Type Here to Get Search Results !

ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் விருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் - 2023

ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் விருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்

ஒரு குழந்தையின் “வளர்ச்சி” எனப்படுவது, குழந்தையின் உயரத்திலும் நிறையிலும் ஏற்படும் மீளா அதிகரிப்பாகும். இங்கு வளரச்சி வேகத்தில் தனியாள் வேறுபாடுகள் காணப்படுகின்றன.



குழந்தையின் “விருத்தி” எனப்படுவது, குழந்தையின் வயது அதிகரித்துக் கொண்டு செல்லும் போது குழந்தையின் உருவத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு மேலதிகமாக அவருள் அபிவிருத்தியடைகின்ற சிக்கல் நிறைந்த திறன்கள் காரணமாக ஏற்படும் மாற்றமாகும். 


ஒரு குழந்தையின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற காரணிகளை பிரதானமாக 03 வகையாகப் பிரிக்கலாம் அவையாவன,

பரம்பரைக் காரணிகள் 

சூழல் காரணிகள்

முதிர்ச்சியும் கற்றலும்


பரம்பரை

இயல்புகள் ஒரு பரம்பரையிலிருந்து இன்னொரு பரம்பரைக்கு மரபணுக்க;டாக கடத்தப்படும் செயற்பாடு “பரம்பரை” எனப்படும். பிள்ளைகள் கருத்தரிக்கும் போது பெற்றோர்களினூடாக பிறப்புரிமையாக்கிக் கொள்ளும் காரணிகள் பரம்பரைக் காரணிகள் எனப்படும். குழந்தையானது தாயின் வயிற்றில் ஒரு கருவாக உண்டாகும் போதே நிறவூர்;த்தங்கள் மூலம் பரம்பரைக் இயல்புகள் அக் குழந்தையின் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு கடத்தப்படுகிறது. 


பரம்பரை இயல்புகள் மூலம் கடத்தப்படும் அம்சங்கள்

தோலின் நிறம், கண்களின் அமைப்பு, முடியின் அமைப்பு, உயரம் போன்ற உடல் இலட்சணங்கள்


சங்கீதம், நுண்ணறிவு போன்ற ஆற்றல்கள்


உடல் நோய்கள் (இதய நோய், நீரிழிவு Nநூய்)


உடற் குறைபாடுகள் (பார்வைக் குறைபாடு, கேட்டற் குறைபாடு, மந்த புத்தி)


சூழல்

பொதுவாக குழந்தை வளர்ச்சி மற்றும் விருத்தியில் பரம்பரை எனும் எண்ணக்கருவுக்கு சம அளவில் சூழலும் செல்வாக்குச் செலுத்துகிறது. ஒருவரின் பிறப்பிற்கு பின்னுள்ள சூழலைப் போன்று பிறப்பிற்கு முன்னுள்ள சூழலும் அவரது வளர்ச்சியிலும் விருத்தியிலும் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றது.

பிறப்புக்கு முன்னுள்ள சூழல்

குழந்தையின் பிறப்புக்கு முன்னுள்ள சூழலைக் கருதுவோமாயின், இது அகச் சூழல் எனவும் அழைக்கப்படுகின்றது. இவ் அகச் சூழல் தாயின் கருப்பையையே குறிக்கிறது. ஒரு குழந்தை கருவுற்றது முதல் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரைக்கும் இவ் அகச் சூழலில் வாழ்கிறது. குழந்தையானது தாயின் கருப்பையில் இருக்கும் போது பின்வரும் விடயங்கள் அக் குழந்தையின் சீரான வளர்ச்சி மற்றும் சீரான விருத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. 


1. தாய் சிறந்த உடல் நலத்துடன் இருத்தல்

2. தாய் போசாக்கான உணவுகளை உட்கொள்ளல்

3. தாயின் சிறந்த மன எழுச்சிகள்

4. தாயின் நேர் மனப்பாங்குகள்

குழந்தை கருவில் இருக்கும் போது தாய் மேற்கொள்ளும் பின்வரும் செயற்பாடுகள் குழந்தையின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.


1. போதைப் பொருட் பாவனை

2. ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணல்

3. அதிகமாகப் பயப்படுதல்

4. எதிர் மனப்பாங்குடன் இருத்தல்

5. எந்த நேரமும் சோகமான நினைவுகளுடன் இருத்தல்

6. வியாதியுற்றிருத்தல்

7. அதிகளவில் மருந்துப் பொருட்களைப் பாவித்தல்


உடல,; உள மற்றும் மனவெழுச்சி ரீதியில் ஆரோக்கியமான தாய் ஒருவராலேயே சீரான வளர்ச்சி, விருத்தி கொண்ட ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும். 


பிறப்புக்கு பின்னுள்ள சூழல்

பிறந்த பின் ஒரு குழந்தை வழும் சூழல் “பிறப்புக்கு பின்னுள்ள சூழல்” எனப்படும். ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் விருத்தியில் பிறப்புக்கு பின் உள்ள சூழலின் செல்வாக்கானது அக் குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தது முதல் ஆரம்பிக்கின்றது. ஒரு சூழலில் காணப்படும் தூண்டிகள் மூலம் பிள்ளையின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டாலேயே அது “பிள்ளையின் சூழல்” ஆக அமையும்.


பிறப்புக்குப் பின்னுள்ள சூழலானது பொதுவாக இருவகைப்படுத்தப்படுகிறது.

1. பௌதீகச் சூழல்

2. சமூகச் சூழல் 

பௌதீகச் சூழல்

இங்கு குழந்தையின் பௌதீகச் சூழல் எனப்படுவது குழந்தையைச் சுற்pறக் காணப்படுகின்ற பொருட்களைக் குறிக்கின்றது. குழந்தைகள் தாம் விரும்பியபடி விளையாட்டுப் பொருட்கள், பேணிகள், போத்தல் மூடிகள், துணிகள் போன்ற பொருட்களுடன் பிள்ளை சுதந்திரமாக விளையாடும் போது அவற்றின் நிறங்கள், உருவங்கள், தன்மைகள், அளவுகள்  தொடர்பாக தனது புலன்களினூடு அறிந்து தனது அறிவை விருத்தி செய்து கொள்கின்றது. மேலும் பிளளை அப் பொருட்கள் தொடர்பாக வினாக்களை எழுப்பும் போது சமூத்திலுள்ளவர்கள் பின்ளைக்கு உரிய பதில்களை விளங்கிக் கொள்ளக்கூடியவாறு அளிப்பார்களேயானால் அச் சூழல் பிள்ளையின் விருத்திக்கு ஏற்றதாக அமையும்.


சமூகச் சூழல்

பிள்ளையின் சமூகச் சூழல் எனப்படுவது பிள்ளையைச் சூழவுள்ள மனிதர்களையே குறிக்கின்றது. இச் சமூகச் சூழலில் பின்வருவோர் உள்ளடங்குவர்.

பிள்ளையின் பெற்றோர் 

சகோதரர்கள் 

உறவினர்கள் 

அயலவர்கள்

நண்பர்கள் 

ஆசிரியர்கள் 


மேற்குறிப்பிட்டவர்களின் செல்வாக்கானது பிள்ளையின் நடத்தை மாற்றத்தில் அதிமாகக் காணப்படுகின்றது. இச் சமூகத்திலுள்ளவர்களைப் பார்த்தேர் அல்லது அவர்களது வழிநடத்துதலுக்கமைவாகவோ பிள்ளை அன்பு செலுத்துதல், ஏனையவர்களுடன் பேசும் விதம், உதவுதல், விட்டுக்கொடுத்தல், இடத்தின் தன்மைக்கமைய செயற்படுதல், நேர முகாமைத்துவம் போன்ற திறன்களை தன்னுள் வளர்த்துக்கொள்கின்றது. 


மேலும் சமூகச் சூழலிலிருந்து பிள்ளைக்கு தூணடலை ஏற்படுத்துகின்ற அல்லது பிள்ளை கற்றுக்கொள்கின்ற அனைத்து விடயங்களும் பிள்ளையின்; வளர்ச்சியிலும் விருத்தியிலும் நேரான அதிகரிப்பை ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் இச் சமூகத்தில் தவறான முன்னுதாரணங்களும் இருக்கத் தான் செய்கின்றன. உதாரணமாக பிளளையின் குடும்பத்தில் பெற்றோருக்கிடையில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுமாயின் பிள்ளை குடும்பம் தொடர்பாக தவறான புரிதலைப் பெற்றுக்கொள்வதுடன் அதன் மனவெழுச்சிகளும் மறையானதாகக் காணப்படும்.


முதிர்ச்சியும் கற்றலும்

ஒரு மனிதனில் முதிர்சியினால் கற்றல் நடைபெறுமே தவிர கற்றலினால் முதிர்வு ஏற்படாது. எனினும் முதிர்ச்சியும் கற்றலும் ஒன்றுடனொன்று மிகவும் நெருங்கிய எண்ணக்கருக்களாகும். பிள்ளை குறிப்பிட்ட ஒரு விடயத்தைக் கற்பதற்கு பொருததமான முதிர்ச்சியை அடைந்திருக்க வேண்டும்.

முதிர்ச்சி என்பது மரபியல் ரீதியான நிகழ்ச்சித் திட்டத்திற்கமைவாக வயது அதிகரிப்புடன் பிள்ளையின் நடத்தையில் மாற்றம் ஏற்படும் செயற்பாடாகும். 

கற்றல் என்பது பிள்ளை தனது புறச் சூழலிலிருந்து புலனுறுப்புகள் மூலம் தூண்டலைப் பெற்று அதன்படி தனது நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்.


முதிர்வானது பிள்ளை கருவில இருக்கும் போதே ஆரம்பமாகிறது. அந்த வகையில் பிள்ளை பிறக்கும் போது அதன் முதிர்ச்சி குறித்த மட்டத்தில் காணப்படும்.


முதிர்ச்சியினூடாகப் பிள்ளையினிடத்தில் புதிய இயல்புகளும் புதிய தொழிற்பாடுகளும் தோன்றுகின்றன. பிள்ளையின் வயது அதிகரிக்கும் போது வெவ்வேறு வகையான ஆகாரங்களை சமிபாடடையச் செய்தல், நடத்தல் போன்ற செயற்பாடுகள் முதிர்ச்சியின் விளைவாகவே ஏற்படுகின்றது. பிளளைக்கு எவ்வளவுதான் பயிற்சியளித்தாலும் குறித்த வயதை அடையும் வரை நடக்கமாட்டாது. நடப்பதற்கு ஏற்ற முதிர்ச்சி வந்தவுடன் பிளளை கற்றலினால் நடக்கப் பழகுகின்றது. 


பிள்ளை உரிய முதிர்ச்சியை அடைந்த பின் பேசத் தொடங்குகிறது. பெரியவர்கள் அப் பிள்ளையுடன்  பேசும் போது பிள்ளையானது தனது பேசும் திறனை மேலும் விருத்தி செய்யும் வகையில் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்குகிறது. பொருட்களை கடிப்பது, கைகளை உயர்த்துதல் போன்ற செயற்பாடுகளுககு பிள்ளைக்கு முதிர்ச்சியேயன்றி கற்றல் அவரியமில்லை. ஆனால் எழுதுதல், கத்தரியால் வெட்டுதல் போன்ற திறன்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் விருத்தி செய்வதற்கும் கற்றல் மிகவும் அவசியமாகும். 


முதிர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் சம வயது எல்லைக்குள் காணப்படும். ஆனால் வளர்ச்சி வேகமானது ஆளுக்காள் வேறுபடுவதால் முதிர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்களை எல்லாரிலும் ஒரே நேரத்தில் காண முடிவதில்லை.   


குழந்தையின் வளர்ச்சி மற்றும் விருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் ஏனைய காரணிகள்

பால் நிலை

குடும்பத்தினரின் செல்வாக்கு

ஊட்டச் சத்து

சமூக பொருளாதார நிலைமை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad