உலக பொது அறிவு வினா விடை 2023 part-2
1. அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது செயற்கை கோளின் பெயர் என்ன?
ராவணா – 1 (Ravana – 1)
2. அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட நேபாளத்தின் முதலாவது செயற்கைக்கோளின் பெயர் என்ன?
“நேபாளிசேட் – 1” (Nepalisat -1)
3. அண்மையில் நாசாவைச் சேர்ந்த Tess (Transiting Exoplanent Survey Satellite) பூமியின் அளவை கொண்ட எந்த கிரகத்தை கண்டறிந்துள்ளது?
“HD217496”
4. பிரான்சில் நடைபெற்ற 43-வது பாரிஸ் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனை யாவர்?
ஆப்ரா மிஃலா, கெலட் புர்ஃகா
5. சனிக்கிரகத்தின் மிகப்பெரிய துணைக் கோளான ‘டைட்டனில்’ அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு எது?
மீத்தேன் ஏரி
6. எண்ணெய் படிவுகளை உண்ணும் புதிய பாக்டீரியா இனம் கட்டுபிடிக்கப்பட்டது எந்த பகுதியில்?
மரியானா அகழி (11,000 மீட்டர் ஆழத்தில்)
7. சமீபத்தில் ஆசியாவிலேயே முதன்முறையாக முற்றிலுமாக மாணவிகளே உருவாக்கிய செயற்கைக்கோள் எது?
“எஸ்.கே.ஐ.என்.எஸ்.எல்.வி.9 (‘SKINSLV 9′) மணியம்மையார் சாட்”
8. சமீபத்தில் உலகின் முதல் வாஸ்குலர்ஜிடேல் பொறிக்கப்பட்ட 3D இதயத்தை தயாரித்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் யார்?
“டெல் அலிவ் ஆராய்ச்சியாளர்கள்” (இஸ்ரேல்)
9. சமீபத்தில் ICICI – யானது ATM எந்திரம் மூலமாக எவ்வளவு ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
15 லட்சம் வரை
10.சமீபத்தில் செவ்வாய் கிரக பாறையில் துளையிட்டு ஆய்வு செய்து அமெரிக்க ஆய்வு கலம் எது?
கியூரியாசிட்டி
11.சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தில் கோப்பையை வென்ற வீரர் யார்?
லீவிஸ் ஹாமில்டன்
12.சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓமன் பேட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
கென்டோ மோமோட்டா (ஜப்பான்)
13.”அரசாங்க தகவல் திணைக்களம்” எந்த அமைச்சின் கீழ் இயங்குகிறது? அத்துடன் இந்த திணைக்களம் எத்தனையாம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்டது?
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு. 1948
14.இலங்கை அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களமானது தனது 100வது வருட நிறைவை எந்த ஆண்டில் கொண்டாடியது?
2004
15.ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப் படுகிறது?
இலங்கை , இந்தியா (Srilanka, India)
16.அண்மையில் LMD சஞ்சிகையினால் “The 100 club” தரப்படுத்தலில் பாரிய சில்லறை விற்பனை நிறுவனமாக வர்த்தக துறையில் முன்னணி வகிப்பது தொடர்பில் கௌரவப்படுத்தப்பட்ட நிறுவனம் எது?
Singer Sri Lanka PLC
17.இலங்கையில் 1995ம் ஆண்டு 28.8% ஆக காணப்பட்ட வறுமை வீதமானது 2016ம் ஆண்டாகும்போது 4.1 வீதமாக குறைவடைந்துள்ளது. அதிகூடிய வறுமை வீதம் கூடிய மாகாணம் எது? ஆகக்குறைந்தளவு வறுமை வீதம் கொண்ட மாகாணம் எது?
வறுமை கூடிய மாகாணம் – வடக்கு, வறுமை குறைந்தது – மேற்கு
18.முதன்முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன ?
சோபியா, சவுதி அரேபியா
19.தனது தலைநகரை மாற்றவுள்ள நாடு எது?
இந்தோனேசியா, போர்னியோ
20.”கிரிக்கெட்டில்” உலக அளவில் ஊழல்கள் நிதி மோசடிகள் நிகழும் நாடுகளில் முதன்மை இடத்தைக் கொண்ட நாடு எது?
மேற்கிந்தியா