Type Here to Get Search Results !

இலங்கையின் முன்பள்ளிக் கல்வி - 2023

 இலங்கையின் முன்பள்ளிக் கல்வி



முறைசார் பாடசாலையில் சேர்வதற்கு சட்ட பூர்வமான ஒரு வயதெல்லை உண்டு.ஐந்தவயது பூர்த்தியடைந்த பிள்ளைகளே இலங்கையில் முறைசார் பாடசாலைக்கு அனுமதி பெறும் தகுதி பெறுகிறார்கள்.முறை சார் கல்வியைப் பெறுவதற்கான உள உடல் ஆயத்த நிலை  இந்த வயதில் தான் ஏற்படுத்துதாக கல்வியலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

முன்பள்ளியில் அனுமதி பெறுவதற்கான வயதுக் கட்டுப்பாடுகள் எதுவூமில்லை.பிள்ளை விருத்தி நிலையங்கள் குழந்தை பாதுகாப்பு நிலையங்களில் குழந்தைகளின் வயதெல்லையை கவனிக்காது பொறுப்பேற்கும் நிலை காணப்படுகின்றது. எவ்வாறாயினும் 21ஃ2வருடம் முதல்5 வருடம் பூர்த்தியடையூம் வரையிலான வயதெல்லைகளில் உள்ள பிள்ளைகள் முன்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

மூன்று வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் முன்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.முன்பிள்ளைப் பருவம் அதாவது பாடசாலைப் பருவம் பிள்ளையின் வாழ்கையில் மிக முக்கியமான விருத்திப் பருவமாகும்.என பல கல்வியியலாளர்கள் விளக்கியூள்ளனர்;.

வயது ஐந்து நெருங்கும் போது பிள்ளையின் மூளை கண்களின் விருத்தி அளவூ தீர்மானிக்கப்பட்டு முடிவடையூம் இப் பருவத்தில் ஊட்டத்தில் குறைபாடு ஏற்படுமானால் அது பிள்ளையின் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.உடல் உள மனவெழுச்சி வளர்ச்சிகளோடு ஆளுமை விருத்திக்குரிய இடப்படுகின்றது. 

சீரற்ற மனவெழுச்சி வளர்ச்சிக்கு தாயின் அன்பு சரியாக கிடைக்காமை.குடும்பத்தில் வறுமை உற்றார் உறவினர்ளின் அன்பு அற்றுப் போதல் போன்றவையூம் பாலர் பாடசாலை ஆசிரியரின் பொறுப்பற்ற தன்மையூம் காரணங்களாக அமைவதாக ஆய்வூகள் கூறுகின்றன.

முன்பிள்ளைப் பருவத்தில் பிள்ளைகளுடன் பழகும் அல்லது உறவாடும் வளர்ந்தவர்கள் பிள்ளையை இனங்காணக்கூடியவர்களாக பிள்ளையின் அருகே இருந்து அதன் தேவைகளை உணர்வூகளைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.பிள்ளையை உற்சாகமான ஒரு சூழலில் வைக்க வேண்டும்.

இப்பருவத்தை கண்டபடி வீணே கழிக்க விட்டு முறைசார் பாடசாலைக்கு அனுப்புவதில் மட்டும் முழுக் கவனம் செலுத்துதல் குதிரை ஓடிய பின் படலையை மூடுவது போன்றதாகும்.

'இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பர்இஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையூமா? என முன்னோர்கள் கூறுவர். இன்றைய சிறுவர்களே நாளைய நாட்டின்எதிர்காலத் தலைவர்கள் என்பர்.

அந்தவகையில் வீடு உறுதியாக இருக்க வேண்டுமாயின்அதன் அத்திவாரம் பலமாக அமைய வேண்டும் என்பர்.அது போலவே முன்பள்ளிக்காக இடப்படும் அனைத்து விடயங்களும் எதிர்காலத்தில் தேவையானவையே.

முன்பள்ளியில் காணப்படும் ஒவ்வொரு வளங்களும் மிக முக்கியமானதாக காணப்பட வேண்டும்.வளங்கள் போதியதாக காணப்படும் போதுதான் மாணவர்களின் விருத்தி நிலையை வளர்ச்சியடையச் செய்யலாம்.அத்துடன் நாட்டின் அபிவிருத்தியையூம் மேம்படுத்தலாம்.'

வளங்கள் என்பது கல்விச் செயற்பாட்டில் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.கல்விச் செயற்பாடானது முழுமை பெறஇகற்றல் செயற்பாடுகளை பேணஇஇலக்குகளை அடைந்து கொள்ள வளங்கள் உதவூகின்றது.முன்பள்ளியின் வளங்களான பௌதிக வளங்கள்இமனித வளங்களை உரிய முறையில் ஆசிரியர்களும் மாணவர்களும் கையாளும் நிலை காணப்பட வேண்டும்.

எந்தவொரு நிறுவனத்திற்கும் வளங்கள் என்பது அவசியமான ஒன்றே.முன்பள்ளிகளில் வளங்கள் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.இவ்வளங்களை உரிய முறையில் பயன்படுத்தும் போதுதான் அதன் பலாபலனை முன்பள்ளிச் சிறார்கள் பெறுவர்.முன்பள்ளியின் வளங்கள் போதியதாக அமையூம் போதுதான் மாணவர்கள் விருத்தியூம் வளர்ச்சியூம் அடைவர்.

இலங்கையிலே கிராம பிரதேசத்தில் முன்பள்ளிகளில் காணப்படும் முன்பள்ளி ஆசிரியர்கள் தரம்9இ10இகல்விபொது சாதாரண தரம்இகல்விப் பொதுத் தர உயர்தரம்.படித்த மாணவர்களே.முன்பள்ளிக்கென பயிற்றுவிக்கப்பட்டவர்களல்லர்.

இவர்களுக்கான கொடுப்பனவானது தற்போது 3500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றது.சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அக் கொடுப்பனவூம் கிடைப்பதில்லை.இதனால் முன்பள்ளிக் கல்வியானது மந்தகதி நிலையிலையே செல்கின்றது.முன்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இயேசு சபை அகதிப் பணியே கொடுப்பனவை வழங்குகின்றது.

இலங்கையிலே முன்பள்ளிக் கல்வியை அரசு பொறுப்பேற்காதது முன்பள்ளியின் விருத்தியை மட்டுமன்றி குழந்தைகளின் எதிர்காலத்தையூம் இவை பாதிக்கும்.இப் பிரதேசத்தைப் பொறுத்த வரை தனியார் நிறுவனங்களும்இபொதுஸ்தாபனங்களுமே முன்பள்ளிகளை நடத்தி அவற்றினால் இயன்ற உதவிகளை நல்குகின்றது.இவை இப் பிரதேசத்திற்கு போதுமானதல்ல. 

முன்பள்ளிகளில் குழந்தைகளுக்கான விருத்திச் செயற்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் உபகரணங்கள் இல்லை.இதனால் குழந்தைகளிடையே விருத்தி நிலை குன்றிக் காணப்படுகின்றது.உட்கட்டமைப்பு வசதிகள்இல்லை.

இலங்கையிலே முன்பள்ளி ஆசிரியர்களின் குறைபாடு பெரும் பிரச்சினையாகக் காணப்படுகின்றது.ஆசிரியர்களின் கல்வித் தகமையை ஆராயூம் போது பெரும்பாலனோரின் கல்வித் தரம் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.

ஆசிரியர்கள் முன்பள்ளிக்கென பயிற்றுவிக்கப்பட்டவர்களல்லர்இஇவர்கள் க.பொ.த.சா.தஇ படித்தவர்களே. அத்தோடு போதியளவூ பயிற்சி இன்மையூம்இபயிற்சிகள் வழங்கப்படுகின்றன அவை குழந்தைகளின் விருத்திக்கு பயன்பாடு குறைவானதுமான நிலையிலையே உண்டு.

கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் இல்லை போன்ற குறைபாடுகளினால் இவர்களது செயற்பாடுகள் விருத்தியடையாத நிலையிலையே காணப்படுவதால் ஆரம்பப் பிரிவிலே இவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.



இவ்வாறான முன்பள்ளிக்கான வளப்பற்றாக்குறையானது முன்பள்ளிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி ஆரம்பப்பிரிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இப் பிரதேசத்தில் மாணவர்கள் முன்பள்ளிக்கு செல்வது குறைவாகவே காணப்படுகின்றது.ஏன்எனில் முன்பள்ளிகள் தூர இடத்தில் காணப்படுகின்றது.வெளிநாடு சென்ற பெற்றௌரின் பிள்ளைகள் முன்பள்ளிக்கு செல்லாமலும் காணப்படுகின்றனர்.

இதற்கு காரணம் பெற்றௌரைப் பிரிந்து வராமைஇபெற்றௌர்கள் கவனம் செலுத்துவதில்லை.படிப்பறிவற்ற பெற்றௌர்கள் முன்பள்ளிக் கல்வியைப் பற்றி சிந்திப்பதில்லை.வளங்களைப் பெறாது இருக்கின்ற வளங்களைக் கொண்டு பயன்படுத்துகின்றனர்.போதுமான வளங்கள் கிடைப்பதில்லைஇவளங்கள் சமமாக பகிரப்படுவதில்லைகொடுப்பனவூ இன்றியூம் முன்பள்ளிகளில் கற்பிக்கின்றனர்.

அத்துடன் வளப் பற்றாக்குறை மட்டுமன்றி கொடுப்பனவூ பெரும் குறையாகவே காணப்படுகின்றது.சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவூம் கிடைப்பதில்லை.பெற்றௌரின் அக்கறையின்மை.முன்பள்ளிகள் பற்றி கவனத்தில் எடுக்காமை.போன்றனவாகும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad