Type Here to Get Search Results !

இத்தாலி வரலாறு என்ன? - history of Italy #Italy_gk

 இத்தாலி  வரலாறு என்ன

இத்தாலியக் குடியரசு அல்லது இத்தாலி  (இத்தாலிய மொழி:  Repubblica Italiana அல்லது Italia - இட்டாலியா) தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்பப் பகுதியையும், மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். 


இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும், இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஜி8, ஜி20 ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. 


உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் முதன்மையான நாடுகளில் இதுவும் ஒன்று. இத்தாலியின் தலைநகரான உரோம் நகரம் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளது.


இத்தாலி  மொழிகள் என்ன?


இத்தாலிய மொழியே இத்தாலியின் ஆட்சி மொழியாகும். ஐந்தரை கோடி மக்கள் இம்மொழியை தாய்மொழியாகப் பேசுவதாக அறியப்படுகிறது. இருப்பினும் உலகளவில் 15 கோடி மக்கள் இம்மொழியை பேசுவதாக கணிக்கப்படுகிறது. 

நாடு முழுவதும் பல வட்டார வழக்குகள் உள்ளன. சிறுபான்மையினரின் மொழிகளும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆட்சிமொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, செருமன் மொழிகள் சில வட்டாரங்களில் பேசப்படுகின்றன.  இத்தாலிய மொழியுடன் சிறுபான்மையினரின் மொழிகளிலும் கல்வி பயில வாய்ப்பு உள்ளது.


இத்தாலி  சமயம் என்ன? 


கிறித்தவமே பிரதான சமயமாகும். பிற சமயத்தினர் குறைவான விகிதத்திலேயே வாழ்கின்றனர். கத்தோலிக்கக் கிறித்தவமே பலரால் கடைப்பிடிக்கப்படுகிறது.


இத்தாலி  விளையாட்டு என்ன?

கால்பந்தாட்டமே பிரதான விளையாட்டாகும். உலகக் கால்பந்தாட்டக் கோப்பையிலும் இத்தாலி கலந்துகொண்டு கோப்பைகளை வென்றுள்ளது. கைப்பந்தும், கூடைப்பந்தும் முக்கியமான விளையாட்டுகளாகும்.


இத்தாலி  தலைநகரம் என்ன?

     ரோம்


இத்தாலி நாட்டின் நாணயம் என்ன?

Euro, யூரோ


இத்தாலி எந்த கண்டம் என்ன?

தெற்கு ஐரோப்பாவில் 


1870 ம் ஏற்பட்டது ஆண்டு இத்தாலிய இணைவு எவ்வாறு?

இத்தாலி இணைக்கப்படல்  1870 இல் ஜேர்மன்-பிரான்ஸ் போர் காரணமாக ரோமில் பாப்பரசருக்கு ஆதரவாக பிரான்ஸ் வைத்திருந்த படையணி மீளப்பெறப்பட்டதன் காரணமாக உரோம் போரின்றி இத்தாலியுடன் இணைக்கப்பட்டது. இவ்வாறாக இத்தாலி என்றொரு புதிய தேசம் உருவாக்கப்பட்டது.


இத்தாலி நாட்டின் ஆட்சி மொழி(கள்)

இத்தாலிய மொழி


இத்தாலி நாட்டின் குடியரசுத் தலைவர் ?

செர்சியோ மத்தெரெல்லா


இத்தாலி நாட்டின்  மொத்தம் பரப்பு  என்ன?

301,318 km2 (116,340 sq mi)


இத்தாலி நாட்டின் அரசாங்கம் என்ன?

நாடாளுமன்றக் குடியரசு


இத்தாலி நாட்டின்  அழைப்புக்குறி என்ன?

39

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad