இலங்கையின் தேசிய மரம் / National tree of Sri Lanka / ජාතික ගස ශ්රී ලංකා
நாகமரம் (Mesua ferrea) எனப்படுவது நாகமரவினத் தாவரம் ஒன்றாகும். இத்தாவரத்தின் வடிவம், இதன் இலையமைப்பு, நறுமணம் மிக்க பூக்கள், வலிமையான பலகை என்பவற்றுக்காக இது அயன மண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.இலங்கையின் அயன மண்டலப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இது இந்தியாவின் அசாம் மாநிலம், தென் நேபாளம், இந்தோசீனா, மலாயத் தீபகற்கம் என்பவற்றிற்க்கு பயிரிடப்படுகிறது. இதுவே இலங்கையின் "தேசிய மரம்" ஆகும்.
நாக மரத்தை தேசிய மரமாக அறிவிப்பதற்கான பிரேரனையொன்று 1986 பெப்ரவரி 26 ஆந் திகதி அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமூக மற்றும் கலாச்சார ரீதியாக இலங்கை பல நூற்றாண்டுகளாக நாக மரத்துடன் நெருக்கமான தொடர்புகள் உள்ளன. இது 7 காரணங்களுக்காக தேசிய மரமாக தேர்வு செய்யப்பட்டது.
இலங்கையின் தேசிய மலர்
1986 பெப்ரவரி 26 ம் திகதி இலங்கையின் தேசிய மலராகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இப் பூவானது இலங்கையின் எந்தவொரு நீரோடையிலும் பரந்து வளரக்கூடியதாகும். நீலோற்பம், நீலாம்பல், நீலத்தாமரை என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இலங்கையில் எழுதப்பட்ட பௌத்த இலக்கியங்களில் இப்பூ பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அத்துடன் சிகிரியா ஒவியங்களில் பெண்களின் கைகளை இப்பூ அலங்கரிக்கின்றது.
நீல அல்லி, நீலாம்பல் அல்லது நெய்தல் மலர் இலங்கையின் தேசிய மலர் ஆகும். நீலாம்பல் இலங்கையின் தேசிய மலராக 26 பெப்ரவரி 1986 இல் அறிவிக்கப்பட்டது. இப்பூ ஆங்கிலத்தில் blue lotus, red and blue water lily, blue star water lily அல்லது manel flower என அழைக்கப்படும். இதன் தாவரவியல் பெயர் நிம்மியா நுச்சாலி (Nymphaea nouchali) ஆகும். இம்மலரின் தாயகம் தென் மற்றும் கிழக்கு ஆசியாவாகும்.
இலங்கையில் இது தடாகங்களிலும் இயற்கை ஈர நிலங்களிலும் வளர்கிறது. இது பற்றி சமஸ்கிரத, பாளி, சிங்கள மொழி இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்புராதன இலங்கியங்கள் இதனை குவளையா, இந்திவரா, நிலுப்பல, நிலோத்பல, நிலுபுல் என்ற பெயர்களில் குறிப்பிடுகிறது. இது ஒழுக்கம், தன்னடக்கம், தூய்மை ஆகியவற்றின் அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இலங்கையின் பௌத்த மரபு இம்மலர் இளவரசர் சித்தார்த்தனின் (புத்தர்) பாதச்சுவட்டில் உள்ள 108 நற்குறிகளில் ஒன்று எனக் குறிப்பிடுகிறது.
புத்தர் இறந்தது பின், அவர் வாழ்நாளில் நடந்த இடங்களில் எல்லாம் தாமரை பூத்தது என சொல்லப்படுகிறது. வரலாறு முதல் இலங்கையின் சமயச்சடங்குளில் இம்மலர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கை மரபு மற்றும் கலாச்சார விழாக்களில் அலங்கார மலரா நீலாம்பல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் தாவரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் கிழங்கு மற்றும் இதர பகுதிகள் உணவாக உண்ணப்படுகிறது.
பேராசிரியர் நந்ததாச கொடகொட மற்றும் இரு தாவவியலாளர்கள் கொண்ட குழு தேசிய மலரை தெரிவிப்பதற்காக நியமிக்கப்பட்டனர். செய்தித்தாள்களும் தேசிய மலர் பற்றி மக்களிடம் கருத்துக் கேட்டது. தாமரை, அலரி ஆகிய மலர்களும் பரிந்துரைக்கப்பட்டன. அமைச்சரவை அங்கிகாரம் பெற்று பெப்ரவரி 1986 இல் நீல அல்லி இலங்கையின் தேசிய மலர் என அறிவிக்கப்பட்டது.
இலங்கையின் தேசிய விளையாட்டு
இலங்கையின் தேசிய விளையாட்டு கைப்பந்தாட்டம், எனினும் மிகப்பிரபலமான விளையாட்டாகத் துடுப்பாட்டம் காணப்படுகிறது. ரக்பி, கால்பந்தாட்டம், டெனிசு, தடகள விளையாட்டுக்களும் ஓரளவு பிரபலமானவை. இங்கு பாடசாலை மாணவர்களிற்கு மாகாண, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.
இலங்கைத் துடுப்பாட்ட அணி 1990களின் பின்னர் குறிப்பிடத்தக்களவு வெற்றியைப் பன்னாட்டளவில் பெறத் தொடங்கியது, உச்சக்கட்டமாக 1996 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையையும் 2014 ஆம் ஆண்டு ஐசிசி உலக இருபது20 கோப்பையையும் வென்றது, 2007, 2011 உலகக்கிண்ண துடுப்பாட்ட போட்டிகளிலும் 2009, 2012 ஐசிசி உலக இருபது20 போட்டிகளிலும் 2ஆம் இடத்தைப் பெற்றது. 1986, 1997, 2004,2008 ஆம் ஆண்டுகளில் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது. 1996, 2011 ஆண்டுகளில் உலகக்கிண்ண போட்டிகளைப் பிறநாடுகளுடன் இணைந்து நடாத்தியது, 2012 ஐசிசி உலக இருபது20 போட்டிகைளையும் நடத்தியிருக்கிறது.
இலங்கைக்கு இதுவரை இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் கிடைத்துள்ளன, ஒரு வெள்ளிப்பதக்கம் டங்கன் வைட்டிற்கு 1948 இலண்டன் ஒலிம்பிக்கில் 400மீ தடைதாண்டி ஓட்டத்திற்காகவும் மற்றொரு வெள்ளிப்பதக்கம் சுசந்திகா ஜயசிங்கவிற்கு 200மீ ஓட்டத்திற்காகச் சிட்னி ஒலிம்பிக்கிலும் கிடைத்தன