதிபர் யார்?


46 வது சட்டமா அதிபர் - தப்புல டி லிவேரா



76. இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் யார்?


15 வது W.D லக்ஸ்மன்



77. இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகர் யார்?


மகிந்தா யாப்பா அபயவர்த்தன



78. இலங்கை அரசு 20 வது திருத்தத்தில் முன்வைத்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள முக்கிய இரு விடயங்கள் எவை?


1. கணக்காய்வாளர் நாயகம் பதவி நீக்கம்


2. இரட்டை பிரஜாவுரிமை அறிமுகம்



79. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் 90% குணமடைந்து சுகாதார நிலை சிறப்பாக உள்ள நாடு எது?


இலங்கை



80. 2020 ஜூலை மாத பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுத் தெரிவான மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் எத்தனையாவது பிரதமர் ஆவார்?


28 வது



82. இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ள நாடு எது?


ஐக்கிய அமெரிக்கா



83. கொரோனா பரவக் காரணம் சீனாவாகும் என்று குற்றஞ்சாட்டி வரும் உலகத் தலைவர் யார்?


டொனால்ட் ட்றம்ப்



84. கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட 03 நாடுகளைத் தருக.


1 - ஐக்கிய அமெரிக்கா


2 - இந்தியா


3 - பிறேசில்



85. தற்போதைய அரசு 1978 இரண்டாம் குடியரசு யாப்பிலுள்ள முக்கிய இரு சீர்திருத்தங்களை நீக்க முற்படுகின்றது. அவை எவை?


13 வது திருத்தம் 19 வது திருத்தம்



86. புதிய அரசியல் யாப்பு உருவாக்கக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?


மகிந்தா யாப்பா அபயவர்த்தன - சபாநாயகர்



87. இலங்கையில் ஒரு நாளைக்கு 64 பேர் புற்றுநோயால் பீடிக்கப்படுவதுடன், 38 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். 64 பேரில் 26 பேர் எப் புற்றுநோயால் பீடிக்கப்படுகின்றனர் என சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகின்றது?


வாய்ப்புற்று நோய்



88. பலாலி விமான நிலையம் இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு எப்பெயரில் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது?


யாழ்ப்பாண விமான நிலையம்


89. 2009 இல் பாக்கிஸ்தானின் கராச்சி நகரில் இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாதத் தாக்குதல் நடாத்தப்பட்ட பின்பு அங்கு தடைப்பட்டிருந்த கிரிக்கட் போட்டிகள் ஆம் ஆண்டு எவ்வணி அங்கு சென்று விளையாடியதால் மீண்டும் ஆரம்பமானது? 


2019 - இலங்கை


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad