போட்டிப் பரீட்சைகளுக்கான உலக பொது அறிவு 120 வினா விடை 2023 / General knowledge 120 questions and answers in tamil-2023
1. பத்மவிபூசன் விருது அறிவிக்கப்பட்ட இந்திய முப்படைத்தளபதி யார்?
பிபின் ராவத்
2. A5 வீதி எந்நாட்டின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது?
சவுதி அரேபியா
3. 2021ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட களனிப் பால நிர்மாணிப்புக்கு நிதி உதவி வழங்கிய நாடு எது?
யப்பான்
4. 2022ஆம் ஆண்டிற்கான நேட்டோ மாநாடு எங்கு இடம்பெற்றது?
பெல்ஜியத்தின் பிரசெல்ஸ் நகரில்
5. 2022 ஆம் ஆண்டு ஒஸ்கார் விருது பெற்ற அமெரிக்கத் திரைப்படம் எது?
CODA (பிரெஞ் படத்தின் ரீமேக்
6. 2022ஆம் ஆண்டிற்கான மகளீர் உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த அணி எது?
அவுஸ்ரேலியா
7. 2022ஆம் ஆண்டு ஆசிய நாடொன்றில் இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோல்வியடைந்து பதவி விலகிய பிரதமர் யார்?
இம்ரான் கான் பாக்கிஸ்தான்
8. 2022ஆம் ஆண்டு தெரிவான பிலிப்பைன்சின் புதிய ஜனாதிபதி யார்?
வொங் வொங் மாகோன்
9. 2022ஆம் ஆண்டு தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி யார்?
யூன் அக் யூல்
10. G7 அமைப்பின் 6வது மாநாடு நடைபெற்ற இடம் எது?
பிரசெல்ஸ்
11. தெற்காசியாவில் 2022ஆம் ஆண்டு பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அது ஏற்பட்ட நாடுகள் எவை?
பாக்கிஸ்தான்,ஆப்கானிஸ்தான் இந்தியா, பங்காளதேஷ்.
12. நேட்டோ அமைப்பில் இணையத் தயாராக இருந்த எந்நாட்டின் மீது ரஸ்யா ஒரு வருடத்திற்கு மேல் தாக்குதல் நடத்தி வருகின்றது?
உக்ரேன்
13. நேட்டோ அமைப்பில் இணையத் தயாரான இரு நாடுகளை ரஸ்யா எச்சரித்தமையால் அவ்விரு நாடுகளும் பிரித்தானியாவுடன் உடன்படிக்கை செய்துள்ளன. அந்நாடுகள் எவை?
சுவிடன், பின்லாந்து
14. 2022ஆம் ஆண்டு மே மாதம் விபத்தில் மரணமடைந்த அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கட் வீரர் யார்?
அன்றூ சைமன்ஸ் (46வயது)
15. இலங்கை நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டு ராஜதந்திர ரீதியாக சர்ச்சைக்குள்ளான ரஸ்ய நாட்டின் விமானம் எது?
SU 289
16. 2022 ஆம் ஆண்டு ஆசியப் பாதுகாப்பு மாநாடு எங்கு இடம்பெற்றது?
சிங்கப்பூர்
17. 2022ஆம் ஆண்டு உலகச் சுற்றுலா அமைப்பில் இருந்து விலகிய நாடு எது?
ரஸ்யா
18. 2022 ஆம் ஆண்டு வளர்முக நாடொன்றில் சர்ச்சைக்குரிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நாடு எது?
ஐக்கிய அமெரிக்கா
19. சுவிஸ்லாந்து நாட்டில் இடம்பெற்ற ரெஸிஸ் பிரிண்ட் சர்வதேசப் போட்டியில் 100M ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு தெற்காசியச் சாதனை படைத்த இலங்கை வீரர் யார்?
யுபுன் அபேயகொன்.
20. 2022ஆம் ஆண்டு இந்தியாவின் மாநிலங்கள் அவையின் உறுப்பினர்களாகத் தெரிவான உ பிரபலங்கள் யார்?
இசைஞானி இளையராஜா, P.T உஷா (ஓட்ட வீராங்கனை)
21. 2022 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் இருவர் பிரதமர் பதவிகளில் இருந்து ராஜினாமாச் செய்து அதிர்ச்சியளித்தனர். அவர்கள் யார்?
பொரிஸ் ஜோன்சன், எலிசபெத் ட்ரஸ்
22. தங்கத்தை நாணயமாக மாற்றத் திட்டமிட்டுள்ள ஆபிரிக்க நாடு எது?
சிம்பாவே
23. G7 அமைப்பின் தீர்மானத்தின் படி உக்ரேனைப் பாதுகாக்க நேட்டோ அமைப்பு படைகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ள ஐரோப்பிய நாடு எது?
போலந்து
24. ஜப்பானில் ஜனநாயகக் கொள்கையை முன்னெடுத்து சிறந்த தலைவராகத் திகழ்ந்த முன்னாள் பிரதமர் துப்பாக்கிச் சூட்டில் 2022ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். அவர் யார்?
ஷின்சு அபே
25. G7 அமைப்பின் 2022ஆம் ஆண்டிற்கான மாநாடு எங்கு நடைபெற்றது?
இந்தோனேசியாவின் பாலித்தீவில்
26. குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நாடு எது?
கொங்கோ சனநாயகக் குடியரசு
27. 2022ஆம் ஆண்டு குரங்கு அம்மை நோயால் முதல் மனித இறப்பு நிகழ்ந்த நாடு எது?
ஸ்பெயின், இரண்டாவது இந்தியா
28. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 22வது பொதுநலவாயப் பழுதூக்கும் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் யார்?
திலங்க இசுருகுமார
29. சீன அமெரிக்க பனிப்போரின் மத்தியில் சீனாவுடன் முரண்பட்டிருக்கும் தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டு சர்ச்சயை ஏற்படுத்திய அமெரிக்க சபாநாயகர் யார்?
நான்சி பெலோசி
30. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 22 வது பொதுநலவாயப்போட்டிகள் எங்கு நடைபெற்றன?
இங்கிலாந்தின் பேர்மிங்காம் நகரில் இதில் 72 நாடுகள் பங்கேற்பு
31. இலங்கையில் 2022ஆம் ஆண்டு பயிர்ச்செய்கையை சேதப்படுத்தும் விலங்குகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விலங்கு எது?
யானை
32. 2022ஆம் ஆண்டு அதிக வெப்பம் காரணமாக மக்கள் சுரங்கங்களில் முடங்கிய நாடு எது?
சீனா
33. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 65வது பொதுநலவாயக் கூட்டத்தொடர் எந்நாட்டில் நடைபெற்றது?
கனடா
34. இலங்கையின் கடற்பரப்பில் பிரவேசித்த சீனக்கப்பலால் தமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இலங்கையுடன் ராஜதந்திர ரீதியில் கடிந்து கொண்ட நாடு எது?
இந்தியா, சீனக்கப்பல் யுவான் வேங்க் 5
35. வருடாந்தம் வெளியிடப்படும் உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் 2022ஆம் ஆண்டு முதலிடத்தைப் பிடித்த தலைவர் யார்?
நரேந்திர மோதி
36. ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஆசிய நாடொன்றின் பிரதமரின் கடமைகளை 2022 ஆம் ஆண்டு நீதிமன்றம் தடைசெய்துள்ளது. அந்நாட்டுத் தலைவர் யார்?
தாய்லாந்துப் பிரதமர் பியுத் சான் ஒக்சா
37. உலகின் பொருளாதார பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தர வரிசையில் இலங்கையின் இடம் யாது?
ஐந்தாவது இடம்,
1 - லெபனான்,
2 - சிம்பாவே,
3 - வெனிசுவெலா
4 - துருக்கி
38. பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த வரலாற்றுப் பெருமைக்குரிய ரஸ்யாவின் முன்னாள் தலைவர் 2022 இயற்கை எய்தினார். அவர் யார்?
மிஹயில் கொர்ப்பச்சேவ்
39. 2022ஆம் ஆண்டு 7.7 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பெற்று உலகில் ஐந்தாவது பொருளாதார பலமுள்ள நாடாக உருவெடுத்துள்ள நாடு எது?
இந்தியா
1 - ஐக்கிய அமெரிக்கா
2 - சீனா
3 - யப்பான்
4 - ஜேர்மனி
6 - இங்கிலாந்து
40. உலகில் நீண்ட காலம் பிரித்தானிய அரசகுடும்பத்தின் மகாராணியாக இருந்து தனது 96 வயதில் மரணமடைந்த மகாராணி யார்?
2ம் எலிசபெத் இவர் பேர்மிங்காம் அரண்மனையில் இறந்தார். இவர் 15 பிரதமர்களுக்கு சத்தியப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். இறந்த திகதி 2022 செப்ரெம்பர் 08
41. 6வது ஆசியாக்கிண்ண கிரிக்கட் மகுடத்தை பெற்றுக்கொண்ட அணி யாது?
இலங்கை 8 வருடங்களின் பின் இவ்வாய்ப்பு கிடைத்துள்ளது.
42. பிரித்தானியாவின் புதிய பிரதமர் யார்?
ரிஷி சுனக்
43. இலங்கையின் ஏழு புதிய மாநகர சபைகள் அண்மையில் உருவாக்கப்படுவதை அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அவற்றைப் பெயரிடுக?
திருகோணமலை, வவுனியா,கேகாலை, களுத்துறை, புத்தளம், அம்பாறை, மன்னார்
44. 2022ஆம் ஆண்டு ஆபிரிக்காவில் எரிவாயு குழாய்த்திட்டம் எந்நாடுகளுக்கு இடையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?
மொறாக்கோ முதல் நைஜிரியா வரை
45. 2ம் எலிசபெத் மகாராணியின் இறுதி நிகழ்வு எங்கு எப்போது இடம்பெற்றது?
19.09.2022 அன்று வெஸ்ற் மினிஸ்ரர் அரங்கில் இடம்பெற்றது.
46. 2ம் எலிசபெத் மகாராணி பொதுநலவாயத் தலைமைப் பொறுப்பை வகித்த ஆண்டுகள் யாது?
1952 ஆம் ஆண்டு முதல் 70 வருடங்கள் பதவி வகித்தார்.
47. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிர்வாக சபைத் தலைவராக 65 வது பிலிப்பைன்சில் இடம்பெற்ற மணிலா மாநாட்டில் தெரிவான தலைவர் யார?
ரணில் விக்கிரமசிங்க
48. ஆசிய நாடொன்றில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியின் போது இரு அணி ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலகத்தை கலைக்க கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏற்பட்ட சன நெரிசலில் 174 பேர் கொல்லப்பட்டனர். அந்நாடு எது?
இந்தோனேஷியா
49. 2022ஆம் அண்டு T20 கிரிக்கட் போட்டிகள் எந்நாட்டில் இடம்பெற்றது?
அவுஸ்ரேலியா
50. இலங்கையில் வாய்ப்புற்று நோயால் 70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் யார்?
ஆண்கள்
51. உலகில் பொருளாதார நெருக்கடி நிலைக்கு முகங்கொடுக்கும் வாய்ப்புள்ள எத்தனை நாடுகளுக்கு ஐ.நா சபை உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது?
54 நாடுகள்
52. இலங்கை குறைந்த வருமானம் பெறும் நாடாக எத்தீர்மானத்தால் உறுதி செய்யப்படுகின்றது?
இலங்கையின் பாராளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டமை
53. ஆசிய நாடொன்றில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28பேர் மரணமடைந்த நாடு எது?
தாய்லாந்து
54. பெலாரஸ் நாட்டின் மனித உரிமை செயற்பட்டாளருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் பெயர் யாது?
ALES BIALIATSKI - இதற்கு ரஸ்யா எதிர்ப்பு
55. 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசியக்கிண்ணப் போட்டிகள் எந்நாட்டில் இடம்பெற்றது? அதில் வெற்றி பெற்ற அணி யாது?
பங்களாதேஷ். இதில் இந்தியாவிற்கு எதிராக இலங்கை அணி வெற்றி பெற்றது.
56. ஆசிய நாடொன்றில் 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற சனநெரிசலில் 151பேர் இறந்த நாடு எது?
தென்கொரியாவின் சியோல் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றது.
57. சர்வதேச காலநிலை மாநாடு 2022ஆம் ஆண்டு எங்கு நடைபெற்றது?
எகிப்தில் இடம்பெற்றது
58. இலங்கை அணியின் வீரர் ஒருவர் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நாடு எது?
அவுஸ்ரேலியா (தனுஸ்க குணதிலக)
59. 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச T20 போட்டிகளில் சம்பியனான அணி எது?
இங்கிலாந்து அணி பாக்கிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றது.
60. உலகின் வயது கூடிய யானை ஆபிரிக்காவில் இறந்தது. அதன் பெயர் எது?
DIDA இவ் யானை கென்யாவில் Tsaro East Nationa I Park எனும் பூங்காவில் வாழ்ந்தது.
61. இலங்கை அணியின் வீரர் அவுஸ்ரேலியாவில் குழப்பத்தை ஏற்படுத்தியதன் விளைவாக ஒரு வருடம் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் யார்?
சாமிக்க கருணாரத்ன
62. மத்திய கிழக்கு நாடொன்றில் இலங்கைப் பணிப்பெண்கள் முறைகேடாக நடாத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அந்நாடு எது?
ஓமான்
63. இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பல நகரங்கள் மாசடைதலுக்கு உள்ளாகின. அந்நகரங்கள் எவை?
கொழும்பு, புத்தளம், யாழ்ப்பாணம், கண்டி, பொலன்னறுவை, குருநாகல், கேகாலை
64. 2022இல் பெரு நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவான பெண் யார்?
மமா பெலாரின்
65. ஆர்ஜெந்தினாவின் உப ஜனாதிபதி ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டு 6 சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் யார்?
கிறிஸ்டினா பெர்ணாண்டஸ்
66. 2022ஆம் ஆண்டு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளியின் பெயர் எது?
மாண்டோசு புயல்
67. இலங்கை அகதிகள் 300 பேர் செல்லும் நோக்குடன் சென்ற கப்பல் கனடா காப்பற்றப்பட்டு ஆசிய நாடொன்றில் பாதுகாத்து குறிப்பிட்ட மாதங்களின் இலங்கைக்கு அனுப்பப் பட்டனர். அகதிகள் தங்க வைக்கப்பட்ட நாடு எது?
வியட்னாம்
68. இலங்கையில் பருவகால மாற்றங்களால் ஏற்பட்ட அதிக குளிரால் கால்நடைகள் அதிகளவு மரணித்த மாகாணங்கள் எவை?
வடக்கு, கிழக்கு
69. 2022ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி ஆரம்பமான FIFA உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளில் கலந்து கொண்ட அணிகள் எத்தனை?
32 நாடுகள்
70. 22வது கால்பந்தாட்டப் போட்டிகளில் மூன்றாவது முறை சம்பியன் பட்டத்தை வென்ற அணி எது?
ஆர்ஜெந்தினா
71. 22வது கால்பந்தாட்டப் போட்டிகளில் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு தோல்வி கண்ட அணி எது?
பிரான்ஸ்
72. இந்தியாவிலிருந்து சென்ற மக்கள் குழுவினர் ஒரு நாட்டிற்குச் சென்று 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலை சர்வதேச மட்டத்தில் முக்கியம் பெறுகின்றது. மக்கள் சென்று வாழும் நாடு எது?
இலங்கை
73. இலங்கையில் தற்போது காணப்படும் காட்டின் அளவு யாது?
16%
74. ரஸ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து உக்ரேனுக்கு அதிக உதவி வழங்கிய நாடாக திகழும் நாடு எது?
ஐக்கிய அமெரிக்கா
75. பிரித்தானியா ஆரம்பித்துள்ள சர்வதேச நாடுகளை இணைத்துக் கொண்டு ஆரம்பித்துள்ள ஜனநாயக வேலைத்திட்டம் எது?
புதிய பிளாட்டினம் கூட்டுத்திட்டம்
76. ஆபிரிக்காவின் சிங்கப்பூராக மாற்றம் கண்டுள்ள நாடு எது?
ருவாண்டா
77. சீனா தனது சோசலிச அணியைப் பலப்படுத்த உருவாக்கிய திட்டம்?
பட்டுப்பாதைத் திட்டம்
78. அதிக பிரதமர்கள் ஒரே ஆண்டில் நியமிக்கப்பட்ட நாடு எது?
பிரித்தானியா
2019 முதல் 2022 யூலை வரை - பொரிஸ் ஜோன்சன்
2022 யூலை ஓக்டோபர் - வரை எலிசபெத் ட்ரஸ்
2022 ஒக்டோபர் முதல் - ரிஷி சுனக் (கன்சவேட்டிக் கட்சி) 57வது பிரதார்
79. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அடித்தளமிட்ட காரணிகள் எவை?
1. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
2. அந்நிய செலாவாணி நெருக்கடி
3. கொவிட் - 19 பெருந்தொற்று
4. பணவீக்கம் உயர்வு
5. இலங்கை மத்திய வங்கி அளவுக்கதிகமாக நாணயத்தாள்களை அச்சிட்டமை
6. இரசாயன உரங்களுக்கு பாராளுமன்றம் தடை விதித்தமை
7. அரசியல் வாதிகளின் ஊழல்
8. சர்வதேச நாணயத்திடம் உதவி பெறத் தாமதித்தமை
9. உக்ரேன் ரஸ்யப் போர்
80 (Oscar) ஒஸ்கார் விருதுகள் - 2022
சிறந்த படம் - CODA அமெரிக்கத் திரைப்படம்
சிறந்த நடிகர் - வில் சுமித்
சிறந்த நடிகை - ஜேசிக்கா சாஸ்டெய்ன்
சிறந்த இயக்குனர்- ஜேன் கேப்பிடேஷன்
06 விருதுகள் பெற்ற படம் - டியூன் அமெரிக்கப்படம்
81. 2021 ஜனவரி முதலாந் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய நாடு எது?
பிரித்தானியா
82. புதிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம் எங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது?
மன்னார்
3. 46 வது அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவானவர் யார்?
ஜோ வைடன்
84. அமெரிக்காவின் துணை ஜனாதிபதி யார்?
கமலா ஹரிஸ்
85. உலகில் கோவிட் 19 தொடர்பாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எவை?
பைசர் - அமெரிக்கா
அஸ்ரா செனக்கா - பிரித்தானியா
சைனபாம் - சீனா
ஸ்புட்னிக் - ரஸ்யா
மொடானா அமெரிக்கா
86. காலநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் சமாதான உடன்படிக்கையில் இருந்து விலகியிருந்த வல்லரசு நாடு மீண்டும் அவ் உடன்படிக்கையில் 2021 இல் இணைந்து கொண்டது. அந்நாடு எது?
அமெரிக்கா
87. காலநிலை பருவமாற்ற மாநாடு 2021ஆம் ஆண்டு உலகில் எங்கு இடம்பெற்றது?
ஸ்கொட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரம்
88. உலகின் பிரதான 04 நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றாகத் தெரிவான இலங்கையின் நீரப்பாசனத்திட்டம் எது?
உமாஓயா நிலத்தடித் திட்டம்
89. தென்கிழக்காசிய நாடொன்றில் 2021இல் மீண்டும் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகின்றது. அந்நாடு எது?
மியன்மார் (பர்மா)
90. மியன்மாரில் கைது செய்யப்பட்ட ஜனநாயகக் கட்சித் தலைவி யார்?
கொங் ஷாங் சூகி
91. 2021 பெப்ரவரியில் கொண்டாடப்பட்ட இலங்கையின் சுதந்திரதினம் எத்தனையாவது ஆகும்?
73 வது
92. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிரான குற்றப்பிரேரணை செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டது. அவர் யார்?
டொனால்ட் றம்ப்
93. இலங்கையின் வடக்கில் உள்ள 03 தீவுகளை சீனாவிற்கு இலங்கை வழங்குவதாக ஒப்பந்தம் இடம்பெற்றது. அத்தீவுகள் எந்நோக்கத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது?
சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்தல்
94. இலங்கையில் திண்மக்கழிவு மூலம் 10 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் இடம் எது?
கெரவலப்பிட்டிய (உலகின் முதல் திண்மக்கழிவு மின்சக்தி உற்பத்தி நிலையம்
95. மனிதர்களைப் பயன்படுத்தி உலகில் கோவிட் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நாடு எது?
பிரித்தானியா
96. 2021 இல் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய வளைகுடா நாடு எது?
ஐக்கிய அரபு இராச்சியம்
97. Covids எனப்படும் சர்வதேச கோவிட் ஒழிப்பிற்கான தடுப்பு மருந்தை வழங்கும் நடவடிக்கையில் 7.5 மில்லியின் தடுப்பூசிகளை வழங்கி உதவும் அமைப்பு எது?
G 7 நாடுகள் அமைப்பு
(அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி)
98. ஒரு வருடத்தில் உலகில் உற்பத்தியாகும். 17% உணவு வீணாவதுடன். 3 மில்லியன் மக்கள் பட்டினியால் வருந்துவதாகவும் கூறிய நிறுவனம் எது?
ஐக்கிய நாடுகள் சபை
99. அமேசன் நிறுவனத்தால் இலங்கையின் தேசியக்கொடியைக் கொண்ட பாதணிகள், கால்விரிப்புக்கள் எந்நாட்டில் விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது?
சீனா
100. சீனா தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி ஆசிய நாடொன்றின் தேர்தல் முறையை மாற்ற முயற்சித்ததாகக் கூறப்பட்டது. அவ்வாசிய நாடு எது?
ஹொங்ஹொங்