Type Here to Get Search Results !

இலங்கையின் மிக முக்கிய சுற்றுலா தளங்கள் / Best Tourist Places In Sri Lanka /2023

 இலங்கையின் மிக முக்கிய சுற்றுலா தளங்கள் இவை தான்..! Best Tourist Places In Sri Lanka Tamil


ஆசியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தள நாடுகளில் இலங்கை மிக முக்கிய இடத்தில் உள்ளது.

தெற்காசிய நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையானது இந்து சமுத்திரத்தின் மத்தியில் இந்தியாவிற்கு தெற்கே அமைந்துள்ளது. இலங்கை ஏராளமான சுற்றுலா இடங்களுக்கு பெயர் பெற்றது.


குறிப்பாக கலாசாரங்கள் முதல் இயற்கை அழகு, சாகச நடவடிக்கைகள் மற்றும் அழகான கடற்கரைகள் வரை அனைத்தையும் கொண்டிருக்கிறது.

இலங்கைக்கு வேறு பல வெளிநாட்டவர்கள் வருகை தந்தாலும் சுற்றுலாப் பயணிகளில் கணிசமான தொகையினர் புகலிடத் தமிழர் ஆவர். அவர்கள் தமது தாயகத்தைப் பார்ப்பதற்காக இலங்கைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் பெரும்பான்மையோர் நாட்டில் உள்ள சுற்றுலா தளங்களின் பூரண விளக்கமின்றி அதிகம் இன்னல்படுகின்றனர்.


அந்தவகையில், இலங்கையின் மிக முக்கிய 05 சுற்றுலா தளங்கள் பற்றி பார்ப்போம் Top 5 Best Tourist Places In Sri Lanka Tamil


Mihintale மிகிந்தலை

இலங்கையில் உள்ள எச்சக்குன்றுகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் மண் உள்ளீர்க்கப்பட்டு, இத்தகைய எச்சக்குன்றுகள் உருவாகின்றன.


மகிந்த தேரரின் வருகைக்குப் பின் இந்த எச்சக்குன்றுகள் புண்ணிய இடமாக மாற்றம் பெற்றன. இதனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள், புதை பொருட்கள் என்பன இங்கு காணப்படுகின்றன அநுராதபுரத்திலிருந்து 8 கிலோ மீற்றர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.


இதன் அமைவிடம் வடக்கில் 80 பாகை ஆகவும் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தனிமையான மலைக்குன்றுப் பகுதியாகவும் காணப்படுகின்றது இதில் மிகிந்தலை மலை, எத்வெகர மலை, ஆனைக்குட்டி மலை மற்றும் ராஜகலலென மலை ஆகிய நான்கு மலைகள் உள்ளடங்கியுள்ளன.


Sinharaja Forest Reserve சிங்கராஜா வனம்



இது இலங்கையின் சபரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி , மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் தொடக்கம் 1170 மீட்டர் உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும்.


இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் உலக உரிமைத்தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளிடையே மிகப் பிரபலமான தளங்களில் ஒன்றாகும்.


    யால தேசிய வனம்    



இலங்கையிலுள்ள தேசிய வனங்களுள் ஒன்றாகும். மிகுந்த சுற்றுலாப் பயணிகள் செல்லும், பரப்பளவில் இரண்டாவது பெரிய தேசிய வனம் இதுவே ஆகும்.

ஐந்து பிரிவுகளைக் கொண்ட இத்தேசிய வனத்தில் இரண்டு பிரிவுகளே பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. இக்காட்டினை அண்டியதாக வேறு சில காடுகளும் காணப்படுகின்றன. யால தேசிய வனத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் காணப்படுகின்றன. அதன் முதலாவது பிரிவு உறுகுண தேசிய வனம் எனப்படுகிறது. அதனுடன் சேர்ந்தாற் போல இருக்கும் காடு குமண தேசிய வனம் அல்லது யால கிழக்கு வனம் ஆகும்.

இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 300 கிலோமீட்டர் (190 மைல்) தொலைவில் காணப்படும் இக்காடு மொத்தமாக 979 சதுர கி.மீ (378 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது.


இவ்வனம் ஈரலிப்பான பருவப் பெயர்ச்சிக் காடுகள், நன்னீர் ஈரநிலங்கள் மற்றும் கடல்சார் ஈரநிலங்கள் போன்ற பல்வேறு வகையான சூழலியற் பகுதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.


இலங்கையின் முக்கிய பறவைகள் வாழிடங்கள் எழுபதில் இதுவும் ஒன்றாகும்.


யால தேசிய வனத்தில் வாழும் 215 பறவையினங்களுள் ஆறு இனங்கள் இலங்கைக்குத் தனிச் சிறப்பானவையாகும் 2009 ஆம் ஆண்டு இக்காட்டின் உட்பகுதியின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட பின்னர் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு கூடியுள்ளது.


பாசிக்குடா(Pasikudah)



மட்டக்களப்பிலிருந்து 35 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோர பிரதேசமாகும். வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட இவ்விடம் இலங்கையின் மிகவும் அழகான கடற்கரைகளுள் ஒன்று ஆகும்.


அலைகளின் அகோரமில்லாத, ஆழமில்லாத விசாலமான கடற்பரப்பு, முருகைக்கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும், கிடுகுகளால் அழகுற,நேர்த்தியாக வேயப்பட்ட “கபாணா” என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும், பாசிக்குடாவின் சிறப்புக்களாகும் புகழ்பெற்ற உல்லாச பயணிகளைக் கவரும் இடமாகும்.


இது ஈழப் போர் இடம் பெற்றதனால் இதன் உல்லாச பயணிகளை இழந்தது. தற்போது ஈழப் போர் முடிவுற்றதும் இப்பகுதி உல்லாச பயணிகளை உள்வாங்கும் இடமாக மாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Arugam Bay Beach   அறுகம் குடா



இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசமாகும் அறுகம் குடா கொழும்பிலிருந்து 317 கிமீ தொலைவில் உள்ளது.


அறுகம் குடாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கு தேவையான சூழ்நிலை காணப்படுவதனால் அதிக சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பத்திற்குரிய இடமாக காணப்படுகின்றது.


அலைச்சறுக்கு விளையாட்டுச் சாகசங்கள் நிகழ்த்துவதற்குச் சாதகமான அலைகள் அறுகம் குடாக் கடலில் எழுகின்றன. அறுகம் குடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அலைச்சறுக்கு விளையாடுவதற்கு 10 இடங்கள் உள்ளன.


ஏப்ரல் முதல் ஒக்டோபர் வரையிலான மாதங்கள் இங்கு அலைச்சறுக்கு விளையாட்டு செய்ய ஏற்றதாக உள்ளது.


ஏனையவை பின்னர் இணைக்கப்படும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad