Type Here to Get Search Results !

கண்டி இராச்சியம் வரலாறு - 2023 Kingdom of Kandy

 

கண்டி இராச்சியம்
கண்டி இராச்சியம்

கண்டி இராச்சியத்தின் அமைவிடம்?

கண்டி இராச்சியம் இலங்கையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது.

இதன் தலைநகரம் செங்கடகல என அழைக்கப்பட்டது.

சிதுருவான (உடு நுவர/ உடபலாத்த)இ பலவிட்ட (ஹரிஸ்பத்துவ), மாத்தளை, தும்பறை, சகமதுன்ரட்ட (வலப்பன/ ஹேவாஹெட்ட)

பஞ்ச மலைநாடுஇ செங்கடகல இராச்சியம்இ ஸ்ரீவர்த்தன புர  கண்டி                 மஹ நுவரஇ செங்கடகலபுரய என்பன கண்டி இராச்சியத்தின் மறுபெயர்களாகும்

இலங்கையின் கரையோரம் அந்நியர் ஆட்சிக்குட்பட்ட காலத்திலும் கண்டி இராச்சியம் தனது சுதந்திரத்தை பாதுகாத்து நின்றது.

காரணம் இதன் அமைவிடம்இ மலைகள்இ நதிகள்/ நீர் நிலைகள் மற்றும் காடுகள் என பல இயற்கையான பாதுகாப்பு அரண்களை கொண்டு காணப்பட்டது.

கண்டி நகருக்கு பாதுகாப்பு வழங்கிய நதி மகாவலி கங்கை ஆகும்.

பல சூழ்சிகளினை மேற்கொண்ட ஆங்கிலேயர் தங்களின் பிரித்தாளும் கொள்கையாலும், தந்திரத்துடனும் செயற்பட்டு கண்டி இராச்சியத்தினை 1815ம் ஆண்டு கைப்பற்றினார்கள்.

கண்டி இராச்சியத்தின் தோற்றம்?

6ம் பராக்கிரமபாகு (ஜோதிய இளவரசன்)

ஆரம்ப காலத்தில் உருகுனை போல மலை நாடான கண்டி இராச்சியத்தினையூம் பல இலங்கை மன்னர்கள் பாதுகாப்பினை கருதி இங்கு வந்து படைநடவெடிக்கையிகளில் ஈடுபட்டனர்.

கண்டி இராச்சியம் 15ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தோற்றம் பெற்றது.

6ம் பராக்கிரமபாகு மன்னன் கோட்டை இராசதானியினை ஆட்சி செய்த போது கண்டி பிரதேசத்தினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஜோதிய எனும் இளவரசனை அதற்குப் பெறுப்பாக நியமித்தான்.

ஜோதிய இளவரசன் 6ம் பராக்கிரமபாகு மன்னனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட கிளர்ச்சி செய்த போதும் அது 6ம் பராக்கிரபாகு மன்னனால் கட்டுப்படுத்தப்பட்டது.


கண்டி இராச்சியத்தின் எழுச்சி மற்றும் மன்னர்கள்?

6ம் பராக்கிரமபாகு (ஜோதிய இளவரசன்)

கண்டி இராச்சியம் 15ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தோற்றம் பெற்றது.

6ம் பராக்கிரமபாகு மன்னன் கோட்டை இராசதானியினை ஆட்சி செய்த போது கண்டி பிரதேசத்தினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஜோதிய எனும் இளவரசனை அதற்குப் பெறுப்பாக நியமித்தான்.

ஜோதிய இளவரசன் 6ம் பராக்கிரமபாகு மன்னனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட கிளர்ச்சி செய்த போதும் அது 6ம் பராக்கிரபாகு மன்னனால் கட்டுப்படுத்தப்பட்டது. இக்கிளர்ச்சியினை கட்டுப்படுத்த அனுப்பப்பட்டவன் இளவரசன் அம்புலுகல குமாரன் ஆவான்.

சேனா சம்மத விக்கிரமபாகு (1469 – 1511)

1469ம் ஆண்டு சேனாசம்மத விக்கிரமபாகு கிளர்ச்சி ஒன்றை செய்து கண்டி இராச்சியத்தினை விடுவித்துக் கொண்டு தனி இராச்சியமாக ஆட்சி செய்தான்.

இக் காலத்தில் கண்டி இரச்சியமானது கம்பளைஇ சிதுறுவானஇ தெநுவரஇ பலவிடஇ மாத்தளைஇ பன்சிய பத்துவஇ ஊவா ஆகிய பகுதிகளே கண்டி இராச்சியமாகும்.

கண்டியினை சுதந்திர இராச்சியமாக்குவதில் வெற்றி கொண்டான்.

இவனுடைய காலத்திலே போர்த்துக்கேயர் கோட்டை இராச்சியத்திற்குள் வந்தனர் (1505ம் ஆண்டு).

ஜயவீர பண்டாரன் (1511 - 1551)

சேனா சம்மத விக்கிரமபாகுவின் மகனாவான்.

கரலியத்தபண்டாரன் (1551 - 1582)

ஜயவீர பண்டாரவின் மகனாவான். இவன் போர்த்துகோயருக்கு ஆதரவான முறையில் நடந்து கொண்டான்.

1ம் இராஜசிங்கன் (சீதாவாக்கை மன்னன்) (1582 - 1591)

கண்டியின் அரசப் பிரதிநிதியாக (சான்மத) வீர சுந்தர பண்டார என்பவனை நியமித்தான்.

வீர சுந்தர பண்டார இராஜசிங்கனுக்கு எதிராக நடந்தான் என கூறி அவனை கொலை செய்தான் 1ம் இராஜசிங்கன்.


கண்டி இராச்சியமும் போர்த்துக்கோயரும்

யமசிங்க பண்டாரன் (1592)

1ம் விமதர்ம சு+ரியன் (1592 – 1604)

செனரத் (1604 - 1635)

கண்டி இராச்சியமும் ஒல்லாந்தரும்

2ம் இராஜசிங்கன் (1635 - 1687)

2ம் விமலதர்ம சு+ரியன் (1687 - 1707)

ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்கன் (1707 - 1739)

நாயக்க வம்ச மன்னர்கள்

ஸ்ரீ விஜய இராஜசிங்கன் (1739 - 1747)

கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் (1747 - 1781)


கண்டி இராச்சியமும் ஆங்கிலேயரும்

இராஜாதி இராஜசிங்கன் (1781 - 1798)

கண்டி இராச்சியத்தின் வீழ்ச்சி

ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் (1798 - 1815)


கண்டி இராச்சியம் முதல் மன்னன்

எல்லைகள் கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815) அமையப்பெற்ற மத்திய மலைநாடானது மலைகளாலும், ஆறுகளாலும், காடுகளாலும், நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருந்தது.

இலங்கையின் இறுதி சிங்கள மன்னன்

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 - ஜனவரி 30, 1832) இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன் ஆவார்.

கண்டி இராச்சியத்தின் முதல் மன்னன் யார்?

இதன் வரலாறு, 1337 தொடக்கம் 1374 வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று கண்டி என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது. கண்டியின் ஆட்சி முறைக்கமைய நாட்டின் அனைத்துத் துறைகளினதும் அதிபதி மன்னன் ஆவான். அவன் இலங்கேஸ்வர, திரிசிங்கலாதீஸ்வர எனவும் அழைக்கப்பட்டான்.

சரியான தருனம் பார்த்திருந்த ஆங்கிலேயர் 1815ம் ஆண்டில் கண்டி இராச்சியத்தினை மிக இலகுவாக வெற்றி கொண்டனர்.


கண்டி மன்னர் பட்டியல்

கீழே வருவது 1473 முதல் 1815 வரைகண்டி அரசை ஆண்ட மன்னர்களின் பட்டியல் ஆகும். இவ்வரசானது, கோட்டை அரசின் அரசியல் பிரமுகனான சேனா சம்மத விக்கிரமபாகுவால் ஆரம்பிக்கப்பட்டது. கோட்டையை ஆண்ட ஸ்ரீசங்கபோதி வமிசம், தினஜார வமிசம், கண்டி நாயக்கர் வமிசம் ஆகிய மூன்று அரச கொடிவழிகளால் கண்டி அரசு ஆளப்பட்டது. தினஜார, கோட்டை அரசு ஆகியவற்றின் கால எல்லைகள் மிகத்திருத்தமானவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்ரீசங்கபோதி வமிசம் (1473–1592)

பெயர்ஆட்சி ஆரம்பம்ஆட்சி முடிவுகுறிப்புகள்
சேனா சம்மத விக்கிரமபாகு14731511கோட்டை அரசின் பிரதிநிதி
ஜெயவீர ஆஸ்தானன்1511    1551    

சேனா சம்மத விக்கிரமபாகுவின் மைந்தன்



கரலியத்தே பண்டாரன்


15511581    ஜெயவீரனின் மகன்
தோனா கதரீனா
 (குசுமாசனதேவி)
15811581கரலியத்தே பண்டாரன் மகள்

முதலாம் ராஜசிங்கன்


1581    1591    சீதாவாக்கை மன்னன். குசுமாசனையை அகற்றி ஆட்சியைக் கைப்பிடித்தான்

 

தினஜார வமிசம் (1590–1739)

பெயர்ஆட்சி ஆரம்பம்ஆட்சி முடிவுகுறிப்புகள் 
முதலாம் விமலதர்மசூரியன்15901604    விஜயசுந்தர பண்டாரன் மகன்
செனரத் மன்னன்1604    1635    விமலதர்மசூரியனின் ஒன்று விட்ட சகோதரன்
    இரண்டாம் இராஜசிங்கன்16351687செனரத்துக்கும் குசுமாசனைக்கும் பிறந்தவன்
இரண்டாம் விமலதர்மசூரியன்1687    1707    இரண்டாம் இராஜசிங்கன் மகன்

வீர         நரேந்திரசிங்கன்


1707    1739    இரண்டாம் விமலதருமன் மைந்தன்


கண்டி நாயக்கர் (1739–1815)

பெயர் ஆட்சி ஆரம்பம் ஆட்சி முடிவு குறிப்புகள் 
ஸ்ரீ விஜய ராஜசிங்கன் 1739      1747     நரேந்திர சிங்கன் மைத்துனன்
கீர்த்தி சிறீ இராஜசிங்கன் 1747      1782     விஜய ராஜசிங்கன் மனைவியின் தமையன்
சிறீ இராஜாதி இராஜசிங்கன் 1782 1798      கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் தமையன்
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1798      1815     இராஜாதி ராஜசிங்கன் மைத்துனன்



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad