மலேசியரின் பண்பாட்டுப் பாரம்பரியம்
பண்பாட்டை பிரதிபலிக்கும் ஆடைகள்
பாஜூ கூரோங் –- பாஜூ மெலாயு.
மலேசியாவில் பல்லின மக்கள் வாழ்கின்றனர்.ஒவ்வொரு இனத்தவரும் தங்களின் பாரம்பரிய உடைகளை தங்கள் இனத்தின் அடையாளச் சின்னமாக வைத்துள்ளனர்.பாஜூ குரோங் மற்றும் பாஜூ மெலாயு மலாய் இனத்தவர்கள் அணியும் பாரம்பரிய ஆடைகளாகும்.
ஆண்கள் மற்றும் பெண்கள் இவ்வகை ஆடைகளை வேலை இடங்களுக்கும் அணிந்து செல்கின்றனர்.இல்லங்களில் ஓய்வாக இருக்கும் போதும்,சமய விழாக்களின் போதும், தொழுகை செல்லும் போதும் குடும்ப விழாக்களின் போதும் தங்களின் பாரம்பரிய ஆடைகளை அணிகின்றனர்.
காலம் மாறிக் கொண்டிருந்தாலும் கூட மலாய் ஆண்களும் பெண்களும் ஆடை விஷயத்தில் தங்கள் உடைகளை மறக்கவில்லை. தங்களின் பாரம்பரிய ஆடைகள அவர்கள் தவறாமல் அணிகின்றார்கள். தற்போது மலேசியாவில் பிற இன பெண்களும் பாஜூ கூரோங் உடையை விரும்பி அணிகின்றனர்.
சேலை - வேட்டி ஜிப்பா
மலேசியாவில் உள்ள பாரம்பரிய உடைகள் மலேசியர்கள் பல்வேறு பண்பாடுகளை உடையவர்கள் என்பதைக் காட்டுகின்றது.
ஒவ்வோர் இனத்தவரும் தங்களின் பாரம்பரியப் பண்பாட்டு ஆடைகளை அணிவதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.ஒவ்வோர் இனத்தவரின் ஆடையிலும் தனித்தன்மையையும் வரலாற்று பின்னனியையும் காண முடியும். மலேசிய வாழ் தமிழர்கள் அணியும் பாரம்பரிய உடை சேலை மற்றும் வேட்டி ஜிப்பா ஆகும்.
பொதுவாகவே இந்த ஆடைகளை தமிழர்கள் கோவிலுக்குச் செல்லும் போதும் திருமண வைபவங்களிலும் மற்றும் விழாக்காலங்களிலும் இவ்வாடைகளை அணிவர். மேலும் இவ்விரு உடைகளைத் தவிர சுடிதார், பாவாடை தாவனி, பட்டுப் பாவாடை போன்ற ஆடைகளும் மலேசிய வாழ் தமிழர்களின் பாரம்பரிய உடைகளாகும்.
பண்பாட்டு நிகழ்வுகளில் இம்மாதிரியான ஆடைகளை இளைய தலைமுறையினர் அணிவதைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
சம்ஃபூ - சொங் சாம்:
ஒவ்வோர் இனத்தவரும் தங்களின் பாரம்பரியப் பண்பாட்டு ஆடைகளை அணிவதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.
மலேசியாவில் வாழும் சீனர்கள் சம்ஃபூ மற்றும் சொங் சாம்மை தங்களின் பாரம்பரிய ஆடைகளாக அணிகின்றனர். சிவப்பு நிறத்தை சீன மக்கள் அதிர்ஷ்டம் தரும் வர்ணமாகக் கருதுவதால் இவர்கள் பொதுவாகவே தங்களின் பாரம்பரிய ஆடைகளையும் சிவப்பு வர்ணத்திலேயே அணிகின்றனர்.
சீனர்கள் தங்களின் பாரம்பரிய ஆடைகளை சீனப் பண்டிகையின் போதும் சமய விழாக்களின் போதும் அணிகின்றனர். பண்பாட்டு நிகழ்வுகளில் இம்மாதிரியான ஆடைகளை இளைய தலைமுறையினர் அணிவதைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.