Type Here to Get Search Results !

Bank Exams Questions with answers -2023

 



Q1.வங்கி என்பது என்ன?

சேம்பரின் இருபதாம் நூற்றாண்டு அகாராதியின் (Dictionary) கூற்றுப்படி, வங்கி என்பது “பணத்தை தன்னகத்தே வைத்துக் கொள்வதற்கும், கடன் கொடுப்பதற்கும் மற்றும் பரிவர்தனை போன்றவற்றை செய்யும் நிறுவனமாகும்.


Q2. வணிக வங்கி என்றால் என்ன?

வணிக வங்கி (Commercial bank) என்பது வாடிக்கையாளர் ஒருவருக்கு காசோலை வரைவதன் மூலம் தனது வைப்புக்களை மீளப் பெறும் உரிமையினை வழங்கும் நிறுவனம் ஆகும். இதுவும் ஒருவகை வங்கியியல் முறைமையாகும். இவற்றின் நடவடிக்கைகள் நாடுகளின் சட்டத்தினாலும் மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்தப்படும்.


Q3.உலக வங்கியின் முக்கிய செயல்பாடுகள் என்ன?

உலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர வறுமையைக் குறைப்பதாகும். இதன் அனைத்து முடிவுகளும் வெளி முதலீடு, பன்னாட்டு வணிகம் ஆகியவற்றை முன்னேற்றுவதிலும் முதலீட்டு நிதியை அமைத்துத் தருவதிலும் ஈடுபாடு கொண்டவையாக இருக்க வேண்டும். வாசிங்டன், டி. சி., அமெரிக்கா


Q4.உலக வங்கியின் தலைமையகம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

Detailed Solution. உ லக வங்கியின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி நகரத்தில் அமைந்துள்ளது.


Q5.வங்கி நிறுவனம் என்றால் என்ன?

கடன் நிறுவனம் அல்லது வைப்புத்தொகை நிறுவனம் போன்ற பிற பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஒரு வங்கி நிறுவனம் அதன் பொதுவான பெயரான வங்கியால் நன்கு அறியப்படுகிறது.


Q6.சர்வதேச நாணய நிதியம் என்றால் என்ன?

சர்வதேச நாணய நிதியம் (IMF) என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும், இது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கிறது, சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது மற்றும் வறுமையைக் குறைக்கிறது. உறுப்பு நாடுகளின் ஒதுக்கீடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் முடிவுகளில் வாக்களிக்கும் சக்தியின் முக்கிய நிர்ணயம் ஆகும்.


Q7.உலக வங்கியின் தலைவர் யார்?

உலக வங்கியின் தற்போதைய தலைவராக டேவிட் மால்பஸ் உள்ளார். இவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் மூலம் பரிந்துரை செய்யப்பட்டவர்.


Q8.உலக வங்கி எந்த நாட்டில் உள்ளது?

உலக வங்கியும் உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன.


Q9.வணிக சமநிலை என்றால் என்ன?

வணிகச் சமநிலை என்றால் என்ன? ஒரு நாட்டின் ஏற்றுமதிகளின் மதிப்பீட்டுக்கும் இறக்கும திகளின் மதிப்பீட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு வணிகச் சமநிலை எனப்படும்.


Q10.அயல் நாட்டு வாணிபம் என்றால் என்ன?

அனைத்துலக வணிகம், நாடுகளிடை வணிகம் அல்லது பன்னாட்டு வணிகம் (International trade) என்பது நாடுகளின் ஆட்சிப் பகுதிகளை அல்லது அவற்றின் எல்லைகளைக் கடந்து நடைபெறுகின்ற, பொருள்கள், சேவைகள் ஆகியவற்றின் பரிமாற்றங்களைக் குறிக்கும். பல நாடுகளில் இவ்வணிகம் அவற்றின் மொத்த தேசிய உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad