Type Here to Get Search Results !

இலங்கையின் விவசாயம்

அறிமுகம் இலங்கை புராதன காலநதொட்டே விவசாய நாடாகும். எமது முன்னோர்கள் சூழலுக்கு இசைவான வகையில் விவசாயத்தோடு இணைந்த வாழ்க்கை முறையினூடாக தன்னிறைவுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. மேலைத்தேயத்தவரின் வருகையின் பின்னர் இலங்கையின் விவசாய நடவடிக்கைகளில் வர்த்தக பயிர்ச்செய்கைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டமையால் புராதன பயிர்ச் செய்கை வீழ்ச்சியடைந்ததோடு பல்வேறு பிரச்சினைகளும் அதனூடாகத் தோற்றம் பெற்றன. சுதந்திரத்தின் பின் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றின் தீய விளைவுகளை இன்றும் காணக் கூடியதாகவுள்ளன. பண்டையக் காலத்தில் இலங்கை விவசாயத்தில் தன்னிறைவு அடைந்தமைக்கான சான்றுகள் உள்ளன.



தற்போதும் இலங்கை விவசாய நாடாகவே காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கைகள் சூழலோடு இணைந்தவாறே மேற்கொள்ளப்பட்டன. மேலைத்தேயவர்களின் வருகைக்குப் பின்னர் இலங்கையின் விவசாய நடவடிக்கைகளில் வர்த்தக பயிர்ச்செய்கைளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. இதனால் புராதான மரபு ரீதியிலான பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்ததோடு பல்வேறு பிரச்சினைகளும் அதனூடாக தோற்றம் பெற்றன. சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்திலும் இப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் முன்வைக்கப்பட்டாலும் அதனுடைய பாதகமான தாக்கங்களை இன்று வரையும் உணர முடிகின்றது. இலங்கையில் மேற்கொள்ளப்படும் விவசாய முறைகளின் வகைகள் நுகர்வு விவசாயம் நுகர்விற்காக மேற்கொள்ளப்படும் விவசாயம் நுகர்வு விவசாயம் எனப்படும்.

இலங்கையில் நெற்பயிர் செய்கை, காய்கறி செய்கை, பழப்பயிர் செய்கை வேறு உணவுப்பயிர் செய்கை (பயறு, கௌபி, சோளம்) போன்ற தானிய வகைகளும், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றனவும் உதாரணமாக கொள்ளப்படுகின்றன. தென்னை ஒரு வர்த்தகப் பயிராக அறிமுகப்படுத்தப்பட்டாலும் அறுவடையில் பெருந்தொகையான பகுதி நுகர்வுக்காகவே பயன்படுத்தப்பட்டது. சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிலங்களில் பயிர்செய்கை மேற்கொள்ளப்படல்184 கலப்புப் பயிர்செய்கை, மனித மற்றும் மிருக உழைப்பைப் பயன்படுத்தல் நுகர்வு விவசாயத்தின் விசேட பண்புகளாகும். வர்த்தக விவசாயம் விற்பனை நோக்கில் மேற்கொள்ளப்படும் பயிர்செய்கையாகும். தென்னை, தேயிலை, இறப்பர் மற்றும் சிறு ஏற்றுமதி பயிர்கள் இதிலடங்கும். விசாலமான நிலங்களில் பயிர்செய்கை மேற்கொள்ளப்படல், இயந்திர பயன்பாடு பல்வேறு உற்பத்திகளைத் தயாரிக்கும் முறைகளைப் பயன்படுத்தல் என்பன வர்த்தக விவசாயத்தின் முக்கிய பண்புகளாகும். விவசாயத்தொழிநுட்பம். எமது நாட்டின் சனத்தொகை வளர்ச்சியோடு உணவுக்கான கேள்வி படிப்படியாக அதிகரித்துள்ளது.

இதற்குத் தீர்வாக உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கப் பல்வேறு நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. விவசாயத் தொழில்நுட்பம் உலகின் பல்வேறு நாடுகள் தமது உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக பல்வேறு விவசாய நுட்பங்களைப் பிரயோகிக்கின்றன. விவசாய தொழிநுட்பத்தின் கீழ் எமது நாடு கவனம் செலுத்தும் துறைகள் சில

1. நீர்பாசன தொழிநுட்பம் மற்றும் பாரம்பரிய விவசாய அறிவு

2. பசுமைப்புரட்சி.

3. நவீன இயந்திரம் பயன்படுத்தல்.

4. மரபணு தொழிநுட்பம்.

5. சேதன விவசாயம்.

நீர்ப்பாசனத் தொழினுட்பம் இலங்கையில் நீர்ப்பாசனத் தொழிநுட்பம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதோடு வியத்தகு நுட்ப முறைகளும் கையாளப்பட்டுள்ளன.

இங்கு நீர்ப்பாசனம் இரண்டு முறைகளில் மேற்கொள்ளப்பட்டன.

1. புவியீர்ப்பு நீர்ப்பாசன முறை

2. மேலேற்று நீர்ப்பாசன முறை

1. புவியீர்ப்பு நீர்ப்பாசன முறை குளங்கள் மற்றும் அதனோடு இணைந்த வடிகாலமைப்புக்கள் இதனுள் அடங்கும். மிகப்பெரிய குளங்கள் (பராக்கிரம சமுத்திரம் - 7945 ஹெக்டேயர்) முதல் சிறு குளங்கள் (சிறுவில குளம் - புத்தளம் -36 ஹெக்டயர்) வரை இதனுள் அடங்கும்.

2. மேலேற்று நீர்ப்பாசன முறை உயர் நிலங்களுக்கு நீர் வழங்குவதற்காக இம்முறை பயன்படுத்தப்படுகின்றது. விவசாய கிணறுகள் மற்றும் ஊற்றுக் கிணறுகள் மூலம் நீர் வழங்கப்படுகின்றது. நீரை மேலேற்றுவதற்காகக் துலாமுறை, கப்பி முறை, நீர் சக்கரம் மற்றும் பல்வேறு நீர்பம்பி வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

பயிர் நிலங்களுக்கு நீர் வழங்கும் பல்வேறு முறைகள்

1. மேற்பரப்பு நீர்ப்பாசனம் - இங்கு தரையின் மேற்பரப்பினூடாகத் தாவரங்களுக்குப் பாய்ச்சப்படும் நீர் நேரடியாகச் சென்றடையும்.

2. தரைக்கீழ் நீர்ப்பாசனம் தாவரங்களின் வேர்கள் வியாபித்துள்ள ஆழத்திற்கு ஏற்பச் செயற்கையான நீர்ப்படையொன்றை பேணல்.

3. நுண்நீர்ப்பாசனம் சொட்டு நீர்ப் நீர்ப்பாசனம், தூவல் முறையில் நீர் விநியோகித்தல் மற்றைய முறைகளாகும்.

பயிரின் வேர்களுக்கு ஒரு குழாயினூடாக நீரானது துளித்துளியாக விநியோகித்தல் சொட்டு நீர்ப்பாசனம் எனப்படும். சிறுதுளைகளிடப்பட்ட குழாயினூடாக காற்றில் நீர்த்திவலைகளாக பயிர்களுக்குத் தெளிக்கப்படுதல் தூவல் முறை நீர்ப்பாசனம் எனப்படும். இவ்வாறான நீர்ப்பாசன தொழிநுட்பம் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக உலர்வலயப் பிரதேசத்தில் இதனைப் பரந்தளவில் காணலாம். பசுமைப் புரட்சி; 1960 இன் பின்னான ஒரு தசாப்தத்தின் முன்னரைப் பகுதியில் மேற்கத்தேய நாடுகளில் உணவு உற்பத்தியினை அதிகரிப்பதற்காக அதிகளவான உள்ளீடுகளைக் கொண்டு உற்பத்தியினை அதிகரிக்கச் செய்தமை பசுமை புரட்சி ஆகும். இது இலங்கையில் 1965களின் பின் தாக்கத்தை ஏற்படுத்தியது. பசுமைப் புரட்சியின் தாக்கத்தை அதிகளவில் நெல் விவசாயத்தில் காணக் கூடியதாக இருந்தது.

விளைச்சலை அதிகரிக்க அதிக உள்ளீடுகளைப் பயன்படுத்தியமைக்கான உதாரணங்கள் சில :

 உயர்ரக நெல்லினங்களை அறிமுகம் செய்தல்.

 இயந்திரமயமாக்கல்.

 பீடைக் கொல்லிப் பாவனையை அதிகரித்தல்.

 இரசாயனப் பசளைகளைப் பயன்படுத்தல்.

 குறித்த ஒரு பயிரை மாத்திரம் பயிரிடல்.

 நவீன நீர் விநியோக முறைகளைக் கையாளுதல்.

பசுமைப் புரட்சியின் சாதக விளைவுகள் அதிகரித்துச் செல்லும் சனத்தொகைக்கு ஏற்ப உணவு விளைச்சலை அதிகரித்துக்கொள்ளல். குறித்த நில அலகில் கிடைக்கும் விளைச்சல் வேகமாக அதிகரித்தல். தொடர்ச்சியாக பயிர்ச் செய்கை மேற்கொள்ளல். இயந்திரப் பயன்பாட்டினுடாகக் குறைந்த மனித உழைப்பைப் பயன்படுத்தல். பசுமைப் புரட்சியின் பாதக விளைவுகள் நிலச் சீரழிவு. சூழல் மாசடைதல். புற்றுநோய், சிறுநீரக நோய்கள் தொடர்பான சுகாதார பிரச்சினைகள் உயிர்ப் பல்வகைமை பாதிக்கப்படல். பெரும்பாலான தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் அழிவுறல். விவசாய சமூகத்தினர் மத்தியில் வருமான ஏற்றத்தாழ்வுகள் ஏற்படல்.

எதிர்ப்பு சக்திமிக்க பீடைகள் உருவாதல். நவீன இயந்திரங்களின் பயன்பாடு ஏனைய பயிர்ச் செய்கையுடன் ஒப்பிடும் போது நெற்பயிர்ச் செய்கையில் இயந்திரப் பயன்பாடு முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கை உழவு இயந்திரம் தொடக்கம் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரம் வரை பயன்படுத்தப்படுகிறன. இயந்திரப் பயன்பாட்டின் நன்மைகள் வேலையை இலகுவாக்குதல், ஆரம்பத்தில் சிறிய ரக இயந்திரங்கள் அல்லது மனித உழைப்பின் மூலம் செய்த வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடியதாக இருத்தல்.

பலதினங்களில் மேற்கொள்ளப்பட்ட வேலை சில மணித்தியாலயங்களில் மேற ;கொள்ளப்படல் (நேரம் மிச்சப்படுத்தல்) இயந்திரப் பயன்பாட்டின் தீமைகள்  செலவு அதிகரித்தல்.  மனித உழைப்பு இல்லாது போவதால் ஏற்படும் பாதிப்புக்கள்.

 சிறிய நிலங்களில் இயந்திரங்களைப் பயன ;படுத்துவது கடினம்.

 மண் மற்றும் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்.

மரபணுத் தொழிநுட்பம். பசுமைப் புரட்சியின் அனேகமான தீய விளைவுகளைக் குறைத்துக் கொள்வதற்காக மரபணுத் தொழிநுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.

பயிர் உற்பத்தியினை அதிகரிப்பதற்காகப் பசுமைப் புரட்சியின் மூலம் பல்வேறு உபாயங்கள் பயனபடுத்தப்பட்டாலும் உற்பத்தி கட்டுப்படுத்தப்படல்.

• பயிர் செய்கையின் விளைச்சல் வரையறுக்கப்படுதல் போன்ற காரணங ;களால் விளைச்சலை அதிகரிப்பதற்கான கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

• மரபணுத் தொழிநுட்பம் எம் நாட்டில் நெற்பயிர் செய்கையிலும் பார்க்கக் காய்கறிப் பயிர்செய்கை, பழப் பயிர்செய்கையில் அதிகமாகப் பயன ;படுத்தப்படுகின்றன. உ-ம் : பீர்க்கங்காய், பாகற்காய், கத்தரிக்காய், பச்சை மிளகாய், வெண்டிக்காய், பூசணிக்காய், பயற்றங்காய் போன்ற காய்கறி வகைகளும் பப்பாசி, வாழை, மாதுளை, கொய்யா, மா, திராட்சை போன்ற பழவகைகளிலும் மரவள்ளி போன்ற கிழங்கு வகையிலும் மரபணுத் தொழிநுட்பம் மூலம் விளைச்சலின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனூடாக உணவுப் பயிர்களின் வளர்ச்சி மற்றும் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

• மரபணுத் தொழிநுட்பத்தின் மூலம் விளைச்சலின் அளவு அதிகரிக்கப்பட்டாலும் அவற்றில் காணப்பட்ட இயல்புத் தன்மை, போசாக்கு இல்லாது போதல் தொடர்பான பிரச்சினைகளும் எழுந்துள்ளன. நிறம், வடிவம், தரம், சுவை போன்றன மாற்றமடைந்துள்ளன. சேதன விவசாயம் • செயற்கைப் பசளை, செயற்கை பீடைக்கொல்லிகளின் பயன்பாடு காரணமாக எம் நாட்டு விவசாயத்திற்கு ஏற்பட்டுள்ள தீய பாதிப்பினை இழிவளவாக்கிக் கொள்வதற்காக சேதன விவசாயத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

• செயற்கைப் பசளைக்கு பதிலாக சேதனப் பசளை பயன்படுத்தப்படுகின்றமை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு செயற்பாடாகும். உ-ம் : இலைகளாலான பசளை, விவசாயக் கழிவுகள், கூட்டெரு (கொம்போஸ்ட்) சேதன திரவம்.

• எம்நாட்டில் செயற்கைப் பீடைகொல்லிக்குப் பதிலாக மரபு ரீதியான பீடைகொல்லி முறைகள் கையாளப்படுகின்றன. உ-ம் : வேப்பம் இலை, வேப்பஞ்சாறு, கரைக்கப்பட்ட சாணம், ஏனைய முறைகள்.

• சேதன விவசாயத்தில் பயிரிடப்படும் பயிர்ச்செய்கையின் அளவு படிப்படியாக அதிகரித்துச் செல்வதோடு நுகர்வோர் கேள்வியும் அதிகரித்துள்ளது.

• சேதன விவசாயம் சூழலுக்கு நேசமானது என்பதோடு மனிதர்களின் நற்சுகாதாரத்திற்கு ஏற்ற உணவுப்பயிர் உற்பத்திக்கும் உறுதுணையாக அமைகின்றது.

இலங்கையின் உற்பத்தியின் போக்குகள் எமது நாட்டின ; விவசாய உற்பத்தியுடன் தொடர்பான போக்குகள் சிலவற்றை காணக் கூடியதாகவுள்ளன.

1. விளைச்சலை அதிகரித்தல்

2. வீண்விரயத்தை குறைத்தல்

3. நவீன இயந்திர சாதனப் பயன்பாடு விளைச்சலை அதிகரித்தல் இது தொடர்பில் கடந்தகாலத்தில் பல்வேறு முறைகள் கையாளப்பட்டன. அதிக விளைச்சலைத் தரும் விதை இனங்களைப் பயன்படுத்தல். டீபு 364, ஏக்கருக்கு 140 - 160 புசல் டீபு 407ர், ஏக்கருக்கு 300 புசல் யுவ 362, ஏக்கருக்கு 150 புசல் (நெல் இனங்கள்)

• பழைய தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் மீள் பயிரிடல்.

• பசளைகள், பீடைகொல ;லிகள், களை நாசினிப் பயன ;பாடு

• குறிப்பிட்ட காலத்தில் அதிக தடவைகள் (பருவங்கள்) பயிர்செய்கையில் ஈடுபடுதல்.

• பயிர்ச்செய்கையில் பல்வகைமையை ஏற்படுத்தல்

• சிறந்த முகாமைத்துவம் அறுவடையின் பின்னரான தொழிநுட்பம்

• உற்பத்திப் பொருட்கள் உரிய தரத்துடன் நுகர்வோரைச் சென்றடைவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது நாட்டின் விவசாய உற்பத்திகள் வீண்விரயமாகும் சந்தர்ப்பங்கள் பலவாகும். • உற்பத்தியில் - நெல், இறப்பர்

• போக்குவரத்தில் - காய்கறி, பழங்கள் • பொதிசெய்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல் - நெல், தேயிலை, காய்கறி, பழங்கள், ஏனைய தானியங்கள் வீண் விரயத்தைத் தடுப்பதற்காக அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள்

• நீண்ட காலத்திற்கு பேணக்கூடிய முறைகளைப் பயன்படுத்தல் • இறப்பர் பால், மழைநீரில் இருந்து பாதுகாப்புப் பெற பொலித்தீன் போர்வையைப் பயன்படுத்தல் • காய்கறி மற்றும் பழ வகைகளைக் கொண்டு செல்லும ;போது பல்வேறு உபாயங்களைக் கையாளல்

• பொதி செய்வதற்காக கூடைகளைப் பயன்படுத்தல் • அதிவேக பிரயாண முறைகளைக் கையாளல் • குளிரூட்டி வசதி கொண்ட வாகனப் பயன்பாடு

• முறையாக களஞ்சியப்படுத்தல்

• விற்பனையின ; போது பொருட்களின் பொலிவுத்தன ;மையைப் பேணுவதற்காக பல்வேறு உபாயங்களைக் கையாளல் (ளுரிநச ஆயசமநவள) நவீன இயந்திர சாதனங்களின் பயன்பாடு

• உற்பத்தி, போக்குவரத்து, களஞ்சியப்படுத்தல் ஆகிய சந்தர்ப்பங்களின்போது நவீன இயந்திர சாதனங்களின் பயன்பாடு விரிவடைந்துள்ளமையானது புதியபோக்காகக் கருதலாம 

• உற்பத்தியில் புதிய இயந்திரங்களின் பயன்பாடு பெரும்பாலும் பெருந்தோட்டப் பயிர் உற்பத்தியில் பயன ;படுத்தப்படுகின்றன. உ-ம் : தேயிலை, இறப்பர், தென ;னை போன்றவற்றில் நவீன இயந்திர பயன ;பாடு

• போக்குவரத்தின் போது பாதுகாப்பான கொள்கலன்களைப் பயன்படுத்தல். உ-ம் : தேயிலை, இறப்பர், தென ;னை ஆகியவற்றின் ஏற்றுமதியின் போது

• களஞ்சியப்படுத்தலின் போது அதி குளிரூட்டி முறையைக் கையாளல் சந்தைப்படுத்தல் செயன் முறைகள்

இலங்கையில் விவசாய உற்பத்திகளை விநியோகிக்கும் செயன்முறை, பிரதான இரண்டு துறைகள்

1. தனியார்துறை

2. அரச துறை உள்நாட்டு விற்பனை

செயன்முறை இரண்டு முறைகளில் நடைபெறுகின்றன.

1.மொத்த வியாபாரம்

2.சில்லறை வியாபாரம்

பல்வேறு வகையான விற்பனை நிலையங்கள் நாட்டில் காணப்படுகின்றன.

1. அரச துறை சார்ந்தவை உ-ம் : - கூட்டுறவு விற்பனை நிலையங்கள் - கூட்டுத்தாபனங்களும் அரச நிறுவனங்களும் - விசேட பொருளாதார மத்திய நிலையங்கள்

2. தனியார் துறை சார்ந்தவை உ-ம் : - சில்லறை வியாபார நிலையங்கள் - உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள் - பல்பொருள் அங்காடி (ளுரிநச ஆயசமநவள) - நடை பாதை வியாபாரிகள் - நடமாடும் வியாபாரிகள் - வாராந்தச் சந்தை பொருளாதார மத்திய நிலையங்கள்

• விவசாய உற்பத்திகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுத்தல்

• இடைத்தரகர்களுக்கு உற்பத்திகளை விற்பனை செய்யாது நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதனூடாக விவசாயிகளுக்கு அதிக விலையைப் பெற்றுக் கொடுத்தல் • நுகர்வோர் நியாயமான விலையில் விவசாயப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளல்

• தம்புள்ளை, மீகொட, நாரேகன்பிட்டி, தம்புத்தேகம, கேபிட்டிப்பொல, வெலிசறை போன்ற இடங்களில் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தரம் தொடர்பில் கவனத்தைச் செலுத்தல் தற்காலத்தில் நுகர்வோர் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது பின்வரும் அம்சங்கள் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர். 1. பொருட்களின் வகை 2. உற்பத்தி செய்த நிறுவனம் 3. பொதிசெய்யப்பட்ட, மற்றும் காலாவதியாகும் திகதிகள் 4. தரச்சான்றிதழ ; 5. சுகாதாரம ; 6. சரியான எடை 7. பொதியின் தன்மை இதனால் உற்பத்தியாளரைப் போன்றே விற்பனையாளரும் இப்பண்புகள்மீது கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளனர். உ-ம் : உணவுப்பொருளை விற்பனை செய்யும்போது அவற்றைப் பாதுகாப்பாக வைத்தலும் விற்பனையின் போது அவற்றைக் கைபடாதவாறு விநியோகித்தலும் (பேக்கரி உற்பத்திகள்) நுகர்வோரின் விருப்பு மற்றும் வசதி தொடர்பில் கவனம் செலுத்துதல் இவை தொடர்பில் தற்காலத்தில் விசேட கவனம் செலுத்தப்படுகின்றன. உ-ம் : கல், மணல் நீக்கப்பட்ட அரிசி, மாவாக்கப்பட்ட தேங்காய், பழப்பொதி, அரியப்பட்ட கீரை

• பொருட்களைக் கொள்வனவு செய்வதன் இயலுமை தொடர்பில் கவனம் செலுத்துதல் பல்வேறு வடிவங்களில் பொதிகளைத் தயார் செய்தல் தேவையான அளவில் கொள்வனவு செய்தல் கவர்ச்சியான வகையில் பொதிகளை அமைத்தல் பல்பொருள் அங்காடி (ளுரிநச ஆயசமநவள)

• 1970களில் மேலேத்தேயர் மத்தியில் ஆரம்பமான பல்பொருள் அங்காடிகள் (சந்தை) தற்போது நகர மற்றும் கிராம பிரதேசங்களில் பரவியுள்ளன.

• விவசாய உற்பத்திகள் மாத்திரமன்றி ஒரே கூரையின் கீழ் கைத்தொழில் உற்பத்திகளையும் பல்வேறு வகையான சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

• இவை தனியார் துறையினரால் மாத்திரமன்றி அரச துறையினராலும் மேற்கொள்ளப் படுகின்றன. உ-ம் : கார்கீல்ஸ், கீல்ஸ், ஆர்பிகோ - தனியார் துறை சதோச – அரசதுறை 

• பொருள் விற்பனை தொடர்பாக பல்வேறு விசேட திட்டங்கள் இங்கு காணப்படுகின்றன. அவை நுகர்வோர் மத்தியில் கவர்ச்சியை ஏற்படுத்துகின்றன. உ-ம்: - பல்வேறு தெரிவுகள் காணப்படுதல் - நுகர்வோரின் விருப்புக்கேற்பப் பொருட்களைக் காட்சிப்படுத்தல் - காட்சிப்படுத்தலின்போது தேவையான தகவல்களை முன்வைத்தல் (விலை, நிறை, திகதி போன்றன) - தேவையான அளவில் கொள்வனவு செய்தல் (காய்கறி, பழவகை) - தரமான பொருட்களை மாத்திரம் தெரிவு செய்தல்

 கவர்ச்சிகரமான முறையில் பொருட்களைக் காட்சிப்படுத்தல்

 நுகர்வோருக்காக வேறுவகையான சேவைகளை வழங்கல் (வாகன தரிப்பிட வசதி, சிறுவர் விளையாட்டு வசதிகள், தள்ளுக் கூடைகள்)

 ஊழியர்களின் சீருடை மற்றும் பணிவு, உதவும் பழக்கம்

 பல்வேறு உபாயங்களின் ஊடாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து கொள்ளல் (கழிவு அட்டைகள், கடனட்டைகள், பண்டிகைக்கால விலைக் கழிவுகள்)

 பல் பொருள் அங்காடிகள் காரணமாக நகர மற்றும் கிராமங்களில் உள்ள சில்லறை வியாபாரிகள் நட்டத்தை எதிர்நோக்குகின்றனர். இலங்கையின் விவசாயத்துறை எதிர்நோக்கும் சவால்கள் விவசாய நிலங்கள் கைநழுவிச் செல்லல் : மகாவலி நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் போன்ற பாரிய திட்டங்களினால ; உலர் வலயத்தில் நெல் மற்றும் வீட்டுத் தோட்டங்களும் ஈரவலய நெல் வயல் நிலங்கள் வேறு நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர். நகரப் புறத்தில் கட்டடங்களை அமைக்கவும் ஏனைய திட்டங்களுக்காகவும் தெங்கு பயிர் நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுப் பொருள் இறக்குமதி : அனேகமான காலங்களில் இறக்குமதித் தீர்வை யில் ஏற்படும் குறைவு அல்லது நீக்கம் காரணமாக உள்நாட்டு விவசாய உற்பத்தி பாதிக்கப்படுகின்றது. உ-ம் : உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் சீரற்ற காலநிலை : வரட்சி, அதிகரித்த மழை, மண்ணரிப்பு, மண் சரிவு, வடிகாலமைப்புக்கள் தடைப்படல் போன்ற காரணங்களால் விளைச்சலுக்கு பாதிப்பேற்படுகின்றது.

மரபு ரீதியான தொழிநுட்பம் : தேசிய விவசாயம ;, காணி மற்றும் சூழல் காரணிகளுக்கு ஏற்ற தொழிநுட்பம் வளர்ச்சியடையாமை போன்ற காரணங்களால் விளைச்சல் குறைவதோடு வீண்விரயமும் ஏற்படுகின்றது. அத்தோடு மனித உழைப்பைப் பெற்றுக் கொள்வதிலும் பிரச்சினை காணப்படுகிறது. வறுமை நிலை காணப்படுவதால் புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டியது முக்கியமான ஒன்றாகும். உற்பத்திச் செலவு அதிகரித்தல் -அண்மைக்காலமாக விவசாய உற்பத்திகளின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. -இதற்கு இறக்குமதி பொருட்களின் விலை அதிகரித்தலே காரணமாகியுள்ளது. இரசாயன பசளை, கிருமி நாசினிகள் மற்றும் விவசாயப் பொருட்களின் விலையேற்றத்தால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. சந்தைப்படுத்தல் பிரச்சினைகள் விவசாய உற்பத்தி தொடர்பான சந்தைப்படுத்தல் பிரச்சினைகள் காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியவகைகளிலேயே பெரிதும் காணப்படுகின்றன. -வர்த்தக விவசாயத்திலும் சந்தைப்படுத்தல் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. -உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் இப்பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. உற்பத்தியாளர்களுக்கு சரியான விலை கிடைக்காமையும் நுகர்வோருக்கு அதனை சரியான விலையில் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதும் பிரச்சினைகளாகும். இதில் இடைத்தரகர்களே அதிக இலாபத்தினை ஈட்டுகின்றனர

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad