61. நாடாளவிய ரீதியில் தரம் 7 மாணவர்களின் தாங்கும் திறனை அறிய மேற்க்கொள்ளப்பட்ட செயற்றிட்டம்?
திடசங்கல்பம்
62. பாடசாலை பிள்ளைகளின் அடைவு மட்டத்தை மதிப்பிட சர்வதேச ரீதியாக நடத்தப்படும் பரீட்சை?
சர்வதேச பாடசாலை கணிப்பீட்டு வேலைத்திட்டம் ; (Programme for International Assessment - PISA)
63. ஆரம்ப கல்வி பிள்ளைகளின் அபிவிருத்திக்கு பொறுப்பான மத்திய அமைச்சு?
சிறுவர் விவகார அமைச்சு
64. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்படுவதன் 2 நோக்கங்கள்?
உதவிப்பணம் வழங்கல், பிரபல பாடசாலைகளில் சேர்த்தல்
65.கிராம பிரதேசங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வகைப் பாடசாலை?
இசுறு
66. கல்வி செயன்முறையின் போது ஆசிரியரால் மாணவர்களிடம் விருத்தி செய்யப்பட வேண்டிய துறைகள்?
அறிவு, திறன், மனப்பாங்கு
67. முதன் முதலில் மேற்கத்தேய கல்வியை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள்?
போர்த்துக்கேயர்
68. பாடசாலையில் மாணவர்களின் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான ஏற்பாடுகள்?
வருடாந்த சந்தாப்பணம், வசதிகள் சேவைக்கட்டணம்
69. வலயக்கல்வி அலுவலகங்களில் காணப்படும் பிரிவுகள்?
நிர்வாகப்பிரிவு, திட்டமிடல் பிரிவு
70. கோட்டக்கல்வி அதிகாரியின் பணிகள்?
பாடசாலையை மேற்பார்வை செய்தல், பாடப்புத்தகங்களை பாதுகாத்தல்