Type Here to Get Search Results !

சிங்கப்பூரின் 58 தேசிய தினம் 06-08-2023 - National day of singapore 2023

 National Day of Singapore



சிங்கப்பூரின் தேசிய நாள் (National Day of Singapore) ஆண்டுதோறும் ஆகத்து 9 ஆம் நாள் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெற்றதை நினைவுகூரும் நாள் ஆகும். இவ்விடுமுறை நாளில் தேசிய நாள் அணிவகுப்பு. பிரதமரின் உரை, வான வேடிக்கைகள் ஆகியன் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன.



சிங்கப்பூரின் தேசிய தினம்

1819-யில், தாமஸ் ஸ்டம்போர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரைக் கண்டறிந்தபோது, அது ஒரு சிறிய மீன்பிடி இராமமாக இருந்தது. ஆனால், மலேயாவின் (தற்போதைய மலேசியா) தெற்கில் இருந்த அது, அதன் சாதகமான புவியல் இடத்தின் காரணத்தால், பெரும் லாபத்தை ஈட்டும் வர்த்தக துறைமுகமாக அமையும் என அவர் உணர்ந்தார். ஆகையால், ராஃபில்ஸ், ஜொஹொரின் சுல்தானுடன், ப்ரிட்டிஷ் இழக்கிந்தியா நிறுவனத்தின் சார்பில், ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார். அதன் பிறகு, சுல்தான் ஹுஸேனின் அனுமதியுடன் சிங்கப்பூர், ப்ரிட்டிஷின் வர்த்தக நிறுவனங்களிள் ஒன்றாக மாறியது. ராஃபில்ஸ், சிங்கப்பூருக்கு வருவதற்கு முன், சிங்கையில் 1000 பேர் மட்டுமே இருந்தனர். அதில் பெரும்பாசானோர் மலாய்க்காரர்கள். ஆனால், 1860-களில், சிங்கப்பூரின் மக்கள் தொகை அதிவெகுவாகவே 80000-த்தை மிஞ்சியது. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் சீனர்கள். நிறைய வெளிநாட்டர்கள், சிங்கப்பூரின் செழிப்பான ரப்பர் தோட்டத்தில் வேலை செய்வதற்கே வந்தனர். 1870-க்கு பிறகு, சிங்கப்பூர் உலகலவில் ஒரு ரப்பர் ஏற்றுமதி மையமாக முன்னேறியது.


அதன் பொருளாதாரம் முன்னேறிக்கொண்டே இருந்த வேளையில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது. அப்போது, ஜப்பானியர்கள் ப்ரிட்டிஷின் பிரதேசங்களை தாக்கி ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அவர்கள் மலேசியாவை ப்ரிட்டிஷிடமிருந்து கைப்பற்றியதைத் தொடந்து, சிங்கப்பூரின் மேல் தாக்குதல்களை நடத்தியது. இராணுவ பலத்தையும், மன பசத்தையும் இழந்த ஆங்கிலேயர்கள், ஜப்பானியர்களிடம் 1942-யில் பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி சரணடைந்தது.


ஜப்பானிய ஆக்கிரமப்பின் காலம், சிங்கப்பூரர்கள் மிகவும் அவதிப்பட்டக் காலம் எனக்கூறலாம். ஜப்பானிய இராணுவ வீரர்கள், சிங்கப்பூர் மக்களை, குறிப்பாக சீனர்களை, மிகவும் கடுமையானகவும் மோசமாகவும் நடத்தினர். கண்டிப்பாக இருந்த அவர்கள், அவர்களுக்கு பிடிக்காததை செய்தால், உடனடியாக மரண தண்டனையை வழங்கினர். மேலும், அவர்களுக்கு எதிராக வேலை செய்பவரைக் கண்டறிந்தால், அவர்கள் தேவைப் படும் தகவல்களை கூறுவது வரையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஆக்கிரமிப்பின் வேளையில் நிறையப் பேர் கொல்லப்பட்டனர்; பலர் தங்களின் குடும்பத்தினரையும் அன்புக்கூறியவர்களையும் இழந்தனர்.


1945-யின் செப்டம்பர் மாதத்தில், ஜப்பானியர்கள் சரணடைந்ததால், சிங்கப்பூர் மீண்டும் ப்ரிட்டிஷின் அட்சிக்கு திரும்பியது. ஜப்பானியர்கள் போய்விட்டார்கள் என்று மகிழ்ந்தாலும், பலர், ப்ரிட்டிஷின் மோசமான பாதுகாப்பை எண்ணி கோபித்துக்கொண்டனர். சிங்கப்பூரில், கம்யூனிசம் பரவவும் ஆரம்பித்தது. கம்யூனிசத் தாக்கமே, சிங்கப்பூரில் பிறகு நடந்த மரியா ஹெர்டொக், ஹொக் லீ ஆகிய கலவரங்களுக்கு வழிவகுத்ததது.


1955 ஆம் ஆண்டு, தொழிலாளர் முன்னணி கட்சியின் சுதந்திர தலைவர், டேவிட் மார்ஷல் சிங்கப்பூரின் முதல் பொதுத்தேர்தலில் வெற்றி வெற்றார். ஆனால், அவரால் ப்ரிட்டிஷை சிங்கப்பூருக்கு சுதந்திரம் அளிக்க சம்மதிக்க வைக்க முடியவில்லை. அவருக்கு அடுத்து, லிம் யூ ஹொக் அந்நிலையில் அமர்த்தப்பட்டார். அவரால், ப்ரிட்டிஷிடம் சிங்கப்பூருக்கு தன்னாட்சி (self-government) அளிப்பதற்கு சம்மதிக்க வைத்தார். தன்னாட்சி என்றால் அனைத்து அம்சங்களையும் சிங்கப்பூரே தானாக கவணித்துக்கொள்ளலாம். ஆனால், நாட்டு பாதுகாப்பையும் வெளிநாட்டின் தொடர்புகளையும் விஷயங்களையும் பற்றி ப்ரிட்டிஷ் அரசாங்கமே பார்த்துக்கொள்ளவதே ஒப்பந்தம்.


1959 மே மாதம், முழு உட்புற தன்னாட்சியை பெற்ற சிங்கப்பூரின் பொது தேர்தலில் மக்கள் செயலாளர் கட்சியே அபார வெற்றியைப் பெற்றது. லீ குவான் யூ, சிங்கப்பூரின் முதல் பிரதமர் ஆனார்.


31 அகஸ்ட் 1963, பெரும்பாளன மக்களின் சம்மந்தத்துடன் மலேயாவுடன் மலேசியாவை அமைத்தது. ஆனால், சிங்கப்பூரின் மாநில  அரசாங்கத்திற்கும், மலேசிய அரசாங்கத்திற்கும் பல அரசாங்க, பொருளாதார கருத்துவேறுபாடுகள் இருந்தன.


ஆகையால், மலேசிய, சிங்கப்பூரை வெளியேறுமாருக் கேட்டுக் கொண்டது.

9 ஆகஸ்ட் 1965 அன்று, சிங்கப்பூர் சுதந்திரம்  பெற்றது. அதுவே நமது தேசிய தினமாகக் கொண்டாடுகிறோம்.



அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு வருடமும்  ஆகஸ்ட் 9-ஆம் தேதி, சிங்கப்பூரின் பிறந்தநாளை நாம் கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு வருடமும், கடந்த வருதத்தில் கண்ட வளர்ச்சியை எண்ணி மேலும் மேலும் வியப்போடும், பெருமையோடும் இந்நாளைக் கொண்டாடுகிறோம். இவ்வருடம் சிங்கப்பூரின் 50-வது பிறந்தநாளை நாம் அனைவரும் பெருமையுடன் கொண்டாடுகிறோம்


