Type Here to Get Search Results !

சிந்து சமவெளி நாகரிகம் - 2023 The Indus Valley Civilization

 சிந்து சமவெளி நாகரிகம்



காலம்

சிந்து சமவெளி நாகரிக காலம் கி.மு.3300 முதல் கி.மு.1900 வரை என கருதப்படுகிறது

சிந்து சமவெளி நாகரிக காலம் பொதுவாக மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.

            ஆரம்ப நிலை கி.மு.3300 - கி.மு.2600
            முதிர்வு நிலை கி.மு.2600 - கி.மு.1900
            பிந்தைய நிலை கி.மு.1900 - கி.மு.1700

அறிஞர்களின் கருத்துப்படி

                   அறிஞர்கள்                                                          காலம்

சர்ஜான் மார்ஷல் (1921)                     கிமு.3250 முதல் கி.மு. 2750 வரை

போர்சர்வ்ஸ் (1956)                                        கிமு.2000 முதல் கி.மு. 1500 வரை

டி.பி.அகர்வால் (1964)                             கிமு.2300 முதல் கி.மு. 1750 வரை


சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நகரம் ஹரப்பா ஆகும். இதன் காரணமாவே இந்நாகரிகம் ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கபடுகிறது.

ஹரப்பா, மொகங்சதரோ மற்றும் பிற இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலம் இந்தியாவில் கி.மு.3000 ஆம் ஆண்டில் நன்கு வளர்ச்சியடைந்த நாகரிகம் இருந்தது என்பதை உணர்த்துகிறது

நாகரிகம் என்ற வார்த்தை பண்டைய லத்தின் மொழி வார்த்தையான சிவிஸ் (Civis) என்ற சொல்லிருந்து வந்தது.

அமைவிடம்

இந்தியாவின் வடமேற்கு மற்றும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்தது

அகழ்வாய்வு

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சார்லஸ் மேசன் 1826-ல் ஹரப்பாவில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார். ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை முதன் முதலில் சார்லஸ் மேசன் என்பவர் தனது நூலில் விவரித்தார்.

1831-ல் அலெக்ஸாண்டர் பர்னஸ் என்பவர் ஆம்ரி என்ற இடத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார்.

அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் ஹரப்பா மற்றும் மொகங்சதரோ பகுதிகளில் 1853, 1856, 1875 ஆண்டுகளில் ஆய்வு மேற்கொண்டார்.

1856 இல் பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதிக்கரையின் கிளை நதியான ராவி நதிக்கரையில் லாகூரில் இருந்து முல்தானுக்கு இருப்புப்பாதை அமைக்க தோண்டப்பட்டபோது சுட்ட செங்கற்களும், கட்டிட இடிபாடுகளும் கண்டறியப்பட்டது.

1920 களில் சர் ஜான் மார்ஷல் என்பவர் ஹரப்பா பகுதிகளில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார்

ஹரப்பாவில் 1921 ல் தயாராம் சஹானி என்பவர் அகழ்வாய்வு மேற்கொண்டார்.

மொகங்சதரோவில் 1922 ல் R.D.பானர்ஜி என்பவர் அகழ்வாய்வு மேற்கொண்டார்.

1940 களில் மோர்டிமர் வீலர் என்பவர் ஹரப்பா பகுதிகளில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார்.

லோத்தலில் 1957 ல் S.R.ராவ் என்பவர் அகழ்வாய்வு மேற்கொண்டார். இந்தியாவின் குஜராத்தில் உள்ள துறைமுக நகரமாகும்.

B.B.லால் என்பவர் காளிபங்கனில் தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டார்.

முக்கிய நகரங்கள்

சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம்

சிந்து சமவெளி நாகரிகத்தின் சிறப்பு திட்டமிட்ட நகர அமைப்பு

சிந்து சமவெளி நாகரிகத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட நகரம் ஹரப்பா. புதையுண்ட நகரம் எனவும் அழைக்கபடுகிறது. பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாபில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது.

மொகங்சதரோ பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணத்தில் சிந்து நதிகரையில் அமைந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தில் பெரிய நகரம் - மொகஞ்சதாரோ (200 ஹெக்டர்). மொகஞ்சதரோ என்பதன் பொருள் இறந்தவர்களின் மேடு அல்லது இறந்தவர்களின் நகரம்.

லோத்தல் ஒரு துறைமுக நகரமாகும். இது குஜராத்தின் போக்வா நதிக்கரையில் உள்ளது.

காலிபங்கன் ராஜஸ்தானின் காஹர் நதிக்கரையில் அமைந்துள்ளது.

தோலவிரா நகரத்தைக் கண்டறிந்தவர்கள் ஜோஷி மற்றும் பிஷ்ட்


நகரங்கள்                                    அமையபெற்ற இடம்

ஹரப்பா                                  பாகிஸ்தான், மேற்கு பஞ்சாப், மாண்ட் கோமாரி, ராவி நதிக்கரை

மொகஞ்சதாரோ                     பாகிஸ்தான் - சிந்து மாகாணம் - லர்கானா - சிந்து நதிக்கரை

கோட்டிஜி                                      சிந்து மாகாணம்

காலிபங்கன்                             ராஜஸ்தான்

லோதல்                                     குஜராத்

தோலவிரா                             குஜராத்

சூர்கோட்டா                         குஜராத்

ஆலம்கீர்                                 உத்திரபிரதேசம்

ரூபார்                                         பஞ்சாப்

பனவாலி                                 ஹரியானா



நகர அமைப்பு

நகரங்கள் பொதுவாக இரண்டு அமைப்புகளை கொண்டுள்ளன.

1. மேல் பகுதி கோட்டை மேட்டு பகுதி சிட்டாடல் என்று அழைக்கபடுகிறது. களிமண் குன்றுகள் மீது வசதி மிக்கவர்கள், வணிகர்கள் வாழ்ந்திருக்கலாம்.

2. தாழ் பகுதி அல்லது லோயர் டவுன் பகுதிகளில் சாதாரண மக்கள் வாழ்ந்திருக்கலாம்.

நகரங்களில் உள்ள தெருக்கள் நேராக, அகலமாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. தெருக்கள் ஒன்றை ஒன்று செங்குத்தாக வெட்டிகொள்கின்றன. தெருக்கள் முனைகளில் வளைவாக அமைக்கப்பட்டுள்ளது. தெருக்கள் அமைப்பு சட்டக அமைப்பை போன்று காணபடுகின்றன

வீடுகள்

வீடுகள் அனைத்தும் சுட்ட செங்கற்களால் சுண்ணாம்பு சாந்து கொண்டு கட்டப்பட்டுள்ளன. ஒரு அடுக்கு மற்றும் இரண்டு அடுக்கு வீடுகளும் மேல் அடுக்கிற்கு செல்ல படிகளும் காணபடுகின்றன. பல அறைகள் கொண்டதாக வீடுகள் காணபடுகின்றன. வீட்டின் முன்பு முற்றம் ஒன்று அமைக்கபட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் கிணறு உள்ளது. குளியல் அறைகள் உள்ளன. குளியல் அறைகளில் இருந்து கழிவு நீர் குழாய் மூலம் கழிவு நீர் தெருக்களில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில் விடபடுகின்றது.

பெருங்குளியல் குளம்

மொகன்ஜதரோ பெருங்குளியல் குளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8 அடி ஆழம், 23 அடி அகலம், 39 அடி நீளம் கொண்ட செவ்வக வடிவில் அமைந்துள்ளது. பெருங்குளியல் குளம் நான்கு பக்கமும் பாதை கொண்டதாக உள்ளது. நான்கு பக்கமும் நடைபாதை உள்ளது. நான்கு பக்கமும் படிக்கட்டுகள் உள்ளது. உடை மாற்றும் அறைகள் உள்ளது. அருகில் ஒரு பெரிய கிணறு உள்ளது. இக்கிணற்றிலிருந்து குழாய் மூலம் பெருங்குளியல் குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லபடுகிறது. குளத்திலிருந்து தண்ணிரை வெளியேற்ற தனியே குழாய்கள் உள்ளன.

தானியகிடங்குகள்

ஹரப்பாவில் 6 தானிய கிடங்குகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இங்கு கோதுமை மற்றும் பார்லி சேமித்து வைக்கபட்டிருகலாம். மொகஞ்சதரோவில் இரண்டு பெரிய தானியக்களஞ்சியங்கள் உள்ளன. ராக்கிஹர்கியில்(ஹரியானா) ஒரு பெரிய தானிய கிடங்கு கண்டுபிடிக்கபட்டுள்ளது.

பெருங்கூட்ட அரங்கு

பெருங்கூட்ட அரங்கு மொகன்ஜதரோவில் கண்டுபிடிக்கபட்டுள்ளது. 20 தூண்கள் நான்கு வரிசைகளில் அமையபெற்ற கூட்ட அரங்கு உள்ளது.

கப்பல் கட்டும் தளம்

லோத்தலில் கப்பல் கட்டும் தளம் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

பொருளாதாரம்

சிந்து சமவெளி மக்களின் பொருளாதாரம் வேளாண்மை மற்றும் வணிகம் சார்ந்ததாக உள்ளது.

கோதுமை, பார்லி, திணை, அவரை, பருத்தி ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். லோத்தல் நகரம் சிந்து சமவெளி நாகரிகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கபடுகிறது. பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை பயிர் செய்யும் இரு பயிரிடல் முறையை மேற்கொண்டுள்ளனர். பொதுவாக நவம்பர் மாதம் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். உழவுக்கு கலப்பையை பயன் படுத்தியுள்ளனர். நீர் பாசனம் சிறப்பாக இருந்துள்ளது. ஆறுகளில் இருந்து கால்வாய் வெட்டி நீர் பாசனம் செய்துள்ளனர். கிணற்று பாசனம் இருந்ததற்காண சான்றுகள் உள்ளன. தானியங்களை தானிய கிடங்குகளில் சேமித்து வைத்துள்ளனர். சிந்து சமவெளி மக்கள் வேளாண்மையில் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் காளிபங்கனில் கிடைக்கபெற்றன. உழுத வயல்கள் இருந்ததற்கான சான்றுகள் இங்கு கிடைக்கபெற்றுள்ளன.

கால்நடை வளர்த்தல் ஆடு, மாடு, கோழி போன்றவை வளர்கப்படுள்ளன. மாடுகள் செபு என்று அழைக்கப்பட்டுள்ளன. பன்றி, யானை, எருமை போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். குதிரை பற்றி இம்மக்கள் அறிந்திருக்கவில்லை. வெண்கலத்தை பயன்படுத்தியுள்ளனர். இறைச்சி, மீன் போன்றவற்றை உணவுக்கு பயன்படுத்தியுள்ளனர். ஒட்டகத்தை பயன்படுத்தியுள்ளனர்.

நாணயங்கள் இல்லை. பண்டமாற்று முறை நடைமுறையில் நடை பெற்றுள்ளது. எடையை அளவிட படிக கற்கள் பயன்படுத்தபட்டுள்ளது. படிக கற்கள் கண சதுர வடிவம் கொண்டதாக உள்ளது. இதன் அளவுகள் 1:2:4:8:16:32 என இருமடங்கு முறையை பின்பற்றியிருகிறார்கள். இதில் 1 என்பது 13.63 கிராம் என்ற எடையை கொண்டதாக உள்ளது. நீளம் 1 அளவானது 1.75 செ.மீ நீளம் கொண்டதாக உள்ளது. தந்தத்தினாலான அளவீடுகளையும் பயன்படுத்தியுள்ளனர். சிந்து சமவெளி நாகரிக மக்கள் மிக குறைந்த அளவுகளையும் அளக்க கூடிய அளவிற்கு எடை கற்களையும் அளவீடுகளையும் கொண்டவர்கள்ளக உள்ளனர்.

வணிகம்

கப்பல் மூலமாக ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. லோதல் துறைமுகத்திலிருந்து ஓமன், கத்தார், சிரியா, இரான், இராக் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி நடைப்பெற்றுள்ளது. ஓமனில் சிந்து சமவெளி நாகரிகத்தை சேர்ந்த ஜாடி ஒன்று கிடைக்கபெற்றுள்ளது. மெசபடோமியா மற்றும் சுமேரிய நாகரிகங்களுடன் வணிக தொடர்பு இருந்துள்ளது. கப்பல் மூலம் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. செம்பு, தங்கம், பருத்தி, அணிகலன்கள், டெரகோட்டா மண்பாண்டங்கள், கார்னிலியன் மணிகள், எடைகற்கள், முத்திரைகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நிக்கல் இறக்குமதி செய்யபட்டுள்ளது. சுமேரிய நாகரிகத்தை சேர்ந்த அக்காடிய பேரரசின் மன்னரான நாரம்சின் தான் எழுதிய குறிப்பில் மெலுகா (சிந்து சமவெளி) பகுதியிருந்து கருப்பு சிவப்பு அணிக்கலன் வாங்கியதாக குறிபிட்டுள்ளார். சுமேரிய நாகரிகத்தை சேர்ந்த கியூனிபார்ம் கல்வெட்டு சிந்து வெளி நாகரிகத்தின் வணிக தொடர்புகளை பற்றி குறிப்பிடுகிறது.

உலோகங்கள்

சிந்து சமவெளி நாகரிக மக்கள் செம்பை பயன்படுத்தியிருகிறார்கள். பாகிஸ்தானிலுள்ள ரோரி என்ற பகுதியிலிருந்து கிடைத்த படிக கற்களை (ரோரிசெர்ட்) பயன்படுத்தி கத்தி போன்ற ஆயுதங்கள் செய்துள்ளனர். அம்பு, ஈட்டி போன்றவற்றை செம்பை பயன்படுத்தி செய்தனர். கார்னிலியன் மணிகள் தயாரிக்க கூடிய இடமாக லோத்தல் உள்ளது. சங்கு பொருட்கள் நாகேஸ்வர், பாலகோட் பகுதிகளில் தயார் செய்துள்ளனர். வைடூரியம் ஷார்டுகை பகுதியில் கிடைக்கபெற்றது. சுண்ணாம்புக்கல்(ஸ்டீயடைட்) தெற்கு ராஜஸ்தான் பகுதியில் இருந்து எடுத்துள்ளனர். சிந்து சமவெளி நாகரிக மக்களுக்கு முக்கியமான செம்பு உற்பத்தி தளமாக உள்ளது கேத்ரி (ராஜஸ்தான்) ஆகும்.

துணிமணிகள், அணிகலன்கள்

பருத்தி, கம்பளி, பட்டு ஆடைகள் அணிந்துள்ளனர். கழுத்தணி, கையணி, வளையல், மோதிரம், காதணி, காலணி போன்ற அணிகலன்களை அணிதுள்ளனர்.

முத்திரைகள்

ஹராப்பாவில் கிடைத்த மகாயோகி அல்லது பசுபதி முத்திரை. இது மூன்று முகம் கொண்ட யோகா நிலையில் உள்ள அமைப்பை கொண்டுள்ளது. வலதுபுறம் யானை, புலி இடதுபுறம் காண்டாமிருகம், எருதினுடைய உருவம் உள்ளது. பாதத்தில் இரண்டு மான்கள் உருவம் உள்ளது.

காளை, எருமை, புலி, ஆடு, யானை, காண்டமிருகம் போன்ற முத்திரைகள் கிடைக்கபெற்றுள்ளன

சிலைகள்

மொகஞ்சதாரோவில் செம்பினாலான நடனமாடும் மங்கை சிலை கிடைக்கபெற்றது.

மொகஞ்சதாரோவில் சுண்ணாம்புக்கல் மார்பளவு சிலை கிடைக்கபெற்றது. இவர் மத குரு அல்லது மொகஞ்சதாரோ நகரத்தின் தலைவராக இருக்கலாம் என கருதபடுகிறது.

சுடுமண் சிற்பங்கள் (டெரகோட்டா)

சுட்ட களிமண்ணிலால் ஆன சிற்பங்கள் கிடைக்கபெறுகின்றன. குரங்கு, நாய், ஆடு, எருது, அணில், மாட்டு வண்டி, பறவைகள், ஆண் பெண் உருவங்கள், மீன், மயில் போன்றவற்றின் சிற்பங்கள் கிடைக்கபெற்றன. பகடைக்காய்கள் கிடைக்கபெற்றுள்ளன.

சிந்து சமவெளி நாகரிகத்தின் சிறப்புகள்

சிந்து சமவெளி நாகரிகம் செம்பு கற்காலத்தை சார்ந்தது

சிந்து சமவெளி மக்களின் எழுத்து சித்திர வடிவ எழுத்துமுறையை சார்ந்தது.

சிந்து சமவெளி மக்கள் அறியாத விலங்கு குதிரை

சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம் இரும்பு

சிந்து சமவெளி மக்கள் தான் உலகில் முதலில் பருத்தி பயிரிட்டவர்கள்

சிந்து சமவெளி மக்கள், கோதுமை, பார்லி, கடலை போன்றவற்றையும் பயிர் செய்தனர்.

சிந்து சமவெளி மக்கள் பருத்தி மற்றும் கம்பெளி ஆடைகளை உடுத்தினர்

சிந்து சமவெளி மக்கள் பல விதமான முத்திரைகளை பயன்படுத்தினர்.

சிந்து சமவெளி மக்கள் வியாபார தொடர்பு கொண்டிருந்த நாடு சுமேரியா, எகிப்து, சீனா

சிந்து சமவெளி மக்கள் பசுபதி என்ற சிவனையும், சக்தி என்ற பெண் தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டனர்

சிந்து சமவெளி மக்களின் சமய சின்னம் அரச மரம்

சுடுமண்சுதை (டெரகோட்டா) களை கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்தினர்

அழிவு

சிந்து சமவெளி நாகரீகம் இயற்கை சீற்றங்களினால் அல்லது ஆரியர்களின் வருகையினால் அழிந்தது.

சிந்து சமவெளியின் அழிவிற்கு காலநிலை மாற்றமும் காரணம் ?


சிந்து சமவெளியின் அழிவிற்கு காலநிலை மாற்றமும் காரணமாக இருக்கலாம் என அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.


உலகின் பண்டைய நாகரிகங்களில் பழமையானதாக சிந்து சமவெளி நாகரிகம் உள்ளது. இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகத்தின் கட்டுமான அமைப்புகள், கலாச்சார மற்றும் வாழ்க்கை முறை குறித்து ஏற்கெனவே பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பண்டைய கால மக்களின் வாழ்நிலையை அறிய இந்த ஆய்வுகள் உதவுகின்றன. எனினும் சிந்து சமவெளியின் வீழ்ச்சி குறித்து பல்வேறு கருதுகோள்கள் எழுந்தாலும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை.


இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானிகளின் ஆய்வில் 5000 ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவிற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.


அமெரிக்காவின் ரோசெஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஆர்ஐடி)-இன் ஆராய்ச்சியாளர் நிஷாந்த் மாலிக் தலைமையிலான குழுவினர் தெற்காசிய குகைகளில் இருந்த ஸ்டாலாக்மைட் கனிம படிமங்களை ஆய்வு செய்தனர்.


கணினி உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்பட்ட கனிமங்கள் பருவமழையின் நிலை குறித்த தகவல்களைப் பெற உதவின. இந்த ஆய்வில் சிந்து சமவெளியில் பருவமழை முறைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.


ஆரியர்கள் படையெடுப்பு மற்றும் பூகம்பங்கள் உள்பட சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்தது குறித்து பல கருதுகோள்கள் இருந்தாலும், காலநிலை மாற்றம் பெரும்பாலும் சாத்தியமான ஒன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad