ஆடி அமாவாசை யாருக்கு திதி கொடுப்பது
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை விரதமானது தமிழர்கள் மத்தியில் மிக முக்கிய விரத நாளாகும். அதுவும் குறிப்பாக தந்தை இல்லாதவர்கள் அனுஸ்டிக்கும் விரதநாளாகும்.
அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேலும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு ‘ பிதுர் கடன்’ கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும் என்பதும் நம்பிக்கை.
அந்த வகையில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை. அதன்படி இந்த ஆடி மாதம் 2 அமாவாசை உள்ளது.
அதில் ஆடி, 31-ம் திகதி, அதாவது ஓகஸ்ட் 16ம் திகதி வரும் அமாவாசையை கடைபிடிக்க வேண்டும். அமாவாசை திதி ஓகஸ்ட் 15 செவ்வாய்க்கிழமை மதியம் 12.42 மணிக்கு தொடங்குகிறது.
அடுத்த நாள் ஓகஸ்ட் 16 மதியம் 3.07 வரை அமாவாசை திதி உள்ளது. எனவே சூரிய உதயம் அடிப்படையில் ஓகஸ்ட் 16-ம் திகதி அமாவாசை கணக்கிடப்படுகிறது. ஓகஸ்ட் 16ம் திகதி காலை ஸ்நானம், தானம் செய்வதற்கான நேரம் தொடங்குகிறது.
காலை 5.51 முதல் 9.08 வரை நீராடி தானம் செய்யலாம். அதிகாலை 4.24 முதல் 5.07 வரை பிரம்ம முஹூர்த்தம் இருக்கும். காலை நீராடிவிட்டு, பூணூல் அணிந்து முன்னோர்களை வணங்கி கருப்பு எள், நீர் வைத்து வழிபட வேண்டும்.
ஆடி அமாவாசை தினத்தில் பிண்ட தானம், அன்னதானம், பஞ்சபலி கர்மா போன்றவை செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
எனவே இந்த பித்ரு தோஷ பரிகாரங்களை ஆடி அமாவாசை அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை செய்ய வேண்டும்.
அமாவாசை நாளில் செய்யவேண்டியவை
அமாவாசை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே கடற்கரை, மகாநதிகள், ஆறுகள், குளங்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் தர வேண்டும்.
பித்ருக்களுக்கு பூஜை செய்து, அந்தணர்களுக்கு பூசணிக்காய், வாழைக்காய், போன்ற காய்கறிகள் தானம் கொடுக்க வேண்டும்.
பின்னர் வீட்டில் இருக்கும் முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்து பிறகே சாப்பிட வேண்டும்.
ஆடி அமாவாசை தினம் கோடி சூரிய கிரகணத்திற்கு சமம். எனவே நீர் நிலைகளுக்கு சென்று பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி, வீட்டிலோ அல்லது சிவன் கோயிலிலோ வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.
வினாவிடைகள்
அமாவாசை என்றால் என்ன?
'அமா' என்பது ஒரிடத்திற்கு பொருந்தியது, குவிந்தது, அடுத்தது என்ற பொருள் தருவதாகும். ஒரு ராசிக்கு சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உருவாகும் ராசியான நாள் அமாவாசை எனப்படும். சூரியனும், சந்திரனும் ஆற்றல்மிக்கவர்கள்.
ஆடி அமாவாசை எது?
ஆடி மாதம் :
சூரிய பகவான், தெற்கு திசையில் தனது ரதத்தை செலுத்தும் மாதமாகும். மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு சூரிய பகவான் மாறும் காலமே ஆடி மாதமாகும். இந்த மாதத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாள் ஆடி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
ஆடி அமாவாசை எந்த தேதியில் வருகிறது?
காரணம், இந்த ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள் வருகின்றன. அதாவது ஆடி மாதத்தில் முதல் நாள் ஆடி 1 - ம் தேதி (ஜூலை - 17) அன்றும் ஆடி 31-ம் தேதி (ஆகஸ்ட் -16) அன்றும் அமாவாசை தினமாக அமைகின்றன. பொதுவாக இதுபோன்று இரண்டு அமாவாசைகள் வரும் மாதத்தை அதிக மாதம் என்பார்கள். அதிக மாதங்கள் அனைத்துமே முன்னோர்கள் வழிபாட்டுக்கானவை.
ஆடி அமாவாசை சிறப்பு என்ன?
ஆடி அமாவாசையானது மறைந்த நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்படும் நாளாகும். எனவேதான் தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னோர்களுக்கு படையல்: அமாவாசை நாளில் நாம் சைவ உணவுகளை பெரும்பாலும் சமைக்க வேண்டும்.
ஆடி அமாவாசைக்கு என்ன செய்ய வேண்டும்?
எனவே ஆடி அமாவாசையில் முன்னோர் வழிபாட்டைச் செய்யுங்கள். அன்றைய தினம் அன்னதானம் செய்தால் நம்முடைய முன்னோர்களின் ஆசி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் செய்த தர்ப்பண வழிபாட்டால், பித்ருக்களின் பாவங்கள் தொலையும். புண்ணியங்கள் பெருகும்.
அமாவாசை என்றால் என்ன?
'அமா' என்பது ஒரிடத்திற்கு பொருந்தியது, குவிந்தது, அடுத்தது என்ற பொருள் தருவதாகும். ஒரு ராசிக்கு சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உருவாகும் ராசியான நாள் அமாவாசை எனப்படும். சூரியனும், சந்திரனும் ஆற்றல்மிக்கவர்கள்.
ஆடி அமாவாசை யாருக்கு திதி கொடுப்பது எப்படி?
ஆடி அமாவாசை ...தாயை அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்த ஆண்கள் ஆடி அமாவாசை நாளில் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன் ஆகியோர் ஆடி அமாவாசையில் விரதம் இருக்கலாம்.