சிங்கப்பூரின் மொத்த பாதுகாப்பு தினம்

ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி சுகந்திரம் கிடைத்தது. இந்த நாளை சிங்கபூரர்கள் தேசிய தினமாக கொண்டாடுகின்றனர். ஆனால், ஆண்டுதூரும் பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி அன்று ஜப்பானியர்கள் 1942-இல் சிங்கப்பூரை ஆக்கிரமிப்பு செய்த நாளைநினைவு கூறுகின்றனர் என்பது உங்களுக்கு தெர்யுமா? இத்தினத்தை 'மொத்த பாதுகாப்பு தினம்', அதாவது Total Defence Day , என்ற பெயரோடு, வருடம் தவறாமல் சிங்கபூரர்களால் அனுசரிக்கப்படுகிறது.


மொத்த பாதுகப்பு தினத்தின் சின்னம்


இத்தினதைக் ஞாபகத்தில் வைத்து கொள்வதற்கு பல்வேறு காரனம்கள் உண்டு. ஜப்பானியர்களை எதிர்த்து போராடி, வீர மரணத்தை எதிர்நோக்கிய  நம் இராணுவ வீரர்களையும் அவர்களின் மதிப்புமிக்க பணியையும் பங்காரளையும் நினைவுகூர்ந்து பாராட்ட சிங்கபூரர்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர். நம் நாடு இன்று உள்ள உயர்ந்த நிலையை அடைய உதவியவர்களை ஞாபகம் கொள்ளவதே அவர்களுக்கு கட்டும் மரியாதையை அல்லவா? மேலும், இன்றுள்ள சிங்கபூரின் பாதுகாப்பான நிலையை எண்ணி பெருமை பாடவும் செய்கிறது. ஜப்பானிய ஆக்கிரமிப்பின் பொது இருந்த சிங்கபூரிலிருந்து நாம் இன்றுவரை கண்ட அபார வளரிசியையும் இந்நாள் வலியுறுத்துகிறது.


ஆல், மேல்கூறப்பட்ட காரணங்களுடன், மொத்த பாதுகாப்பு தினத்தின் இன்னொரு அதிமுக்கியமான நோக்கம் ஒன்று உள்ளாது: நமது பாதுகாப்பும் மந்து நாட்டின் பாதுகாப்பும் நம் கைகளில் தாந இருக்கிறது என்பதை சிங்கப்பூரர்களுக்கு உணர்த்துவதே ஆகும்.


தற்போது பாதுகாப்பாக தானே உள்ளோம் என்ற அலட்சியத்தை சிங்கப்பூரர்களின் மனதிலிருந்து நீக்கி ஒவ்வொரு நொடியும் சுற்றுப்புரத்தைன் மீது கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தி கூறவே இந்நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகிறது.


சிங்கப்பூருக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களின் பல எதிர்பாராத வடிவங்களில் வர முடியும். பயங்கரவாத திட்டங்களும் தாக்குதல்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. பயணிகள் தெரிந்தோ தெரியாமலோ நோய்களை பரப்பிவிடலாம். ஒரு உணர்வற்ற செயல் அல்லது சொல், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, சமூக பதட்டம் தூண்டி பொது மக்களிடயே சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தலாம். உலக பொருளாதார நெருக்கடி ஒன்று, ஒரு உள்நாட்டு பொருளாதார சிக்கலாக மாற இயலும். இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றம், சக்தி, நீர் மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக, திருட்டு, சட்டவிரோத புலம்பெயர்வு, மற்றும் இணைய குற்றம், இன்று நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பரவலான மற்ற உதாரணங்கள். இது போன்ற சவால்களுக்கு பதிலடி கொடுக்க ஒவ்வொரு சிங்கப்பூரர்களின் பங்கும் தேவைப்படுகிறது - இளையோர் மற்றும் முதியோர், ஆண்கள் மற்றும் பெண்கள், இனம் அல்லது மதம் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு சிறிய செயலும் நமது பாதுகாப்புக்கு முக்கியம்.


பெயர் உணர்த்துவதுப் போல, மொத்த பாதுகாப்பு தினம் நாம் பல்வேறு அம்சங்களிலும் நம் நாட்டைப் பாதுகாத்து, மொத்த பாதுகாப்பை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது. முழு பாதுகாப்பு 5 அம்சங்களாக பிரிக்கப் படுகிறது.


1.        இராணுவ பாதுகாப்பு

நமது மீது தாக்குதல்களை நிறுத்தவும், தாக்கிய போது, நம்மை பாதுகாக்கவும், நாம் ஒரு வலுவான இராணுவ பாதுகாப்பை வளர்ச்செய்ய வேண்டும். அதனால் தான், நமது Singapore Armed Forces (SAF), என்கிற இராணுவ படைகள் உள்ளது. SAF அதுமட்டுமல்லாமல், 18 வயது எட்டிய ஆண் குடிமக்கள் தேசிய சேவை 2 வருடங்களுக்கு புரிய வேண்டும். இதனால், ஆபத்து நேரத்தின் போது, SAF-யில் இருக்கும் இராணுவர்களுடன் தேசிய சேவை புரிந்தவர்களும் நாட்டை தாக்குதல்களிலிருந்து காக்கலாம். தாய்மார்களும், சகோதிரிகளும், மனைவிகளும் இவர்களுக்கு ஆதரவு அளித்து உதவலாம்.


2.        சிவில் பாதுகாப்பு - நெருக்கடி காலத்தில் நம்மை சுற்றியிருக்கும் நம் குடும்பம், நண்பர்கள் மற்றும் மக்கள் கவனிப்பது


3.       பொருளாதார பாதுகாப்பு - ஒரு வலுவான மற்றும் நெகிழ்திறன் பொருளாதாரம் கொண்ட நாடாக விளங்குவது.


4.       சமூக பாதுகாப்பு- ஒர் ஒற்றுமையான சமூகமாகவும் இணநல்லிணக்கத்துடனும் வாழ்வது. சுயனலத்துடன் இல்லாமல், மற்றவர்களிடம் அன்பாகவும் பரிவாகவும் பழகினால் தான்


5.       உளவியல் பாதுகாப்பு - மன உறுதியுடன் இருப்பது


இவ்வைந்து அம்சங்களும், ஒவ்வொருவரும் நமது நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு வகையிலாவது பங்களிக்கலாம் என்பதை உணர்த்துகிறது.



மொத்த பாதுகாப்பு தினத்தின் 5 தூண்கள்: இராணுவ பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு, பொருளாதார பாதுகப்பு, சமூக பாதுகாப்பு, உளவியல் பாதுகாப்பு


இந்நாள் அன்று, மாலை 6.20-க்கு சிங்கப்புரின் அவசர ஒலிகள் ஒலிக்கப்படும். 10 உள்ளூர் வானொலி நிலையங்களிலும் ஒரே நேரத்தில், ஒவ்வொறு ஒலியின் அர்த்தமும், அவற்றின் முக்கியத்துமும் விளக்கப் படும். உண்மையான ஆபத்து நேரங்களின் போது இவ்வொளிகளைக் கேட்டவுடன் என்ன செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் வசிக்கும் ஒவ்வொறுவரும் அறிந்திருக்க வேண்டும் என்பதே இப்பயிற்சியின் குறிக்கோளாகும்.


3: சிங்கப்பூரின் தேசிய சின்னங்கள் (பாகம் 1)

ஒவ்வொறு நாட்டிற்கும் தனிப்பட்ட தேசிய சின்னங்கள் இருக்கும். சிங்கப்பூரின் தேசிய சின்னங்கள் யாவை?


சிங்கப்பூரின் தேசிய கீதம், உறுதிமொழி, தேசிய கொடி ஆகிய மூன்றைப் பற்றியும் காணலாம்.



 தேசிய கீதம்

“Majulah Singapura” என்கிற நமது தேசிய கீதம், 1958-யில் என்சிக் சுபிர் (Encik Zubir) என்பவரால் இசையமைக்கப்பட்டது. முதல் முதலாக சிங்கப்பூர் அறை குழுமத்தில் வாசிக்கப்பட்ட அக்கீதம், இரண்டாவது முறையாக 1959-யில் டிசம்பர் 3-ஆம் தேதி, மீண்டும் வாசிக்கப்பட்டது. ஆனால், இம்முறை அது சிங்கப்பூரின் அதிகாரத்துவமான தேசிய கீதமாக வாசிக்கப்பட்டது.


மலாய் மொழியில் இக்கீதம் எழுதப்பட்டது. “Majulah Singapura” என்னும் வரி, மலாய் மொழியில், “முன்னேறு சிங்கப்பூர்” என்கிற அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இதை எழுதும் போது, சிங்கப்பூரை முன்னேற ஊக்குவிக்கும் விதத்திலும் அனைவரும் புரியும் அளவுக்கு எளிமையான முறையிலும் எழுதுவதில் கவனம் செலுத்தியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார், திரு. சுபிர் அவர்கள்.


இதுவே சிங்கப்பூரின் தேசிய கீதம்:


Majulah Singapura
Mari kita rakyat Singapura
Sama-sama menuju bahagia
Cita-cita kita yang mulia
Berjaya Singapura
Marilah kita bersatu
Dengan semangat yang baru
Semua kita berseru
Majulah Singapura
Majulah Singapura!



2.    தேசிய உறுதிமொழி

1950-களிலும், 1960-களிலும் தான் சிங்கப்பூரில் அதிகமான இண சம்மந்தப்பட்ட கலவரங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1965-யில் சுதந்திரம் பெற்ற சிங்கப்பூரில், இனங்கள், மற்றும் மதங்களில் சேர்ந்த  சிங்கப்பூரர்களுக்கு பொது அடையாளம் பெற வேண்டிய நிலைமை உடனடி அவசியமாக திகழ்ந்தது. இதற்கான முதல் படி, ஒரு தேசிய உறுதிமொழியே.


சிங்கப்பூரின் உறுதிமொழி திரு. சி. ராஜரத்தினத்தால் எழுதப்பட்டது. நமது உறுதிமொழி, நாம் அனிவரும் மதம், இணம் ஆகியவற்றை பார்க்காமல், ஒற்றுமையாக, சமத்துவமும் நீதியும் நிறைந்த மகிழ்ச்சியான, வெற்றிகறமான நாடாக முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தி, ஊக்குவிக்கிறது.


முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உறுதிமொழி, சிங்கப்பூரின் மற்ற 3 தேசிய மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. நமது உறுதிமொழியை (ஆங்கிலத்திலும் தமிழிலும்) கீழ் காணலாம்:


We, the citizens of Singapore,

pledge ourselves as one united people,
regardless of race, language or religion,
to build a democratic society
based on justice and equality
so as to achieve happiness, prosperity and
progress for our nation.


சிங்கப்பூர் குடிமக்களாகிய நாம், இனம், மொழி, மதம்

ஆகிய வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபட்டு, நம் நாடு

மகிழ்ச்சி, வளம், முன்னேற்றம் ஆகியவற்றை அடையும்

வண்ணம் சமத்துவத்தையும், நீதியையும்

அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக

சமுதாயத்தை உருவாக்குவதற்கு

உறுதி மேற்கொள்வோம்.


சிங்கப்பூரர்கள் உறுதிமொழியை, தேசிய விசுவாசத்தை குறிக்கும் வகையில், தங்கள் மார்ப்பின் இடதுப்பக்கத்தில் தங்களின் வலது கைகளை வைத்துக்கொண்டே ஒப்பிக்கவேண்டும்.



3.    தேசியக் கொடி

ஓர் தேசத்தின் கொடி, அதன் மாநில அந்தஸ்த்து, அதன் கொள்கைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் பிரதிப்பதில் ஒரு முக்கிய பங்கை ஆற்றுகிறது. சிங்கப்பூரின் தேசியக் கொடியைப் பற்றிய தெளிவான யோசனையைக் கொண்டிருந்தார், துணைப்பிரதமர் டாக்டர். தொ சின் சை. பல ஆலோசனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் பிறகு, இறுதி வடிவமைப்பு முடிவு செய்யப்பட்டது. முதல் முதலாக, 1959-யில் டிசம்பர் 3-ஆம் தேதி சிட்டி ஹால் சேம்பர்ஸில், சிங்கப்பூரின் கொடி வெளியிடப்பட்டது. 1965-யில், சுதந்திரத்தை முன்னிட்டு அது அதிகாரத்துவமாக சிங்கையின் கொடியாக ஏற்கப்பட்டது.


தேசியக் கொடி இரண்டுப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேல் பிரிவு சிவப்பு நிறத்தையும், கீழ் பகுதி வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளன. சிவப்பு பகுதியில், ஒரு வெள்ளை அறைச்சந்திரன் உள்ளது. அச்சந்திரனுக்கு பக்கத்தில் 5 வெள்ளை நட்சத்திரங்கள் வட்டவடிவில் இருக்கின்றன.


கொடியின் மேல் சிவப்பு பகுதி, உலக சகோதரத்துவத்தையும், மனித சமத்துவத்தையும், கீழ் வெள்ளைப் பகுதி, நீடிநிலைத்திருக்கும் பவித்திரத்தன்மையையும் நல்லொழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றன. கொடியின் அறை சந்திரன், இளந்தேசம் உச்சிக்கு முன்னேறுவதையும் பிரதிபலிக்கின்றது. 5 நட்சத்திரங்களும், சிங்கப்பூர் அடய இலக்காகக் கொண்டிருக்கும் 5 பண்புகளைக் குறிக்கின்றன. அவ்வைந்து பண்புகள் இவையே: ஜனநாயகம், அமைதி, முன்னேற்றம், நீதி, சமத்துவம்.


நமது கொடியை சிங்கப்பூரர்களாக, மதிப்புடனும் கௌரவத்துடனும் கையாளுவது அவசியம். சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், சிங்கப்பூரர்கள், குறிப்பாக கட்டடங்களில் வாழ்போர், தேசிய கொடியை வீட்டிற்கு வெளியே கட்டித் தொங்கவிட்டிருப்பதைக் காணலாம்.


How old is Singapore in 2023?

58


Why do we celebrate National Day in Singapore?


National Day in Singapore is celebrated every year on 9 August, commemorating Singapore's independence from Malaysia in 1965. The main event of the holiday is arguably the much-loved National Day Parade, as well as the address by the Prime Minister of Singapore and a fireworks celebration.


When was the first National Day of Singapore?

9 August 1966


What is the short form of Singapore National Day?

The Singapore National Day Parade (Abbreviation: NDP) is a national ceremony in Singapore. It includes a parade on Singapore's National Day on August 9 to celebrate Singapore's independence.


How old is Singapore as a country?

Since its independence in 9 August 1965, the country has adopted a parliamentary democracy system. Currently, the government and the cabinet are led by Prime Minister, Lee Hsien Loong while President Halimah Yacob is the Head of State.


What is Singapore also known as?

Singapore—known variously as the “Lion City” or “Garden City,” the latter for its many parks and tree-lined streets—has also been called “instant Asia” because it offers the tourist an expeditious glimpse into the cultures brought to it by immigrants from all parts of Asia.


What is unique of Singapore?


Singapore is among the 20 smallest countries in the world, with a total land area of only 682.7 square kilometers. The United States is about 15,000 times bigger. The red of Singapore's flag represents universal brotherhood and equality of man while the white symbolizes purity and virtue.


What is the famous food of Singapore?

Some well-known Singaporean hawker or kopitiam dishes includes kaya toast, chilli crab, fish head curry, laksa, roti prata and Hainanese chicken rice, which is widely considered to be one of Singapore's national dishes.


Who ruled Singapore?

The Colony of Singapore was a British Crown colony that encompassed the island of modern-day Singapore from 1946 to 1958. It was created after the dissolution of the Straits Settlements shortly after Japanese occupation of Singapore ended.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad