Type Here to Get Search Results !

புத்தர் பொது அறிவு வினா விடை- 2023

 புத்தர் பிறந்த நாடு எது?

புத்த மத பாரம்பரியத்தின் படி கௌதமர் லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். அந்த இடம் தற்கால நேபாளத்தில் உள்ளது. சாக்ய தலைநகரான கபிலவஸ்துவில் வளர்க்கப்பட்டார்.



புத்த மதத்தை தோற்றுவித்தவர் யார்?

'கௌதம புத்தர்' என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய மதகுரு ஆவார். உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். 'ஆசைக்குக் காரணம் துன்பம்' என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர்.


புத்தர் போதி மரத்தடியில் பெற்றது என்ன?

புத்தர் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது போதி மரம். போதி மரத்தடியில் அமர்ந்து புத்தர் ஞானம் பெற்ற கதை நமக்குத் தெரியும். நமக்குத் தெரிந்த அரச மரம்தான் போதி மரம். இந்த மரத்துக்கு அத்திரு, அத்து(க)மானி, இலணை, கணவம், சுவலை, பணை, திருமரம் என்று வேறு பெயர்களும் தமிழில் உண்டு.


புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் எது?

முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிமணி என்னும் பட்டம் பெற்றவர். ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.


புத்தரின் இயற்பெயர் என்ன தமிழ்?

புத்தர். putharin iyar peyar in tamil - புத்தரின் இயற்பெயர் சித்தார்த்த கௌதமர். ஏறத்தாழ கிமு 563 இல் நேபாளத்தின் லும்பினியில் ஒரு அரச குடும்பத்தில் பிறந்தார் . சித்தார்த்தர் என்றால் "ஒரு இலக்கை அடைந்தவர்" அல்லது "தன் இலக்கை அடைந்தவர்" என்று பொருள்படும்.


புத்த சரிதம் எழுதியவர் யார்?

புத்தசரித்திரம் (Buddhacharita) ("Acts of the Buddha"); Buddhacaritam, தேவநாகரி बुद्धचरितम्) இந்தியக் காவிய கவிதை நூலாகும். சமசுகிருதம் செம்மொழி தகுதி அடைந்த பின் எழுதப்பட்ட இக்காவிய கவிதைத் தொகுப்பை எழுதியவர் பௌத்த அறிஞரான அஸ்வகோசர் ஆவார்.


பௌத்த மதத்தை தோற்றுவித்தவர் யார்?

சித்தார்த்த கௌதமரே பௌத்தத்தைத் தோற்றுவித்தவர்.


திரிபீடகம் எந்த சமயத்தின் புனித நூல்?

திரிபிடகம் கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின் மூலமான புனித நூல் ஆகும்.


பௌத்த காப்பியம் என்றால் என்ன?

பௌத்த தமிழ் இலக்கியம் என்பது பௌத்த சமயம் பற்றிய தமிழ் இலக்கியங்களை முதன்மையாகக் குறிக்கிறது. பெளத்தர்களால் எழுதப்பட்ட பிற தமிழ் இலக்கியங்களையும் இது சுட்டுவதுண்டு. சங்க காலம் தொடக்கம் தற்காலம் வரை பெளத்த தமிழ் இலக்கியங்கள் உண்டு. குண்டலகேசி, மணிமேகலை போன்ற பெரும் காப்பியங்கள் பெளத்த காப்பியங்கள் ஆகும்.


எந்த புத்தகம் புத்த மதத்தின் நான்கு புனித உண்மைகளை விளக்குகிறது?

சரியான பதில் பிடகோபதேசா. இது ஒரு புத்த வேதமாகும், இது தேரவாத புத்த மதத்தின் பாலி நியதிகளின் குடக நிகயத்துடன் தொடர்புடையது. இந்தப் புத்தகம் புத்தரின் சீடரான கக்கனா இசையமைத்ததாக நம்பப்படுகிறது.


முதல் பௌத்த உரையாசிரியர் யார்?

முதல் பௌத்த சங்கக் கூட்டத்தில் கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகளை சுத்தபிடகம், அபிதம்மபிடகம், மற்றும் விநயபிடகம் என மூன்று தலைப்புகளில் புத்தரின் முதன்மைச் சீடர்களான ஆனந்தர், மகாகாசியபர் மற்று உபாலி ஆகியோர் தொகுத்தனர். இம்மூன்று தொகுப்புகளைச் சேர்த்து திரிபிடகம் என்று அழைப்பர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad